அத்தியாயம் 29

காரில் அழுது கொண்டே வரும் சுகன்யாவை கோபத்தோடு பார்த்தார் சங்கர். 

 

அவரின் கோபமான பார்வையில் பயந்த சுகன்யா அழுகையை தனக்குள் விழுங்கி கொண்டாள். 

 

சுகன்யா இவ்வளவு நாளும் தங்கி கொண்டிருந்த விடுதியின் முன் காரை நிறுத்தினார் சங்கர். 

சுகன்யா அவர் கூறுவதற்கு முன் காரிலிருந்து இறங்கி கொண்டாள். 

அவளின் கையை பிடித்த சங்கர் அவளை இழுத்து கொண்டு விடுதியின் ஹாலில் அமர்ந்திருந்த வாடர்ன் முன் வந்து நின்றார். 

 

இருவரையும் மாறி மாறி பார்த்த வாடர்ன், சுகன்யாவின் அழுது வீங்கிய முகத்தை பார்த்து பரிதாபப் பட்டார். 

என்ன சார்? ஏன் சுகன்யாவோட கையை இப்படி வலுக்கட்டாயமா புடிச்சி இழுத்துட்டு வர்றிங்க? என்று கோபத்தோடு கேட்டார் வாடர்ன். 

ஒன்னும் இல்லை அக்கா என்ற சுகன்யா வார்த்தையை முழுமையாக கூற முடியாமல் திக்கி திணற, ஏனா இவள் என் பொண்ணு என்றார் சங்கர். 

 

சுகன்யா அவளின் விழிகளை பெரிதாக விரித்தாள். இவ்வளவு நேரமும் நம் மேல் கோபமாக இருந்த மனிதர் இப்பொழுது நம்மை அவருடைய பொண்ணு என்று கூறியதில் அவளுக்கு புது கண்ணீர் வடிந்தது. 

 

என்ன சார் சொல்றிங்க? என்று அதிர்ச்சியோடு கேட்டார் வார்டன். 

 

ஆமா, இவள் என் பொண்ணு மாதிரி. இவளை நான் என் பையனுக்கு கட்டி வைக்க போறேன். அப்படினா இவள் எனக்கு மகள் மாதிரி தான என்று கேட்டார் சங்கர். 

 

அவரின் பேச்சில் நெகிழ்ந்து போன வார்டன், ஆமா சார் இவள் உங்க பொண்ணு தான் என்றார். 

சுகன்யா போ ம்மா. போய் உன்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு வா. நம்ப வீட்டுக்கு போவோம் என்றார் சங்கர். 

 

சுகன்யா பாய்ந்து போய் அவரை கட்டி கொண்டாள். அவளால் முடிந்த வரை கதறி அழுதாள். 

நீங்க என் அப்பாவா? என்று கேட்டவளுக்கு கண்ணீர் கரை புரண்டு ஓடியது. 

 

தன் நெஞ்சில் தலை சாய்த்து அழும் சுகன்யாவின் தலையை வருடி விட்டவர், ஆமா ம்மா நான் உன்னோட அப்பா தான் என்றார். 

 

சுகன்யா தன் கண்களை அழுந்த துடைத்து விட்டு அவரை நிமிர்ந்து பார்த்தாள். 

அப்… பா என்று சத்தமாக அழைத்தாள். 

அவளின் அப்பா என்ற அழைப்பில் சங்கரின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. சுகன்யா சின்னஞ்சிறு குழந்தை போல் அவரின் கண்களுக்கு தெரிந்தாள். தனக்கும் ஒரு மகள் இருந்திருந்தால் தன்னை இப்படி தானே அழைத்திருப்பாள் என்று நினைத்தார். 

 

அப்…. பா என்று மறுபடியும் சுகன்யா அவரை கண்ணீரோடு அழைக்க, இவள் நம் மகள் தான். இவள் நம் மகள் தான் அதனால் தான் இவளின் அப்பா என்ற அழைப்பு நம்மை எதோ செய்கிறது என்று உணர்ந்த சங்கர் அவளின் நெற்றியில் முத்தம் வைத்தார். 

 

சுகன்யா சங்கரின் நெஞ்சு கூட்டில் சாய்ந்தாள். அஸ்வந்த் மூலம் எனக்கு ஒரு அப்பா கிடைச்சிருக்காரு என்றாள். 

இங்கு நடந்த உணர்வு போராட்டத்தில் ஹாஸ்டல் வாடர்னின் கண்களும் கலங்கியது. 

 

நான் போய் என்னோட திங்க்ஸ் எடுத்துட்டு வரேன் என்ற சுகன்யா துள்ளி கொண்டு அவளின் அறைக்கு ஓடினாள். வேகமாக அனைத்து பொருட்களையும் அள்ளி கொண்டு வந்தாள். 

ஹாஸ்டல் வாடர்ன் ஒரு பெரிய ரெஜிஸ்டரை எடுத்து சுகன்யாவிடம் கொடுக்க, அதில் கையெழுத்து போட்டாள் சுகன்யா. 

நான் கிளம்புறேன் அக்கா என்று வாடர்னை பார்த்தாள். 

வாடர்ன் அவளை கட்டி அணைத்து விடுவித்தார். பார்த்து போய்ட்டு வா ம்மா சுகன்யா என்றார். 

சரி அக்கா என்ற சுகன்யா சங்கரின் கைகளை உரிமையோடு பிடித்தாள். வாங்க அப்பா போகலாம் என்றாள். 

சங்கர் அவளின் தோளில் கை போட்டு அழைத்து சென்றார். 

நிஜமான அப்பா மகள் கூட இவ்வளவு அன்பாக, பாசமாக இருக்க மாட்டார்கள். இவர்களை பார்த்து கொண்டிருந்த வாடர்ன் இவர்களின் உறவு எப்பொழுதும் பிரியக் கூடாது என்று கடவுளிடம் வேண்டி கொண்டார். 

****

அஸ்வந்த் தன் லக்கேஜை எடுத்து கொண்டு அறையை விட்டு வெளி வந்து சோகமாக படிகளில் இறங்கி வந்தான். 

 

பாரிஜாதம் அறைக்குள் சென்ற மகன் இன்னும் வெளிவரவில்லையே என்று சோகமாக அமர்ந்திருந்தார். 

 

அஸ்வந்த் ஹாலில் வந்து நிற்கும் நேரம், சரியாக சங்கரும் சுகன்யாவும் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர். 

 

சுகன்யாவை இழுத்து கொண்டு சென்ற தந்தை, ஒரு கையில் சுகன்யாவையும் மறு கையில் ஏதோ பேக்கையும் பிடித்து கொண்டு நிற்பதை பார்த்து தன் விழிகளை விரித்தான். 

பாரிஜாதம் இருவரையும் பார்த்து, இருக்கையில் இருந்தவர் எழுந்து நின்றார். 

 

அஸ்வந்த்திடம் விளையாடுவதற்காக தான், தன்னுடைய அப்பாவும் அம்மாவும் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள் சுகன்யா. 

 

சுகன்யா தன் உதட்டில் புன்னகையை படர விட்டு பாரிஜாதத்தை பார்க்க, பாரிஜாதம் தன் கைகளை விரித்து நீட்டினார். 

 

சுகன்யா அவரின் அழைப்பில் துள்ளி குதித்து ஓடி வந்து அவரை கட்டி கொண்டாள். 

 

அஸ்வந்த் ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க, அம்மா என்று பாரிஜாதத்தை அழைத்தாள் சுகன்யா. 

 

அவளின் அம்மா என்ற அழைப்பில்,  அஸ்வந்த் தன் புருவங்களை உயர்த்தினான். 

 

பாரிஜாதம் அவளின் தலையை வருடி நெற்றியில் முத்தம் வைத்தார்.

 

இன்னைக்கு எனக்கு ரெண்டு முத்தம் கிடைச்சிருக்கு என்றவளின் சிறு பிள்ளை தனமான பேச்சில், உனக்கு தினமும் முத்தம் தருவோம் என்று ஒரே நேரத்தில் கூறினர் சங்கரும் பாரிஜாதமும். 

சுகன்யா அஸ்வந்த்தை பார்த்தாள். பின் சங்கர், பாரிஜாதம், சுகன்யா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். 

 

அஸ்வந்த் மூவரையும் புரியாமல் பார்த்து கொண்டு இருந்தான். 

“இட்ஸ் அ ப்ரான்க்” என்று மூவரும் ஒரே நேரத்தில் கத்த, அஸ்வந்த் தன் தலையை குலுக்கி கொண்டு, பின் சுய நினைவு வந்தவன் போல் தாயை கட்டி கொண்டான். 

 

ம்மா  இப்போ நடக்குறது தான் ம்மா என்னால நம்பவே முடியல என்று தாயிடம் கூறினான். 

 

சார் பையோட எங்க கிளம்பிட்டீங்க என்று சிரித்து கொண்டே கேட்டார் சங்கர். 

நம்பள விட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டாரு என்று சிரித்து கொண்டே கூறினார் பாரிஜாதம். 

சுகன்யா அவனை கட்டி கொண்டாள். 

ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போய்,  இவள் நான் கட்டிக்க போற பொண்ணுன்னு சொல்லிருக்கிற. எனக்கு தெரியாமல் இருக்குமா டா. டாக்டர் என் ப்ரென்ட்னு உனக்கு தெரியாதா? என்று மகனிடம் கேட்டார் சங்கர். 

 

உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும் ப்பா. ஆனால், நீங்க  ஓவர் ரியாக்ட் பண்ணுவிங்கனு நான் நினைக்கல என்றான் அஸ்வந்த். 

 

நீ ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போன சுகன்யாவோட பேர் வச்சி அவளோட ஜாதகம் வரை நான் எடுத்துட்டேன். எனக்கு அவளை ரொம்ப புடிச்சி போச்சு டா. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. ஆனால், நம்ப சுகன்யாவை தான் நீ கட்டிக்கணும் என்று ஆர்டர் போட்டார் சங்கர். 

 

அஸ்வந்த் தன் தந்தையை அணைத்து கொண்டான். தேங்க்ஸ் ப்பா. நீங்க இப்படி சொல்விங்கனு நான் எதிர்பார்க்கல என்று சந்தோசத்தோடு கூறினான். 

அன்றிலிருந்து சுகன்யா சங்கர் மற்றும் பாரிஜாதம் இருவருக்கும் மகளாக மாறி போனாள். அஸ்வந்த்தை விடவும் அவளை தான் தாங்கினர் நம் நாயகனின் தந்தையும் தாயும். 

*****

நன்றாக சென்று கொண்டிருந்த அவர்கள் நால்வரின் வாழ்க்கையில் அஸ்வந்த் கனடா செல்லும் நாளும் வந்தது. 

 

அவன் கனடா செல்வதற்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சரியாக ஏற்பாடு செய்து வைத்திருந்தான். 

 

அன்று காலையில் அவனின் கட்டுமஸ்தான உடலுக்கு ஏற்றவாரு நல்ல கட்சிதமான ஆடையை அணிந்து கொண்டு நின்றான் அஸ்வந்த். 

 

மகன் இனி ஏழு ஆண்டுகள் கழித்து தான் இந்தியா வருவான். அது வரை அவன் இல்லாத நாட்களை எவ்வாறு கழிப்பது என்று பாரிஜாதம் மகனை நினைத்து கண்ணீர் வடிக்க, சங்கரும் சுருங்கிய முகத்தோடு நின்றிருந்தார். 

நீ போய்ட்டு வா அஸ்வந்த். ஏழு வருஷம் தான. கண்ணை மூடி கண்ணை திறக்குறதுக்குள்ள ஓடிரும். வேலையில கவனமா இரு. நீ வந்ததும் நாம கல்யாணம் பண்ணிப்போம் என்று சுகன்யா அஸ்வந்த்திடம் கூறினாள். 

அஸ்வந்த் அவளை லேசாக அணைத்து கொண்டான். அவனின் கன்னத்தை கிள்ளிய சுகன்யா, அப்பறம் மிஸ்டர் அஸ்வந்த் சார், ஏழு வருஷம் அம்மா அப்பாவோட முழு பாசமும் எனக்கு மட்டும் தான் என்று கிண்டலடித்து சிரித்தாள். 

 

அவளின் பேச்சில் வாடிய முகத்தோடு நின்றிருந்த சங்கர், பாரிஜாதமும் சிரித்து தன் மகனை வழியனுப்பி வைக்க, மச்சான் வந்துட்டேன் டா என்ற ஆகாஷ்ஷும் தன் நண்பனுடன் சேர்ந்து அனைவருக்கும் கை காட்டி விடை பெற்றான். 

இருவரையும் கை அசைத்து அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றனர் அஸ்வந்த்த்தின் பெற்றோர். 

தாயும் தந்தையும் உள்ளே சென்றதும், சுகன்யாவின் விழிகளில் இருந்து நீர் கசிந்தது தன் காதலனின் பிரிவை எண்ணி. 

யாரும் அறியா வண்ணம் அதை துடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் சுகன்யா. 

****

அன்றிலிருந்து ஏழு ஆண்டுகள் சுகன்யாவிற்கு சொர்க்கத்தில் வாழ்வது போல் இருந்தது. 

 

காலை பாரிஜாதத்தின் முகத்தில் விழித்து தான் அந்த நாளை ஆரம்பிப்பாள் சுகன்யா. 

சங்கரோடு சேர்ந்து வாக்கிங் செல்வது, சின்ன சின்ன செல்ல சண்டைகள் போட்டு கடையில் ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிடுவது. 

 

அஸ்வந்த் வேலை இடைவெளியில் கால் செய்யும் போது குடும்பமாக வீடியோ கால் பேசுவது. அவனை மூவரும் வீடியோ காலில் சீண்டி விளையாடுவது என்று ஒவ்வொரு நாட்களையும் சந்தோசமாக அனுபவித்து கடத்தினாள் சுகன்யா. 

 

ஒவ்வொரு நாளும் அவளின் முகத்தில் இருக்கும் பொலிவு கூடிக் கொண்டே செல்லும். அந்த அளவு அவளுக்கு ஒவ்வொரு நாளும் தித்திப்பாக இருக்கும். 

 

சொந்தங்கள்,பந்தங்கள், உறவுகள், குடும்பம் என்று தனக்கு யாரும் இல்லை என்று நினைத்து ஒவ்வொரு நாளையும் தனியாக கடத்தியவளுக்கு, அன்பான அம்மா, பாதுகாப்பையும் பாசத்தையும் கொடுக்கும் தந்தை, தன் மேல் அதீத அன்பு வைத்து தனக்காக கனடாவில் போய் வேலை செய்யும் காதலன் என்று பெரிய உறவு சங்கிலியே கிடைத்து விட்ட அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தாள் சுகன்யா. 

 

இதோ இப்பொழுது கூட சங்கரின் பின் தானும் அலுவலகம் செல்வேன் என்று அடம் பிடித்து கொண்டிருக்கிறாள் நம் சுகன்யா. 

 

அப்பா ப்ளீஸ் ப்பா என்று அவரின் கன்னம் கிள்ளி கொஞ்சும் மகளிடம் அவர் என்ன மறுக்கவா போகிறார். 

 

ஆனால், அவருக்கு முன் காரில் ஏறி சீட் பெல்ட் போட்டு சேப்டியாக அமர்ந்து கொண்டாள் சுகன்யா. 

அடுத்த பதிவில் பார்ப்போம். 

ஸ்டோரி பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ். 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page