அத்யாயம் -18
திருக்குறள்
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1288
மாப்பிள்ளை பெண்ணிற்கு மாம்பழ பழரசத்தை கொண்டு வந்து கொடுத்தவளுக்கு சில சொந்தங்களின் பேச்சு காதில் விழவும் அழுதுக் கொண்டே அவர்கள் அறைக்குச் சென்றதை பார்த்து விட்டான் கார்த்திக் .
நேரே மேடைக்குச் சென்று மைக்கை எடுத்து தன்னுடைய திருமண அறிவிப்பை தெளிவாக சொல்லி விட்டான்.
“அத்தை ப்ளீஸ்! கீர்த்தியை கூட்டிட்டு வாங்க” என்று கூறி மேடையில் அர்த ராஜியையும் ஏற வைத்து விட்டான்.
கார்த்திக் சொன்னது உள்ளே அமர்ந்து கீர்த்திக்கும் காதில் விழ அதிர்ச்சியுடன் வெளியில் வந்தாள் .
அனைவரின் மத்தியிலும் கார்த்திக் கீர்த்தியிடம் சொன்னது…
“கீர்த்தி எனக்கு உன்கிட்ட காதல் பைத்தியம் பிடிச்சுருச்சு . சீக்கிரமா இதே மேடையில என்னோட பொண்டாட்டியா வந்து நில்லு… “
“அத்தை ப்ளீஸ் அவளை கூட்டிட்டு வாங்க ” என்று கூறி மேடை ஏறாமல் இருந்த ராஜியையும் மேடை ஏற வைத்து விட்டான் .
அவன் சொன்னது தான் தாமதம் வந்தனா கையில் இருந்த பூங்கொத்தை இவனிடம் கொடுத்துவிட்டாள் .
“ஓகே சொல்லு கீர்த்தி ” வந்தனா அவளை உலுக்க கீழே இருந்த ந(ண்)பர்களும் ஓகே சொல்லு கீர்த்தி” என்று கூவ ஆரம்பித்தார்கள். கண்ணீருடன் இருந்த கண்களும் மனமும் இப்போது அவனிடம் சரணாகதி ஆகிவிட்டது.
ஒவ்வொரு நிலையிலும் உனக்காக நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொண்டிருக்கும் கார்த்திக், அவள் என்ன சொல்லப் போறாளோ என்ற பயத்துடன் அவள் முகத்தைப் பார்த்தான்.
அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று, அழுத்தமாய் மூடி இருக்கும் அவன் உதடுகள் அவளுக்கு எல்லாம் உணர்த்தியது. ‘இவன் தாண்டி உனக்கு மனசு சொன்னது’ சரி என்று தலை ஆடியது .
பிறகு என்ன விசில் சத்தத்துக்கு நடுவே சரி என்று தலையாட்டியவளை தூக்கி ஒரு சுற்று சுற்றினான் கார்த்தி.
பிறகு என்ன, உரிமையாய் அவள் அவனின் கை விளைவில் நின்றுக் கொண்டாள் . மறுக்கப்பட்ட சந்தோஷங்களை அள்ளித் தர ரவியும், கார்த்திக்கும் தயாராக இருக்க, வந்தனாவும் கீர்த்தியும் வாழ உரிமைப் பட்டவர்கள்தான். அவர்கள் i9நீயாவது சந்தோஷமாக வாழட்டும் . எங்களுக்கு தீயது நினைக்கும் எந்த சொந்தங்களை பற்றியும் கவலை இல்லை.
இரவில் ……
ரவியும் வந்தனாவுக்கு இங்கே தனியறையில்..இன்று தான் அவர்களுக்கு முதலிரவு. சேர்த்து உறங்கும் முதல் நாள் இரவு என்று வைத்துக் கொள்ளலாம்.
“அம்மா சாப்பாடு கூட வேண்டாம்” என்று தூங்கி தூங்கி வழிந்தவளை வீட்டுக்கு அழைத்து வந்து தயார் செய்து அனுப்புவதற்குள் லலிதாவுக்கு ஓய்ந்து விட்டது. ரவியின் வீட்டில் அனைவரும் இங்கே தான் இருந்தார்கள்.
உள்ளே வந்தவளை பார்த்த ரவிக்கு அவளை அள்ளிக் கொஞ்சி முத்தமிட வேண்டும் போல இருந்தது .இருப்பினும் அவளின் அயற்சியைப் பார்த்து பாவமாக இருந்ததது.
“நீ ஏதாவது பழைய டிரஸ் மாத்திக்கோ. தூங்கு இப்ப எதுவும் வேணாம். ரொம்ப டயர்டா இருக்கா ?”
“ம்ம்! ரொம்ப தாங்ஸ் ங்க”என்று சொன்னவள் புது புடவையுடன் அப்படியே படுத்துக் கொண்டாள் .
அவனுக்கும் ரொம்ப அயர்வாகத் தான் இருந்தது. அவன் இரவில் சரியாக உறங்கியே பல ஆண்டுகள் ஆகி விட்டன . அமைதியாக அவள் அருகில் வந்து படுத்துக் கொண்டான். அவன் அருகில் நகர்ந்து படுத்துக் கொண்டவள் அவனை கட்டிக் கொண்டாள் . கைகள் அவள் இடையை அழுத்தியது . வேண்டாம் பாவம் தூங்கட்டும் என்று மனம் நினைத்தாலும்.. போதுண்டா இதுக்கு மேலையும் என்னால ஹார்மோன்ஸ அடக்க முடியாது என்று மூளை அடம் பிடித்தது .
“வேண்டாம் அடங்கு டா” என்று மூளையை கட்டுப் படுத்தியவன் அவளின் தலை பூ வாசம் அவளின் மேனி வாசம் மெத்தையில் இருக்கும் பூக்களின் வாசத்திற்கு நடுவே அமைதியாக உறங்க ஆரம்பித்தான்.
சில மணி நேரத்திற்கு பின் “அப்பா என்ன மன்னிச்சுடுங்க. அம்மா ப்ளீஸ் எங்கிட்டப்
பேசுங்கம்மா ப்ளீஸ்ஸ்…” என்ற முனகல் சத்தம் கேட்கவும் லேசாக கண் விழித்துப் பார்த்தாள் . அவளின் வளர்ந்த குழந்தை தான் அவன் அன்னையிடம் தூக்கத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தது.
மகன் மீது ராஜிக்கு இருந்த கோபம் அவனை அருகில் நெருங்க விடவில்லை. கணவனை தன் நெஞ்சொடு அணைத்து மனைவி ஆறுதல் படுத்தினாள்.
தூக்கத்திலிருந்து விழித்தவன் வந்தனாவிடம் மன்னிப்பு வேண்டினான் .
“பரவாயில்ல வந்து படுங்க.” அருகில் இருந்த தண்ணீரை அவனுக்கு அருந்த கொடுத்துவிட்டு அவளும் வந்து படுத்துக் கொண்டாள் .
அவனுக்கு அருகில் வந்து அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் . அவனும் அணைத்தானே தவிர வேறு எதுவும் ஆரம்பமாகவில்லை .
“என்ன டீச்சர் பீ எச் டீ படிப்புல மட்டும்தானா? இது பத்தி எதுவும் தெரியாதா?”
அவனின் காது மடல் கடித்துக் கேட்டவளை அவன் வாய் பிளந்து அவள் முகத்தை பார்க்க அவனுக்கு அழகான இதழ் ஒற்றலை அவனுக்கு கொடுத்து தன்னிடம் ஈர்த்துக் கொண்டாள் அவனின் வந்தனா ..
முகமெங்கும் தனக்கு முத்தங்களை வாரி வழங்கியவனுக்கு தன்னையே ஒப்படைத்தாள் அவனின் தனா ..அதுவும் இப்போது சுருங்கி தனுவாக மாறி விட்டது.
காதலும் புணர்தலும் காமமும் தேட தேட இன்பம் தான் இல்லையா… இதே வார்த்தையை அந்தத் தொழில் செய்பவர்கள் சொல்வார்களா ? சரியான புரிதலும் சரியான துணையும் கிடைக்கும்போது தான் காதலும் அதனுடனான காமமும் கூட திருப்தி தரும்.
ரவி அப்படித் தான் இருந்தான். எல்லாவற்றிலும் அவளுக்கு அவளுடன் அவன் கை கோர்த்து நடக்க விரும்பினான் … அவளோ அவனுக்கு தாரமாகவும் தாயாகவும் மாறி இருந்தாள் .
நாந்தான் உன் முதல் பிள்ளை என்று காட்டியவனுக்கு, உன்னுடைய பிள்ளை இதோ என்று அவள் காட்டும் நாள் அவனுக்கு பேரின்பம் தான் …
கார்த்திக் மாடியில் தனியாக நின்று கொண்டிருந்தான்.
கீர்த்தி அங்கே அனைவரின் எதிரிலும் அவனுக்கு சரி சொல்லிவிட்டாலும் அவளிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அவனிடம் கேட்க வேண்டியது எல்லாம் கேட்டு விட என்று முடிவுடன் வந்தாள் .
சற்று தள்ளி நின்றவளை உரிமையுடன் அருகில் தூக்கி திண்டில் உக்கார வைத்தான்.
வெகு அருகில் அவன் முகம் பார்த்தவளுக்கு வார்த்தைகள் காற்றோடு டாடா காட்டி விட்டு போய் விட்டது.
“கீர்த்தி ” ஹஸ்கி வாய்ஸில் அவன் அழைக்கவும் மேனி கூசியது அவளுக்கு. லேசாக அவளின் முகத்தில் ஊதினான். முகத்தில் பட்ட காற்று நெஞ்சுக் குழியை குளிர வைத்தது.
“என்னை புடிச்சிருக்கா கீர்த்தி “
மவுனம் …
“ப்ளீஸ் கீர்த்தி.. பதில் சொல்லு “
மவுனம்..
“நான் தப்பு பண்ணிட்டேனா கீர்த்தி!”
வாய் திறந்து ஏதாவது பதில் சொல்லுடி ..
“எனக்கு தெரில கார்த்தி .. எனக்கு பயமா இருக்குடா.. “
சிறு இடைவெளி..
“நான் எது தொட்டாலும் தொலங்காது டா.. நான் என்ன மாதிரி ஒரு பைத்தியம் ராசி இல்லாதவ உனக்கு வேண்டாம் கார்த்திக் “
அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்… அவன் தோளை கட்டிக் கொண்டு அழுதவளுக்கு அவன் பதிலெதுவும் சொல்லவில்லை. அவளை அவன் தொந்தரவு செய்யாமல் முதுகை மாட்டும் நீவிக் கொண்டிருந்தான். அவன் இதை ஓரளவு எதிர்பார்த்தான். பல வருடங்களுக்கான மனம் பாரம் இறங்க சாற்று நேரம் தேவைப் படும் இல்லையா?
அழுது அழுது தானே சமாதானம் ஆனவள் தலைக் கோதி முகம் துடைத்து..
“இப்ப சொல்லு… என்ன புடிச்சுருக்கா ? அன்னிக்கு சொன்னது தான் கீர்த்தி . இன்னிக்கு நீ நான் இந்த இருட்டு இது மட்டும் தான் உண்மை. எல்லார் வாழ்க்கையிலும் ப்ளஸ் மைனஸ் இருக்கும் . தொட்டா துலங்காது வைச்சது விளங்காது இது எல்லாம் என்ன பேச்சு கீர்த்தி? எல்லாருக்கும் எல்லாமே நல்லதா நடக்குமா சொல்லு. எங்க அம்மாவுக்கு நான் பிறக்கறதுக்கு முன்ன ரெண்டு அபார்ஷன். இயற்கையாவே தான் நடந்தது. அப்புறம் நான் பிறக்கலியா? உன்ன மாதிரி எங்க அம்மா நினைக்கலியே ? இந்த வீடு கட்ட எங்க அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டாரு தெரியுமா ? லோனே கிடைக்கலை. அங்க இங்கனு கடன் வாங்கி தான் இந்த வீட்டை காட்டினார். முதல்ல ஒரு ரூம் கிட்சன்.. அப்புறமா தான் அடுத்த ரெண்டு ரூம் போட்டோம் நான் தொட்டா துலங்காதுன்னு எங்க அப்பா நினைச்சாரா? வந்தனா .. எவ்ளோ அழுதிருக்கா தெரியுமா? தோஷ ஜாதகம்னு சொல்லி சொல்லி இந்த அஞ்சு வருஷத்துல அவ சந்தோஷத்தையே தொலைச்சுட்டா .. நான் மட்டும் என்ன? ப்ளஸ் டூ ல பெயில் தான்னு நினச்சேன். கஷ்டப்பட்டு தான் பாஸ் பண்ணினேன். வாழ்க்கையோட சீரியஸ்னெஸ் அப்பதான் புரிஞ்சுது.
இப்போதும் அவள் சமாதானம் ஆகவில்லை.
“நீ சொல்லறது எல்லாம் வாழ்க்கைல எல்லாருக்குமே பொதுவா வர்ற பிரச்சனை . ஆனா நான் பைத்தியம். முதலிரவில் நான் உன்கிட்ட வேற மாதிரி இருந்தா என்னடா பண்ணுவ?”
“ஆமா . நான் யோசிக்கவே இல்லையே. வா இப்பவே ஒரு tட்ரையல் பாக்கலாம்.”
“ஏண்டா ஏண்டா என்ன இப்படி எல்லாரும் இப்படி பண்ணறீங்க?”
“என்ன இந்த கேடு கேட்ட வசனமெல்லாம் அந்த வீணாப் போன வீட்டுல சொன்னதா?”
கார்த்திக் குரல் மாறி இருந்தது.
“பாஸிட்டிவா யோசி கீர்த்தி .உனக்கு நான் மட்டும் இல்ல எங்க அம்மா அப்பா வந்தனா , எங்க அத்தை மாமா எல்லாரும் இருக்கோம்.”
இப்போது அவளிடம் அமைதி
“நீ தொட்டது தொலங்காதுன்னு நீ நினைக்கிறயா . நீ என்ன வேணுன்னாலும் நினைச்சுக்கோ. நான் தொட்டது எல்லாமே பெஸ்ட் தான். உன்னோட கைய குடு டீ என்னோட கையால நீ எது தொட்டாலும் அதுவும் பெஸ்ட் ஆகிடும் “
லேசான புன்னகை அவள் உதட்டில் வந்தது..
“கார்த்திக் எனக்கு இன்னுமொன்னு கேக்கணும் ..”
“கேளு !” அவளின் தலை முடிய காதின் ஓரம் ஒதுக்கி விட்டான்.
நீ என் மேல பரிதாபப்பட்டு.. என்ன கல்யாணம் பண்ணிக்க எந்த கம்பல்ஷனும் இல்ல கார்த்திக் .”
“பரிதாபமா? நான் உன் மேலையா? மேடம் எனக்கு அவ்ளோ எல்லாம் சீனு இல்ல . எப்ப உன் கண்ணு என்னை தேட ஆரம்பிச்சுதோ அப்பவே நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன் “
யாருக்கும் தெரியாத விஷயம் இவனுக்கு எப்படி தெரிந்தது? நுனி நாக்கை கடித்துக் கொண்டாள் .
முகம் திரும்பியவள் முகத்தை தன் புறம் நோக்கி திருப்பினான்.
” நான் கண்டுபிடிக்கலை. சாரு தான் கண்டுபிடிச்சாரு..”
“என்ன கார்த்தி! கீர்த்தியோட பார்வை உன்னையே சுத்தி சுத்தி வருதுன்னு அவரு கேட்டதுக்கு அப்புறம் தான் நானும் உன்னை நோட் பண்ண ஆரம்பிச்சேன் .”
“அது.. உன்ன மாதிரி வேற யாரும் முகத்துக்கு நேரா பேசினது இல்ல கார்த்திக். அது தான் ஏதோ ஒரு ஆர்வம் “
“ம் ஹூம் ” அவன் குரல் மாறியிருந்தது.
“கீர்த்தி ..”
“ம்.. “அவள் குரல் அவளுக்கு கேட்டாதா?
இப்போது அவனின் ஒற்றை விறல் தீண்டல் முகத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ ஊர்வலம் போனது .
படபடப்புடன் நெஞ்சு குழி ஏற இறங்க அந்த சுவற்று திண்டை அழுந்தி பற்றிக் கொண்டாள் . விரல் தீண்டிய இடங்களுக்கு நானும் உன்னயே பின் பற்றுவேன் என்று பின்னோடே வந்த உதடுகள் இப்போது விரல் ஓரம் கட்டி விட்டு தானே தனி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. நீங்க அங்க நாங்க இங்க என்று கைகள் அவளின் குர்தி டாப்ஸுக்குள் இருந்த இடையை அழுத்தப் பிடிக்க அவனின் மூச்சின் வெப்பம் தாங்காதவள் அவனையே இறுக்கி கட்டிக் கொண்டாள் ..
வேண்டும் வேண்டும் என்று அடம்பிடித்த உணர்வை வேண்டாம் என்று பிடிவாதாக தள்ளி நிறுத்தியது கார்த்திக் தான்.
“நாம் சீக்கிரம் கல்யாணம் செய்துக்கலாம் கீர்த்தி ப்ளீஸ்… இத்தனை வருஷம் என்னை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டடேன். இனி முடியாது. “
“நீ உண்மையிலேயே என்னை விரும்பறியா கார்த்திக் “
“அப்ப இவ்ளோ நேரம் என்ன சொல்லிக்கிட்டுஇருக்கேன். புரியலையா உனக்கு பைத்தியமா நீ ?”
சற்று கோபத்தோடு தான் அவன் சொன்னான் . அந்த ஒற்றை
வார்த்தையில் கலங்கிப் போனாள் அவள் .
“நீயுமா கார்த்தி?”
துடிக்கும் இதயம் ..
