அத்யாயம் -27

திருக்குறள்

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1297

அத்யாயம் -27

அன்று மண்டபத்தில், தாமரைக்கு உண்மையிலேயே தன்னுடைய ராஜாவுக்கு ஏற்ற ராணியாக  பேரழகியாக அனிதா கிடைத்தது மகிழ்ச்சிதான். என்றுமே அவனைத் தன்னுடையவனாக  தாமரை நினைத்ததே இல்லை. அவன் கையால் தாலி வாங்கிய போது விழி விரித்து பார்த்த  நொடி இவன் என்னுடையவன் என்ற எண்ணம் வந்தது. அப்போதும் காதல் இல்லை. காமம் வந்தபோது அவன் அவளை நடத்திய விதம் தான் அவளுக்கு அவன் மீது இருந்த ஈர்ப்பு காதலாக மாறியது .

“வாழ்த்துக்கள் மேடம் ” என்று கை குலுக்கி விட்டு தான் அவன் கம்பனியில் வேலை செய்வதாகவும் அவனின் நல்ல பற்றி சிறிது சொல்லி விட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம். எங்க ராஜாவுக்கு கல்யாணம்”  என்று பழைய சின்னப் பெண்ணாக குதித்து விட்டு சென்றாள் தாமரை. அவள் சென்ற அடுத்த சில நிமிடங்களில் அலங்காரம் முடிந்து விட அழகியாக இருந்த  அனிதா பேரழகியாக இருந்தாள் .

அறைக்குள் இருந்தவர்களை கண்களால் மிரட்டி விட்டு வெளியில் அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவன் ஆதவன் .

“என்ன அண்ணி கல்யாணத்துக்கு ரெடியா? என்று சொல்லிக் கொண்டே கையில்  இருந்த நெக்லஸ் பெட்டியில் இருந்த நெக்லஸை எடுத்து அவனே போட்டு விட்டு பின் கழுத்தில் முத்தம் வைத்தான்.

“சீ”  என்று அருவருப்பில் அதை அவிழ்த்து தூக்கி எறிந்தாள் அனிதா.

“என்ன அண்ணி நீங்க இதுக்கே இவ்ளோ  கோபப்பட்டா எப்படி ? இனி நீங்களும் நானும்  ஒரே வீட்டுல தானே இருக்கப் போறோம்?ஒரே வீட்டுல ஒரே ரூமுல ! ராகம் இழுத்தவனின் கை அவள் உடலில் படர ஆரம்பித்தது.

“நான் உனக்கு அண்ணியா வர போறவ . அண்ணின்னா அம்மா மாதிரி “

“அப்படியா. புள்ள அம்மாகிட்ட தான பால் குடிக்கும்” என்று தொடர்ந்தவன் சொன்ன சொல்லில் காதுகளை மூடிக் கொண்டாள் . காதுகளுக்கு அவள் கை உயரவும் அவன் கை அவளின் இடுப்பில் அழுத்தமாக பதிந்தது .

” செம்ம ஷேப் டீ உனக்கு. சொந்தப் பொண்டாட்டிய விடட அண்ணன் பொண்டாட்டி இன்னும் ருசியாம். பசங்க சொன்னாங்க ” இடுப்பில் தட்டி விட்டுச் சென்றான்.

“ஆ இன்னொரு விஷயம் இப்ப உனக்கும் எனக்கும் நடுல நடந்தது பத்தி நீ யாருகிட்ட சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. முக்கியமா சூர்யா. அதுனால வீணா எதுவும் ட்ரை  பண்ணாத “

அவன் சொன்னது உண்மைதான் . திருமணத்துக்கு முன்பே சூர்யா சித்தியின் கைக்குள் அடக்கம் என்பது ஓரளவு புரிந்தது. இருப்பினும் திருமணம் என்று ஒன்று ஆகி விட்டால் குடும்பம் குழந்தை என்ற மாற்றங்கள் வரும்போது அவனும் மாறி விடுவான். பெற்றவர்கள் இல்லாமல் வளர்ந்தவனை தன்னுடைய அன்பால் காதலால் மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் தான் அனிதா திருமணத்துக்கு சரி சொன்னது. இருந்தாலும் நேற்று முதல் அவள் சூர்யாவை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். நிக்கலாமா ? உக்கார  வேண்டுமா? அனைத்தும் சித்தியின் கட்டடளைப் படிதான். சித்தப்பா சொல்லவே வேண்டாம். கம்பீரம் என்ற பெயரில் டாம்பீகமாக அடித்த அட்டகாசங்கள் தான் அதிகம்.

ஆதவனைத் தொடர்ந்து வந்தது சித்தி. அவரிடம் ஆதவனின் செயல்களை பற்றி கூறலாம். நடப்பது நடக்கட்டும் என்று அவள் நினைக்க சித்தியோ “மரியாதையா இப்பவே இந்த இடத்தை விட்டு ஓடி போய்டு” என்றார்.

“நீங்க தானே வந்து பொண்ணு பார்த்து எல்லாம் செய்தது. இப்ப எதுக்கு இப்படி பேசறீங்க ? புரியாமல் அனிதா கேட்டாள் .

“அது எல்லாம் அப்படித் தான் எல்லாத்துக்கும் வந்து உனக்கு விளக்கம் சொல்ல முடியாது என்று கூறி போனைக் காட்டினார்.

அதில் இவள் அம்மாவை சுற்றி சில ஆண்கள் உடன் சித்தப்பா .

‘என்ன கிளம்ப என்று மிரட்டவும் இவள் தலை தானாகவே ஆடியது.

“நான் போய்டறேன் . ஆனா அவங்களுக்கு ஒன்னும் ஆகக் கூடாது “

“கல்யாணம் நிக்கட்டும். அப்புறம் அவங்க தானாகவே வீடு வந்து சேருவாங்க “

“நான் எப்படி உங்களை நம்பறது?”

“என்னை நம்பறதுத் தவிர உனக்கு வேற ஏதாவது விருப்பம் இருக்குமா?”

பாதுகாப்பாக அனிதாவை யாருக்கும் தெரியாமல் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற்றியது சித்தியும் சித்தப்பாவும் தான் .

தன்னுடைய  ஒரு போலீஸ் தோழியிடம் உதவி கேட்டு குடும்பமாக இரவோடு இரவாக இங்கே வந்து செட்டில் ஆனார்கள் அனிதாவும் அவள் பெற்றோரும் .

மைசூரில் லாட்ஜில் வந்து தங்கி பிறகு அகனின் ஹோட்டலில் அனிதாவின் தந்தை வேலைக்கு சேர்ந்து எதிர்பாராமல் அகன் இவளை சந்தித்து காதல் கொண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள்.

சூர்யாவும் அகனும் தொழில் முறை நண்பர்கள் தான். அதுவும் இல்லாமல் அனிதா வாழ்க்கையில் நடந்த  விவரங்களைச்  சொன்னாலே ஒழிய யார் என்று அவள் எதுவும் சொல்லவில்லை.  அகன் வீட்டில் இருந்தவர்கள் கூட இந்த விஷயத்தைப் பற்றி பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரே கண்டிஷன் மகனின் வாழ்வில் சந்தோஷமாக இருக்க அனிதா உடன் இருக்க வேண்டும். அவனிடம் சண்டையிடக் கூடாது. அகனுக்கு இருந்த ஒரே கண்டிஷன் பெற்றவர்களுடன் இருப்பது. எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.

புரிதல், நம்பிக்கை என்ற அஸ்திவாரத்துடன் ஆரம்பித்த அவர்கள் வாழ்க்கை வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.

அகன் தான் தாமரை இப்போது வேலைப் பார்க்கும் கடையை அவளுக்கு ஆரம்பித்துக் கொடுத்தது. அனிதா பிடிவாதமாக வாங்கி கடன் வாங்கி கொண்டாள் . பெரும்பாலும் அவள் தான் கடையைப் பார்த்துக் கொள்கிறாள் . இருப்பினும் நம்பிக்கையான ஆள் வேண்டும் என்று தாமரைக்கு வேலைக் கொடுத்து தன்னுடனேயே வைத்துக் கொண்டாள் .

குழந்தைக்கு அம்மா பால் கொடுக்க வேண்டுமே என்ற கேள்வி வந்தபோது வேறு வழியில்லாமல் தாமரை அனிதாவிடம் தனிமையில் விஷயத்தைக் கூறி இருந்தாள் . அவளோ கணவனுக்கு மட்டும் விஷயம் சொல்லி  மற்றவர்களிடம் அவள் தோழியின் குழந்தை என்று சொல்லி விட்டாள் .

செல்வி இறந்ததும் மருத்துவர் குழந்தையை இவளிடம் கொடுத்து விட்டார்.

“நான் பாத்துக்கறேன் . “செவிலியர்கள் வேறு மாதிரி பேசினாலும் மருத்துவருக்கு செல்வியின் நிலை புரிந்திருக்க வேண்டும்.

இவளின்  பழைய நினைவுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தது கடைப் பையனின் அழைப்பு. லோடு வந்திருக்கிறது. இவள் விடுப்பில் இருந்தாலும் அனிதாவை  வரச்  சொல்வது சரியில்லை. பக்கத்து வீட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு அவள் கிளம்பி சென்றுக் கொண்டிருந்தாள் .

இங்கே காரில் வைத்துக் கொண்டிருந்தவன் சிக்னல் அனுமதி தர காத்துக் கொண்டிருந்தான். அப்போது அவனின் கார்  ஜன்னல் தட்டப் பட்டது.

கண்களைத் திறந்தவன் பார்த்த போது அவனுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. கார்த்திக் தான் அது.

“டோர் சரியா மூடலை”  சொல்வதற்குத் தான் அவன் அழைத்து அங்கே அவனின் பாஸ் .

டிரைவரிடம் சொல்லி காரை ஓரம் கட்டி விட்டு கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தான். பொதுவான விசாரிப்புகள். முயன்றும் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை .

“தாமரை…”என்று மட்டுமே அவன் ஆரம்பிக்க பல வித புகழ்ச்சியுடன் ஒரு மூச்சு பேசி முடித்தான் தன்னுடைய மனைவியைப் பற்றி சூர்யா.

இதற்கு முன்பு கார்த்திக் அறிந்த தாமரை வேறு. இப்போது அவன் வீட்டில் அருகில் இருக்கும் தாமரை வேறு. அவர்களின் பெட் கேர்க்கு தேவையான சில உணவுப் பொருட்கள் கூட  தாமரை தான் மொத்த வியாபாரம் செய்யும் இடத்தில இருந்து வாங்கிக்  கொடுக்கிறாள் .

மற்றவர்களுக்கு ஒன்று என்றால் ஓடி ஓடி செய்யும் தாமரைதான் கார்த்திக்குக்கு தெரியும். அன்றைய காலை தாமரை யாரோ ஒருவனுடன் சென்றதாக சூர்யா நினைத்தது தவறு. அவன் ஒரு திருநம்பி . பெண்ணாக இருந்து பிறகு தன்னை ஒரு ஆணாக உணர ஆரம்பித்தவன். வீட்டிலிருந்து துரத்தி விட்டார்கள். நிறைய இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். தாமரை கடைக்கு அருகில் வந்து படுத்துக் கொண்டிருந்தவனுக்கு கார்த்திக்கிடம் பேசி அவன் கடையில் வேலை வாங்கி கொடுத்தாள் . தனக்கென்று யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அங்கே வரும் நாய்கள் காட்டும் பாசத்தினால் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போகிறான். ஊருக்கு செல்பவர்கள் கொண்டு வந்து விட்டாலும் அந்த விலங்குகள் கிளம்புவதற்கு முன் நம்பியிடம் காட்டும் பாசம் அலாதிதான்.

கார்த்திக் சூர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

கார்த்திக் தாமரை சந்திப்பு கூட எதிர்பாராமல் நடந்த  விஷயம் தான்.

“நீங்க ஏன் பாஸ் தாமரைகிட்ட அவ தரப்பு விஷயத்தை கேக்கவே இல்ல ?”

“என்னையே கேள்வி கேக்கற அளவுக்கு நீ பெரிய ஆளாகிட்டியா கார்த்தி?

“நான் எப்பவுமே அப்படி யோசிச்சது இல்ல பாஸ். எப்பவுமே நீங்க தான் எனக்கு பாஸ். ஆனா தாமரை எனக்கு  வந்தனா மாதிரி தான்.   அதே சமயம் இத்தனை வருஷமா உங்ககிட்ட பேசாம விட்ட விஷயம். இது நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரில பட் உங்களை சுத்தி நிறைய விஷயங்கள் நடக்குது பாஸ்” சொல்லிக் கொண்டிருக்கவும் அவன் போன் அழைத்தது. கீர்த்தி தான். கட் செய்தான். மீண்டும் மீண்டும் அழைத்தாள் .

“கீர்த்தி தானே பேசு” என்றான் சூர்யா.

போனில் விஷயத்தை கேட்டவனுக்கு அதிர்ச்சி.

இங்கே தாமரை கடைக்குச்  சென்று கொண்டிருந்தவள் மீது குடித்து விட்டு கார் ஓ ட்டிக் கொண்டிருந்த கார் இடித்து பெரிய விபத்து ஆகி விட்டது. அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள் சூர்யாவும் கார்த்திக்கும் மருத்துவமனைக்கு வரவும் இவளும் அங்கே ஒரு ஆட்டோவிலிருந்து இறக்கப் பட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு கண்கள் சொருக ஆரம்பிக்கவும் கார்த்திக் தான் கன்னத்தில் தட்டிக் கொண்டிருந்தான். சூர்யாவைப் பார்த்ததும் அரை மயக்கத்தில் அது நமக்கு பிறந்த குழந்தை இல்லை சைகையில் காட்டியவள் அவசர சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் செல்லப் பட்டாள் . சூர்யா இன்னும் அதிர்ச்சில் இருந்து மீளவில்லை  அரை மணி நேரத்துக்கு முன்பு அவள் மீது வெறுப்பை கொட்டி விட்டு வந்திருந்தாலும் மனைவியை உடல் எங்கும் இ ரத்தத்துடன் பார்த்தது ஜீரணிக்க முடியவில்லை.

வெளியில் காத்துக் கொண்டிருந்தார்கள், அகன் அனிதா கீர்த்தி எல்லாரும் வந்துக் கொண்டிருந்தார்கள்.

கார்த்திக் அவ குழந்தைப் பத்தி ஏதோ சொன்னாலே. உனக்கு தெரியுமா ?

“பாஸ் அது.. “

“ப்ளீஸ் கார்த்திக். நீயாவது சொல்லேன். அவகிட்ட ரெண்டு நாளா கேட்டுக் கேட்டு பைத்தியம் புடிச்சுருமோன்னு பயமா இருக்குடா. இப்ப அவ இப்படி அடிபட்டு கிடக்கறா . என்னோட பிள்ளைக்கு நான் அப்பா இல்லன்னா அவ வேற யாரையாவது?”

தாமரை அப்படி செய்வான்னு நினைக்கறீங்களா? அவ உயிரோட கலந்தவர் பாஸ் நீங்க. ” என்றான் கார்த்திக்

“அவ சொன்னது உண்மைதான். இந்த விஷயம் நான் பேசக் கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனா எப்ப அவளையே நீங்க இந்த வார்த்தை சொல்லிடீங்களோ இனிமே நாங்க வாய் மூடிக்கிட்டு இருந்தா அது அவளுக்கு செய்யற துரோகம். “கீர்த்தி தான் கணவனை தடுத்து பேசிக் கொண்டிருந்தாள்.

“ஏன் கார்த்திக் இன்னும் அவகிட்ட இவருக்கு குடுக்க என்ன இருக்கு? உசுருக்கு போராடிக்கிட்டு இருக்கா . வேற புருஷன வச்சுருக்காளான்னு கேக்கறாரு. நீங்கல்லாம் ஒரு மனுஷனா ? இள வயசுல இருக்கற பொண்ணு புருஷன் இல்லாம கண்ணியமா வாழறது எவ்ளோ கஷ்டன்னு உங்களுக்குத் தெரியுமா ? நாங்க எல்லாரும் அவளுக்கு இருக்கோம். அவ முகம் பார்த்தது உங்களைத் தானே. அன்னிக்கு உங்க கல்யாணம் நின்ன போது உங்களுக்கு ஒரு கெட்டப் பேரு வந்துடக் கூடாதுன்னுதானே அவள் உங்களை, தானே வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா ? கொஞ்சமாவது உங்களுக்கு அவகிட்ட நன்றி இருந்ததா ? எல்லாம் பணக்கார திமிரு. அந்த குழந்தையை பத்தி ஏன் சொல்லலைன்னு கேட்டு அவளை டார்ச்சர் பண்ணீங்க இல்ல . அவ ஏன் உங்ககிட்ட சொல்லத் தெரியுமா? தெரிஞ்சா உங்களால அதைத் தாங்க முடியாது. ஆனா எனக்கு அந்த பயம் இல்ல. பொண்டாட்டிய வீட்டை விட்டு அனுப்பிட்டு ராஜாவா ஜம்முன்னு இருக்கீங்க தானே. இதையும் தெரிஞ்சுக்கிட்டு முடிஞ்சா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நடந்துப் போங்க “

“கீர்த்தி ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இரு..”

“எப்படி கார்த்திக் உன்னால இப்படி பேச முடியுது. அவ எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கான்னு தெரியாது உனக்கு? நான் இப்ப எல்லா உண்மையும் சொல்லி தான் ஆகணும் இல்லன்னா நம்ம மனசாட்சியே நம்மளை கொன்னுடும்” கன்னங்களில் வழிந்த நீரை வேகமாகத் துடைத்தவள்,

“அவ சொன்னது அத்தனையும் உண்மை. அந்த பிள்ளைக்கு நீங்க அப்பா இல்ல. அவ அம்மாவும் இல்ல. உங்க வீட்டுல வேலை செய்த செல்விங்கற சின்ன பொண்ணை வயசுக்கு வந்த அன்னிக்கே திரும்பத் திரும்ப நாசம் பண்ணி இந்த குழந்தையை கொடுத்தது உங்க சித்தப்பா . அப்பா அந்த குழந்தைக்கு நீங்க யாரு? அப்பாவா அண்ணாவா ?”

“ஷட் அப் கீர்த்தி. வாய்க்கு வந்தபடி பேசாத.” மருத்துவமனையில் தன்னை மீறி குரல் உயர்த்தி விட்டான் சூர்யா .

” இதுக்குத் தான் அவ உங்ககிட்ட எதுவுமே சொல்லல. அந்த முக ஜாடையும் மச்சமும் உங்க குடும்பத்தோட அடையாளம். உங்க அடையாளம் இல்ல .”

கார்த்திக் முகத்தை சூர்யா பார்க்கவும் அவனும் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

இப்போது அவசரமாக அனிதா அங்கே வரவும் கோபத்தில் கொந்தளித்தான் சூர்யா. “உன்னால உன்னாலதாண்டி என் வாழ்க்கைல இத்தனை பிரச்சனை. உன்ன என்று கத்தியவனை அடக்கியது தோழன் அகனின் குரல் தான் ,

“சூர்யா உங்க கல்யாணம் நின்னதுக்குக் காரணம் அவ இல்ல .”

“உனக்கு ஒன்னும் தெரியாது அகன். கல்யாணத்துக்கு முன்னாடி அவ ஓடி போனா “

என்னை ஏமாத்தினவ இவ தான். என்னை விடு. என்னையும் ஏமாத்தி இப்ப உன்னையும்  ஏமாத்தி ., அவளை கொன்னுடறேன். உனக்கும் நிம்மதி கிடைக்கும் “திர்மியவனை அகன் கார்த்திக் இருவருமே கஷ்டப்பட்டு தான் கட்டுப் படுத்தினார்கள் . அனிதாவை சூர்யா ஒன்றும் செய்து விடாமல் இருக்க கீர்த்தி தான் பாதுகாவலாக நின்றாள் .

“சூர்யா ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் ஸெல்ப். என்னை நம்பு எனக்கு நடந்த எல்லா விஷயமும் தெரியும். அப்புறம் பேசலாம். “

“இல்ல அகன்! விடு என்னை.”அவளை  என்று அனிதாவை சூர்யா அடிக்க வரவும் அதற்கு முன் சூர்யாவை அகன் அறைந்து விட்டான்.

“அவ உன்னை ஏமாத்தல .”

“nஈயும் எல்லாத்துக்கும் காரணம் எங்க சித்தி தான்னு சொல்லப் போறியா ?

“ஆமாம் நீயே நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் உங்க வீட்டுல இருக்கறவங்க தான்  அவளை விரட்டியது போதுமா ?”

“நீயுமாடா?”

ஓய்ந்து  அமர்ந்து விட்டான் சூர்யா. ராஜா ராஜா என்று எல்லாராலும் கொண்டாடப் பட்டவன் இப்போது தரையில் …

“பாஸ் என்று கார்த்திக் தான் பதறினான் . அதற்குள் ஒரு நர்ஸு வந்து

ரொம்ப இரத்த போக்கு அதிகமா இருக்கு. *** ரத்தம் தேவைப்படுது என்று கன்னடத்தில் சொன்னாள். “என்னோடது அதே தான்” முதலில் நின்றது அனிதா தான். அவர்களை எல்லாம் பார்த்த சூர்யா அவளுக்குன்னு எத்தனை பேரு  இருக்காங்க. நாந்தான் அனாதை பின் தலையை சுவற்றில் மோதி அழுதான்.   உண்மை தெரியும் வரை அவளை வெறுத்த சூர்யாவுக்கு அப்போதே அவள் தேவைப் பட்டாள் .  ரத்தம்  தேவையான அளவை விடவும் அதிகமாகவே கிடைத்தது.

அனிதாவிடம் நர்ஸு, “மேடம் நீங்க பிரக்னண்டா இருக்கீங்க. நீங்க கொடுக்க முடியாது “என்று சொல்லி விட்டாள்.

‘ஒரு வாரம்தான் தள்ளிப் போய் இருந்தது. காலையில் வரும் தலை சுற்றல் அர்த்தம் இதுதானா?’ தானாகவே அவள் வயிறை தடவிக் கொண்டாள் . இப்போது இதை யாரிடம் முதலில் சொல்ல வேண்டும். தன்னை விடவும் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று தாமரை தான் ஆர்வமாக இருந்தாள். அவகிட்ட தான் முதல்ல சொல்லுவேன். வாயை இறுக்கி மூடிக் கொண்டாள் அனிதா .

வெளியில் வந்த மருத்துவர், வண்டி வேகமா  வந்ததுல அவங்களுக்கு நல்லாவே அடி  பட்டிருக்கு. முதுகு எலும்புல ஒரு ஆப்ரேஷன் பண்ண வேணும். ஆர்த்தோ இப்ப வந்துடுவார். தலைலை அடிபட்டு நிறைய ரத்தம் போய் இருக்கு. ஏற்கனவே அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. இப்ப இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது. இப்ப ஆபரேஷன் பண்ணலாமா? ஓகேவா ? அவரும் ஒரு திருநங்கை தான் .

“எஸ் டாக்டர்.” கணவன் என்று சூர்யா தான் கையழுத்து போட்டான்.

இனிமே உனக்கும் எனக்கும் எந்த ஒட்டோ உறவோ இல்ல. அசிங்கமாக திட்டி வெளியில் அனுப்பியவனுக்கு இப்போது கணவன் என்ற இடத்தில் கையெழுத்துப் போட முடியவில்லை . கண்ணீர் மறைத்தது. ” என்கிட்டே திரும்ப வந்துடு இதயா. ப்ளீஸ் டீ. சாரி டீ ” அவன் மனம் கதறிக் கொண்டிருக்க.,

“உனக்குன்னு யாரும் இல்ல தாமரை. போதும் இதுக்கு மேல அலட்டிக்க வேணாம்”  மூளை சொன்னது. 

துடிக்குமா இதயம் ?

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page