கரண் அறையில் அமர்ந்திருக்க ஒரு போன் கால் வந்தது.
அட்டென்ட் செய்து பேசியவன் முகத்தில் புன்னகை விரிய அது மறைந்து மீண்டும் கோபம் சூழ்ந்தது.
வினோதன் “என்னடா ஆச்சு யாருடா பேசினா சீக்கிரம் அந்த ஆள தேடி போகலாம்!”
“அதற்கு அவசியமே இல்லை என்றான் கரண்.
வினோதன் குழப்பத்துடன் “என்னடா சொல்ற?” என்ற உடன்
போலீசும், “என்ன சார் சொல்றீங்க நாங்க போய் அவ அந்த போட்டோவை காமிச்சு கவர கண்டுபிடிக்கிறோம் நீங்களும் உங்க பக்கம் முடிஞ்சா தேடுங்க!” என்று சொல்லிவிட்டு கிளம்ப பார்க்க ,
“சர் நீங்க தேடினாலும் அந்த ஆள கண்டுபிடிக்க முடியாது என்றான்.
“ஆமா சார் இப்பதான் நியூஸ் வந்தது அந்த ஆள் போன காரு பெட்ரோல் லீக் ஆகி ஓவர் ஸ்பீட்ல போயி ஒரு கட்டத்துல கண்ட்ரோல் பண்ண முடியாம ஒரு லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டு ஆளு ஸ்பாட் அவுட் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில பாடி இருக்கு. என்னுடைய சித்தி தான் கால் பண்ணினாங்க!” என்றவுடன் அப்பொழுதுதான் வினோதனுக்கும் போலீசாருக்கும் நிம்மதியாக இருந்தது.
போலீசும் “சரி சார் அப்போ நீங்க பாருங்க நாங்க கிளம்புறோம்!” என்றனர்.
” ரொம்ப நன்றி சார் கூப்பிட்ட உடனே வந்து இவ்வளவு தூரம் எங்களுக்கு உதவி பண்ணினதுக்கு!” என்று அனைவருக்கும் நன்றிய சொல்லிவிட்டு அனுப்பி வைத்தவன், திரும்பி வினோதனை பார்த்தான்.
” கடவுள் இருக்காண்ட குமாரு” என்ற வினோதனை பார்த்து சிரித்தவன் அபியை பார்க்க சென்றான் கரண்.
ஒரு வாரம் கடந்த நிலையில் அன்று காலை வீடு பரபரப்பாக இருக்க குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷன் நடந்து கொண்டிருந்தது.
அய்யர் மந்திரங்களை ஓதி முடித்தவர் “குழந்தையை தொட்டில்ல போட்டு குழந்தையோட பெற்றோர் பெயரை குழந்தையின் காதுல மூணு முறை சொல்லுங்கோ !” என்ற உடன் கலாநயா என்ற பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் சொன்னாள் அபி.
கரண் தனது மனைவியை ஆனந்த கண்ணீருடன் பார்த்தவன் கண்ணீரை துடைத்து விட்டவள் “நீங்களும் சொல்லுங்க அத்தை தானே வந்து பிறந்து இருக்காங்க உங்க அம்மாவை கொஞ்ச வேண்டாமா ?” என்று சிரித்துக் கொண்டே கூற, அவனும் குழந்தையின் பெயரை மூன்று முறை சொல்லி தூங்கிக் கொண்டிருக்கும் மகள் நெற்றியில் முத்தம் கொடுத்தான். மற்றவர்களும் குழந்தையின் காதில் ஓதிவிட்டு விலகி நின்றனர்.
மாலையே அனைவரும் சென்று இருக்க இரவு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அறையில் நேரத்தை செலவிட்டவன் குழந்தை உறங்கியவுடன் அவளின் அவளை கைகளிலேயே வைத்திருக்க ” கரண் என்னுடைய அத்தை பெயர் வைத்ததால் என்னதான் இந்த குழந்தை உங்க மூலமா வரல நாளும் இந்த பெயர் மூலமா இப்போ அவ உங்களுக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திட்டேன் அது மட்டும் இல்லாமல் இவளும் என்னுடைய முக ஜாடையில் இருக்கறதுனால இப்போ இந்த பெயரும் உங்களோட சம்பந்தப்படுத்திட்டதுனால எனக்கும் உள்ள இருந்த ஒரு சின்ன குறுகுறுப்பு இப்ப சுத்தமா போயிடுச்சு!” என்றவுடன் அவளின் மனதில் இருந்த குறையை புரிந்து கொண்டவன்,
அவளை விஷமமாக பார்த்து சிரித்துக் கொண்டே வேணும்னா “நம்ம இன்னொரு குழந்தை பெற்று கூட அந்த கவலையை தீர்த்துக்கலாம் பாவம் தானே கலாவும்!” என்றவுடன்
பெத்துக்கலாம் அதுக்கு முதல்ல உங்க பொண்ணுக்கு நாலு அஞ்சு வயசு ஆகட்டும் அதுக்கு அப்புறம் இன்னொரு குழந்தைக்கு அடி போடுங்க இப்பவே உங்க சேட்டையை ஆரம்பிக்காதீங்க!” என்று சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, இவர்களை பார்த்த நிலாவும் சந்தோஷமடைந்து அவர்கள் நல்வாழ்வு சிறக்க ஆசீர்வாதம் செய்தது.
அதற்கு சாட்சியாக அவர்களை தென்றலும் வருடி செல்ல தன்னவள் நெற்றியில் காதலுடன் முத்தமிட்டவன் உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன் என்றவன் பெண் அவள் குழப்பமான முகத்தை பார்த்து நான் உன்ன முதல் முறை பார்த்தது நம்ம காலேஜ்ல கிடையாது!” என்றான் அவளோ குழப்பமாக பார்க்க,
“ஆமா நீ அந்த வருஷம் 12த் லீவுல குற்றாலத்துக்கு போயிருந்த தானே?” என்று கேட்டான் அவளும் “ஆமா” என்றாள் .
“சிலர் உன்னை கிண்டல் செய்து தவறாக நடக்க முயன்றபோது, பயந்த நீ மயங்கி விட்டாய். அதைத் தொடர்ந்து, உன்னை பார்த்து நான் தான் காப்பாற்றினேன். முதல் பார்வையிலேயே எனக்கு உன்னை பிடித்து விட்டது! அதன் பிறகு உன்னை நினைத்துக் கொண்டிருந்தவன் மறக்க முடியாமல் இருந்தேன் ! கல்லூரியில் மீண்டும் உன்னை பார்த்த பொழுது சந்தோஷம் கொண்ட உன் பின்னால் சுற்றி இதோ இப்பொழுது நீ என் மனைவியாக இருக்கிறாய்!” என்றவுடன் உணர்ச்சியுடன் அனைத்து முத்தமிட ஆரம்பித்தாள்.
அவளாக கொடுக்கும் முதல் முத்தம் ஆதலால் அவனும் அதில் விரும்பியே தொலைந்தவன் இனி தினமும் அவளுக்கு அடிமை ஆவான் . அவளும் அவனது அன்பில் அடிமையாவாள். இவர்கள் அப்படியே தங்களது வாழ்வை சந்தோஷமாக கழிக்கட்டும். நாம் இந்த கதைக்கு அவர்களிடம் இருந்து பிரியாவிடை பெறுவோம் .
இதுவரை படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.…
மறக்காமல் பைவ் ஸ்டார் ரேட்டிங்கும் உங்கள் பொன்னான கருத்துக்களையும் கொடுத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் அனைவருமீண்நன்றி..
வாய்ப்பு கொடுத்த ட்ரீம் நாவல் வெப்சிைட்கும் நன்றி..💞
