அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க,”அப்போ நைட்டு எனக்கு விருந்து தானே!” என்றான் அவள் காதில் கிசுகிசுத்தபடி ஆதி அவளது இடுப்பை கிள்ளி,
துள்ளி எழுந்தவள் “ஆதி!”என்று சத்தமிட,
நந்தா தான் வாய்விட்டு சிரித்திருந்தான்.”என்ன மாமா இப்படி மொத்த குடும்பத்தையும் கூட்டி வச்சி என் அக்காவை படாதபாடு படுத்துறீங்க போல? அப்போ தனியா இருந்தா என்ன என்ன செய்வீங்க ?”என்று கண் சிமிட்டு சிரிக்க.
“படவா!” என்று அவனை எழுந்து அடிக்க துரத்தினான்.
மாமனும்,மச்சானும் ஓடிப் பிடித்து விளையாட,குழந்தைகளும் சிரித்து விளையாண்டனர்.
தன் மருமகனையும், மருமகளையும் ஆளுக்கு ஒரு கையில் தூக்கிக் கொண்டு “இப்ப வாங்க!” என்று நந்தா ஓடிட. இனியவை தூக்கிக் கொண்டு ஆதி ஓடினான்.
மொத்த குடும்பமும் இவர்களின் ஒற்றுமையை பார்த்து சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்தனர்.
தன் கண்களில் வழியும் நீரை துடைத்தபடி தன் கணவனை தான் பார்த்துக் கொண்டு நின்றாள் சுதா.
தன்னிடம் தன் தம்பி பேசவில்லை என்பதை உணர்ந்து,அனைத்தும் ஆதி செய்த வேலை தான் என்பதை சித்ரா கூறி இருந்தார்.
“உன் புருஷன் தாண்டி இவ்வளவும் பண்ண சொல்லி சொல்லி இருந்தான்.எனக்கு கூட இந்த யோசனை கிடையாது,உன் புருஷன் தான் தடாலடியா என்கிட்ட வந்து பேசி,மேலோட்டமா நந்தா உன்கிட்ட முன்ன மாதிரி பேசறது இல்லனு மட்டும்தான் சொன்னானே தவிர!சுத்தமா பேசலனு கூட சொல்லல “என்று கூறி இருக்க.
அனைத்தும் தன்னவனால் மட்டுமே! இப்பொழுது தான் ஒரு வாரமாக மசக்கையில் சோர்ந்து படுக்கவும்,தம்பியின் நினைவு அதிகமாகவே வாட்டி வதைத்தது. முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போது,அவன் தன்னை தாங்கியதை நினைத்து வருந்திபடி இருப்பதை உணர்ந்த, ஆதி தான் தன்னவள் சிறு வலியை கூட இனி உணரக்கூடாது, எதற்கும் வருந்தக்கூடாது என்பதை உணர்ந்து அவளின் தம்பிக்கு அழைத்து இருந்தான்.
‘தான் அழைத்தால் சரிப்பட்டு வராது. ஏற்கனவே பலமுறை அவனிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை’என்று உணர்ந்து சித்ராவின் மூலம் காய் நகர்த்திருந்தான் என்பதை உணர்ந்த பிறகு,அவன் மீது இன்னும் காதல் பெருக்கெடுத்து ஓடியது.
அவனையே பார்த்தபடி இருக்க, “என்ன அக்கா?எங்க மாமாவ சைட் அடிக்கிற போல? ஓவர் லவ்ஸா?”என்று நந்தா அவள் அருகில் வந்து நிற்க.
” அப்படியாடா மச்சான் சொல்ற?” என்று ஆதியும் அவளின் தோளில் கை வைத்தான்.
“ரெண்டு பேரும் போங்க!”என்று வாய் கூறினாலும்,கணவனின் தோளில் சாய்ந்தபடி,தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
“என்னடி அம்மு?” என அவளின் தலையை வருட,
“ஐ லவ் யூ ஆதி! உங்கள மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்” என்று அவன் நெற்றியோடு நெற்றி முட்டி சிரிக்க.
மொத்த குடும்பமும் இவர்களை பார்த்து புன்னகை வீசியது. இவர்களின் சந்தோஷம் இப்பொழுது போல் எப்பொழுதும் நீடித்திருக்க வேண்டும் என்று இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.நன்றி
சுபம்..
தவறு செய்யாத மனிதர்களே இல்லை! தவறை உணர்ந்து திருத்திக் கொள்பவர்களே சிறந்த மனிதர்கள்..!
முழு நாவலாக வாசித்தவர்கள் கதையை படித்துவிட்டு தங்களின் கருத்துகளை ஓரிரு வார்த்தைகளால் விமர்சனமாக கொடுத்தால் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறீர்கள் இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் கூட சொல்லாதது சிறிது வருத்தமாகவே இருக்கிறது. கதையின் போக்கு எவ்வாறு சென்று இருக்கிறது என்பது நீங்கள் தரும் விமர்சனத்தில் தான் இருக்கிறது .எனக்கும் அதுதான் உத்வேகமாக இருக்கும் ஆனாலும் கதையைப் படித்து ஒரு வார்த்தை முகநூலில் சொல்லிய வாசகர்களின் ஊக்கத்தில் தான் கதையை சீக்கிரமாக முடிக்கவும் முடிந்தது கதையை வாசிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் விமர்சனத்துக்காக ஆவலோடு ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் ஏமாற்றி விடாதீர்கள் வாசக நெஞ்சங்களே
