திருக்குறள்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1285
அவன் இப்போது ஊரில் இல்லை. மைசூருக்கு சென்று விட்டான். அவன் மாமாவுக்கு உடல் நலமில்லையாம். சாதாரண சளி என்று மருத்துவமனையில் அனுமதிருந்தாலும் கிட்டத்தட்ட ரெண்டு நாட்கள் ஆகியும் எதுவும் சரியான பதில் மருத்துவர்கள் கொடுக்கவில்லை. அப்படி சொல்லி விடலாமா ? இல்லை அவர் உடல் தான் இன்னும் எந்த பதிலும் கொடுக்கவில்லை. கவலையாக இருந்தார்கள் வந்தனா வீட்டில்.
அடுத்த நாள் நார்மல் வார்டு பிறகு வீடு என்று ஓரளவு உடல் தேறி இருந்தார் மாமா.
வந்தனா விஷயம் தான் அவரை எழுப்பி இருக்க வேண்டும். அதை அவர் தான் சொன்னார்.
“நம்ம பாப்பாவோட கல்யாணத்தை பாக்காம நான் என்ன போய் சேர்ந்து விடுவேனா என்ன ?”
ஆத்திரத்தோடு மனைவி அவரை முறைக்க முயன்றாலும் முடியாமல் கண்களில் கண்ணீர் தான் வந்தது . அவர்களுக்கு நடந்தது காதல் திருமணம் இல்லை. திருமணத்துக்கு அப்புறம் வந்த காதல். திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு குழந்தை இல்லை. மாமா வீட்டில் எத்தனயோ பேர் எத்தனயோ சொல்லியும் பிடிவாதமாக தனக்கு வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றார் அவர். அதில் தான் கணவனின் மீது மனைவிக்கு இத்தனை காதல். கணவனுக்குத் தான் உடலில் குறை. மனைவி நன்றாக இருக்கிறார் என்ற மருத்துவ ரிசல்ட் வந்தபோது, என்ன ஆனாலும் சரி எனக்கு இவர் தான் தான் என்று உரிமையுடன் அவ்னது அனைவரின் முன்பும் கணவனை தோளோடு கட்டிக் கொண்ட போது கணவனுக்கு வந்தது தான் காதல். அவர்களுக்குள் இருந்த உணர்வை காதல் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விட முடியாது. இது இந்த ஜன்மத்துக்கான பந்தம் இல்லை. எல்லா பிறவிகளிலும் இவள் எனக்கு தான் சொந்தம் என்ற பெருமிதம். பெண்களுக்கு ஒரு மாதிரி என்றால் பிள்ளை இல்லை என்றால் ஆண்களை மற்றவர்கள் ஏசும் பேச்சும் அதிகம் தான். நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா? என்ற நேரடி கேள்வி வேணாம். நக்கலான பார்வை போதும்.
“நீங்க எல்லாம் என்னடா சொல்லறது? எனக்கு என் பொண்டாட்டி இருக்கா டா ?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டவர், அவளின் தம்பியை பெற்றோர் இல்லாத நேரத்தில் தானே மகனைப் போல எடுத்து வளர்த்தார். இப்போது மகனுக்கும் உடல் நலமில்லை. வளர்ப்பு தந்தைக்கும் உடல் நலமில்லை. அதனால் அவரைப் பார்த்துக் கொள்ள தற்சமயம் கார்த்திக் அங்கே சென்றுருக்கிறான்.
அத்தை மாமாவுக்கு சொந்த தொழில் என்று சொன்னால் சரியாகுமா? இல்லை இல்லை, சொந்தங்களுக்கான தொழில் என்று கூறலாம் . அப்படி என்ன ? பெட் கேர் . சரியா?
பெட் கேர் என்று சொன்னாலும் பலரும் பெரும்பாலும் நாய்கள் தான் வைத்திருப்பார்கள். அதே சமயம் பூனை, லவ் போர்ட்ஸ், முயல் போன்றவைகளும் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
கார்த்திக் ரவி பற்றி பேசிக் கொண்டிருந்தான். அத்தையும் மாமாவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் . எதேச்சையாக மாமாவை பார்க்க வந்த அவர் தோழரின் அறிவுரைப் படி ஒரு ஜோசியரிடம் இருவரின் ஜாதகத்தைக் காட்டவும் உடனே திருமணம் செய்ய வேணும். வந்தனாவுக்கு இப்போது ரொம்ப நல்ல நேரம் என்றார். அதுவுமில்லால் அவர் சொன்ன வார்த்தை தான் அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்றா சொன்னேன். இன்ப அதிர்ச்சி என்று மாற்றிக் கொள்ளுங்கள் .
வந்தனாவுக்கு செவ்வாய் தோஷமே இல்லையாம். “ஜாதகக் கட்டத்தில் இது இப்படி இருந்தா அது செவ்வாய் தோஷம் என்று சொல்லுவாங்க” என்று சிலது விளக்கினார்.
கார்த்திக்கின் குடும்பத்திற்கு மட்டுமில்லை எனக்கும் சரி ஜாதக கட்டத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும் அரைகுறையாக ஏமாற்றும் ஜோசியக்காரர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் அவர் சொல்வதை பற்றி எல்லாம் நாங்க யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. இருப்பினும் அவர் நல்லதாக சொல்லும்போது அதை ஏன் நாம் சந்தேகிக்க வேணும்? அவர் சொல்வதை அப்படியே நம்பலாம்.
இவளுக்கு இப்ப நீங்க பார்த்திருக்கும் ஜாதகத்துல தாலி பாக்கியம் நிறைஞ்சு இருக்கு. யோனி பொருத்தம் அபாரம். நல்ல வீடு சந்தான பாக்கியம் எல்லாமே நிறைந்திருக்கிறது என்று சொன்னார். சம்பாவனை கூட அதிகம் வாங்கவில்லை. மற்றவர்களைப் பரிகாரம் செய்ய “அங்கு போ, தலை கீழாக தொங்கு” என்று எந்த கண்டிஷனும் போடவில்லை. வேறு என்ன வேண்டும்?
அதுவே மாமாவுக்கும் அத்தைக்கும் ஜாதகம் பாக்க வேண்டும் என்று சொன்ன போது அவர் இப்போது முடியாதுன்னு என்று சொல்லிவிட்டார். அதன் அர்த்தம் என்னவோ?
ஜோசியர் சொன்ன படியே திருமணம் ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்தாலும் திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன . திருமணம் என்னவோ பதிவு அலுவகத்தில் தான் என்றாலும் ரிசாப்ஷன் வேலைகள் இருந்தன. இதோடு கடைகளுக்குச் செல்வது கல்லூரியில் இன்ஸ்பெக்ஷன் பரீட்சை, வினா தாள் திருத்த என்று நேரம் பறந்து கொண்டிருந்தது.
நடு நடுவே வந்தவும் ரவியும் காதலித்துக் கொண்டிருந்தார்கள். அவள் ஆசைப் பட்டபடி காபி ஷாப்பில் அழகிய தருணங்கள்., அவள் உதட்டில் ஒட்டியிருக்கும் சிறிய ஐஸ் க்ரீம் துளிகள்., இருட்டில் யாருக்கும் தெரியாமல் கொஞ்சிக் கொள்ள முத்தமிட வழி செய்த திரையரங்குகள், இரவின் தனிமையில் தொலைந்த தூக்கம் ., இனிய கற்பனை அதில் நிஜமான காதலி , காது மடலில் முத்தமிட்டு உதடு கடிக்கும் கள்வனான காதல்., அவனின் மயக்கும் குறும்புகள் நினைத்தாலே ஹார்மோன்கள் நான் ரெடி என்று சல்யூட் வைக்கும் தருணம்., உனக்கு எந்த சினமா நடிகர் பிடிக்கும் என்று மொக்கையாக ஆரம்பித்து என்ன சாப்பிட்ட என்று நீளும் தருணங்கள் .,
அவர்களுக்குள் சொல்லாமல் வந்த காதல் பாடாய் படுத்துகிறது.
எத்தனையோ பேசினாலும் இருவரும் ஒருவருக்கொருவர் காதல் என்ற வார்த்தையை இன்னும் சொல்லவில்லை. அது இப்போதைக்கு சொல்ல வேணாம். முதலிரவில் அந்தத் தருணத்தில் உடல் எங்கும் முத்தமிட்டு சொல்ல வேணும் என்று இருவருமே மனதிற்குள் எண்ணிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் நேரத்தை பறக்க விடுகிறார்கள்.
இதை எல்லாம் பார்த்தும் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் வந்தனா வீட்டில். இத்தனை மகிழ்ச்சியுடன் இருக்கும் அண்ணாவை பார்க்க மனம் குதூகலித்தது அவன் தங்கைக்கு .
இதற்கு நடுவில் ஒரு குடும்ப விழாவுக்கு ரவியும் அவன் அன்னையும் செல்ல வேண்டிய அவசியம். தந்தை வீட்டு உறவு. இவர்கள் செல்லவில்லை என்றால் அவன் இருந்த வரைக்கும் ..என்ற அனாவசிய பேச்சுக்கள் வரும். அன்னைக்கு அந்த சொல்லை ரவி தர விரும்பவில்லை.
அதே சமயம் வந்தனாவும் தான் எங்கேயும் வரவில்லை என்று விட்டாள் . ஒரே நாள் தானே தனியாக இருந்துக் கொள்வேன் என்று அவள் பிடிவாதமாக சொல்லவும் வேறு வழி இல்லாமல் இவர்கள் கிளம்பி விட்டார்கள். மதியம் அவர்கள் கிளம்பிய பிறகு ஒன்றும் தெரியவில்லை. இரவில் படுத்துக் கொண்டதும் ஏதேதோ தேவையில்லாத பயம்.
இந்த நேரத்திலா படித்த பேய் கதைகளும் க்ரிமே த்ரில்லரும் நினைவில் வர வேண்டும்? தேடித்தேடி படித்த போது நன்றாகத் தான் இருந்தது. இப்போது தான் அதன் வேலையை காட்டுகிறது.
போர்வையை இழுத்து மூடிக் கொண்டாள் . சிறிது நேரத்தில் வியர்த்து வழிய ஆரம்பித்தது . எத்தனை நேரம் தான் போர்வையை எடுப்பது மூடுவது என்று இருக்க முடியும். கஷ்டப்பட்டு கண்ணை இறுக்கி மூடிக் கொண்டாள் . சட்டென கண் விழித்தவள் மணி பார்த்தாள். இப்போது தான் பத்து முப்பது ஆகி இருந்தது . அசோ காலை வரை எப்படி ஓட்டுவது?.
பயத்துடன் போனை எடுத்து ஏதாவது கதை படிக்கலாம் என்று எடுத்தாள் . மேலே மாடியில் ஓடும் சத்தம்… எச்சில் முழுங்கி கொண்டாள் . நடப்பது பிள்ளைகள் ஓடுவது எல்லாமே கதையில் தான் வருகிறது. கற்பனைத் திறன் தான் உண்மையில் நடப்பது போன்ற பீ ஜீ எம் சத்தத்துடன் வருகிறது.
என்ன செய்வது ? யோசித்துக் கொண்டிருக்கும்போது காலிங் பெல் சத்தம்.
பயத்தில் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டாள் . இந்த நேரத்துல யாரா இருக்கும்? யாராவது திருடனா இருந்தா? இல்ல யாரவது வந்து என்னை ஏதாவது செய்தா கற்பனை குதிரை வேகமாக ஓடியது. காலிங் பெல் சத்தம் நின்று விட்டது. அப்பாடா அருகில் இருந்த தண்ணீரை குடித்துக் கொண்டால். இப்போது யாரோ வேகமாக கதவை தட்டும் ஓசை.. அவளையும் அறியாமல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அந்த நேரம் அவள் கைப் பேசி ஒலித்தது .
கார்த்திக் தான்…
“கீர்த்தி”eன்று அவன் ஆரம்பிக்கவும் . இவளோ பயத்தில் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் .
“பயப்படாத. நான் இருக்கேன் . சரி என்ன சாப்பிட்ட? மெதுவாக ஏதேதோ அவன் பேச ஆரம்பிக்கவும் இவளுக்கு சற்று தைரியமாக இருந்ததது . இப்போது கதவு தட்டும் சத்தம் நின்று விட்டது.
“கீர்த்தி வந்து கதை திற “
அவனின் குரலில் வந்து கதவை திறந்தவள் பயத்தை அப்பட்டமாக அவனிடம் காட்டினாள் . அவளையும் மீறி அவனை கட்டிக் கொண்டாள் . உடல் எங்கும் வியர்த்து வழிய தன்னை கட்டிக் கொண்டவளை அமைதியாக அணைத்துக் கொண்டான். அந்த நேரம் அதில் காதல் காமம் எதுவும் இல்லை. பாதுகாப்பு மட்டுமே இருவருக்கும் எண்ணமாக இருந்தது.
அவளின் முகம் துடைத்தவன் முகமெங்கும் முத்தமிட்டான். பயப்படாத. நம்ம வீட்டுக்குப் போலாம்
அவன் சொன்னதும் மறுப் பேச்சு பேசாமல் தேவையான துணிகளை அவசரமாக ஒரு பையில் போட்டுக் கொண்டு கிளம்பினாள்
அவள் வீட்டு வாயிலில் இருவர் புகை பிடித்துக் கொண்டு இவள் வீட்டையே தான் பார்த்து கொண்டிருந்தார்கள். கார்த்திக் இவள் வீட்டில் இருந்து லேசாக ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தான். அவர்கள் வண்டியில் ஏறி செல்வது தெரிந்தது.
அவளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு செல்லும்போது கார்த்திக் சொன்னான்.
“கீர்த்தி போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு போலாம்.
” அங்கே விஷயத்தைக் கூறி அடுத்த சில நாட்கள் அங்கே இருக்கப் போவதில்லை என்றும் வீட்டுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று எழுதிக் கொடுத்துவிட்டு கார்த்திக் அவளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவன் வீட்டில் அனைவருமே உறங்கி இருக்க அன்னை மட்டும் வந்து இவளை வரவேற்றாள் .
“வா கீர்த்தி . என்னம்மா இது எதுக்கு இப்படி தனியா இருக்கணும். சாய்நதரமே இங்க வந்துருக்க வேண்டியது தானே ., நம்ம வீடு தானே. எதுக்கு தயக்கம் ? “
பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தவளிடம்,
வேறு எதுவும் கேட்காமல்,”இந்தா பால் குடி” என்று இருவருக்கும் கொண்டு வந்து கொடுத்தார். மிதமான சூடு அளவான சர்க்கரை அந்த நேரத்தில் அவளுக்கு அமிர்தமாக இருந்தது. உடன் சேர்த்த பாசம் அவளுக்கு வாசம் சேர்த்து பால் பாயசம் போல இருந்தது.
“குடும்மா” என்றவரிடம், “இல்ல ஆண்டி நீங்க போய் படுத்துகோங்க. நான் கழுவிக்கறேன் ” என்றாள் அவள்.
“ஆமாம்மா. நீங்க போய் படுங்க. நான் பார்த்துக்கறேன்.” கார்த்திக் சொல்லவும் லலிதாவும் படுக்கப் போய் விட்டார்.
இரவு நேரம். யாரும் இல்லாதத் தனிமை.
“டேய் கார்த்திக்! இந்த மாதிரி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கும் அமையாது. எப்படியாவது அவளை கரக்ட் பண்ணி நாலு கிஸ் வச்சுடு …”
