நெஞ்சம் 3

 

 “ஒரு ரவுடிய லவ் பண்ணிட்டு அவன வெளிய எடுக்க சொல்றியே? உனக்கு வெக்கமா இல்ல?” என்றவனின் வார்த்தைகளை நம்ப முடியாமல் அவனை பார்த்தாள். 

“சாம் நான் சொல்றது புரிஞ்சுக்கோடா. அவனுக்கு கொஞ்சம் கோபம் வரும். மத்தபடி அவன் ரொம்ப நல்லவன் டா. அவன் ரௌடி இல்லடா” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் ஜெசிகாவும், செலினும் இவர்களது சத்தம் கேட்டு அந்த அறைக்குள் வந்தார்கள். 

“ஜெனி ஏன் அழற? என்னாச்சு?” என்று பதறி போய் ஜெசிகா கேட்டாள். 

“ஏன்டி நீங்க அவ கூட தான இருக்கீங்க? அவ யாரோ ஒரு ரவுடிய லவ் பண்றா. அது கூட தெரியாம இருக்கீங்க?” என்று அவர்களையும் சாம் திட்டினான். 

“என்ன சொல்றான் இவன்? சாம் சொல்றது உண்மையா?” என செலின் கேட்க அவளோ எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்தாள். 

“ஏய்… எதுக்குடி இப்படி அழுதுட்டு இருக்க? இத்தன நாளா‌ நமக்குள்ள எந்த விஷயமா இருந்தாலும் நம்ம ஷேர் பண்ணுவோம்ல. இதென்ன புது பழக்கம்?” என்று ஜெசிகா திட்டினாள். 

“நல்லா கேளுடி. ஆனா என்ன நடந்ததுனு தெரியல. இப்போ அவன் ஜெயில்ல இருக்கான்” என்று சாம் சொல்ல இருவரும் அவளை அதிர்ச்சியாய் பார்த்தார்கள். 

“அவன் இன்னைக்கு எனக்கு பர்த்டேனு பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருந்தான். நான் போகாததால அங்க பிராப்ளம் ஆயிருச்சு” என்று கூறியவளை அதிர்சசியுடன்‌ பார்த்தனர் மூவரும். 

“ஜென்னி என்ன சொல்ற?” என்று சாம் இறுக்கமான குரலில் கேட்டான். 

“ஆமா. அவன் கொலிக்ஸ், பிரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் என்ன இன்னைக்கு இன்ட்ரோ குடுக்கறேனு சொன்னான்” என்றவளை தீயாய் முறைத்தான் சாம். 

“கொலிக் ஆ? அவன் எங்க வொர்க் பண்றான்?” 

“எம்என்சில” 

“சாலரி” 

“ஃபிபீடின்கே” என்றவளை அதிர்ச்சியாக பார்த்தான். 

“ஆர் யூ மேட் ஜென்னி? 15k எப்டி பத்தும்? ஒவ்வொரு டைமும் ஷாப்பிங் போனா நீ எவ்ளோ செலவு பண்ணுவ? எப்டி அவன் உனக்கு செட் ஆவான்?” என்று அதிர்ந்த குரலில் கேட்டான். 

“சாம் மணி பேஸ் பண்ணி அவன பேசாத. அவன் கூட இருந்தாலே எனக்கு போதும்” என்று கூறினாள். 

“நீ காதல் மயக்கத்துல இருக்கடி. அதான் இப்படி பேசற.‌‌ சரி. அவனோட அம்மா,அப்பா என்ன பண்றாங்க?” என்று குடும்பத்தை பற்றி விசாரித்தான். 

“இல்லடா. அவனுக்கு பேரண்ட்ஸ் இல்ல. ஒரு சித்தப்பா மட்டும் தான்” என்று சொன்னாள். 

“இந்த காலத்துல பேரெண்ட்ஸ் இருந்தாலே தறி கெட்டு போறாங்க. இதுல இவனுக்கு அம்மா, அப்பாவும் இல்ல. வேலையும் ஒழுங்கா இல்ல. எந்த தைரியத்துல நீ லவ்னு சொல்ற?”  என்று கர்ஜித்தான் சாம். 

அவனது கத்தலில் ஜென்னிக்கு தூக்கி வாரி போட்டது. 

“டேய் அமைதியா இருடா. இப்போ அவ என்ன பண்ணிட்டானு இப்படி திட்டிட்டு இருக்க?” என்று ஜெசிகா அவளை ஆசுவாசப்படுத்தினாள். 

“ஏய்… நீ சப்போர்ட்டுக்கு வராதடி. இப்போ லவ் பண்றப்ப நல்லா தான் இருக்கும். பின்னாடி தான் தெரியும் எவ்ளோ கஷ்டம்னு” என்று திட்டினான். 

“ப்ளீஸ் சாம். இப்போ இது முக்கியமா? அவன வெளிய எடுக்கணும்டா. ஏதாவது பண்ணே. நீ லேட் பண்ண லேட் பண்ண அவனுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்குடா” என்று ஜென்னி கதறினாள். 

“அடிங்… நான் என்ன சொல்றேன்? நீ என்ன பேசற?” என்று அடிக்க கை ஓங்கியவனை நிலைகுத்திய பார்வை பார்த்தாள். அந்த பார்வை அவனை உயிரோடு கொன்றது. 

 

“இவள கூட்டிட்டு போங்கடி” என்றவன் அடுத்து கத்த இப்போது செலின் கத்தினாள். 

 

“டேய் இப்போ என்ன பண்ணான்னு கை ஓங்குன? ஜெனி அவன் கூப்பிட்டப்பயும் நம்ம கூட தான இருந்தா? அத யோசிக்க மாட்டியா? பர்த்டே அன்னைக்கு அவள இப்படி அழ வைக்கற?” என்று கோபமாய் கேட்டாள். 

 

“ஓ… ஷிட்… ஜென்னி” என்றவன் ஜென்னியின் அருகே வந்தான். 

 

“நான் என்ன பண்ணிட்டேனு இப்படி பிஹேவ் பண்ற? நீ இல்லேனா எனக்கு யாரையும் தெரியாதா? நான் பாத்துக்கிறேன்” என்று ஜென்னி கோபமாய் கத்தியவள் அங்கிருந்து வெளியேறினாள். 

 

“ஜென்னி நில்லு… இந்நேரத்துக்கு எங்க போற?”  

“நான் எங்கயோ போறேன். என் கௌதம் எனக்கு வேணும். நீ யார்ட்ட வேணாலும் சொல்லிக்கோ” என்றவள் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். 

“செலின் நீ அமைதியா இருக்க மாட்ட? இப்போ போய் வெளில போறேனு‌‌ போறா‌ பாரு. உங்கள எல்லாம் என்னால சமாளிக்க முடியலடி” என்றவன் அவள் பின்னாடி சென்றான். 

“ஹேய் லூசாடி நீ? இந்த நேரத்தில எங்க போற? யார தெரியும் உனக்கு?” என்று சாம் கத்தினான். 

“ஆமா. நான் லூசு தான். பைத்தியம் தான். நான் அவனுக்கு என்ன ஆச்சோனு ஒவ்வொரு நிமிஷமும் பதறிட்டு இருக்கேன். பட் நீ என்னான்னா அவனோட ஹிஸ்டரிய கேட்டுட்டு இருக்க?” என்று சொன்னவளை அற்ப புழுவை போல பார்த்தான்‌. 

“என்னடா நீ என்ன நினைச்சிட்டு இருக்க? எங்க போனாலும் கூடவே வந்து நான் உன்ன பாத்துக்கறேனு வருவியே? இப்போ மட்டும் ஏன்டா என்ன அம்போனு விடற?” என்றவள் கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்தாள். 

“ஷ்… ஜென்னி” என்று அவளை இறுக அணைத்தவன் ஆறுதலாக அவளது முதுகை வருடி கொடுத்தான். 

“டேய்… விடுடா.. நான் பாத்துக்கிறேன். கௌதம வெளிய எடுத்துடலாம்” என்று அவளை தேற்றியபடி ஆறுதலாக சொல்லவும் தான் அவளது முகம் பூவாக மலர்ந்தது. 

 

அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தவன் தனது நண்பன் ப்ரியன் மூலமாக என்ன செய்வது என்று விசாரித்தவன் அவன் மூலமாகவே வக்கீலை அரேன்ஜ் செய்தான். 

ஆனால் அவர்கள் பிரச்சினையை வக்கீலிடம் சொல்லி அவனை வெளியில் எடுக்க முனைந்த போது அடுத்த நாள் காலை ஆகியிருந்தது‌. 

அவர்கள் காவல் நிலையத்தை அடைந்த போது  வெளியே ஷாலினியும், ராகுலும் யாருடனோ பேசி கொண்டிருந்தார்கள். 

ஜென்னியை பார்த்த ஷாலினி அவளருகே வந்தாள். 

“நீ இங்க என்ன பண்ற? அவன் இருக்கானா செத்தானானு பாக்க வந்தியா?” என்று இறுகிய குரலில் கேட்டாள். 

அவளது கேள்வியில் ஜென்னிக்கு கரகரவென்று கண்ணீர் வந்தது. 

“அக்கா ஏன் இப்படி பேசறீங்க? அவன வெளிய எடுக்க வந்தோம் கா” என்றாள். 

“ஏன்… நாங்க அவனுக்கு இல்லையா? நாங்களும் நேத்துல இருந்து டிரை பண்றோம். ஆனா இந்த இன்ஸ்பெக்டர் அவன் எத கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கறானு அவன் மேல் ரேப் கேஸ்,  டிரக் கேஸ் போடப் போறேங்கறாங்க” என்று ஷாலினி சொல்லியதை கேட்டதும் அவளது உடல் நடுங்கியது. 

“சாம்… சாம்” என்றவளுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. 

அவர்களை பார்த்தபடி வந்த ராகுல் “நீ ஏன் இவங்க கிட்ட பேசிட்டு இருக்க? நமக்கு என்ன வேலையோ அத பாக்கலாம். வா” என்று அவளை இழுத்து சென்றான். 

“இப்போ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகற? நீ ஃபர்ஸ்ட் வா பாத்துக்கலாம்” என்று அவளை தோளை  அணைத்து தேற்றியவன் அவர்களை முறைத்து கொண்டே காவல் நிலையத்திற்குள் வந்தான். 

அவர்கள் வந்த போது நிகிலனை ஆச்சர்யமாய் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ரவி. 

“ஹேய்… என்ன நீங்க வந்திருக்கீங்க?” என்று புன்னகையுடன் கேட்டார். 

“இதென்ன கேள்வி ரவி? என் பொழப்பே இது தானே?” என்று சிரித்து கொண்டே சொன்னவன் “அந்த பையன ரிலீஸ் பண்ணுங்க ரவி” என்று கூறினான். 

“எப்படி சார் இப்படி ஒரு பையனுக்கு பெயில் எடுக்க வர்றீங்க? பார்ட்டில குடிக்க வேண்டியது, கண்ணு மண்ணு தெரியாம சண்ட போட வேண்டியது. கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்கறான். ச்சே.. இர்ரிட்டேட்டிங் இடியட்” என்றவர் எரிந்து விழ சாம் ஜென்னியை யோசனையுடன் பார்த்தான். 

அவளோ அவன் பேசுவதே புரியாததை போல நின்றிருந்தாள். 

“ஆனா நீங்க இவனுக்கு வந்தது தான் ஆச்சரியமா இருக்கு‌ ரவி” என்றவர் “நேத்து அந்த பார்ட்டி கேஸ்ல புடிச்சுட்டு வந்தோமே  அவன ரிலீஸ் பண்ணுங்க” என்றவர் சொல்ல கௌதம் வெளியே நடக்க முடியாமல் சுவற்றை பிடித்தபடி நடந்து வந்தான். 

அவனது கண்கள் வீங்கி உடம்பு முழுவதும் காயங்கள் இருந்தது. அவனால் தனியாக ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. 

அவனை பார்த்ததும் கௌதம் என்று கதறியபடியே அவனருகில் வர கௌதமோ அவளை பார்வையாலே எட்ட நிறுத்தினான். 

அவன் கஷ்டப்படுவதை பார்த்த சாம் அவனை வந்து தாங்கினான். ஆனால் கௌதமோ நீ யார் என்பதை போல பார்த்தான். 

கௌதமுக்கு தான் இருந்த நிலையில் சாமை தவிர்க்க முடியவில்லை. அதே சமயம் ஜென்னியின் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. 

“ஆர்‌ யூ ஓகே கௌதம்?” என சாம் கேட்டான். 

அந்த நிமிடம் சாமை பார்க்கையில் அவ்வளவு கோபம் வந்தது. 

“நீ யார்டா எனக்கு ஹெல்ப் பண்ண? நேத்து அவளுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன். அவ என்ன எவ்ளோ கேவலப்படுத்திட்டா. இப்போ நீ வந்து அசால்ட்டுக்கு ஓகேவானு கேக்கற?” என்றவன் உடம்பு வலியில் பல்லை கடித்தான்.   

அவனை சாம் கூட்டி கொண்டு வெளியே வர “கௌதம்” என்று ஓடி வந்த ராகுல் அவனை தாங்கி கொண்டான். 

“கௌதம் நான் சொல்றது கேளுடா. சாரிடா” என்றவள் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள். 

ஆனால் அவனோ “யார் நீ? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்க அந்த கேள்வி அவளுக்கு தூக்கி வாரி போட்டது. 

“கௌதம்” 

“உன்கிட்ட ஏதும் பேசற மூடுல இல்ல. கிளம்பிடு” என்று இறுகிய குரலில் கூறினான். 

“நான் பண்ணது தப்பு தான் கௌதம். பேசு கௌதம்” என்று ஜென்னி கெஞ்சினாள். 

“நான் எதுக்கு பேசணும்? திருப்பி நான் இது மாதிரி அவமானப்பட தயாரில்ல” என்றவன் மேலும் நடக்க ஆரம்பித்தான். 

அவனது கைகளை பிடித்தவள் “போகாத கௌதம்” என்று கெஞ்சினாள். 

“கைய விடுடி” என்று கத்தினான் அவன். 

“நான் விட மாட்டேன்” என்று பிடிவாதமாக சொன்னாள். 

அவளை ஒரு பார்வை பார்த்தவன் தனது ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி அவளை அறைய ஜென்னி தூர போய் வீழ்ந்தாள். 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page