அத்தியாயம் 30

இந்த ஜென்மத்தில் அஸ்வந்த், சுகன்யாவிற்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். 

சுகன்யாவை அழைத்து கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றார் சங்கர். 

 

அலுவலகத்தில் இருக்கும் எண்ணற்ற ஊழியர்களை பார்த்து, வியந்து தான் போனாள் சுகன்யா. 

 

அப்பா இவ்ளோ நாள் வீட்டுல இருந்து நாட்களை வேஸ்ட் பண்ணிட்டேன் ப்பா. இனிமேல் நானும் தினமும் உங்களோட வேலைக்கு வருவேன். வேலையை கற்றுப்பேன். அஸ்வந்த்க்கு ஹெல்ப்பா இருப்பேன் என்றாள் சுகன்யா. 

கண்டிப்பா வா டா. அப்பா உனக்கு எல்லா வேலையையும் கற்று தரேன் என்றார் சங்கர். 

அங்கு வேலை புரியும் நபர்களை பார்த்து புருவத்தை உயர்த்தி, வேலையை நோட்டமிட, அந்த வேலையை பற்றி சுகன்யாவிற்கு ஒன்றும் புரிப்படவில்லை. 

அப்பா., என்ன சம்பந்தமான வேலை இது? எனக்கு ஒண்ணுமே புரியல என்றாள் சுகன்யா. 

ப்பி  ஏ எம் சாப்ட்வேர் என்றார் சங்கர். 

சுகன்யா ஒன்றும் புரியாமல் விழிகளை சுழற்றினாள். 

வா என்று அவளை அழைத்து சென்ற சங்கர், அவரின் கணினி முன் அவளை அமர வைத்தார். 

கணினியை உயிர்ப்பித்து பார்த்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. அது மட்டும் அல்லாமல் சக ஊழியர்களிடம் சேர்ந்து வேலையையும் கற்றுக் கொண்டாள். 

 

அவர்களோடு சேர்ந்து நேரத்தை செலவிடவும் செய்தாள் சுகன்யா. 

வீட்டில் இருப்பதை விட, அலுவலகத்தில் இருப்பதே அவளுக்கு மிகவும் பிடித்து போனது. அவளின் மூளை வேலையின் நுணுக்கங்களை நன்றாக அறிந்து செயல்பட ஆரம்பித்தது. 

****

ஏழு ஆண்டுகள் மிகவும் வேகமாக சென்று விட்டது. அஸ்வந்த் வரும் நாளும் நெருங்கி விட்டது. கைபேசியில் தொடர்பு கொண்ட அஸ்வந்த் இன்னும் ஒரு மாதத்தில் தான் இந்தியா வந்து விடுவதாக கூற, மூவருக்கும் குதுகலமாக இருந்தது. 

 

அதுவும் சுகன்யாவிற்கு தானோ இது ஒரு சுகமான இன்பமாக இருந்தது. அஸ்வந்த் இந்தியா வந்ததும் சீக்கிரம் வீட்டில் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து விடுவர். பிரிந்து வாழ்ந்த தாங்கள் இனி ஒரே அறையில் ஒரே உடலில் ஈருயிராய் வாழ போகிறோம் என்று நினைத்த சுகன்யாவிற்கு தானோ தித்திப்பாக இருந்தது. 

 

அன்று ஒரு நாள் இரவு,  சுகன்யா அவளின் அறையில் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். 

கதவை நன்றாக உள் பக்கமாக தாழ் போட்டிருந்தாள். 

 

நன்றாக உறங்கி கொண்டிருந்தவளின் கரு விழிகள் எதோ தவறாக நடக்க போவதை உணர்த்த, தூக்க கலக்கத்தில் கண்களை இறுக்கி மூடி கொண்டாள் சுகன்யா. 

அவளின் முதுகை சூடான மூச்சு காற்று வருடி சென்றது. சுகன்யா தூக்கத்தில் அஸ்வந்த்தை நினைத்து விழி திறக்காமல் தலையணையை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டாள்.

இப்பொழுது சூடான மூச்சு காற்று தானோ அவளின் செவியில் உரச, அஸ்வந்த் என்று தான் முனங்கினாள் பாவை. 

அவளின் ஆடை மறைக்காத சிறு சிறு இடைவெளியிலும் மூச்சு காற்று படர, துள்ளி எழுந்தாள் சுகன்யா. 

யார் அது? என்று உடல் நடுங்கி சத்தமாக கத்திய சுகன்யாவின் அறையில் இருள் சூழ்ந்து இருக்க, பயந்து தான் போனாள் பெண்ணவள். 

 

இப்பொழுது சட்டென்று மின்சாரம் பாய்ந்தது போல் அறை எங்கும் வெளிச்சம் பரவ, சர்ப்ரைஸ் என்று கத்தினான் அஸ்வந்த். 

 

சுகன்யா இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பாராதவள் அதிர்ந்து பார்த்தாள். 

இவ்வளவு நேரம் அறையின் வெளியில் நின்ற சங்கரும் பாரிஜாதமும் அறைக்குள் வந்தனர். 

நான் அப்போவே சொன்னேன் புள்ளை பயந்துருவாள்னு. கேட்டானா இந்த பையன் என்றார் சங்கர். 

ஆமா ப்பா என்ற சுகன்யாவும் உதட்டை கடித்து பயத்தை அடக்கி விழிகளில் நீரை தான் சிந்தினாள். 

ரொம்ப பயந்துட்டேன் போடா என்றவளை பாரிஜாதம் அணைத்து கொண்டார். 

சரி சரி என்கிட்டே விடுங்க ம்மா அவளை என்றவனை முறைத்து தான் பார்த்தனர் பெற்றோர். 

கண்களால் கெஞ்சி அவர்களை அனுப்பி வைத்தவன், சுகன்யாவின் அருகில் வர, சுகன்யா பயந்து போய் ஒவ்வொரு அடியாக அவளின் பின்னால் எடுத்து வைத்தாள். 

அவளின் விழிகள் அவனை கீழிருந்து மேலாக பார்த்தது. இருபது வயது இளைஞனாக கனடா சென்றவன் இப்பொழுது கட்டுடல் காளையாக வந்து நிற்கிறான். 

 

அவனின் கால்கள் அவளை நோக்கி முன்னோக்கி வர, சுகன்யா எச்சில் விழுங்கினாள். 

அவனின் திண்ணிய மார்பை பார்த்தவளுக்கு இதயம் பட படவென்று துடித்தது. 

அவனின் வலிமையான இரு கைகளையும் பார்த்தவள், தன் கீழ் உதட்டை ரத்தம் வரும் வரை அழுத்தி கடித்தாள். 

அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்த அஸ்வந்த்தின் உதடுகள் லேசாக விரிந்தது. 

 

என்னாச்சி சுகன்யா என்னைய பார்க்கவே மாட்டிக்கிற? என்றவனின் விழிகள் பெண்ணவளின் உடல் முழுவதையும் ஒரு வினாடிக்குள் தன் கண்களில் பருகி கொண்டான். 

 

கடைசியாக அவனின் முகத்தை பார்த்த சுகன்யா , தலை குனிந்து சுவற்றோடு ஒட்டி நின்றாள். 

 

அஸ்வந்த்தின் உதட்டில் குறு நகை படர, அவளின் தேகத்தோடு தன் தேகத்தை உரசி நின்றான். அதில் சுகன்யாவின் இதய  துடிப்பு அதிகமாக, அஸ்வந்த்தின் உடலை அது தாக்கியது. 

மேடம் என்ன புடவை கட்டிருக்கிறீங்க?  என்று மெல்லிய குரலில் கேட்டான் அஸ்வந்த். 

அது… அம்மா கொடுத்தாங்க. இப்போ வேலைக்கு போறதால நான் தினமும் புடவை தான் கட்டிக்கிட்டு போறேன் என்று அவனின் முகத்தை பார்த்தவள், அவனின் விழிகளை பார்க்க முடியாமல் வெட்கத்தில் திணறினாள். 

 

என்னோட அஸ்வந்த் தானா நீ? ஏழு வருஷத்துல ஆளே மாறி போய்ட்ட என்றவள் தலை குனிந்து தான் கேட்டாள். 

அவளின் வெற்றிடையில் கை பதித்தான் அஸ்வந்த். சுகன்யாவின் கன்னங்கள் சிவந்து போனதை பார்த்தான் அஸ்வந்த். 

என் முகத்தை பாரு டி என்றான். 

அவளின் விழிகளை பார்த்தவள், அவனின் விழிகளில் தன்னை கண்டாள். 

 

வெற்றிடையில் கை பதித்த அவனின் பிடி இறுகியது. அவனின் நெஞ்சில் வந்து மோதி நின்றாள் சுகன்யா. 

கல்யாணம் பண்ணிக்கலாமா சுகன்யா?  என்று கேட்டவனின் கண்களில் காதல் கொட்டி கிடந்தது. 

கல்யாணம் பண்ணிக்கலாம் அஸ்வந்த், என்று சுகன்யா கூறி முடிப்பதற்குள் அவளின் இதழை கவ்வி கொண்டான் அஸ்வந்த். 

அவனின் திண்ணிய மார்பில் கை பதித்த சுகன்யா, அவனின் இதழை தன் இதழ்களுக்குள் பூட்டி கொண்டாள். 

*****

நீலகண்ட பிள்ளையார் கோவிலில்  பெற்றவர்கள் சம்மதத்தோடும் வந்திருந்த உறவினர்கள், சுற்றத்தார்கள் முன்னிலையில் மஞ்சள் தாலியை சுகன்யாவின் கழுத்தில் கட்டினான் அஸ்வந்த். 

ஆகாஷ் நண்பனின் திருமணத்தில் மலர் தூவி அவனை ஆசீர்வாதம் செய்தான். 

****

❤️விடிந்தாலும் வானம்

இருள் பூச வேண்டும் 

மடி மீது சாய்ந்து 

கதை பேச வேண்டும். 

முடியாத பார்வை நீ வீச வேண்டும் 

முழுநேரம் என் மேல் உன் வாசம் 

வேண்டும். 

இன்பம் எது வரை 

நாம் போவோம் அது வரை 

நீ பார்க்க பார்க்க 

காதல் கூடுதே ❤️ 

சுகன்யா,  தான் கருத்தரித்திருப்பதை அஸ்வந்த்திடம் கூறினாள். 

திருமணமாகி பதினைந்து நாட்களில் சுஜித் அவளின் வயிற்றில் உருவாகி விட்டான். 

ஏற்கனவே அவளை தாங்கி கொண்டிருந்த சங்கரும் பாரிஜாதமும் அவளை இன்னும் தாங்க ஆரம்பித்தனர். 

ஆனால், கரு வளர வளர, சுகன்யாவின் ஆயுள் குறைந்து கொண்டே சென்றது. 

அதை இந்த மூவரும் அறியவில்லை. 

அவளின் ஒன்பதாவது மாதம் வளைகாப்பில் ஊரே மெச்சும்படி நடத்தினார் சங்கர். 

அஸ்வந்த் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விழாவிலும் அந்த வீட்டு  பிள்ளையாக அனைத்தையும் முன்னிருந்து செய்தான் ஆகாஷ். 

****

சுகன்யாவின் விதி முடியும் நேரம் வந்து விட்டது போல. எமன் மெதுவாக சுகன்யாவை நெருங்கி கொண்டிருந்தார் அந்த இரவு. 

 

இரவு சுகன்யாவிற்கு வயிறு பயங்கரமாக வலிக்க, அவளை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர் மூவரும். 

அவளின் டெலிவரியில் காம்ப்ளிக்கேட்டாகி, சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்த அஸ்வந்த் அதற்கு ஒப்பு கொண்டான். 

விதியை எவராலும் வெல்ல முடியாது போலும். அழகான தங்க மகனை தன் உயிரை கொடுத்து பெற்று விட்டு வாழ கொடுத்து வைக்காமல் சென்று விட்டாள் சுகன்யா. 

ப்ளாஷ்பேக் முடிந்து விட்டது ப்ரெண்ட்ஸ். 

அனைவரும் நிகழ் காலத்திற்கு வாருங்கள். 

அபிராமியிடம் தானும் சுகன்யாவும் வாழ்ந்த வாழ்க்கையை கூறி முடித்த அஸ்வந்த்தின் கண்களில் இருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீர் வழிந்தது. 

 

அபிராமி அவனை விழி சிமிட்டாமல் பார்த்தாள். ஏழு வருடங்கள் காத்திருந்து, திருமண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்து,  முழுமையாக ஒரு வருடம் கூட வாழ முடியாமல் போன சுகன்யாவை நினைக்கும் போது அவளுக்கும் கண்கள் கசிந்தது. 

தினமும் காலை பூஜை அறையில்,  சுகன்யாவின் புகப்படம் முன் நின்று கண்ணீர் வடிக்கும் பாரிஜாதத்தின் முகம் நினைவு வந்தது அபிராமிக்கு. 

 

அந்த வீட்டில் அஸ்வந்த்தின் மனைவியாக காலடி எடுத்து வைத்த நாளில் இருந்து,  தினமும் பாரிஜாதம் சுகன்யாவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு வணங்குவார். அந்த மாலையை வாங்கி வந்து தருபவர் சங்கர் தான். 

 

அஸ்வந்த் கூறிய பிறகு தான்  அவர்களின் பாசம் அபிராமிக்கு புரிந்தது. 

இன்னும் கண்ணீரை சிந்தி கொண்டிருக்கும் கணவனின் தோளில் கை வைத்தாள் அபிராமி. 

போதுங்க ப்ளீஸ் அழாதீங்க என்றாள் அபிராமி. 

 

அஸ்வந்த் இருக்கையில் இருந்து எழுந்து அவளின் முகம் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான். தன் கண்ணீரை கட்டுப் படுத்த முயன்றான். 

ஒரு நிமிடமாக அவனை பார்த்து கொண்டிருந்த அபிராமி, அதற்கு மேல் பொறுக்க முடியாது அவனின் முதுகை கட்டி கொண்டாள். 

அஸ்வந்த்திற்கு ஆறுதல் கிடைத்தது போல் இருந்தது. அவனின் கண்ணீர் சிறிது மட்டுப் பட்டது. 

என்னங்க… நாளையில இருந்து இந்த ஹாஸ்பிடல்க்கு டீனா வரட்டுமா? இன்னைக்கு வேணாம் என்றாள். 

ஏன்?  என்பது போல் அவளை தன் முதுகில் இருந்து பிரித்தான் அஸ்வந்த். 

ப்ளீஸ்ங்க எதும் கேட்காதீங்க என்றவள் தன்னை சற்று அசௌகரியமாக உணர்ந்தாள். 

சரி அபி. அப்போ கிளம்புவோம் வா என்றவன், மேஜையில் கிடத்தி இருக்கும் தன் மகனை தூக்கினான். 

அபிராமி மெதுவாக அடி எடுத்து வைத்து அவனை பின் தொடர்ந்தாள். 

அவளின் நடையை பார்த்தவன் புரிந்து கொண்டான். 

 

அவளின் தோளில் கை போட்டு தன்னோடு அணைத்து கொண்டு அவளின் நடைக்கு ஏற்றார் போல் நடந்தான் அஸ்வந்த். 

 இனி இவர்கள் இருவரும் காதலோடு சேர்ந்து வாழ்வார்களா? இல்லை கடமை என்று வாழ்வார்களா? பார்த்து விடுவோம் அடுத்த பதிவில். 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page