இதயம்! – 10

இதயம்!

துடிப்பு – 10

விழிகள் கலங்கிட,இதழ்கள் நடுங்கிட,அகத்தில் பரவிய நிம்மதியை வதனத்தில் பரவ விட்டவாறு,கலவையான உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டு நின்று இருந்தவளை,இமைக்காமல் உரசியது,அவன் பார்வை.

இயல்பான இறுக்கத்தின் மிச்சங்களையும், அடங்காத அழுத்தத்தின் சுவடுகளின் எச்சத்தையும் காணக் கிடைத்த போதிலும்,அவன் விழிகள் வெளிப்படுத்த உணர்வுக் கோலம் ஒரு அழகியல்!

அகராதிகளில் கூட அர்த்தம் காணக் கிடைக்காத,வார்த்தைகளில் விவரிக்க முடியாததோர் அழகியல் அது.

இறுகியிருந்த அவளோ,மொத்தமாய் வெடித்து அழத் தயாராகி இருக்க,அதன் முன்னோட்டமாய் ஓரிரண்டு கண்ணீர்த் துளிகள் கன்னம் தீண்ட,அதை உணரும் நிலை இல்லை,அவனின் அவள்.

“லவ்வா..?” அவன் திருமண மண்டபத்தை நெருங்கும் போதே,ஏதோ இருக்கும் என்று அமிதேஷ் யோசித்திருக்க,அவனிடம் இருந்து சத்தியமாய் இப்படி ஒரு பதிலை தோழர்கள் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை.

“என்னடா லவ்னு சொல்றான்..? என்ன தான் ஆச்சு இவனுக்கு..?” இருவரும் தமக்குள் கிசுகிசுத்துக் கொள்ள,டேவிட்டோ அவர்களின் கண்டனப் பார்வையில் இருந்து தப்பிக்க முயன்றான்.

“என்ன அரசி இது..? எதயும் வாயத் தொறந்து சொல்ல மாட்டியா..?” அவன் கடிந்து கொள்வது போல் பேசவுமே,நனவுக்கு வந்தவளுக்கு,அவன் கூறிய வார்த்தைகளில் ஒன்று கூட செவியில் நுழையவில்லை,என்பதே உண்மை.

அவனை அவ்விடம் கண்டதும்,சுற்றம் மறந்திட,அவள் உறைந்திருந்தாள்.

“அரசி!”

“ஹான்!” எனக் கலைந்தவளோ,அவனை மட்டுமே விழிகளில் நிரப்பிக் கொண்டு விழித்திட,அடர் கற்றை மீசையின் ஓரம் சிறு புன்னகைத் துகளொன்று நெளிந்தது.

“நாம லவ் பண்றோம்னு  தைரியமா சொல்லு..எதுக்கு இன்னும் பயந்துகிட்டு இருக்க..? அதான் நா வந்துட்டேன்ல..” அவன் கூற,நொடியில் கலவரம் மின்னிய விழிகள் அடுத்த நொடி இயல்பாகிட,அது தப்பவில்லை,தோழியின் பார்வையில் இருந்து.

“அப்போ லவ் இல்லியா..? இதுவும் ட்ராமா தானா..?” ஏனோ,அவளுக்கு சிறு ஏமாற்றம்.அரிமா அவன்,கூறியதை கேட்டு,காதலோ என்கின்ற சந்தேகமும் அப்படி இருந்தால் நன்று என்கின்ற எண்ணமும் அவளுள் உதித்திருந்தது.

“என்னம்மா இந்த தம்பி சொல்றது உண்மயா..? இந்த தம்பியும் நீயும் லவ் பண்றீங்களா..?”

“ஆமா!” அவள் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே,ஒப்புக் கொள்ள,குறுக்கே இடை வெட்டினார்,கணேஷ்வரி.

“சார் இந்த பொண்ணு பொய் சொல்றா சார்..இவ்ளோ நாள் சரின்னு சொல்லி கிட்டு இருந்த பொண்ணு..திடீர்னு யாரோ மனச கலச்சி விட்டு இருக்காங்க..வேற யாரும் இல்ல..இந்த சுரேஷ் பய தான்..அவன் தான் இவங்களயும் கூட்டிட்டு வந்து இருக்கனும்..” 

மகனின் திருமணம் தடைப்பட்டு விடுமோ,என்கின்ற பதபதைப்பில் அவர் பொய்களை கோர்த்திட,அடுத்தடுத்து அங்கு வார்த்தையாடல்கள் தொடர்ந்து அரங்கேறிட,அதிகார பலத்தின் முன்னே,சற்று திணறிப் போனார்,சிவபிரசாத்.

மீடியாக்களின் கேமரா வெளிச்சம்,தர்மேந்திரனை சற்றே ஆட்டம் காண வைத்திட,கை கலப்பு எதுவும் நேர்ந்திடாமல் அது தடுத்தது.

தர்மேந்திரனுக்கு உள்நாட்டு தொலைக்காட்சி அலைவரிசையொன்று,அப்படியே நடப்பதை ஒளிபரப்ப,எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு ஆளாயினர்,அவரின் குடும்பத்தினர்.

“இந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்லாம கல்யாணம் பண்ண முடியாது..” அரிமா அவனின்,பின்னே நின்றிருந்தவளை பார்த்து சிவபிரசாத் கூறிடவுமே,மூச்சு வந்த உணர்வு அவளுக்கு.

நிம்மதியின் சாயல் அவள் விழிகளில் தெரியும் முன்னமே,அடுத்த குண்டை தூக்கிப் போட்டார்,கணேஷ்வரி.

“எங்க பையன புடிக்காம கல்யாணம் பண்ண மாட்டான்னா அதுக்கு நாங்க ஒத்துக்கறோம்..ஆனா எங்க வீட்டு பொண்ணு நம்பி யார் கூடவும் அனுப்ப விரும்பல..அவன் வந்து மொறயா பொண்ணு கேக்கற வர இவ எங்க கூடவே இருக்கட்டும்..என்னன்னாலும் எந்த உரிமையும் இப்போ அந்த பையனுக்கு கெடயாதுல..அப்றம் எப்டி எங்க பொண்ண அனுப்புறது..?”

அவர் கொளுத்திப் போட,அனைவரின் முகத்தில் அதிர்வின் துளிகள் தேங்கி நின்றன.

                ●●●●●●●●

வின்னோரா கிரகம்!

ஜெகஷிவ்வின் நாட்டின் தலைநகரமான,மார்கோனாவில் இருந்த,உயர் ரக நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர்,பவனியும் அவளுடன் வந்திருந்த தார்விக்கும்.

அவள் தங்கியிருந்த அறையின் கதவு தட்டப்பட,நினைத்தது போல் வெளியில் நின்று இருந்தது,தார்விக் தான்.

துப்பாக்கியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு,அவன் நிமிரவும் அவள் கதவைத் திறந்திடவும்,சரியாக இருந்தது.

“போலாமா..?” அதட்டலும் கண்டிப்பும் இன்றி,நட்பே அவன் குரலில்.அவள் எந்த வித பயமும் இன்றி,அவனுடன் வர சம்மதிக்க முழுக் காரணமும்,இந்த நட்பின் மீதான நம்பிக்கை தான்.

இருவரும் வந்து,ஒரு காற்பந்து அரங்கின் முன்னே,நிற்க அவளின் புருவங்கள் சுருங்கின.

“பவி..பிரதீஷ் சார் சொன்ன மாதிரி அவன் நாம இருக்குற எடத்துல இருந்து வன் கீலோமீட்டர் குள்ள இருக்குறதா தான் இன்ஃபார்மேஷன் வந்து இருக்கு..”

“ம்ம்ம்ம்ம்..”

“இந்த எடம் ஃபுல்லா மார்கோனாவோட ஒரு எடம்.. ஹஸேரி..அவன் இங்க இருக்குறது அதுவும் இந்த டேட்ல அவன் இருக்குறது நமக்கு கெடச்ச பெரிய ப்ளஸ் பாய்ண்ட் தான் சொல்லனும்..” அவன் கூறிட,புரியாத பாவம் அவள் விழிகளில்.

“எஸ் அது தான் உண்ம..மூணு வருஷத்துக்கு ஒரு தடவ ஜெகஷிவ் ல ஒரு கிரிக்கெட் டார்னமன்ட் நடக்கும்..அது அவங்களோட செலிப்ரஷேன்..அதுல ஸ்பெஷல் என்னன்னா வேறும் அஞ்சாயிரம் பேர மட்டும் தான் அந்த டார்னமண்ட் நடக்குற இங்க அல்லோவ் பண்ணுவாங்க..”

“ஹஸேரி இந்த ப்ளேஸ்..அந்த செலிப்ரேஷனக்கு மட்டும் ஒதுக்கப்பட ப்ளேஸ்..இது ஜெகஷிவ்வோட ஃபர்ஸ்ட் கிங்கால தொடங்கப்பட்ட ஒரு டார்னமன்ட்..ஸோ அந்த ஈவன்ட் அவங்களுக்கு ஒரு கல்ச்சர் மாதிரி..அந்த கல்ச்சர்காக ஒதுக்கப்பட்ட எடம் தான் இந்த ஹஸேரி..இந்த எடத்துக்குள்ள ஆட்கள்ள அலோவ் பண்றது வெறும் அந்த டார்ணமண்ட் நடக்குற நாளுங்கள்ல மட்டுந்தான்..”

“மத்த நாள் இங்க ஆட்கள அல்லோவ் பண்ண மாட்டாங்க..வேணும்னா ராஜ வம்சத்து ஆளுங்கள இல்லன்னா பெரிய பெரிய பதவில இருக்குறவங்கள அல்லோவ் பண்ணலாம்..மத்த படி ஆளுங்கள விட மாட்டாங்க..”

“இந்த டார்னமென்ட பாக்கறதுக்கு வெறும் அவங்க நாட்டுல இருந்து ஃபைவ் தவுசண்ட் பீபலால தான் முடியும்..அவங்கள மட்டுந்தான் இந்த ஹஸேரிக்குள்ள வர விடுவாங்க..டிக்கட் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி..மோஸ்ட்லி பணக்காரங்க தான் வருவாங்க..”

“கோடி கோடியா செலவழிச்சு பர்ஃபீயூம் வாங்கறது பரம்பர பணக்காரங்களுக்கு ஒரு கல்சர் மாதிரி,இந்த நாட்டு ஆளுங்களுக்கு இந்த ஈவன்ட பாக்கறது ஒரு கவுரவம்..அப்டி அவங்க மைன்ட் செட் இருக்குறதால பணக்காரங்க அடிச்சிடிட்டு இங்க வர்ரதுக்காக மெனகடுவாங்க..”

“அதுவும் இல்லாம ஹஸேரி வருஷத்துல அந்த பீரியட்ல மட்டுந்தான் ஓபனா இருக்குங்குறதால அத பாக்கவும் ஆளுங்க வருவாங்க..இப்போ நாம மாட்டி இருக்குறது அந்த பீரியட்..”

“பத்து நாள் தான் அந்த டோர்னமன்ட் பீரியட்..அந்த பத்து நாள்ல உள்ள வர அஞ்சாயிரம் பேர தவிர மத்தா யாராலயும் உள்ள வர முடியாது..நாம அவங்களுக்குள்ள வந்தது,நெஜமாலுமே ஷாக்க தான் இருக்கு..”

“அதுல்லாம வர்ரவங்கள வெளிய போகவும் விட மாட்டாங்க..சேஃப்டி இஷ்யூஸ் இருக்குறதால..ஸோ இன்னும் பத்து நாளக்கி இங்க இருக்கப் போற அஞ்சாயிரம் பேருக்குள்ள தான் நாம தேட்ற ஆளு இருக்கப் போறான்..இது நமக்கு விதி தந்த ஒரு சான்ஸுன்னு தான் சொல்லனும்..இதுக்குள்ள நாம தேடி முடிச்சுட்டோம்னா வேல ஈஸி..இல்லன்னா ரொம்ப கஷ்டம் ஆயிரும்..”

அவன் கூறக் கூற,அவ்விடயங்களை கிரகித்தவனோ,சடுதியாய் சில திட்டங்களை தீட்டிக் கொண்டாள்.

“இப்போ நடக்கப் போற கிரிக்கெட் மேட்ச்கு எத்தன பேர் போக முடியும்..?”

“தவுசண்ட்ட்ட்..”

“ம்ம்ம்ம்ம்..நாம போய் ஏதாச்சும் ப்ரோக்ராம் பண்ற மாதிரி ஹேன்ட் ஷேக் பண்ணலாம்..வேணா..வேணா..தவுசண்ட் சாக்லேட் வாங்கிட்டு வா..பேர்த் டேனு குடுக்குற மாதிரி கொடுக்கலாம்..”

“ஆயிரம் பேருக்கு உன்னால முடியுமா..?”

“ஆயிரம் பேர் தான..அது முடியும்..நமக்கு டைமும் இருக்கு தான..”

“பட் இது எவ்ளோ தூரம் பாசிபிள் ஆகும்னு எனக்கு தெரில பவனி..எல்லாரும் ஒரே எடத்துல இருந்தா ஓகே..பட் நாம தேட்ற தவுசண்ட்ல அந்தாளு இல்லாம போனா என்ன பண்றது..? அதுவும் இல்லாம இந்த தவுசண்ட் அவன் இல்லன்னா நாம மத்த நாலாயிரம் பேர்குள்ள தான் தேடனும்..”

“………………..”

“அந்த நாலாயிரம் பேர் யாருன்னு நம்மளால கண்டு பிடிக்க முடியாதே..திரும்பவும் நாம இவங்களுக்குள்ளவே தேட சான்ஸ் இருக்கு..அதுவும் இல்லாம நாம தேட்ற எடம் இல்லாம வேற எடத்துல அவன் இருந்தா என்ன பண்றது..?”

“டேய்,இவ்ளோ தூரம் யோசிச்சா நம்மளால ஒரு ஸ்டெப் கூட மூவ் பண்ண முடியாது..எல்லாப் பக்கமும் ஓட்ட இருக்குற மாதிரி தான் தோணும்..ஃபர்ஸ்ட் நமக்கு தேவ நம்பிக்க..அவன் நாம தேட்ற எடத்துல தான் இருப்பான்னு நாம நம்பனும்..அந்த நம்பிக்க இருந்தா எதுவும் கண்டிப்பா நடக்கும்..”

“………………”

“நாம ஒன்னும் கெட்டவனுக்காக ஒருத்தன தேடி அலயல..நம்ம நாட்டுக்காக ஒரு அக்மார்க் நல்ல பயலுக்காக தேடி அலயுறோம்..இந்த யுனிவர்ஸ் நமக்கு வழி காட்டும்..படச்சவரு நம்மள கை விடமாட்டாரு..”

மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டியவாறு,தீர்க்கமாய் உரைத்தவளை சின்னப் புன்னகையுடன் பார்த்தான்,அவன்.

“நா கூட அபிஷேக்க ஸ்கூல் டைம்ல நீ லவ் பண்றன்னு சொன்னப்போ வெளயாட்டுக்குன்னு நெனச்சேன்..அவனுக்காக ஹார்ட் எல்லாம் கொடுக்க வந்து..இவ்ளோ தூரம் எறங்கி வந்து இருக்க..?” கேலியாய் வினவிட,மெல்லப் புன்னகைத்தாள்.

“இதயம் எல்லாம் சத்தியமா இந்த காதல் மண்ணாங்கட்டிக்காக நா ஒன்னும் கொடுக்க வர்ல..அம்மாவோட நெலம வீட்டு சூழ்நில அதுக்காக தான்..இருக்குற ஒத்த இதயத்த அவனுக்கு தூக்கி கொடுத்துட்டு என்னோட மொத்த குடும்பத்தயும் நடுத்தெருவுல விட முடியாது..அவங்க எங்கம்மாவயும் எங்க வீட்டாளுங்களயும் பாத்துக்கறதா வாக்குத் தர்லன்னா கண்டிப்பா இதயம் என்ன ஒரு ஹேர் அ கூட தந்து இருக்க மாட்டேன்..”

“………………….”

“நம்ம சூழ்நில..ஹார்ட்டு வேணும்னு பிரஜின் டாக்டர் சொல்றாரு..அவரு சொன்னதெல்லாம் என் கூடவே ஒத்துப் போகுது..நம்ம செத்தாலும் நம்ம வீட்டாளுங்க நல்லா இருப்பாங்கன்னு ஒரு தாட்..அதுக்காக தான் சரின்னு ஒத்துகிட்டு வந்தேன்..” என்றிட,அவனும் அவளின் பேச்சுக்கு செவிசாய்த்தான்.

“ஆனா அப்றம் பாத்தா அபிக்கு..லைட்டா ஒரு மாதிரி ஆயிடுச்சு மனசுக்கு..என்னன்னாலும் லவ் பண்ணி இருக்கேன் இல்ல..வன் சைட்னாலும் லவ் தான் இல்ல..”

“அப்போ இப்போ நீ அவன லவ் பண்ணல..?”

“அந்த காதல் கருமாந்திரம் எல்லாம் அவன் பேசின பேச்சுலயே செத்து போய்டுச்சு..ஆனா பாஸ்டோட தாக்கம் கொஞ்சமா இருந்துச்சு..”

அவள் வார்த்தைகளில் மெல்லிய தளர்வோசை கரம் கோர்க்க,அவளுக்கே கொஞ்சம் புரியத் தான் செய்தது,தான் பொய் சொல்கிறேன் என்று.

“அப்றம் தான் தோணுச்சு..யாருக்கோ கொடுக்கப் போற ஹார்ட்ட அவனுக்கே கொடுத்தா சரிதான்னு..வேண்டிக்கவும் செஞ்சேன்..அவன் ஹார்டுக்கு எல்லா டெஸ்டும் மேட்ச் ஆகனும்னு..ஆனா என்ன அது தோத்துப் போச்சு..சரி தான்னு அப்டியே விட்டுட்டு போகவும் முடில..அதுவும் அவன் அப்பா உதவின்னு கேக்கும் போது மறுக்கவும் முடில..”

“வேற யாரும் இப்டி கேட்டு இருந்தா என்ன செஞ்சி இருப்பேன்னு தெரில..ஆனா லவ் பண்ணித் தொலச்ச பாவத்துக்கு அத பண்ணத் தோணுது..நாம என்ன தான் இல்லன்னு நெனச்சாலும் அந்த நெனப்பு முழுசா என்ன விட்டுப் போகல போ..ஃபர்ஸ்டு லவ்ல..கருமம்..”

ஏதேதோ,தன்பாட்டில் உளறினாள்,அவள்.உள்ளே செல்வதற்கு நேரம் இருந்திடவே,அவளை பேச விட்டான்,தோழன்.

பள்ளிக்கால நட்பது,சூழ்நிலைகளின் சூழ்ச்சியில் சிக்கி சிதறிப் போயிருக்க,அவளை மறுபடி கண்டது என்னவோ,இதயம் கொடுக்க வந்த பொழுது தான்.

“நா கூட உன்ன அப்டி பாப்பேன்னு நெனச்சு கூட பாக்கல..அமித்துக்கும் விஷ்வின்னுக்கும் உன்ன அவ்ளவா ஞாபகம் இல்ல..ஆனா ஆஜு எப்டி மறந்து இருப்பான்..?”

“அவனா..? அவன் எப்டி மறப்பான்..? அவனுக்குத் தான் மெமரி பவர் ரொம்ப ஜாஸ்தியே..அவன் ஒன்னும் என்ன மறக்கல..”

“நா வேற ஊர் போனதுக்கு அப்றம் கூட அவன் என்ன கவனிச்சி கிட்டு தான் இருந்து இருக்கான்..ஈவின் நா டாக்டர் பிரஜினோட ஹாஸ்பிடல்ல வேலக்கி சேந்ததும் அவனால தான்..அவன் மூலமா தான் அவங்க என்ன இன்டர்வ்யூக்கே கூப்டாங்கன்னா எனக்கு இப்போ தான் தெரிய வருது..” எனும் போதே,நேரம் நான்கு மணி எனக்காட்ட,அவள் உள் நுழைந்திட,அவன் வெளியகன்றான்.

கையில் பெரியா சாக்லேட் பெட்டியுடன் தார்விக்,உள் நுழைந்திட,அவளோ அவற்றில் சிலவற்றை அள்ளி கைகளில் எடுத்துக் கொண்டு முதலில் ஒரு சிறுவனிடம் நீட்ட,புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்,அவன்.

“ஹேப்பி பர்த்டே!” என்றவாறு,மாறி மாறி ஆட்கள் கை குலுக்கிட,முதலில் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் இறங்க,அவளுக்குள்ளும் சோர்வு.

கிட்டத்தட்ட,ஒட்ட வைத்த புன்னகையுடன் நூறு பேரிடம் கை குலுக்கியவளோ,பெருமூச்சு விட,பெட்டியை சுமந்து கொண்டு வந்த தார்விக்குக்கும் மூச்சு வாங்கியது.

இருவரும் பார்வைகளை வீசி,தமக்குள் சலித்துக் கொள்ள,அவர்கள் இருந்த இடத்திற்கு நான்கு இருக்கைகள் தள்ளியே,துடித்துக் கொண்டிருந்தது அவர்கள் தேடித் திரியும் இதயம்.

               ●●●●●●●

வண்டியில் நிலவிய அசாத்திய அமைதியில் வெறியானது,அமிதேஷுக்கு.

தன் பின்னே அமர்ந்திருக்கும்,இரு பெண்களையும் காணக் காண,அவனுக்கு கோபம் பற்றிக் கொண்டு வர,அதன் வெம்மை அவனின் மூச்சுக் காற்றிலும் தெறித்திட,கைகளை இறுகப் பொத்தி,தன் கோபத்தை அடக்கிக் கொள்ள முயன்றான்.

“என்னடா நடக்குது இங்க..? சுகர் பேஷன்ட்ரா நானு..?” எனும் ரீதியில்,ஒட்டு மொத்தமாய் குழம்பி,மயக்கம் போடும் நிலையில் இருந்தான்,விஷ்வின்.

பார்வை,ஆஜ்வினை தொட்டுத் தழுவிட,வண்டியோட்டுக் கொண்டு வந்தவனின் பார்வை,ரியர் வீவ் மிர்ரர் வழியே,அவளைத் தான் உரசி மீண்டது,அடிக்கடி.

அவனின் அண்மை தந்த ஆசுவாசம் போலும்,வண்டிக்குள் ஏறிய அடுத்த சில நிமிடங்களில் ராகவியின் தோளில் சாய்ந்து உறங்கி இருந்தாள்,தன்னை மீறி.

சில மாதங்களாக தொலைத்த உறக்கம்,அவளைத் தாலாட்டிட,ராகவிக்குமே குழந்தை போல் தூங்குபவளை பார்க்க பாவமாக இருந்திட,அவனின் மனநிலையை சொல்லவும் வேண்டுமா..?

அப்படியே,அவளை தன் மார்பில் போட்டு சிகை கோதி தாலாட்டவே,எண்ணங்கள் மிளிர்ந்திட,சட்டென தலையை உலுக்கி மீண்டவனின் இதழ்கடையில் மெல்லிய புன்னகை.

காதல்!

அவள் மீது அவனுக்கு தீராக் காதல்.ஆழம் காண இயலாமல்,ஆழத்தில் நிறைந்திருக்கும் ஆழ்கடல் காதல்.

எத்தனை தூரம் சாத்தியமென்று தெரியாது என்ற போதிலும்,அது அகம் முழுவதையும் நிரப்பிக் கிடக்க,அந்த தருணத்தை மனதில் நிறைத்துக் கொள்ளவே விரும்பினான்,அரிமா அவனும்.

முடிந்த வரை முயன்று,மறுபடி மறுபடி தனக்குள் கூறி,அவன் அதை கட்டுக்குள் வைத்திட நினைத்திருக்க,அதை மொத்தமாய் விசறடித்து விட்டு கட்டவிழ்ந்திட,அவளின் ஒற்றை தரிசனமே போதுமாய்.

விழிகளில் நிரம்பிய விம்பம்,அவன் உயிர் உரச,உறுதிகள் யாவும் உடைந்து சிறதி நிர்மூலமாகிட,அந்த நொடி அவனின் சர்வத்திலும் அவள் மட்டுமே வியாபித்து நின்றிருந்த மாயம்,அதை என்னவென்று சொல்வதாம்..?

அடிக்கடி விழியுரச,மனதின் இன்னதென்று சொல்ல முடிந்திடாததோர் பரவசம்.ஏனோ,புதுவித உணர்வொன்று உயிர்க்கூட்டில் உறைந்திட,அது அவனுக்கு அத்தனை பிடித்தது.

ராகவியும் அவனின் பார்வைச் சுழற்சியைக் கவனித்திட,அவளுக்கு எதையும் கணிக்க முடியவில்லை.திருமண மண்டபத்தில் நடந்தவை வேறு,சிந்தையை நிரப்பிட,பெரும் குழப்பம்.

டேவிட்டின் வீட்டை வந்தடைய,அவர்களுக்கு தம் பக்கத்தில் இருந்த அறையை காட்ட,உறக்க கலக்கத்துடன் உள் நுழைந்த பாவையவளுக்கு,நேர்த்தியாய் இருந்த கட்டிலைக் கண்டதும்,தூக்கம் கண்ணைக் கட்ட அப்படியே உறக்கத்தில் விழுந்து இருந்தாள்,தன்னை மறந்து.

“புதிய எடம் புதிய ஆளுங்க ஒன்னும் கவனிக்காம தூங்கறா பாரு..” தன்பாட்டில் திட்டிய தோழிக்கும் தெரியுமே,இத்தனை நாட்களும் உறக்கம் கூட அண்டாமல் எத்தனை தவித்து இருப்பாள் என்று.

முகத்தை கழுவிக் கொண்டு ராகவி வெளியே வர,அதற்குள் அவர்களுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு வந்தாள்,டேவிட்டின் மனைவி.

கீழ் மாடியில் அவர்கள் வசித்திருக்க,அவளிடமே உடைப் பையை கொடுத்து விட்டிருந்தான்,ஆஜ்வின்.

“அண்ணா தான் கொடுத்தாரு..” என்க,மறுக்காமல் வாங்கிக் கொண்டவளை உணவுண்ண அழைத்திட,இருந்த பசியில் அறையின் விளக்கை அணைத்து கதவை சாற்றி விட்டு கீழே சென்றிருந்தாள்,டேவிட்டின் மனைவியுடன்.

காலையில் இருந்து,வெறும் வயிற்றில் இருக்க,அதற்கு மேலும் அவளால் பசி தாங்க முடியவில்லை.

ராகவி,கீழே செல்வதை உறுதி செய்த கொண்டவனின் பாதங்கள்,அவளின் அறையை நோக்கி நீள,விளக்கை எறிய விட்டவனின் பார்வை,கருக்குழந்தை போல் ஒடுங்கி உறங்கிய வண்ணம் இருந்தவளில் இருந்து துளியும் நகரவில்லை.

அசையும் கருமணிகள்,அசைவின்றி இசைவுடன் அவள் விம்பத்தை மட்டுமே ஸ்பரிசித்திட,ஹேசல் நிற விழிகளில் உணர்வுகளில் ஆழிப் பேரலை.

அவளை மட்டுமே, பார்த்து நின்றிருந்தான்.இம்மியும் நகர்ந்திடா கண்மணிகளுடன்,இமைகளும் அசைந்திடவில்லை.

என்னென்னவோ,உணர்வலைகள் உயிரை நிரப்பிட,அதன் ஆதிக்கம் ஆழம் தாக்கிட,சட்டென அவளின் தலை கோத நீண்ட விரல்களோ பாதங்களுடன் சேர்த்து பின்னடைய,தீண்டவில்லை,அவளை.

மெல்லிய முறுவலுடன்,மீண்டும் தன்னறைக்குள் வந்தவனுக்கோ,இனம் புரியா நெகிழ்வும் தளர்வும் இதயத்தில்.

இங்கோ,

விஷ்வின்னும் அமிதேஷும் நொந்து போய் அமர்ந்து இருந்தனர்.”பூமி வாசி மீது அவனுக்கு காதலா..?” அவர்களால் இன்னுமே,நம்ப முடியவில்லை.

“எனக்கு சரியா தெரியல..ஆனா அவருக்கு முன்ன இருந்தே இந்த பொண்ணு மேல ஒரு இது இருக்கு..” டேவிட் கூறிச் சென்றது,மீள மீள செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்க,சட்டென பொறி தட்டியது,விஷ்வின்னுக்கு.

“டேய் அவனுக்கு லவ்லாம் இருக்காது டா..அன்னிக்கி அக்ஷதி கிட்ட இந்த கிங்கோட மனசுல குயின் இருக்கலாம் யார் கண்டான்னு வேற தெனாவெட்டா பேசிட்டு போயிருக்கான்..அவன் எப்டி..?” திகைத்து கேட்க,மற்றையவன் உறுத்து விழித்தான்.

“எரும அந்த பொண்ணோட பேரு அரசி டா..” கடுமையுடன் கூறிட,அவனிதயம் நின்று துடித்தது.

துடிக்கும்.

2026.03.23

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page