சேகரும் அவனின் நண்பனும் இனி அமுதனிடம் எந்த வம்பும் வச்சிக்க கூடாது என்று முடிவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றனர்.
அதே நேரம் அமுதனை அழைத்து வந்தவனோ தன்னுடைய குருநாதரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரின் கதவை தட்டவும் ஒரு எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு பெரியவர் வெளியே வர, அவரை வணங்கினான்.
அவரும் அவனுக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு, “வா நீலகண்டா நான் சொன்னதெல்லாம் எடுத்துட்டு வந்துட்டியா” என்றார்.
அவன் அதற்கு அமைதியாகவே இருக்க “என்ன நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியாகவே இருக்க நீலா “என்று சற்று கடுப்புடன் கேட்டார்.
“ம்ம்ம் எடுத்துட்டு வந்துட்டேன் சித்தப்பா” என்றான்.
“அதுக்கு ஏன் இவ்வளவு நேரம்” என்றார்.
“அது ஒன்னும் இல்லை சித்தப்பா ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ஒரு பழைய பொருள் கிடைச்சது அதை பத்திரமா எடுத்துட்டு வர தான் இவ்ளோ நேரம்” என்று மறைமுகமாக சொன்னான்.
“நாம என்ன தேடிக்கிட்டு இருந்தோம் என்ன புரியாத மாதிரியே பேசுற என்று சிடுசிடுத்தார்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சிடும் சித்தப்பா ” என்றான்.
“நீ என்ன சொல்லுறீயோ எனக்கு ஒன்னும் புரியல அதற்கு இப்போ நேரமும் இல்லை, அதனால் எல்லாத்தையும் எடுத்து உள்ள வச்சுட்டு போய் குளிச்சு தெளிச்சுட்டு சுத்தமா வா” என்று கடிந்து கொண்டார்.
அவன் அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாகவே கைகளை முன்னே கட்டிக்கொண்டு தலை குனிந்து நின்று கொண்டிருக்க, அதை பார்த்த அவர் அவன் தோளை தட்டி “உன்னை தான் சொல்றேன் நீலகண்டா போய் குளிச்சிட்டு வா என்ன இன்னைக்கு நான் சொல்றது எதுவுமே கேட்கக்கூடாதுன்னு இருக்கியா” என்றார்.
அவன் தடுமாறி “ஒன்னும் இல்ல சித்தப்பா நான் வர வழியில ஒருத்தரை கத்தியால குத்திருப்பாங்க போல, அவரைக் இந்த கூட்டிட்டு வந்திருக்கேன். ”
“உனக்கு அறிவு இருக்கா? முடியாதவங்களை கூட்டிட்டு வந்து கதை பேசிட்டு இருக்கியா? முதல்ல உள்ளே கொண்டு போய் படுக்க வை!” என்று கோபமாகச் சொன்னார்.
“அவருக்கு நான் மருந்து கொடுக்க மாட்டேன் சித்தப்பா நீங்கள் தான் கொடுக்கணும் ”
“டேய் நான் அத கையில தொட்டே பல வருஷம் ஆச்சு உனக்கு குறிப்பு கொடுத்துட்டு இருக்கேன் அவ்வளவுதான் இனிமேல் நான் அதை செய்ய மாட்டேன் ” என்றார்.
அவர் பேசிக்கொண்டிருக்க,
“நான் அந்த ஆளை தூக்கிட்டு வர்றேன்,” என்று ஓடியவனை நிறுத்தி
“அப்படி யாரை பா தூக்கிட்டு வர போற நானே என் வாழ்க்கையில் பல விஷயங்களை எதிர்பார்த்துட்டு இருக்கேன் அது எனக்கு எப்ப கை குடுக்கும்னு ஏக்கத்தோடு இருக்கேன் பா நீ வேற ஏன் இப்படி பண்ற ” என்று சோகமாக சொல்லவும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை துடைத்துக் கொண்டு எழும் நேரம் அவர் கால் தடுக்கி விழ போக அவரை தாங்கிப் பிடித்தவன், “ஏன் சித்தப்பா உங்களோட உடம்பைக் கெடுத்துக்கிறீங்க” என்றான்.
“நான் பண்ணின பாவம் அப்படி பா அதுக்கு என்ன பண்ண போறேன்னு தெரியல ” என்றுக் கூறி விட்டு அமரந்து விட்டார்.
அவர் அப்படி அமர்ந்து விடவும் அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் மடமடவென்று ஓடிச் சென்று அமுதனை தூக்கி வந்து அவர் முன் நின்று, ” சித்தப்பா இவனை பார்த்துட்டு இவனுக்கு மருத்துவம் கொடுக்கணுமா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க சித்தப்பா” என்றான்.
“நான் தான் சொல்றேன் இல்ல உள்ள கொண்டு போய் அவருக்கு ஆக வேண்டிய காரியத்தை பாரு நீலா” என்றார் .
“நான் உள்ள கொண்டு போய் போடுவேன் நீங்க வந்து இவனுக்கு உதவி செஞ்சு காப்பாத்துறதா இருந்தா காப்பாத்துங்க இல்லையா இவன் இப்படியே செத்துப் போகட்டும் சித்தப்பா, இவனை கூட்டிட்டு வந்தா அந்த பொண்ணு அப்படியே எங்கேயோ போகட்டும்” என்று வீம்பாக பேசிவிட்டு உள்ளே தூக்கிச் சென்று அவனை உள்ளே கிடத்தினான்.
அவன் பின்னே வந்த குழலி அவரிடம் ” தயவு செய்து அவரை காப்பாத்துங்க” என்றாள்.
அவருக்கு அவளைப் பார்த்து யார் என்று புலப்படவில்லை ஆனால் அவள் கண்களில் ஏதோ ஒரு தவிப்பு தெரிய மெல்ல எழுந்து போய் உள்ளே பார்த்தவர் அவனை அப்படியே கட்டி அணைத்து அமுதா என்று கத்தி, “உன்னைய நான் இந்த நிலைமையில தான் பார்க்கணுமா? இதற்கு தான் நான் என் உசுரை கையில புடிச்சுட்டு இருக்கேனா? என்று தவித்து, அவன் மேலே சாய்ந்து அழுதவரை பின்னிருந்து அவர் தோளை தொட்ட நீலகண்டன் “சித்தப்பா அவன் இப்போ உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துற வழிய பாருங்க” என்று கூறவும் அடுத்த நொடியே தன்னை சுதாரித்துக் கொண்ட பெரியவர் அவனின் காயங்கள் எப்படி இருக்கின்றது என்று மெல்ல அதைத் தொட்டுப் பார்த்தார்.
அவர் மெல்ல தொடும் போதே அவனுக்கு வலி எடுக்க கண்களை திறக்காமல் “அஹா ” என்று பல்லைக் கடித்துக் கொண்டேக் கத்தினான் .
அவன் அப்படி கத்தியதும் குழலிக்கே ஒரு மாதிரியாகிவிட வேகமாக ஓடிவந்து அவன் கைகளை பிடித்து மெல்ல நீவி விட்டு “ஒன்னும் இல்லங்க கொஞ்சம் பொறுத்துக்கோங்க” என்றாள்.
அவள் அப்படி செய்ததும் அந்த பெரியவர் நீலகண்டணிடம் திரும்பி இது யார் என்று கண்களாலே கேட்க அவனும் தெரியாது என்று கண்களாலே பதில் சொல்லிவிட்டான்.
அதன் பிறகு அவர் குழலியிடம் திரும்பி “அவனை காப்பாத்தணும் நீங்க கொஞ்சம் தூரமா இருங்க அது அப்படித்தான் வலிக்கும் பாத்துக்கலாம் ” என்று சொன்னார்.
அவர் அப்படி சொல்லவும் நம்பிக்கை வந்தது அது போக அவர் சற்று முன் அமுதனைப் பார்த்ததும், நடந்துக் கொண்டது அவளுக்கு அவன் மேல அவர் தீராத அன்பு வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.
ஆனால், இவ்வளவு அன்பு அவர் மேல் வைத்திருக்கும் நீலகண்டன் என்பவர் ஏன்? அப்போது அப்படி நடந்துக் கொண்டதும் இப்போது அவருக்காக துடித்து இப்படி இந்த பெரியவரிடம் மன்றாடுவதையும் பார்த்தவளுக்கு அங்கு என்ன நடக்கிறது என புரியாமல் அவர்கள் மூவரையும் மாற்றி மாற்றி பார்த்து விட்டு அங்கிருந்து விலகி நின்றுக் கொண்டதோடு, அங்கு ‘இவர்தான் சரியில்லையோ பெத்த மகனே கத்தியில் குத்துறான், இங்க வந்து பார்த்தா ஒருத்தன் அவர் உயிருக்காக காத்திருக்காங்க இங்க என்ன நடக்குது எனக்கு ஒன்னுமே புரியல ‘என்று தனக்குத்தானே யோசித்துக் கொண்டிருந்தவளின் சிந்தனையை
“இது சாதாரண குத்து இல்லப்பா காயம் ரொம்ப ஆழமா போய் இருக்கு ஆனால், உயிர் பிடிச்சுக்கிட்டு தான் இருக்கு…” என்றார்.
அவர் சொன்னதை கேட்ட குழலி, “ஐயோ அப்போ அவருக்கு ஏதாவது செய்ங்க ஐயா ” என்றாள்.
“காயம் பெருசு தான் மா கண்டிப்பா என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் எதுவும் பயப்படாதீங்க அப்பறம் எங்களை கொஞ்சம் வேலை செய்ய விடுமா” என்றதில் அவளுக்கு ஒரு மாதிரி ஆகி போனது. அதனால் அவள் அமைதியாக ஓரம் நின்றுக் கொண்டு, ‘ஏன் குழலி அவர் தப்பானவருன்னு தெரிஞ்சும் அவருக்காக இப்படி துடிக்கிற ‘ என்று மனசாட்சி கேள்வி கேட்க ‘அது தான் எனக்கே தெரியல அவரை குறையாகவும் நினைக்க முடியல சரியாவும் நினைக்க முடியல அவருக்கு ஒண்ணுன்னா என் மனசு கடந்து துடிக்குது என்னனு எனக்கும் புரியலையே ‘ என்று யோசித்துக்கொண்டே அங்கிருக்கும் சாமி படத்தின் முன்பு சென்று அமர்ந்து விட்டாள். அவன் உயிரை காப்பாற்ற வேண்டி
அவள் செய்கைகளை எல்லாம் பார்த்தவர் ஒரு பெரு மூச்சு விட்டு அவன் சட்டையை கழட்டி அருகில் இருந்த மரப் பெட்டியை திறந்து, வேர்கள், கிழங்குகள், பச்சை இலைகள் எடுத்து ஒரு கல் உரலில் அதை நசுக்கி மருந்து தயார் செய்ய நீலகண்டணிடம் கொடுத்தார்.
அதற்குள் அவன் உடலில் உள்ள ரத்தக் கறைகளை சுத்தம் செய்ய அதற்குள் மருந்து வரவும் அதை
காயத்திற்கு மெதுவா அந்த பச்சை மருந்தை தடவினார்.
அதை தடவியவுடன் அந்த மருந்தின் வீரியத்தால் வலி தாங்க முடியாமல் கத்தினான். அம்மா என்று கத்தினான் அமுதன்!!
அவன் தலையை தடவிக் கொடுத்தவர், “ஒன்னும் இல்லை அமுதா எல்லாம் சரியா போகும்னு நம்பு ” என்று ஆறுதல் கூற
“நான் உயிரோட இருக்கணும் அப்போ தான் அவளை காப்பாற்ற முடியும் ” என்றான்.
உயிர் போகும் வேளையிலும் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவனை ஒரு நிமிடம் தவறாக நினைத்து விட்டோமே என்று குற்ற உணர்வில் கண்ணீர் விட்டாள்.
“உயிர் போகாது எல்லாம் நல்லா படியா சரியா போகும்” என்றார். அவர்
அதன் பிறகு அவர் ஒரு சூடான கஷாயம் தயார் பண்ணி, அமுதனின் வாயில் ஊற்றி விட்டு ஒரு நூல் கொண்டு காயத்தை கட்டி விட்டு நீலகண்டனிடம் திரும்பி “இனிமே பயப்படத் தேவையில்லை இதே மாதிரி இன்னைக்கு மதியம் ஒரு கட்டு, சாயந்தரம் இருக்கட்டும் போடணும் அதேபோல ரெண்டு மூணு நாளைக்கு செய்யணும், அது போக பத்திய சாப்பாட்டுக்கு வீட்ல சொல்லிடு அதுக்கு ஏத்த மாதிரி சமைக்கட்டும் ” என்றார்.
“சரிங்க சித்தப்பா” என்றான்.
அப்படியே குழலியைப் பார்த்து கையை அசைத்து இங்கே வா என்றார்.
அவளும் அவர் அழைத்ததில் வந்து “சொல்லுங்கய்யா” என்றாள்.
“இனிமேல் அவன் உயிருக்கு எந்த பிரச்சினையும் இல்லை உனக்கு சந்தோஷம் தானே” என்று அவள் தலையில் மேல் கை வைத்து சொல்ல
” சந்தோஷம்” என்றதும் சரி இவனுக்கு எப்படி இந்த மாதிரியானது” என்று கேட்டார்.
” அவர் பெத்த பசங்களே இந்த மாதிரி பண்ணிட்டாங்க” என்றாள்.
அவர் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்க…
குழலி அவரு நீங்க எல்லாம் யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா” என்று கேட்டாள் .
“அது இப்போ தெரிஞ்சிக்க வேண்டாம், தெரியும் போது தெரியட்டும் ” என்றுக் கூறி வெளியே செல்லவும், அமுதன் மெல்ல கண் விழித்து அங்கு தன் பக்கம் நின்றிருந்தவனை பார்க்க இருவரும் முறைத்துக் கொண்டனர்.
