திருக்குறள்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
அதிகாரம் நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1296
அத்யாயம் -26
அவள் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.
“பணம் தான் வேணுன்னு நான் முடிவு செய்திருந்தா எப்பவோ உங்க கிட்ட இந்த குழந்தையை காமிச்சு பணம் வாங்கி இருக்க முடியும். அதுவும் இல்லாம நீங்களும் நானும் சேர்ந்து இருந்ததே ஒரே ஒரு மாதம் தான். நீங்க சொல்லறபடியே பார்த்தாலும் நான் தான் பல பேரோட போகிறவளாச்சே. அப்ப நீங்க எப்படி இந்த பையனுக்கு அப்பாவா இருக்க முடியும்? திரும்ப திரும்ப இந்த மச்சம் அச்சு அசல்னு பேசாம கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணுங்க “
அவளை சம்மதிக்க வைக்க முடியவில்லை. வேறு என்ன செய்வது?
இப்போது அவளின் வார்த்தைகள் அவனுக்கு இன்னும் வெறியைத் தூண்டிக் கொண்டிருந்தது. ‘இப்படி போனால் நிச்சயம் நான் கொலைக்கு காரன் ஆகி விடுவேன். எனக்கு என் பிள்ளை வேண்டும். என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும்’ முடிவெடுத்தவன் அந்த ஹோட்டல் வேலையை அப்படியே விட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினான் .
“சித்தி சித்தப்பா ஏதாவது ஒரு தீர்வு சொல்வார்கள்.’ குழந்தையை கடத்த கூட அவன் தயாராகி விட்டான் இப்போது. பிறகு தானே தலையில் தட்டிக் கொண்டு அந்த யோசனையை கை விட்டான்.
கிளம்புவதற்கு முன் பிள்ளையை பார்க்க வேண்டும் போல இருந்தது . இப்போது அவள் கடையில் இருப்பாளா? நேராக அவள் வீட்டுக்குச் சென்றான். நினைத்தது போலவே அவள் வீட்டில் தான் இருந்தாள் .
பிள்ளைக்கு கை நிறைய பொம்மைகள் வாங்கி வந்திருந்தான். முதல் முறை அப்பா என்று கட்டிக் கொண்ட கதிர் இப்போது பயந்து அம்மாவின் பின்னே ஒட்டிக் கொண்டான்.
கையில் நீட்டிய சாக்லேட்டு கூட வேலை செய்யவில்லை. அன்னையின் முகம் பார்த்து சம்மதம் வந்த பிறகே வாங்கிக் கொண்டான். அருகே வந்த பிள்ளையை கையில் தூக்கிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்து கிளம்பி விட்டான்.
“எனக்கு?”கேட்ட மனதை கட்டுப் படுத்திக் கொண்டாள் .
‘என் மேல ஏன் இவ்ளோ வெறுப்பு நான் என்ன தப்பு செய்தேன். எங்கிட்ட என் தரப்பு நியாயம் என்னன்னு கேக்கவே இல்லையே?’
கண்களில் நீர் தளும்ப நினைவுகள் பின் நோக்கி சென்றது. பக்கத்து வீட்டு அம்மா அருகே வந்து தோளை அழுத்தினார்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அழுதுகிட்டு இருக்கப் போற?”
கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்பது மட்டும் அவருக்குத் தெரியும். வேறு என்ன என்பது எதுவும் தெரியாது. எத்தகைய பிரச்சனை வந்தாலும் இப்படி குழந்தையுடன் இருக்கும் பெண்ணை வீட்டை விட்டு அனுப்பியது தவறு என்பதால் அவருக்கு அப்போதிலிருந்தே முகம் தெரியாத பார்க்காத அந்த சூர்யா மீது ஒரு வெறுப்பு தான்.
“நான் பிள்ளையை பார்த்துக்கறேன். நீ கொஞ்சம் படுத்து எழுந்திரு. அனிதா மேடமுக்கு லீவு சொல்லிட்டியா?”
“சொல்லிட்டேன் மா “
“என்ன சாப்பிட்ட?”
அவளின் அமைதியே அவள் இன்னும் எதுவும் சாப்பிடவில்லை என்று காட்டிக் கொடுத்தது.
குழந்தையை வீட்டுக்குத் தூக்கிப் போனவர் இட்லியும் பூண்டு வேர்க்கடலை சட்னியும் கொடுத்தார். வாயில் போட்டால் உள்ளே சென்று விடும். அத்தனை ருசி. உள்ளே இறங்க மறுத்தது.
“ப்ச்! கண்ணத் துடை. அப்புறம் உப்பு கரிக்கும்”
என்று சிறு அதட்டலுடன் அவரே இவளுக்கு ஊட்ட ஆராம்பித்தார். இந்த உறவு எத்தனை நாளைக்கோ !
ஏனோ இவளுக்கு மட்டும் கிடைக்கின்ற எந்த உறவுகளும் நிலைப்பதில்லை.
ஒரே மகளை வரதட்சணை கொடுமையில் பலி கொடுத்தவர்ளுக்கு இப்போது இவள் தான் மகள் போல இருக்கிறாள். மகளுக்கு செய்ய வேண்டியது எல்லாம் இவளுக்கு செய்து பார்க்கிறார்கள் .
பொதுவாக உணவு உண்டால் மூளை இன்னும் அதிகம் வேலை செய்ய எனர்ஜி கிடைக்கும். இவளுக்கும் அப்படித்தான்.
அந்த நாளை நோக்கி அவளின் எண்ணங்கள் அவளை அழைத்துச் சென்றது.
அவர்களுக்குள் நடந்த திடீர் திருமணம் ஆகி இன்னும் ஒரு மாதம் முடியவில்லை. ஒரு நாள் சூர்யா அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்திருந்தான்.
“சூர்யா உங்கிட்ட பேசணும் பா “
“என்ன சித்தி இது புதுசா? நீங்க எப்பவும் போல பேச வேண்டியது தானே ?”
அவர் என்ன சொன்னாரோ இவளுக்குத் தெரியாது.
நேரே அறைக்கு வந்தவன் ,
“அன்னிக்கு நம்ம கல்யாணதுக்கு முன்னாடி நீ அனிதாவை தனியா பார்த்தியா ?” கூர்மையான பார்வை அவளைத் துளைத்தது .
“ஆமாம் !” நிமிர்ந்து நின்று பதில் சொல்ல வேண்டியவள் தலை குனிந்து பதில் சொன்னாள் .
” நீ தான் அவள் தப்பிச்சுப் போக ஹெல்ப் பண்ணியா ?”
“அது..” பதில் வராமல் தயங்கவும் புரிந்துக் கொண்டான் .
“சீ! உனக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா? அப்டரால் பணத்துக்காக
அவளை விரட்டி விட்டுட்டு அந்த இடத்துக்கு நீ வந்தியா ?”
“இல்லங்க! நான் பணத்துக்காக எல்லாம் இப்படி பண்ணலங்க “
பேசிக் கொண்டிருந்தவளை சைகையால் தடுத்தவன் “படுக்கை சுகத்துக்காக பண்ணியா? உனக்கு தான் எவ்ளோ வெறின்னு தெரியுமே “
உரிமையுடன் கணவனிடம் முத்தங்கள் வாங்கிக் கொள்வதும் காமம் கொள்வதும் வெறியா? அதுவும் திருமணம் ஆனா புதிதில் !
அவனின் இந்த வார்த்தை அவளை உயிருடன் கொன்று விட்டது .
“உனக்கு இன்னும் பத்து நிமிஷம் தான் டைம். நீ உன்னோட எந்த பொருளும் இங்க இருக்கக் கூடாது. மீறி நீ இங்க இருந்தா நான் வீட்டை விட்டு போய்டுவேன் “
சொன்னவன் அவள் முகம் பார்க்க விரும்பாமல் அடுத்த அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.
பத்து நிமிடங்கள் ஆனது ஒரு வேலைக்கார பெண் வந்து அம்மா அய்யா நீங்க கிளம்பிடீங்களான்னு பாக்க சொன்னார் . புரிந்தது. இனி நான் இங்கே இருந்தால் காவலாளி மூலம் தான் துரத்தப் பாடுவேன். அழுதுக் கொண்டே அந்த அறையை ஒரு முறை மனதில் ஆழ பதித்துக் கொண்டாள் . அவர்களின் கூடல் நடந்த கட்டில். முதல் முறை அவன் . தன்னை எத்தனை அழகாக கையாண்டான். பயம் போக்கி முத்தங்கள் கொடுத்து, வெட்கம் நீக்கி… ஒரு முறை கட்டிலை தடவிப் பார்த்தாள் . அங்கே இருந்த அவனின் ஆளுயர புகைப் படத்தை தொட்டு பார்த்தாள் ” என்ன நடந்ததுன்னு கேக்க மாட்டீங்களா ?” கிளம்பி விட்டாள்.
கிளம்பியவளுக்கு எங்கே செல்வது? என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை. மீண்டும் ஆசிரமத்துக்குப் போக முடியாது. அழுதுக் கொண்டே பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தவளை சில ஆண்கள் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். எதிர் பாராமல் தோழியிடமிருந்து அழைப்பு வரவும் அவள் விலாசம் வாங்கிக் கொண்டாள் . மதுரைக்கு செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டாள் .
பேருந்தில் இருந்து இறங்கியவள் கீழே விழுந்து முட்டியில் நல்ல அடி . அருகில் இருந்த மருத்துவமனைக்கு தான் அவள் சென்றாள் . அங்கே முதலுதவி செய்தார்கள். டிஞ்சர் வைத்து அழுத்தவும் பயங்கர வலி.
“எம்மா இதுக்கு போய் இப்படி அழுவங்களா?” நர்ஸு அதட்டினார். பயத்தில் அழுகையை அடக்கிக் கொண்டாள். அங்கே இருந்த வேறு இரண்டு செவிலியர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“பார்த்தியாடி காலம் எப்படி கெட்டு கிடக்குதுன்னு. அந்த பொண்ணுக்கு என்ன பதினாறு வயசாம். அதுக்குள்ள இப்படி வயத்துல வாங்கிட்டு வந்து நிக்குது “
“அனாதை. கேக்க யாரும் இல்லை. என்ன வளர்த்தி பார்த்த இல்ல? அதான் உடம்பு ஆளு கேக்குது “
இவளுக்கு ஏனோ அந்த பெண்ண பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
அவர்களிடம் சென்று பேச இஷ்டம் இல்லாதவள் நேரே பிரசவ அறைக்குச் சென்று பார்த்தாள் .
“அம்மா அம்மா” என்று சிறு பெண் கதறிக் கொண்டிருந்தாள். அருகில் யாரும் இல்லை. அருகில் சென்று பார்த்தாள் . இவர்கள் அரண்மையில் வேலை செய்த செல்வி தான் அது .
“செல்வி ! பயப்படாதம்மா அக்கா இருக்கேன் ” குரலில் கண் விழித்துப் பார்த்தாள் .
“அக்கா அக்கா என்னை பார்த்தீங்களாக்கா நம்ம அய்யா தான் என்ன இப்படி பண்ணிட்டாரு .
“யாரு சூர்யாவா?”
“இல்லக்கா சித்தப்பா ” இவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது .
நான் போன வருஷம் தன வயசுக்கு வந்தேன். வயசுக்கு வந்த நாளே என்னை .. என்ன.. தேம்பினாள் “
“சித்திகிட்ட சொன்னியா ?”
“அவங்க தான் என்னை அவரு ரூமுல வச்சு கதவை சாத்திட்டாங்க . அப்புறமும் என்னை ரொம்ப …”
(செல்வியும் பெற்றவர்கள் இல்லாத அனாதை தான் . இவளுக்குத் தெரியும் .)
“போதும் செல்வி எதுவும் பேச வேணாம் . மூச்சை இழுத்து விடு … ரிலாக்ஸ் பண்ணு “
“இல்லக்கா நான் எப்படியும் பிழைக்க மாட்டேன். இந்த குழந்தையை எப்படியாவது அவங்க கண்ணுல படாம ஏதாவது அநாதை ஆஸ்ரமத்துல சேர்த்துருங்கக்கா” கை எடுத்துக் கும்பிட்டாள். வீல் என்ற அலறல் தான். கூப்பிய கைகள் இவளை பார்த்த கண்கள் மூடவில்லை .
“டாக்டர்!” இவளின் குரலில் வந்த பார்த்தவர்கள் அவசரமாக குழந்தையை வெளியில் எடுத்தார்கள் .
இந்த பிஞ்சை கையில் வைத்துக் கொண்டு எங்கே செல்வது? புரியாமல் நின்றவள் பார்த்தது அனிதாவை தான். அனிதாவை அவள் அன்று திருமணத்தில் பார்த்தது உண்மைதான். தனி அறையில் அனிதாவைப் பார்த்தவள் அத்தனை மகிழ்ச்சியுடன் அவளுக்கு கைக் குலுக்கி வாழ்த்து சொன்னாள். அவளும் ளமகிழ்ச்சியுடன் தான் இவளிடம் பேசினாள்
ஆனால் இப்போது அவளைப் அவளால் தானே தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆனது என்ற ஆத்திரம் தான் வந்தது .
மருத்துவமனைக்கு அருகில் யாருடனோ அவளும் வேறு ஒரு ஆடவனுடன் நின்றுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கிளம்பும் நேரம் இவள் ஓடிச் சென்று அனிதாவிடம் சண்டையிட்டாள் .
“நீங்க அனிதா தானே?”
“எஸ் நீங்க?”
“என்னை நினைவில்லையா? என்று ஆரம்பித்து ஏன் நீங்க அப்படி அன்னிக்கு கல்யாணத்துலேர்ந்து ஓடிப் போனீங்க?” என்று கேட்கவும்
“ஏய்? என்று அகன் விரல் நீட்டி எச்சரித்தான் .
“அகன் ப்ளீஸ்.. அவங்ககிட்ட நாம சண்டை போடறதுனால என்ன இப்ப ஆகப் போகுது அவளே கைல குழந்தையோட இப்படி நிக்கறா. கொஞ்சம் நிதானமா பேசலாம். “
“நீங்க இப்ப தங்கப் போறீங்க?” என்று கேட்டு விட்டு தன்னுடன் அழைத்துச் சென்றாள்.
அன்று திருமண மண்டபத்தில் …….
