கல்லூரி வாசலில் சடன் பிரேக் போட்டான் அஸ்வந்த்.
அவனின் முதுகில் முகம் மோதி நின்றான் ஆகாஷ்.
எதுக்கு டா இப்படி? என்று தன் மூக்கை தேய்த்தான் ஆகாஷ்.
மச்சான் அவள் தான் டா என்று கத்தினான் அஸ்வந்த்.
ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மாணவர்கள் இவனை விசித்திரமாக பார்த்து விட்டு சென்றனர்.
யாரை சொல்லுறான் என்று பார்த்த ஆகாஷ் கண்களில் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சுகன்யா தென்பட்டாள்.
நேற்று இவளை பார்த்து தான் தோழன் பைக்கை டெம்போவில் கொண்டு விட்டான். இனி இந்த கல்லூரி படிப்பையும் , கல்லூரி வாழ்க்கையையும் எந்த வண்டியில் கொண்டு விட போகிறாளோ! என்று விழித்து கொண்டு நின்றான் ஆகாஷ்.
மச்சான் டேய் வா டா அவள்க்கிட்டே போய் பேசுவோம் என்று பறந்து கொண்டு நின்றான் அஸ்வந்த்.
என்ன டா பேச போற? அந்த பொண்ணை இதுக்கு முன்னாடி பார்த்துருக்கியா? நம்ப என்னனு போய் அவள்க்கிட்டே பேசுறது? என்று கேட்டான் ஆகாஷ்.
மச்சான் நீ பேச வேண்டாம் டா. நான் பேசிக்கிறேன். வா என்று அவனின் கைகளை பிடித்து இழுத்து சென்றான் அஸ்வந்த்.
நண்பனை நம் காதல் விஷயத்தில் இழுத்து அவனுக்கு ஏதும் சிக்கல் ஏற்படுத்தக்கூடாது என்று நேற்று நினைத்தவன் இன்று சுகன்யாவை பார்த்ததும் உலகத்தையே ஒட்டு மொத்தமாக மறந்து போனான்.
சுகன்யா இருவரையும் பார்த்து அதிர்ந்து நின்றாள்.
ஹாய் என்று அஸ்வந்த் தன் வெண்ணிற பற்கள் தெரிய சுகன்யாவின் முன் குழைந்து கொண்டு நின்றான்.
ஆகாஷ் நண்பனையும் சுகன்யாவையும் மாறி மாறி பார்த்தான்.
ஹாய்ங்க நேற்று உங்கள பார்த்தேன் என்றான் அஸ்வந்த்.
சரி அதுக்கு? சுகன்யா தனக்குள் இருந்த பயத்தை வெளிகாட்டாமல் பேசினாள்.
அது… என்று இழுத்த அஸ்வந்த்தின் கைகளை பிடித்த ஆகாஷ் நீங்க இந்த காலேஜ்லயா படிக்கிறிங்க? இதுக்கு முன்னாடி உங்கள பார்த்தது இல்லையே என்று கேட்டான்.
ஆமா…இங்க தான் படிக்கிறேன் என்ற ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டு இவர்களை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள் சுகன்யா.
அஸ்வந்த் அவளின் பின் செல்ல, ஆகாஷ் அவனின் கைகளை பிடித்து நிறுத்தி இரு மச்சான் அவள் எந்த டிப்பார்ட்மென்ட் பொண்ணு பார்ப்போம் என்று கூறி இருவரும் மெதுவாக அவளை பின் தொடர்ந்தனர்.
சுகன்யா பி ஏ தமிழ் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
மச்சான் அவள் தமிழ் டிப்பார்ட்மென்ட் போல டா. இதுவரைக்கும் நாம அவளை இங்கே பார்த்தது இல்லைல என்று பேசிக்கொண்டே நடந்த இருவரும் பி பி ஏ வகுப்பறைக்குள் சென்றனர்.
இனிமேல் தினமும் பார்ப்போம் டா தங்கச்சியை என்றான் ஆகாஷ்.
அவனின் தங்கை என்ற வார்த்தையில் அஸ்வந்த் தன் கன்னக்குழி விழ அழகாக சிரித்து, தேங்க்ஸ் மச்சான் என்றான்.
எதுக்கு மச்சான் தேங்க்ஸ்? பின்னாடி எனக்கும் ஒரு நாள் லவ் செட் ஆனால், நீயும் எனக்கு மாமா வேலை பார்க்கணும் டா. அதுக்கு தான் இந்த ஹெல்ப் என்றான் ஆகாஷ்.
டேய் என்ற அஸ்வந்த்க்கு நிஜமாகவே சந்தோசமாக இருந்தது. அதுவும் தன் நண்பன் உதவி செய்வேன் என்றதில்.
பிரேக் டைம், லஞ்ச் டைம், பிரீ டைம் என்று விடாமல் அவள் பின் சுற்றி கொண்டிருந்தான் அஸ்வந்த்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவள் பின் சுற்றியே அவனுடைய காதலை காட்டி கொண்டிருந்தான் அஸ்வந்த். அதுவும் இரண்டு வருடங்கள் ஒரு தலை காதல் மட்டுமே. அவளை எவ்விதத்திலும் தொல்லை செய்யாமல் காதல் செய்தான் நம் நாயகன்.
எறும்பு ஊர கல்லும் தேயும். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் அஸ்வந்த் சுகன்யாவின் பின் சுற்றி கொண்டிருக்க, ஒரு நாள் அவனை பார்க்காமல் போனாலும் ஏங்கி தான் போவாள் பேதையவள்.
தன் பின் சுற்றும் அஸ்வந்தை அவள் மனமும் விரும்பி ரசிக்க ஆரம்பித்து, கடைசியில் காதலும் மலர்ந்து விட்டது பெண்ணவளுக்கு.
சுகன்யாவின் பின் அஸ்வந்த் ராட்டினம் போல் சுற்றினாலும் அவன் இன்னும் காதலை அவளிடம் தெரிவிக்காமல் இருந்தான். அதனால், சுகன்யாவும் தனக்குள் பூத்த காதலை அவனிடம் கூற சற்று தயக்கம் காட்டினாள்.
****
அன்று மூன்றாவது வருடம் பி பி ஏ டிப்பார்ட்மென்ட் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டெர்வியூ நடக்கவிருந்தது.
தோழர்கள் இருவரும் எப்படியாவது செலக்ட்டாகி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்லூரியில் அடி எடுத்து வைத்தனர்.
அதுவும் ஆகாஷ் எப்படியாவது வேலை வாய்ப்பு பெற்று தன் தாய் தந்தை இருவரையும் பெருமை படுத்த வேண்டும் என்று எண்ணினான்.
அஸ்வந்த் தன் நண்பன் ஆகாஷ்ஷின் தோளில் கை வைத்தான்.
என்ன டா என்றான் ஆகாஷ்.
என்னனு தெரியல டா மனசு ஒரு மாதிரி பட படப்பா இருக்குது. நான் போய் ஒரே ஒரு முறை சுகன்யாவை பார்த்துட்டு வந்துறேன். இன்டெர்வியூல ஜாயின் பண்ணிட்டா அப்பறம் லேட்டா ஆயிடும் வெளி வர என்று ஏதோ முகத்தில் ஒரு திகிலோடு கூறிய நண்பனிடம், சரி என்று கூறி அனுப்பி வைத்தான் ஆகாஷ்.
அஸ்வந்த் சுகன்யாவின் வகுப்பிற்கு சென்றான். ஆகாஷ் அவனுக்காக அவர்களுடைய வகுப்பில் காத்திருக்க, மற்ற மாணவர்கள் ரெஸ்யும் தயார் செய்து கொண்டிருந்தனர்.
அஸ்வந்த் சுருங்கிய வதனத்தோடு வகுப்பிற்குள் வர, ஆகாஷ் புருவம் சுருக்கினான்.
என்ன மச்சான் சீக்கிரம் வந்துட்ட. சுகன்யாவை பார்த்து பேசிட்டியா? என்று கேட்டான்.
இல்லை டா . அவள் இன்னைக்கு காலேஜ் வரல என்றான் அஸ்வந்த்.
ஏன் என்பது போல் ஆகாஷ் பார்த்தான்.
இன்னைக்கு அவளுக்கு உடம்பு சரியில்லையாம் என்று கூறிய அஸ்வந்த் சோகமாக இருக்கையில் அமர்ந்தான்.
அதுனால என்ன டா? நாம இன்டெர்வியூ முடிச்சிட்டு ஈவினிங் அவளோட ஹாஸ்டல் போய் பார்க்கலாம் என்றான் ஆகாஷ்.
சரி மச்சான் என்ற நண்பனின் குரலில் சுரத்தை இல்லை.
மச்சான் கேம்பஸ் இன்டெர்வியூல செலக்ட் ஆயிட்டு சந்தோசமா அவள் முன்னாடி போய் நின்று உன் லவ்வயும் சொல்லிரு. வேலை கிடைச்சதையும் சொல்லிரு என்றான் ஆகாஷ்.
ஆகாஷ் கூறியதை கேட்டவனுக்கு முகத்தில் ஒரு தெளிவு வந்தது. சரி மச்சான் நீ என்னோட வருவியா டா அவளை பார்க்க என்று கேட்டான் அஸ்வந்த்.
என்ன மச்சான் நான் இல்லாமல் எப்படி என்றவன் நண்பனின் தோளில் கை போட்டு இன்டெர்வியூ நடக்கும் ஹாலுக்கு அழைத்து சென்றான்.
முதலில் வெளி இடத்தில் வேலை செய்து வேலையின் நுனுக்கங்களை தெரிந்து கொண்டு அதன் பின், தான் சுயமாக முன்னேறி விடலாம் என்று நினைத்தான் அஸ்வந்த்.
சம்பளம் குறைவாக வந்தாலும் வேலையை கற்று கொண்டு அதன் பின் தனியாக தோழில் தொடங்கி விடலாம் என்று நினைத்தான் ஆகாஷ்.
இருவரின் எண்ணங்கள் வேறாக இருந்தாலும் அவர்களின் நோக்கம் வேலையை கற்று முன்னேற வேண்டும் என்பது தான்.
****
சுகன்யா சோர்வாக தரையில் விரிக்கப்பட்ட பாயில் படுத்திருந்தாள். அவளின் உடல் முழுதும் ஜொரத்தால் கொதித்து கொண்டிருந்தது. அதிகமான உடல் சூட்டின் காரணமாக தலையும் சேர்ந்து வலித்தது.
அவளின் விழிகளில் இருந்து நீர் வழிந்தது. லேசாக நடக்க முடிந்தால் கூட எழுந்து அவளாகவே மருத்துவமனை சென்றிருப்பாள். ஆனால், இப்பொழுது அதுவும் முடியாமல் படுத்திருந்தாள்.
மணி மாலை நான்கை தாண்டி சென்று கொண்டிருந்தது.
சுகன்யா என்று அவளை அழைத்து கொண்டு அவளின் அறைக்கு வந்தார் ஹாஸ்டல் வாடர்ன்.
மெல்ல தலை அசைத்து பார்த்தவளின் அருகில் வந்தவர், என்னாச்சு டா சுகன்யா என்று பாசமாக அவளின் தலையை வருட, அவரின் கைகளில் நெருப்பு பொறி பட்டது போல் துடித்தார் வாடர்ன்.
சுகன்யா உடம்பு முடிலனு என்கிட்டே சொல்லிருக்க வேண்டியது தானே டா.
நானே உன்னைய மருத்துவமனை அழைச்சிட்டு போயிருப்பேனே என்று கரிசனையோடு கேட்டவரை பார்த்ததும், ஒன்னும் இல்லை க்கா ரெஸ்ட் எடுத்தா சரியா போயிரும் என்றாள் சுகன்யா.
உன்னைய பார்க்க ஆள் வந்துருக்காங்க ம்மா. அதான் உன்கிட்டே சொல்ல வந்தேன் என்றார் வாடர்ன்.
என்னைய பார்க்கவா என்றவளின் விழிகளில் இருந்து நீர் அதிகமாக வழிய, உடம்பு முடியவில்லை என்பதையும் மறந்து அவளின் அறையில் இருந்து ஓடி வந்தாள் சுகன்யா.
வேகமாக ஓடி செல்லும் அவளை பார்த்த ஹாஸ்டல் வார்டன் கண்கள் கலங்கியது. அவரின் உதடு மெல்லிய புன்னகையை உதிர்த்தது.
படிகளில் இருந்து வேகமாக ஓடி வந்த சுகன்யா, ஹாஸ்டல் ஹாலில் நின்றிருக்கும் அஸ்வந்த் மற்றும் ஆகாஸ் இருவரையும் பார்த்து ஒரு நொடி தன் கால்களுக்கு ஓய்வு கொடுத்து, பின் வேகமாக ஓடி வந்து அஸ்வந்த்தை இறுக்கி அணைத்து கொண்டாள். அவள் உடலின் வெப்பம் அஸ்வந்த்தின் உடலில் ஊடுருவி சென்றது.
அஸ்வந்த் அவளின் இந்த திடீர் அணைப்பை எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஓடி வந்த சுகன்யாவை இடையோடு பிடித்து தன்னோடு அணைத்து கொண்டான்.
எத்தனை தடவை என்னைய யாராச்சும் பார்க்க வருவாங்களானு ஏங்கிருக்குறேன் தெரியுமா என்றவள் குலுங்கி அழுதாள்.
சுகன்யாவின் வார்த்தையில் ஆகாஷ்ஷின் கண்கள் கலங்கி விட்டது.
அவளின் வார்த்தையை கேட்ட அஸ்வந்த்திற்கு, பெரிய கடப்பாரை ஒன்று விழுந்து தன் இதயத்தை நொறுக்கியது போல் அவ்வளவு வலியாக இருந்தது.
இந்த இரண்டு வருடத்தில் சுகன்யாவின் பின் சுற்றியதால் அவளை பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்டான் அஸ்வந்த்.
அவள் பிறந்ததில் இருந்து உறவு என்ற ஒரு பந்தம் இல்லாமல் தனியாக வளர்ந்து, சிரமப்பட்டு படித்து கொண்டிருப்பதை நன்றாக தெரிந்து தான் வைத்திருந்தான் அஸ்வந்த்.
என்னைய முதல் முதலா தேடி வந்த ஆள் நீ தான் அஸ்வந்த் என்றவள் அவனின் மார்பில் புதைந்து கண்ணீர் விட்டாள்.
எனக்கு தெரியும் சுகி என்றவன் அவளின் தலையை வருடி, வா ஹாஸ்பிடல் போகலாம் என்று அழைத்தான்.
ஹாஸ்டல் வாடர்ன் அவர்களின் அருகில் வந்தார். நீ அவளை பார்த்து அழைச்சிட்டு போய்ட்டு வா ப்பா என்றார் அஸ்வந்த்தை பார்த்து.
அஸ்வந்த், சுகன்யாவின் கைகளை பிடித்து அழைத்து சென்று டூ வீலரில் ஏற்றி ஹாஸ்பிடல் அழைத்து சென்றான்.
ஏற்கனவே கூறியது போல் ஆகாஷ் பேருந்து பிடித்து அதில் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி விட்டான்.
தனிமையில் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை. இதோ நம் நாயகனின் உயிர் நண்பன் ஆகாஷ், கூடிய சீக்கிரம் அந்த தனிமையை தானும் அனுபவிக்க போகிறோம் என்று அறியாமல், சுகன்யா கூறிய வார்த்தைகளில் இருந்து வெளிவர முடியாமல் விழியில் நீரை இறக்கி கொண்டு அந்த பேருந்தில் பயணித்து கொண்டிருக்கிறான்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
