நெஞ்சம் 4

“ஜென்னி” என்று பதறியபடி வந்த சாம் அவளை தனது தோளில் சாய்த்து கொண்டான்.

“கௌதம்” என்றவன் இப்போது அவனை அடிக்க கை ஓங்க கௌதம் அவன் கைகளை பிடித்து தடுத்தான்.

“நீங்க யாரும் எனக்கு வேணாம். எல்லாரும் போங்க” என்று கத்தியவன் தட்டு தடுமாறி அங்கு வந்த ஆட்டோவில் கிளம்பி சென்றான்.

கௌதமின் உதாசீனத்தில் ஜென்னி கதறியழ ஆரம்பித்தாள்.

ஏற்கனவே கௌதமின் செய்கையில் கோபத்தில் இருந்த சாம் இப்போது ஜென்னி அழவும் கௌதமின் மேல் இருந்த கோபத்தில் அவளை தரதரவென இழுத்து சென்றான்.

காரில் வீடு செல்லும் வரை  அமைதியாக இருந்தவன் காரை நிறுத்திய பின்பும் அவள் அழுது கொண்டே இருக்க அதனை பார்த்து எரிச்சலுற்றவன் “ஜென்னி” என அதட்டினான்.

அந்த குரலில் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

அதனை பார்த்ததும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் “வீடு வந்திடுச்சு. வா” என்று அவளை கூட்டி சென்றான்.

இவர்களுக்காக காத்து கொண்டிருந்தவர்கள் ஜென்னி அழுவதை பார்த்ததும் பதறினார்கள். 

 “என்ன ஆச்சு? கௌதம வெளிய எடுக்க முடியலயா? என்னடா பேபி?  என்று பதறி போய் கேட்டனர் இருவரும்.

“இன்னும் என்ன ஆவணும்? இவளுக்காக நாம எவ்ளோ ரிஸ்க் எடுத்து அவன வெளிய எடுக்க போனா அவன் இவள எவ்வளவு கேவலமா பேசறான்?”‌‌ என்று கத்தியவன் 

“ஜென்னி பர்ஸ்ட் ஸ்டாப் க்ரையிங். உன்னய ஒரு மனுஷியா கூட மதிக்காம போறான். அவனுக்காக நீ அழ தேவையில்ல” என்று கத்தினான்.

“டேய் விடுடா. அவளே மூட் அவுட்ல இருக்கா. நீயும் ஏன் கத்தற?” என்று ஜெசிகா கேட்டாள்.

“ஏய் போடி. அவன் ஜென்னிய அறைஞ்சிட்டான்.‌ மேடம் அப்பயும் கெஞ்சிட்டு நிக்கறாங்க” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

“என் மூஞ்சிய எதுக்குடி பாக்குறீங்க? நானே ஏகப்பட்ட கடுப்புல இருக்கேன்.‌எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவள அமைதியா இருக்க சொல்லு. இல்ல என்ன பண்ணுவேனு தெரியாது” என்றவன் பல்லை கடித்தபடி அங்கிருந்து வெளியேறினான்.

அவன்‌ போன பின்பு தனது அறைக்கு சென்றவள் கதறியழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகை நிற்கும் போல தோன்றவில்லை. அவளை அதட்டி ,‌மிரட்டி அவளை சாப்பிட வைத்தார்கள். அதற்கு பிறகு அவள் முற்றும் முழுதாக அமைதியாகி போனாள்.

யாருடனும் சரியாக பேசாமல் இருக்க சாமுக்கு இப்போது இன்னும் கோபம் அதிகமாய் வந்தது.

“ஜென்னி நீ என்ன நினைச்சிட்டு இருக்க? இப்படியே இருந்தினா உனக்கு படிக்க இஷ்டம் இல்ல.‌கூட்டிட்டு போங்க சித்தப்பானு சொல்லிடுவேன்” என்றவன் சொல்ல ஜென்னிக்கு தூக்கி வாரி போட்டது.

“சா…‌ சாம் நீ என்ன சொல்ற?” என்று தட்டுத் தடுமாறிய படி கேட்டாள்.

“ஆமா. நீ இப்படியே இருந்தினா இத விட்டா வேற ஆப்ஷன் இல்ல” என்றவன் சொல்ல அவள் அடிபட்ட பார்வை பார்த்தாள்.

அந்த பார்வை அவனை வலிக்க செய்தாலும் இப்படியே விட்டால் அவள் அதிலிருந்து வெளியே வர மாட்டாள் என்று நினைத்தவன் அவளை மிரட்ட ஆரம்பித்தான்.

பின்னர் அனைவரும் வெளியே போகலாம் என முடிவு செய்து மால் சென்றார்கள். 

“ஜென்னி வா ட்ரெஸ் பர்ச்சேஸ் பண்ணலாம்” என்று அவளை துணிக்கடையின் உள்ளே கூட்டி சென்றார்கள்.

ஏனோ‌ தானோ என்றிருந்தவளை வம்பிழுத்து ஏதேதோ பேசி சிரிக்க வைத்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்கள்.

அவள் ஆடையை காட்டி ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருக்க அப்போது அந்த வழியாக வந்த ஆனந்த் அவளை பார்த்து அதிர்ச்சியானான்.

“ஜென்னி”

“அண்ணா…”

“அங்க ஒருத்தன் உன்னால என்ன பாடுபட்டுட்டு இருக்கான்.‌ உனக்கு அத பத்தி கொஞ்சம் கூட கவலையில்ல” என்று இறுகிய குரலில் கேட்டவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

“கௌதமுக்கு போன் பண்ணேன் அண்ணா. பட் என் கால் அவன் எடுக்கவே மாட்டேங்கறான். எனக்கு எந்த ரெஸ்பான்ஸும் பண்ண மாட்டேங்கறான்” என்று‌ கண்ணீர் குரலில் கூறினாள்.

“அதுக்காக அப்படியே அமைதியா இருந்துடுவியா? அவன நீ தனியா விட்ருவியா ஜென்னி?” என்ற கேள்வியில் திகைத்து போய் அவனை பார்த்தாள்.

“ண்ணா”

“போதும்டா. அவன் இப்போ கொஞ்ச நாளா தான் சந்தோஷமா இருக்கறான்.‌‌அதயும் நீ கெடுத்திட்டே. நீ ஃபங்க்ஷனுக்கு வராம இருப்பேனு கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல” என்றவன் சொல்ல எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாள்.

“ஓகே.‌ டேக் கேர்” என்று ஆனந்த் சொல்லிவிட்டு செல்ல அவள் சிலையாய் நின்றாள்.

******

கௌதம் போனில் உள்ள வால் பேப்பரையே‌ பார்த்து கொண்டிருந்தான்.

அந்த போட்டோ அவன் ஜென்னிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது எடுத்தது. இருவரின்‌ முகமும் சிரித்தபடி இருக்க ஜென்னி அவனது கை வளைவில் தன்னை மறந்து காதல் பார்வை பார்த்தபடி இருந்தாள். 

கௌதம் அவளை பார்த்து சிரித்தபடி செல்ஃபி எடுத்து கொண்டிருந்தான். அதனை பார்த்தவனுக்கு பெருமூச்சு வந்தது.

அந்த நாள்‌‌ எவ்வளவு சந்தோஷமாக ஆரம்பித்தது. அவளுக்காக ஒவ்வொன்றையும் எப்படி பார்த்து பார்த்து செய்தான். ஆனால் அவள் தனது சொந்தங்கள் தான் முக்கியம் என்று நிரூபித்து விட்டாளே.

அவளை நினைத்து கோபம் கொண்ட அதே வேளையில் அவளது கண்ணீரை நினைத்து அவனுக்கு வலியும் உண்டானது.

அவளது போட்டைவை வருடி‌ கொண்டிருக்கையில் ராகுல் அங்கு வந்தான்.

“ஏன்டா இவள பத்தி நினைக்கக் கூடாதுனு சொல்லிட்டு இருக்கேன்? நீ என்னடா‌ பண்ணிட்டு இருக்க? உனக்கு அவ்வளவு அவமானப்பட்டும் புத்தி வரலயா?” என்று கோபமாய் கேட்டான்.

“இல்லடா. நான் அவள நினைக்கல. அவ என்ன அவமானப்படுத்தினது என்னால எப்படி மறக்க முடியும்?” என்று சொன்னவனின் கண்களில் ரௌத்திரம் தோன்றியது. 

அவனை கூர்மையாக பார்த்தான் ராகுல்.

“டேய் என்னடா பார்வை? ஏன்டா உனக்கு இவ்ளோ கோபம்? விடுடா.‌ அவள பத்தி ஏதும் பேசாத” என்று இறுகிய குரலில் கூறினான்‌.

“அவள பத்தி பேச கூடாது. ஆனா நீ அவ போட்டோவ மட்டும் பாப்ப. அப்படி தானே?” என்று கோபமான குரலில் கேட்டான்.

“இப்ப உனக்கு என்ன வேணும் டா? சும்மா சும்மா அவள பத்தி பேசாதேனு சொல்றேன் தானே. ஏன் இதே டாபிக் நீ பேசிட்டு இருக்கற?”

“டேய் என்னைக்கு நீ அவள லவ் பண்றேனு ஆரம்பிச்சியோ அப்போ இருந்தே எங்கள அவாய்ட் பண்ணிட்டு தான் இருக்க. நாங்களும் எவ்ளோ தூரம் பொறுத்து போறது? இப்போ அவளால நீ அவமானப்பட்டும் உனக்கு புத்தி வர மாட்டேங்குது” என்று திரும்ப திரும்ப ராகுல் சொல்ல அவன் சொன்னதால் உண்டான எரிச்சலில் போனை தூக்கி வீசினான்.

“போதுமா. இப்போ உனக்கு சந்தோஷமா?” என்றவன் அவனிடம் பேசாமல் கண்ணை மூடிக் கொண்டான். அவனை பார்த்தவன் பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியேறினான்.

அடுத்த வாரத்தில் உடம்பு சரியாகி இருக்க கௌதம் தனது வேலையில் ஜாயின்‌ செய்தான்.

அவன் ஆஃபிஸ் உள்ளே வந்த போது இவனுடைய ‌ஹெச்ஆர் புகழேந்தி இவனை அழைக்க அவனது அறைக்கு சென்றான்.

“வாடா. எப்படி இருக்க?” என்று‌ விசாரித்தான்.

“ஃபைன் புகழ். இப்போ ஓகே” என்றவனை பார்த்தவன் “ஏன் நீ ஆதவ அடிச்ச?” என்ற கேள்வியில் இறுகி போய் பார்த்தான்.

“சொல்லு கௌதம். உன்னால அவங்க ஹாஸ்பிடல்ல இருக்காங்க. அவன் ஃபிரண்ட் உன் மேல கம்ப்ளைண்ட்‌ குடுத்திருக்கான்” என்று கூறினான்.

“அவன்‌ பண்ணின வேலைக்கு நான் தான் கம்ப்ளைண்ட் குடுக்கணும்.‌ வாட் தெ ஹெல் ஹேப்பனிங்?” என‌ கோபமாய் கேட்டான்.

“ஏன் அவன் என்ன பண்ணான்?”

“அவன் என் கேர்ள் ஃபிரண்ட பத்தி தப்பா பேசுவான். என்ன அமைதியா இருக்க சொல்றீங்களா?” என்று கேட்டான்.

“லுக் கௌதம். நீ தான் பிராப்ளம் வராத மாதிரி ஹேண்டில் பண்ணனும். இது ஃபர்ஸ்ட் டைம்னால உன்ன வார்ன் பண்றேன். உன்ன இப்படியே விட முடியாது” என்று எச்சரித்தான்.

“ஓகே புகழ்” என்றவன் அமைதியாக சொன்னான்.

“டேய் நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். புரிஞ்சுக்கோ” என்று புகழேந்தி கூறினான்.

“ஐ நோ புகழேந்தி. யு ஆர் மை வெல் விஷர். பட் வோர்ட்ஸ் பாத்து பேச சொல்லுங்க” என்று இறுகிய குரலில் கூறியவன் அமைதியாக வந்து வேலை செய்ய ஆரம்பித்தான்.

அவனுடைய லஞ்ச் பிரேக்கில் யாரோ அவனை பார்க்க வந்திருப்பதாய்‌ சொல்ல அங்கே ஜென்னி ராகுல், ஷாலினியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

“ஜென்னி வாட் ஆர்‌ யூ டூயிங்? உனக்கு இங்கென்ன வேல?”

“நான் உன்ன பாக்க தான் வந்தேன் கௌதம். பட் இவங்க உன்ன பாக்க கூடாதுனு சொல்றாங்க. உன்ன வீட்டுக்கு வந்து பாக்கலானாலும் அங்கயும் நீ எப்டி வரலாம்னு‌ கேக்குறாங்க. என்ன உங்க வீட்டுக்கே வர விடுல” என்று கூறினாள்.

அவள் சொல்வதை கேட்டவன் அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்தான்.

“டேய் இல்லடா. அங்கிள நினச்சி தான் வேணாம்னு சொன்னேன். பட் இவ உங்களுக்கென்ன ரைட்ஸ் இருக்கு. நான் நினைச்சா உங்க பிரண்ட்ஷிப்பையே அவன கட் பண்ண‌‌ வச்சிடுவேனு சொல்றா” என்றவன் சொல்ல கௌதம் அந்த வார்த்தைகளில் சிலையாய் நின்றான்.

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page