காதலர்கள் இருவரும் மொட்டை மாடியில் தன்னை மறந்து அமர்ந்திருந்த வேளையில் ஜென்னி என்று ஒரு குரல் கேட்டது. அந்த சத்தத்தில் இருவரும் திடுக்கிட்டு பிரிந்தனர்.
“ஜென்னி மேல இவ்ளோ நேரம் தனியா என்ன பண்ற?” என்று கேட்டுக் கோண்டு வந்த சாம் அங்கு கௌதம் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தான்.
“டேய் உனக்கு இங்க என்ன வேல?” என்றவன் கோபத்துடன் அவனின் சட்டையை பிடித்தான்.
“சாம் என்ன பண்ற?”
“ஹே… நீ சும்மா இருடி. உனக்கு எவ்ளோ தைரியம். அவன நம்ம வீட்ல வெச்சு மீட் பண்ண?” என்று கர்ஜித்தான்.
“அதுல உனக்கென்ன பிரச்சனடா? நான் என்ன ஹோட்டல்லயா ரூம் போட்டேன்?” என்று கேட்டவனை அடிக்க கை ஓங்கினான் சாம்.
“சாம்” என்று ஜென்னி அதிர்ச்சியில் கத்தினாள்.
“நீ பேசாதடி. உனக்கு எவ்ளோ பட்டாலும் புத்தி வராது. அன்னைக்கு அடிச்சிட்டானு அவ்ளோ அழுத. இப்போ திரும்பவும் பேசினானு பேசிட்டு இருக்க. அவன் சரியான செல்ஃபிஷ். நீ வெளிய எடுத்ததுக்கு ஒரு தேங்க்ஸ் ஆவது சொன்னானாடி. எவ்ளோ கஷ்டப்பட்டு என் ஃபிரண்ட் மூலமா லாயர பிடிச்சி பண்ணினா கொஞ்சமாவது நன்றி இருக்காடா உனக்கு?” என்று கத்தினான்.
“டேய் என்ன அமைதியா இருந்தா பேசிட்டே போற? சண்ட வந்ததே இவளால தான். நாங்க அடிச்சிப்போம், சேந்துப்போம். எங்க ரெண்டு பேத்துக்கும் நடுல நீ வராத” என்று இறுகிய குரலில் கூறினான் கௌதம்.
“எப்படி உங்க ரெண்டு பேத்துக்குள்ள வர கூடாதா? நான் இங்க இருக்குறதால தான் அவ சென்னையே வந்தா. இப்போ ஒரு போன் பண்ணி என் சித்தப்பாட்ட சொன்னா போதும். அவள கூட்டிட்டு போவாங்க. என்ன பண்ணலாமா?” என்று நக்கலாக கேட்டான்.
“டேய் நானும் அமைதியா போலாம்னு நினைச்சா நீ ஓவரா போற? அவ என்னோட சொத்துடா. நீ மட்டும் போன் பண்ணு. அப்றம் என்ன நடக்குதுனு பாரு” என்றவன் பேச்சில் இறுகி போய் நின்றான் சாம்.
“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் கௌதம். இனி நா உன்ன இங்க பாத்தேன் அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது” என்று மிரட்டினான் சாம்.
“அப்டியாடா மச்சான். தேங்க்ஸ்டா மச்சான்” என்றவன் அவனை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தான்.
அவனது செயலில் இருவரும் திகைத்து போய் நின்றனர்.
“நீ என்ன பண்ணாலும் அவள என்கிட்ட இருந்து பிரிக்க முடியாதுடா. பட் இந்த கிஸ் உனக்கு எதுக்குனா நீ இல்லேனா எங்க லவ்வே சேந்துருக்காதுடா. தேங்க்ஸ்டா” என்று அவனை இறுக அணைத்தவன் அப்படியே போகும் போது “பைடா அம்மு” என்று அவளது கன்னத்தில் இதழ் பதித்து விட்டு சென்றான்.
அவனது செயலில் இருவரும் சிலை போல நின்றனர்.
*****
அன்று காலை ஷாலினியும், ராகுலும் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் போது சிக்னலில் அவர்கள் கார் நின்றது.
“இந்த ஜென்னி ரொம்ப ஓவரா பேசறா?”
“ஆமாண்டி. அவள கொஞ்சம் அடக்கி வைக்கணும். சின்ன பொண்ணுனு பாத்தா அவளுக்கு என்ன தி…”
இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் போது அவர்கள் கார் அருகில் ஒரு பைக் வந்து நின்றது.
அதில் ஜென்னியும், கௌதமும் சிரித்து பேசி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த ஷாலினிக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.
“ஹேய்… என்னாச்சு ஷாலினி? ஏன் சைலண்ட் ஆய்ட்ட?” என்ற ராகுலின் கேள்வியில் கண்ணாடிக்கு அருகில் காட்டினாள்.
“இவன் எப்டி ஜென்னி கூட?” என்று அதிர்ச்சியாக கேட்டான்.
“நேத்து அவன் கோபப்பட்டதுக்கு அவ கூட பேசவே மாட்டானு நினைச்சா… என்ன நடக்குது இங்க?” என்று அதிர்ச்சியாக கேட்டான்.
“ஷாலினி டோண்ட் ஒர்ரி. அவன் நம்ம கைய விட்டு எங்க போய்டுவான். நான் உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன்டா” என்று சொல்ல அவளோ அவர்களை வன்மத்துடன் பார்த்தவாறே தலையசைத்தாள்.
“நேத்து நம்ம அவ்ளோ சொல்லியும் அவன் ஜென்னிய போய் டிராப் பண்ணிட்டு தானே வந்தான். மறந்துடுச்சா உனக்கு?” என்று இறுகிய குரலில் கேட்டாள் ஷாலினி.
“விடு ஷாலினி. அவன் எங்க போனாலும் நம்ம கிட்ட தான் வரணும். யூ டோன்ட் வொர்ரி அபவுட் ஜென்னி” என்று தேற்றினான்.
இவர்கள் இருவரும் அவர்களை எவ்வாறு பிரிப்பது என்று சதி செய்து கொண்டிருக்க அங்கே காதல் ஜோடிகளோ உல்லாசமாய் பைக்கில் பறந்தனர்.
******
ஜென்னியை கல்லூரியில் விட்டு விட்டு அலுவலகத்திற்கு வந்தவன் தனது பணியை செய்ய ஆரம்பித்தான். நேரம் சென்று கொண்டிருக்க வேலையோ இழுத்து கொண்டே சென்றது.
“கௌதம் வாடா. போதும் வொர்க் பண்ணது. வா. ஃபுட் கோர்ட்டுக்கு போலாம்” என்று கூப்பிட்டான் ராகுல்.
“வர்றேன்டா. இந்த கோடிங்கோட போராடி மண்ட சூடாகுது” என்றவன் அவனுடன் சேர்ந்து சென்றான்.
“எங்கேடா போன மார்னிங்? ஜென்னி கூட பாத்தேன்” என்று கேட்டான்.
“எங்க போவாங்க! அவள டிராப் பண்ண தான்” என்றவனை முறைத்தான்.
“டேய் இந்த டிரைவர் வேல பாக்கறத நிறுத்த மாட்டியா நீ?”
“என் ஜென்னிய நான் கூட்டிட்டு போறேன். உனக்கென்ன வந்தது?” என்று கேட்டான்.
“டேய் அவ நீ நினக்கற மாதிரி இல்ல. அன்னைக்கு அவ உன்ன பாத்தா போதும். என்ன கோபமா இருந்தாலும் என் பின்னாடி வந்திருவானு சொன்னா” என்று கூறினான்.
“வாட்?”
“என்னடா வாத்து? உன்ன அவ அடிமையா நினக்கிறா? நீ அவளுக்கு வேலக்காரனா தான இருக்க? இல்லனா நீ அரேன்ஜ் பண்ண பர்த்டே பார்ட்டிக்கு வராம இருப்பாளாடா? உன்ன அவ ஜெயிலுக்கு அனுப்பியும் உனக்கு புத்தி வரலையே?” என்று கேட்டான்.
“ராகுல் நீ சும்மா அவள பத்தி ஏதாவது பேசாதடா. உனக்கு அவ ஃபங்க்ஷனுக்கு வரலையேனு கோபம். பட் ஆனா அவ அப்படியில்லடா” என்று ஜென்னியை விட்டு கொடுக்காமல் பேசினான்.
“நீ எவ்ளோ அடிபட்டாலும் திருந்த மாட்ட. இடியட்” என்றவன் திட்டினான்.
கௌதமோ ராகுலின் பேச்சில் குழம்பி போய் நின்றான்.
*****
“உனக்கு என்ன வேணும் அர்ஜுன்? ஒரு முற சொன்னா புரியாதா?” என்று கேட்டாள்.
“ஹே… ப்ளீஸ் ஜென்னி. எனக்கு இது புரிலனு தானே கேக்கறேன்” என்று கெஞ்சினான்.
“அன்னைக்கு நான் கேட்டப்ப சொல்லி கொடுத்தியா… இல்ல தானே?” என்றவள்
“நான் என்ன கேக்கறேனோ எனக்கு நீ வாங்கி குடுத்தா தான் நீ சொல்றதை பண்ணுவேன்” என்று கூறினாள்.
“என்னடி… ரொம்ப ஓவரா போற? ஏதோ தெரிலனு கேட்டா”
“சரி. எனக்கென்ன… போடா” என்று அவள் தோள்களை குலுக்கியபடி முன்னே செல்ல அவனோ பாவமாய் அவள் பின்னே சென்றான்.
“ஜென்னி ப்ளீஸ்டி” என்றவன் கெஞ்ச
“அப்டினா எனக்கு மட்டன் பிரியாணி, பெப்பர் சிக்கன், சிக்கன் நூடுல்ஸ், மட்டன் சுக்கா இதெல்லாம் வேணும்” என்று லிஸ்ட் போட்டாள்.
“ஏய்… இதெல்லாம் அநியாயம்டி. ரொம்ப ஓவரா போற” என்று திட்டினான்.
“சரி தான் போடா” என்றவள் அவளுடைய ப்ரண்ட் இனியாவுடன் கிளம்பினாள்.
“எங்கடி போற? இரு. ஆர்டர் பண்றேன்” என்றவன் கடுப்புடன் சொல்லவும் இவள் சந்தோஷமாக தலையாட்டினாள்.
அப்போது அங்கே கௌதம் வந்து கொண்டிருந்தான்.
“டேய் இருடா. கௌதம் வரான். அவன்ட்ட என்ன வேணும்னு கேக்கணும். வெயிட் பண்ணு” என்று கிளம்பியவனை நிறுத்தி வைத்தாள்.
“இதுக்கே நான் அமௌண்ட் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். நீ அண்ணாவ வேற கோர்த்து விடுறியா? நான் உன் அடிமை இல்ல. அப்படி ஒண்ணும் நீ கஷ்டப்பட்டு சொல்லி தர வேணாம்” என்று சொன்னவனை யோசனையாக பார்த்தான்.
“அர்ஜீன் என்னாச்சு? ஏன் இவ்ளோ கோபம்?” என்று யோசனையாக கேட்டான்.
“ப்ரோ பாருங்க ப்ரோ… ஒரு டவுட் கேட்டேன். அதுக்கு 4,5 ஐட்டம் சொல்லி வாங்கி குடுத்தா தான் சொல்லி கொடுப்பேனு சொல்றா” என்றான்.
கௌதம் ஜென்னியை தினமும் கல்லூரிக்கு கூட்டி செல்வதால் அவளுடைய நண்பர்களும் அவனுக்கு பழக்கம்.
“ஜென்னி… என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று கோபமாக கேட்டான் கௌதம்.
“பின்ன என்ன கௌதம்? போன டைம் நான் டௌட் கேட்டப்ப என்ன சீன் போட்டான் தெரியுமா? அந்த ரெக்கார்ட் எழுதி கொடு. இந்த அசைன்மென்ட் சப்மிட் பண்ணுனு. அதே நாங்க திருப்பி கேட்டா அது அடிமையாம்” என்று கோபமாய் கூறினாள்.
“அர்ஜீன் இவ சொன்னதெல்லாம் உண்மையா?”
“ப்ரோ… அப்போ எனக்கு கொஞ்சம் உடம்பு முடியல. அதான்” என்று திக்கி திணறி கூறினான்.
“பொய் சொல்லாத பக்கி. எல்லாம் சேர்ந்து இன்ஸ்டால ரீல் போடறோம்னு ஊர சுத்திட்டு இப்போ என்னடா மழுப்பற?” என்று ஆத்திரமாய் கேட்டாள்.
“சரிடி. நான் ஊர் சுத்தினேனே வெச்சிக்கோ. பட் நீ கேட்டது வாங்கி குடுக்கற அளவுக்கு என்கிட்ட இப்போ அமௌண்ட் இல்ல. சொன்னா புரிஞ்சுக்கோ” என்று கோபமாய் கூறினான்.
இவர்கள் சம்பாஷணையை கவனித்த கௌதம் “ஜென்னி உனக்கு ஏன் இந்த வேண்டாத வேல? உனக்கு எது வேணும்னாலும் வாங்கி குடுக்க நான் இருக்கிறேன். நீ இப்படி அவன் கிட்ட கேட்டு இன்சல்ட் பண்ணாத” என்று கோபத்தை அடக்கிய குரலில் கூறினான்.
“கௌதம் அது சும்மா விளையாட்டுக்கு…” என அவள் சமாளித்தாள்.
“எதுடி விளையாட்டு? நாங்க எதுனாலும் உங்க பின்னால வரதா? எப்டி இவ்ளோ சேடிஸ்டா இருக்க?”
“கௌதம்” என்று அவனது வார்த்தைகளில் அதிர்ந்து போய் நின்றாள்.
“ஏதும் பேசாதடி. நான் டெய்லியும் உன்ன டிராப் பண்ண வரேன்ல. அந்த திமிருல தான் நீ இப்டி பேசற? ஒரு நாள் பஸ்ல வாடி” என்றவன் அவளை அங்கேயே விட்டு செல்ல ஜென்னி சிலையாய் நின்றாள்.
