ஆடி வரும் வண்ண மயிலே-38

அத்தியாயம்:38 

பாண்டி மயூரியை பெண்ணு கேட்டு வந்து இருப்பதாக சொன்னான்.  

ராகவன் “ என்ன சொன்ன மயூரியையா…? அதுவும் உன் கிட்ட சொல்லி பெண்ணு கேட்ட அந்த பெரிய மனுஷன் யாரு..? என ஒரு மாதிரியாக கேட்டான்.  

பாண்டி “ அது தான் மாப்பிள்ளை உங்களுக்கு தெரிந்தவர் என்று சொன்னேன் தானே…நம்ம எதிர்கட்சி தலைவரின் தம்பி ராஜவேலு தான்…” என்று சொல்லி கூட முடிக்கவில்லை.  

சோபாவில் இருந்த ராகவன் சட்டென எழுந்து… பாண்டியின் சட்டையை கொத்தாக பற்றியவன்.  

“ என்ன சொன்ன ராஜவேலுவா..? நீ யார் முன்னாடி பேசி கொண்டு இருக்க என தெரியுமா..? உனக்கு என்ன கண்ணு அவித்து போய் விட்டதா..? 

என் பெண்ணை யாரென நினைத்த அவள் வயது என்ன..? அழகு,படிப்பு, அந்தஸ்து என்ன..? அந்த ராஜவேலு பற்றி… தெரியாத பொம்பளைங்களே இல்லை.  

ஒன்னாம் நம்பர் பொறுக்கி பயல் அவன்…அவனுக்கு சி.எம் பேத்தி மினிஸ்டர் பெண்ணு கேட்குதா..? அதை கேட்டு கொண்டு என்ன தைரியம் இருந்தால் என் கிட்ட நீ வந்து சொல்வ.  

ஏன் உன் தங்கச்சி பெண்ணை அவனுக்கு கட்டி கொடுக்க வேண்டியது தானே…அதை செய்ய மாட்ட அவள் உன் சொந்த ரத்தம் தானே… 

ஆனால் என் மயூரியை தாரை வார்க்க நினைக்கிற…என்ன அவன் உன்னை விலை பேசி விட்டானா…? என கோபமாக சத்தம் போட்டான்.  

பாண்டி “ மாப்பிள்ளை மரியாதையாக சட்டையில் இருந்து கை எடுங்க…நீங்க என் தங்கச்சி புருஷன்… என்பதால் தான் நீங்க பேசியதை எல்லாம்…அமைதியாக கேட்டு கொண்டு இருக்கிறேன்.  

எனக்கும் நீங்க சொன்ன எல்லாம் தெரியும்…நான் மறுப்பு சொல்லாத காரணம் நீங்க தான் என்ன பார்க்கிறீங்க..?  

உங்க பெண்ணு மயூரி நிரந்தரமாக… உங்க அருகில் இருக்க வேணும் என்றால்.  

அதற்க்கு ஒரே வழி அவள் ராஜவேலுவை கல்யாணம் செய்து கொள்வது தான்…அவளிடம் சக்கரபாணி உங்களை நெருங்க கூட விட மாட்டார்.  

வேறு இடத்தில் கட்டி கொடுத்தாலும் அவள் கூட நீங்க உறவு பாராட்ட முடியுமா..? அந்த மாப்பிள்ளை சக்ரபாணி தேர்ந்தெடுத்தவன்…அப்போ அவரை போல தானே இருப்பான். 

நீங்க மயூரி மேலே வைத்திருக்கும் அன்பு தெரிந்து தான்…கனகராஜ் பெண்ணு கேட்க அமைதியாக இருந்தேன்…” என்றான்.  

ராகவன் நக்கலாக சிரித்தவன் அவன் சட்டையில் இருந்து…கை எடுத்தவன் அவன் கன்னத்தை பலமாக தட்டி விட்டு.  

“ பாண்டி நான் முட்டாள், ஏமாளி இல்ல…உன் உள்நோக்கம் எனக்கு தெரியும் அது போல அந்த கனகராஜின் எண்ணமும்…நான் அரசியலில் ஜெயிக்க வேணும் தான்.  

அதற்காக என் பெண்ணை விற்று தான்… ஜெயிக்க வேணும் என்ற எண்ணம் என் கிட்ட கிடையாது…நான் குரு மூர்த்தி பையன் இப்போ போனால் கூட அடுத்த செக்கன்… முதல்வர் நாற்காலியை என் பெரியப்பா எனக்கு தாரை வார்ப்பார்.  

அது எனக்கு தேவையில்லை நான் சுயமாக நின்று ஜெயிக்க வேணும்…அதற்காக தான் அவரை விட்டு விலகி வந்தேன் ஆனால் என் பெண்ணு விஷயம் வேறு.  

அவள் என் ராஜகுமாரி அவளுக்கு அவள் தாத்தாக்கள் பார்க்கும் மாப்பிள்ளை…ராஜகுமாரனாக தான் இருப்பாங்க அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.  

வைரத்தை பதிக்க வேண்டிய இடம் கீரிடமே தவிர…சாக்கடையில் அல்ல  கனகராஜ், ராஜவேலு கிட்ட போய் சொல்லு…அவங்க எண்ணத்தை நெருப்பில் இட்டு கொளுத்தி விட சொல்லி.  

அவங்க கனவு கூட காண முடியாத தூரத்தில் இருப்பவள் என் பெண்ணு மயூரி…என்னை வைத்து அவளை அடைய நினைக்க வேணாம்… என சொல்லு அரசியலா..? பெண்ணா..? என்ற நிலை வந்தால்.  

அடுத்த செக்கன் இந்த அரசியல் வாழ்க்கையை தூக்கியெறிந்து விடுவேன்…என் பெண்ணு மயூவை தவிர எனக்கு ஏதுவுமே பெரிசு இல்லை…அடுத்த தடவை இது பற்றி நீ பேச நினைத்தால் கூட.  

நீ மட்டுமில்ல உன் தங்கச்சியும் நிரந்தரமாக… இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டி இருக்கும்….உங்க கூட சரிகாவை அனுப்ப மாட்டேன்.  

அவள் என் ரத்தம் உன் அரசியல் லாபத்துக்காக நீ அவளையும்…ராஜவேலு போல ஒருவனுக்கு தாரை வார்த்து விடுவ… என் பெண்ணுங்க இரண்டு பேருமே எனக்கு இரண்டு கண்கள் போல.  

நான் சொன்னதை உன் மரமண்டையில் ஏறிற்றா…?இனி ஒரு தடவை இப்படி பேசி கொண்டே என் வீட்டு பக்கம் வந்து விடாதே…இப்போ நீ போகலாம்…” என்றான்.  

இதற்க்கு மேலே இங்கே நின்றால்…ராகவன் இருக்கும் கோபத்துக்கு தன்னை போட்டு தள்ளி விடுவான்…என்ற பயத்தில் பாண்டி கிளம்பி விட்டான்…அவன் கிளம்பியதும்.  

ராகவன் “ நாதா காளைக்கு கால் பண்ணி வர சொல்லு…அது மட்டுமல்ல எனக்கு இப்போ தான் சியாமி, பரத்… இரண்டு பேரின் சாவில் சந்தேகமாக இருக்கு…காளையை விட்டு விசாரிக்க சொல்லு.  

வர வர பாண்டி மேலே எனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது…அவன் என்னை வைத்து ஏதோ செய்ய நினைக்கிறான் போல…அதை இப்போ அவன் பேசிய விதத்தில் புரிந்தது…” என்றான்.  

குருமூர்த்தி பங்களாவில் அவர் ஏதோ…ஒரு பைல் பார்த்து கொண்டு இருக்க பவதீப் சார் என அழைத்து கொண்டு வந்தான்…குருமூர்த்தி அவனை நிமிர்ந்து பார்க்க.  

“ சார் உங்களை பார்க்க காளை என்று ஒருவன் வந்து இருக்கிறான்…அவனை உங்களுக்கு தெரியும் என சொன்னான்…அவனை நான் ராகவன் சார் கூட பார்த்து இருக்கிறேன்.  

இன்னும் ஒரு விஷயம் இன்று காலை பாண்டி…எதிர்கட்சி தலைவரை பார்க்க அவர் பீச் ஹவுஸ்க்கு… போய் இருந்தாக நம்ம கார்ட் தகவல் சொன்னான்…” என்றான்.  

குருமூர்த்தி யோசித்து விட்டு அவனை யாரும்பார்க்காது…அழைத்து வர சொன்னார் கொஞ்ச நேரத்தில் ஐயா வணக்கம் என சொல்லி கொண்டே…ராகவனின் நம்பிக்கைக்குரிய விசுவாசி வலது கை காளை வந்தான்.  

குரு “ என்ன விஷயம் காளை ராகவன்…ஏதும் தகவல் அனுப்பி இருக்கிறான் போல அதுவும் பாண்டிக்கு…இது பற்றி தெரியாமல் இருக்க உன்னை அனுப்பி இருக்கிறான் என்ன விஷயம்…” என்று நேரடியாக கேட்டார்.  

காளை “ ஐயா சின்னையா உங்க கிட்ட சொல்ல சொன்ன விஷயம்…இது தான் மயூரி பாப்பாவை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள சொன்னார்…அந்த ராஜவேலு பாப்பாவை பெண்ணு கேட்டு பாண்டி கிட்ட தூது அனுப்பி இருக்கிறான்.  

இன்னும் ஒன்றை சொல்ல சொன்னார்…சின்னம்மா, பரத் ஐயா சாவில் ஏதோ மர்மம் ஒன்று இருப்பதாக…அதை அவர் கண்டுபிடிக்க போகிறேன் என்றார்.  

உங்களை சந்திக்க அவர் வர முடியாத காரணம்…அவரை கண்காணிக்க நிச்சயமாக பாண்டி இல்ல கனகராஜ்…ஆளுங்களை ஏற்பாடு பண்ணி இருப்பாங்க அது தான் என்னை இங்கே அனுப்பினார் ஐயா…” என்றான்.  

குரு “ யாரு பேத்தியை யாரு பெண்ணு கேட்பது..? காளை நீ போய் ராகவன் கிட்ட சொல்லு மயூரியை பாதுகாக்க அவள் தாத்தாக்கள் இருக்கிறோம் என்று…நீ எதற்க்கும் ராகவன் கிட்ட இரு அவனுக்கு எந்த ஆபத்தும் வர கூடாது…” என்றார்.  

காளை போதும் பவதீப்பை வர சொன்னார்…அவன் வந்ததும்  

குரு “ பவதீப் உனக்கு பர்ஷனலாக ஒரு வேலை தர போகிறேன்…உன்னை தவிர யாரையுமே என்னால் நம்ப முடியாது…என் பேத்தி மயூரியை பாதுகாக்க வேண்டியது உன் கடமை.  

அவள் மானத்துக்கும் உயிருக்கும் எந்த ஆபத்தும் வர கூடாது…அந்த ராஜவேலு அவள் மேலே கண் வைத்து விட்டான்… ராஜவேலு பற்றி உனக்கு நான் சொல்ல தேவையில்லை …அவளுக்கு பாதுகாப்பு கொடுப்பது உன் கடமை.  

அவள் கார்ட்ஸ் இருந்தாலும் கூட எனக்கு அவங்க மேலே நம்பிக்கை இல்லை…” என்றார்.  

பவதீப் “ கவலைப்பட வேணாம் சார்…இனி உங்க பேத்தி என் பொறுப்பு அவங்க மேலே… சின்ன தூசி கூட விழாது பார்த்து கொள்வேன்…” என்றான்.  

பாண்டி ராகவன் சொன்னதை ராஜவேலுக்கு கால் பண்ணி சொல்லி விட்டான்.  

ராஜவேலு” அண்ணே பார்த்தீங்களா..? அந்த ராகவன் பயலுக்கு இருக்கும் தெனாவெட்டை நான் சாக்கடையாம்…அவன் பெண்ணு ராஜகுமாரியாம்.  

இந்த ராஜவேலு கண் வைத்த பெண்ணுங்க…இது வரைக்கும் கை நழுவி போனது இல்லை அவன் வாயால்… என்னை மாப்பிள்ளை என அழைக்காமல்…நான் விட போவது இல்லை.  

இனி தான் இந்த ராஜவேலு யாரென அவன் பார்க்க போகிறான்…” என்றான்.  

கனகராஜ் “ வேலு வேணாம் டா அவள் பெரிய இடத்து பெண்ணு…மற்ற பெண்ணுங்க போல இல்ல நீ விளையாட நினைக்க.. உன் உயிரை அவள் தாத்தாக்கள் பறித்து விடுவாங்க…”என்றார் ராஜவேலு.  

“ அண்ணே நீ இதில் இருந்து விலகி இரு…நான் பார்த்து கொள்கிறேன் இந்த வீட்டு மருமகள்… ராகவன் பெண்ணு மயூரிகா தான்…என்றான்.  

ராகவன் கேட்ட தகவல்கள் காளை இரண்டு நாள் கழித்து வந்து…அவனிடம் கொடுக்க ராகவன் ருத்திர அவதாரம் எடுத்தவன்… நேராக குரு மூர்த்தி வீட்டுக்கு கிளம்பி விட்டான்.  

அன்று பிரதோஷம் என்பதால் மயூரி கோவிலுக்கு கண்மணி கூட கிளம்பி விட்டாள்…ஊரில் இருந்து கல்யாணி வகை உறவுகள் வந்ததால்…பேத்தி கூட கல்யாணியால் போக முடியவில்லை.  

கோவிலுக்கு போய் விட்டு வரும் வழியில்…அவள் காரை மடக்கி ராஜவேலு அவன் அடியாட்கள் இறங்கினார்கள்…அவள் கூட வந்த கார்ட்ஸ் நான்கு பேர் தான் ராஜவேலு கிட்ட தட்ட… ஆறு, ஏழு அடியாட்கள் கூட வந்து இருந்தான்.  

மயூரி பயந்து போக கண்மணி அவள்… கையை ஆதரவாக பற்றியவள்.  

“ அக்கா பயப்படாதே எலக்சன் டைம் தானே…அது தான் உன் குரு தாத்தாவை மிரட்ட உன்னை பயம் காட்ட வந்திருக்கிறாங்க… 

நம்ம கூட தான் கார்ட்ஸ் வந்திருக்கிறாங்க…இரு நான் அசோக்,கிருபா அண்ணுக்கு தகவல் சொல்கிறேன்…” என்றவள் இருவருக்குமே மெசேஜ் பண்ணினாள்.  

டிரைவர் “ பாப்பா நீ பயப்படாதே நான் காரை வேகமா ஓட்ட போகிறேன்…ஜாக்கிரதையாக இரு…” என்றவன்.. காரை ஸ்டாட் பண்ண போக அடியாள் ஒருவன் வந்தவன்… 

டிரைவர் பக்க கதவை திறந்து அவனை…இழுத்து அறைந்து வெளியே தள்ளி விட்டான்…ராஜவேலு மயூரியின் பக்க கதவை திறந்தவன் குனிந்து. 

“ என்ன பொண்டாட்டி எப்படி இருக்க..?சும்மா சொல்ல கூடாது இந்த ராஜவேலு பொண்டாட்டி தேவதை தான்…சரி நான் யாரென தெரியுமா..? 

எதிர்கட்சி தலைவரின் தம்பி ராஜவேலு உன் வருங்கால புருஷன்…உன் அப்பன் கிட்ட பெண்ணு கேட்டேன் அவன் ரொம்ப நக்கலாக பேசி…அந்த பாண்டி பயலை அனுப்பி இருக்கிறான்.  

அது தான் அவன் வாயால் என்னை… மாப்பிள்ளை என அழைக்க வைக்க போகிறேன் என்ன பார்க்கிற..? இன்று உனக்கும் எனக்கும் இந்த கோவிலில் தான் கல்யாணம்.  

யார் தடுக்கிறாங்க என பார்க்கிறேன்…அதை விட இந்த ராஜவேலுவை எதிர்க்க இன்னும் எவனும் பிறக்கவில்லை…” என்றவன்… மயூரின் கரத்தை பிடித்து காரில் இருந்து வெளியே இழுத்தான். 

மயில் ஆடி வரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page