நலம் தானா ஊதாப்பூவே!! 🪻(முடிவு ) – 32

“உன்னை கொடுத்து என்னை எடுத்துக்கொண்ட என் ஊதாப்பூவே நீ நலம் தானே “
 

 

…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
 

 

பாகம் -32
 

 

கான்பிரன்ஸில் ஆரண்யாவின் பேச்சினை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா. அவள் உருவம், ஆடை, முகம் என வெளிதோற்றத்தில் மட்டுமல்ல உள்ளம், பேச்சு, செயல் என அனைத்திலும் அவளிடம் இருந்த தனித்தன்மையான அழகு அவனை மெய் மறக்கச் செய்தது.
 

 

“இந்த கன்ஸ்டரக்ஷன் பீல்ட் பெண்களுக்கு செட் ஆகாது, அவங்களால ஆண்களுக்கு நிகரா சாதிக்க முடியாது என்று பலரும் சொன்னார்கள், என்னை பார்த்து சிரித்த, கிண்டல் செய்த கூட்டமும் இருந்தது.
 

 

என் சிறு வயதில் ஜோத்பூரில் உள்ள மெக்ரகான் கோட்டைக்கு சென்ற போது அதன் அழகில் நான் வியந்து போனேன். அப்போது என் அப்பாவிடம் நான் சொன்னது “இந்த மாதிரி நானும் கோட்டையை காட்டுவேன் பா ” 
 

 

அதற்க்கு என் அப்பா சொன்னது “கண்டிப்பா மா அதுக்கு நீ நல்லா படிக்கணும், நிறைய தெரிஞ்சிக்கணும், அப்பா உனக்கு சொல்லி தரேன்னு சொன்னாரு,
 

 

அதை நானும் மறக்கல, பார்க்குற கட்டிடத்தை எல்லாம் இது எப்படி கட்டி இருப்பாங்க, என்ன கலந்து இருப்பாங்க, எத்தனை நாள்ல முடிப்பாங்க இதைப் பத்தி தான் யோசிப்பேன், அதுக்கு அப்புறம் நானே நிறைய படிச்சு புரிஞ்சிகிட்டு அப்பா கிட்ட விளக்கமா சொல்லும் போது அவருக்கு ஆச்சர்யம்.
 

 

அதே ஆச்சர்யம் இப்போ என் கணவர் கிட்ட பார்க்குறேன். அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தாரு என் கணவரோ என் கனவை, ஆசையை என்னை வச்சு கூட இருந்தே செய்ய வச்சாரு,
 

 

இந்த ப்ராஜெக்ட் தமிழ் நாட்டுக்கு கிடைச்ச வெற்றி மட்டும் இல்லை, எங்களோட இந்த தமிழ், ராஜஸ்தானிய கட்டட முறை உலகையே திரும்பி பார்க்க வைக்கும். நான் என் கணவருக்காக என்னுடைய இத்தனை வருட படிப்பு, நான் தெரிஞ்சிகிட்டுட்டது வச்சு தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு கட்டப்போறேன் சுருக்கமா சொன்ன சின்ன கோட்டை தான் அதற்கான வடிவமைப்பு இது என்று திரையைக் காட்ட,
 

 

ஊதா நிறத்தில் ஜொலித்த அந்த கட்டிடம் காண்போரை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது. இது பழைய ராஜஸ்தானின் கலையும் சோழர் கால பாறை உள் வடிவமைப்பு கலையும் சேர்ந்து நான் பண்ண போறதோட வடிவம்.
 

 

இரண்டு பாறைகளின் கலப்பு இந்த ஊதா நிறத்தை கொடுக்குது, அங்க இருக்குற இடத்தையும் சூழலுக்கு தகுந்த மாதிரி மாத்தியும் கொடுக்கும். வெயில் காலத்துல குளிர்ச்சியும், மழை காலத்துல வெப்பத்தையும் கொடுக்கும்”
 

 

ஆரண்யாவின் பேச்சில் அந்த அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது. இடைவிடாத கை தட்டல் சத்தத்தில் ஆரண்யாவின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் கன்னம் தாண்டி கீழே விழ அதை பொக்கிஷம் போல கையில் ஏந்திய வர்மா, அவளின் பக்கத்தில் நிற்பதை பெருமையாய் உணர்ந்தான். 
 

 

அவளின் பேச்சிற்கும், வர்மாவின் ஊக்கத்திற்கும் அங்கே பாராட்டுகள் குவிய, உணர்வுகளின் பிடியில் சிக்கி அங்கிருந்து காருக்குள் வந்தவர்களால் பேசிட முடியா மௌன நிலை, அவன் அவளுக்காக ஏதேதோ திட்டம் தீட்டி இருக்க, அவனை எப்போதும் மிஞ்சும் அவளின் காதலில் இவன் மனம் இன்று ஏனோ தவித்துக் கொண்டிருந்தது.
 

 

இனியும் இவளை அடக்கிடா விட்டாள் இவளின் காதல் உணர்வில் நான் மூழ்கி தொலைந்து போவது நிச்சயம் இவளை என்னுள் அடக்கிக் கொண்டு அவள் காதலை நான் ஏற்றுக் கொண்டாள் மட்டுமே இவளின் உணர்வுகளுக்கு கொஞ்சமேனும் குளிர்ச்சியை கொடுத்திட முடியும்.
 

 

காரினை இயக்கிக் கொண்டிருந்தவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது தன்னவளுக்காக, கார் போகும் பாதையைப் பார்த்தவள் 
 

 

“மாறா வீட்டுக்கு போகலையா “
 

 

அவளைப் பார்த்தவன் “வீட்டுக்கு போகணுமா ” அவள் கேட்டதை கொஞ்சம் மாற்றி கேட்டான். அதில் இருந்த தாபம், ஆசை, ஏக்கம், வெம்மை அனைத்தும் அவளுக்கும் வந்து சேர, இனியும் தடையோ, வார்த்தைகளோ தேவை இல்லை, அவன் என்ன செய்தாலும் எதிர்த்து பேசவோ, மறுக்கவோ கூடாது என்று முடிவெடுத்து விட்டாளே 
 

 

அவன் கேட்டதற்கு இல்லை என்பதாய் தலை அசைத்தவள், தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
 

 

அதே இடம், அவனுக்காக காத்திருந்த இடம், அரசனைப் போல் ஓட்டக்கத்தில் வந்து இறங்கினானே, காதல் பிரிவில் எழுதப்பட்ட பாடல், அந்த நடனம், இரவு குளிர் காற்று எல்லாம் சேர்ந்து அவள் மனம் அவனுடனான காதலில் மூழ்க,அவன் புறம் திரும்பவே இல்லை.
 

 

காரினை விட்டு இறங்கியவள், அவள் அவனுக்காக காத்திருந்த இடம் என ஒவ்வொரு இடமாய் சுற்றி வந்தாள், அவளின் காதலிலும், சற்று முன் பேசிய பேச்சும் அவன் மனதில் அவளையே சுற்றி வரச் செய்தது. சிறிது நேரம் பார்த்தவள் வர்மாவைப் பார்க்க, அவன் அங்கு இல்லை.
 

 

எங்கே போனான் என்று தேடியவளின் காதில்  ராவன்ஹதா எனப்படும் ஜோத்பூரின் பாரம்பரிய இசைக் கருவியின் இசை அவள் காதில் விழ, திரும்பிப் பார்த்தவளுக்கு அன்று தங்கிய கூடாரத்தில் இருந்து இசையின் சத்தம் கேட்க, தன்னுடைய மாறன் அங்கே தான் இருக்கிறான் என்று புரிந்து கொண்டவள் அங்கே ஓடினாள்.
 

 

தேங்காய் ஓடு போன்ற அமைப்புடன் சேர்ந்த மூக்கில் கட்டையில் மூங்கில் குச்சியினை வைத்து இசைக்கப்படும் இந்த கருவியின் இசையில் நாட்டுப்புற பாடல்களை கேட்கும் போது மனம் மயங்குவது உறுதி, தன் மாறன் இசைக்கும் இசையில் மயங்கி அவன் அருகில் வந்ததும் அவன் இசைப்பதை நிறுத்த, 
 

 

விளக்குகள் அணைக்கப்பட்டு நீல நிற விளக்குகள் எறிய அந்த இடமே ரம்மியமாய் மாறியது.அவன் பார்வையின் தீவிரம் அவளுக்குள் வேதியல் மாற்றத்தை நிகழ்த்த, அவ்ளோ நாணம் கொண்டு திரும்பி நின்றாள். மெல்ல நெருங்கியவன் அவளை தன் புறம் திருப்பி அவள் மூடிய இமைகளின் மேல் தன் முத்த முத்திரையைப் பதித்தவன் அவள் கண் திறந்ததும்,
 

 

“ஐ லவ் யூ  “என்றான் சிரிப்புடன்,
 

 

“ஐ லவ் யூ மாறா ” அவள் மாறன் என்றாலே அவன்  அவளின் காதல் மன்மதன் ஆகி விடுவான். 
 

 

அவளை அணைத்துக் கொண்டவன் மெல்ல அவளின் உச்சந்தலையில் மென் முத்தம் பதிக்க, அதன் உணர்வு அவள் உயிரில் கலந்து அவளை குழைய வைத்தது.
 

 

“மாமா என்னை இனியும் காத்திருக்க வைக்காத “
 

 

“இந்த வார்த்தைக்கு தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன் ” அவன் கண் சிமிட்டி சொல்ல,
 

 

“மாமா சொல்லி இருந்தா எப்பவோ நெருங்கி இருப்பியா மாமா ” 
 

 

“ஆமா ” என்றான் அழுத்தமாய் 
 

 

“எப்படி ” என்றாள் தெரிந்து கொண்டே,
 

 

இனிமேல் இவளுடன் பேசுவதற்கு இடம் இல்லை என்றவன் அவள் இதழ் தொடங்கி, இதயம் வழி முத்தத்தை தொடர, அவனுக்கு தடங்கல் இன்றி அவனின் பல் தடங்கள் பதிய வழி இட்டவள் அவனின் ஆளுமைக்கு அடங்கி அவனை அவளுக்குள் மூழ்கி விட அனுமதித்தாள்.
 

 

காதலில் தொடங்கி இல்லறத்தை இனிதாய் தொடங்கியவர்கள் நெற்றி முத்தத்தில் நிறைவு செய்ய, அவனின் இதய சிம்மாசனத்தில் ராணியாக இருப்பவள்  அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி கண் அயர்ந்தாள் மகிழ்வோடு.
 

 

காலையில் கண் விழித்தவர்கள் மனம் இரவில் நடந்தேறிய தருணத்தை நினைக்க வைத்து சிவக்க செய்ய, கெஞ்சலும், கொஞ்சலுமாய் எழுந்து கிளம்பி வெளியே வர,
 

 

“மாமா முக்கியமான இடத்துக்கு போகணும் ” என்றாள்.
 

 

“சரி ” என்று மட்டும் சொல்லியவன் வேறு எதுவும் கேட்கவில்லை.
 

 

இருவரும் ஜோத்பூரின் எல்லையில் இருந்த இடத்திற்கு வந்தனர். சுற்றி இருந்த ஊதாப் பூக்களின் தோட்டம் பார்க்க பார்க்க அதன் அழகு மெய் சிலிர்க்க வைத்தது.
 

 

அதன் நடுவே அழைத்து சென்றவள் “மாமா என்னை மன்னிச்சிடுங்க, உங்களை புரிஞ்சிக்காம கோவப்பட்டு, உங்க கிட்ட நிறைய நாள் பேசாம இருந்து நானும் கஷ்டப் பட்டு, உங்களையும் கஷ்டப் படுத்திட்டேன் “
 

 

“இல்லை ஆரு, நீ சரியா தான் இருந்த, நான் தான் உன்னை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன். உன்னை விரும்புனதை சொல்லாம, வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி, உன் அனுமதி இல்லாம நெருங்கி உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்.

கல்யாணத்துக்கு சம்மதம் கேட்கும் போது கூட உன் கிட்ட நடந்ததை சொல்லல, அதுக்கு அப்புறம் கைல அடிபட்ட காரணத்தையும் உன் கிட்ட சொல்லல, நீயும் அதை கேட்கல, உன் மனசுல நான் தான் இருக்கேன்னு தெரிஞ்சும் உன்னை ஏத்துக்காம காக்க வச்சிருந்தேன்.

வருண் எனக்கு கால் பண்ணன், நிதிஷாவுக்கும் அவனுக்கும் சண்டை, இவ கோச்சிக்கிட்டு வீட்டை விட்டு கிளம்பிட்டா, நைட் டைம் இவனும் எங்கல்லாமோ தேடிட்டு என்கிட்ட உதவி கேட்டான். அவளை தேடி போகும் போது ஒரு இடத்துல பார்த்தேன் அவ ஒருத்தன் கிட்ட மாட்டிக்கிட்டு தன்னை காப்பாதிக்க போராட்டிட்டு இருந்தா, நான் நெருங்கும் போது தான் அவன் கத்தியால குத்த வந்தான் என் கைல பட்டுச்சி, வருணும் வந்துட்டான். நிதிஷா மயங்கிட்டா

ஹாஸ்பிடல்ல கூட்டிட்டு போனோம் அங்க தான் அவ பிரேக்னண்டா இருக்குறது தெரிஞ்சது. நல்லவேளை அவ வயித்துல படாம என் கைல பட்டுச்சு, நினைச்சி பார்க்கவே பயமா இருந்தது. அதே சமயம் நீ வீட்ல எனக்காக காத்திட்டு இருந்த, நான் அங்க போனதால தான் ரெண்டு உயிரை காப்பாத்த முடிஞ்சது. அப்போ நீ என்னை எதுவும் கேட்கல நான் எது செஞ்சாலும் காரணம் இருக்கும்னு புரிஞ்சிகிட்ட

நிதிஷாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதும் உன்னை காப்பாத்த தான். அப்பாவும், நிதிஷா அப்பாவும் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க உன்னை கொலை பண்ண திட்டம் போட்டாங்க, அது தெரிஞ்சிக்கிட்டு தான் அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி அவங்க திட்டத்தை நடக்க விடாம பண்ணி வருணுக்கும், அவளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்.

அத்தை காதல் கல்யாணம் பண்ணிகிட்டத்தை எங்க பாட்டி என்மனசுல காதல் பத்தி சின்ன வயசுல இருந்தே தப்பான எண்ணத்தை பதிய வச்சாங்க, நானும் காதல் பிடிக்காம வெறுப்போடு தான் வளர்ந்தேன். எப்போ உன்னை முதல் முதலா ஊதாப் பூ நிற புடவையில பார்த்தேனோ நீ என் உயிருக்குள்ள காதலா நுழைஞ்சுட்ட, எனக்காக நீ கட்டப் போற ஊதா  நிற அரண்மனை என்னை அரசனாக்கி, அதுல எப்பவும் என்னோட காதல் ராணியா நீ மட்டும் தான் இருப்ப, நம்ம காதலுக்கு சாட்சியா நீ கட்டப் போற இந்த அரண்மனை இருக்கும்.

என் முதல் காதல், முதல் பெண், முதல் முத்தம், எல்லாமே நீ மட்டும் தான். அவன் சொல்லி முடித்ததும் அவனை அணைத்துக் கொண்டவளை தூக்கி சுற்றி வர,

ஊதா ஊ ஊதா பூவே ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ 
ஊதும் வண்டு ஊதா பூ 
ஊதா ஊதா ஊதா பூ 
ஊத காற்று மோதா பூ
நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ!!!

வர்மாவின் கைபேசியில் பாடல் ஒலிக்க அங்கிருந்த ஊதாப் பூக்களேஅவர்களின் காதலுக்காக பாடியது போல் அந்த இடமே அவர்களின் காதலுக்கு பூக்களை தூவி வாழ்த்துக்கள் சொன்னது. 🪻🪻🪻🪻🪻🪻🪻💙💙💙💙💙💙💙💙💙💙

முடிந்தது……..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page