அமுதன் மெல்ல கண் திறந்து கண்களை சுழல விட்டு அந்த அறையை சுற்றி முற்றிப் பார்த்து தான் எங்கு இருக்கிறோம் என்று உணர்ந்து தெளிந்து பார்க்க அங்கு நீலகண்டன் இருப்பதைப் பார்த்தவுடன் அவன் முகம் சற்றே கடினமானது.
ஒரு நொடிக்கு இருவரின் கண்களும் சந்தித்தது. உடனே அமுதன் முகம் சுளித்து அந்த பக்கம் திரும்பிக் கொண்டான்.
அவன் முகம் சுளித்ததைப் பார்த்தவன் அவன் அருகில் வந்து, “என்னடா என்னை இங்க எதிர்பார்க்கலையா இப்போ நீ உயிரோட இருக்க காரணமே நான் தான் ” என்றான் ஒரு மாதிரி நக்கலாக!!
“அப்போ, அப்போ நான் வண்டில கழுத்தைப் புடிச்சது உன்னை தானா ” என்றான்.
“ஆமா, ஆனால் இப்ப அதை பத்தி எல்லாம் பேசாத நீ ரெஸ்ட் எடு ” என்று கையைப் பிடித்து ஆறுதல் கூறினான்.
அவன் கூறியதில் கண்கள் கலங்கி “நீலா என் மேல உனக்கு இருக்க கோவம் இன்னும் உனக்கு போகலையா? ” என்று கண்கள் கலங்க கேட்டான். அமுதன்!
அவன் கண்கள் கலங்கிக் கேட்கவும் நீலன் ஓடி வந்து அவன் கையை ஆதுரமாக பிடித்து, “ஏய் ஒன்னும் இல்லை டா எதுவா இருந்தாலும் நீ குணமாகி வா பேசிக்கலாம்” என்று அன்பாக சொன்னான்.
அதே நேரம் வெளியில் பேசிக் கொண்டிருந்த பெரியவரும் குழலியும் உள்ளே வர, அவரை கண்டதும் அமுதன் மெல்ல தடுமாறி எழுந்து, “மாமா ” என்றான்.
அவன் தடுமாறியதைப் பார்த்தவர் ஓடி வந்து, ” பார்த்து பா ” என்றார்.
“ம்ம்ம் மாமா ” என்றான்.
அவன் சாதாரணமாக மாமா என்றதும் இவருக்கு பல நினைவுகள் எல்லாம் வந்து குற்ற உணர்வாகி போக, எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
” என்ன மாமா அப்படி பாக்கறீங்க” என்றான்.
“என்னை இப்பதான் பார்க்க உனக்கு தோணுச்சா அமுதா” என்றார்.
அவன் அதற்கு அமைதியாகவே இருக்க அதற்குள் நீலகண்டன் முந்திக்கொண்டு வந்து “ஆமா இவன் உங்களை பார்க்க வந்தானா எந்த கடவுள் புண்ணியமோ அந்த நேரத்துல இவன் என் கண்ணுல பட்டு குத்துயிரும் கொலையிருமா கிடந்தான் எப்படியாவது தூக்கிட்டு வந்து காப்பாத்தணும்னு மட்டும் தான் தோணுச்சு அதனாலதான் எதுவும் பேசாம கூட்டிட்டு வந்தேன் ”
அதற்கு அமுதன் அமைதியாகவே இருக்க குழலி “அப்போ அவரை கொலை பண்ண நீங்க கூட்டிட்டு வரலையா” என்று கேட்டாள்.
“அவன் எங்களை கொலை பண்ணா பத்தாது நாங்க வேற தனியா கொலை பண்ணனுமா ஏம்மா நீ வேற ஆனா நீ தான் ரொம்ப பயந்துட்ட” என்றான். சிரித்துக் கொண்டே
“நீங்கள் எல்லாம் ஒரே குடும்பமா இருந்துட்டு என்னை ஏன் இப்படி பயமுறுத்துறீங்க” என்றுக் கோவமாக கேட்டாள்.
“ஏய் அவன் என்னை பார்த்ததில் அப்படி பண்ணி இருப்பான் டி அதை பெருசு படுத்துதா” என்று உரிமையாக சொன்னான். அமுதன்
“அது எனக்கு எப்படி தெரியும் ஒரு வார்த்தை என் நண்பன் என்று சொல்லி இருக்கலாம்” என்றாள் அதே கோவமாக!!
“அது இல்லம்மா அது சொன்னா உனக்கு புரியாது விடு ” என்றான். நீலன்
“அது எப்படி எனக்கு புரியாது இவரு ஒரு கொலை காரன் நீங்க எல்லாம் இவர் மேல இப்படி அன்பு வச்சி இருக்கீங்க இங்க நடக்கிறது எதுவும் எனக்கு புரியல எல்லாரும் சேர்ந்து என்கிட்ட நடிக்கிறீங்க அது மட்டும் எனக்கு தெரியுது, ஆனால் ஏன் இப்படி பண்ணுறீங்க தான் எனக்கு புரியல ” என்றாள்.
“அது அப்படி இல்லமா அவங்க ரெண்டு பேரும் அந்த மாதிரி தான் பண்ணுவானுங்க, அதுவும் இல்லாம நீலகண்டன், அமுதனை அந்த கோலத்தில் பார்த்ததும் பயந்துட்டான் அந்த பயத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், கோவத்தை காட்டி விட்டான். ” என்றார் அமுதனின் மாமா!!
“அது எனக்கு தெரியாது இல்ல என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்” என்று தான் நான் கேட்கிறேன் என்றாள்.
அமுதன் மெல்ல எழுந்து அமர்ந்து “நான்தான் சொல்றேன்ல” என்று சொல்லும் போதே அவன் காயத்தில் இருந்து ரத்தம் வடிய நீலகண்டன் அவனை மெல்ல படுக்க வைத்து “நான் பாத்துக்குறேன் டா நீ படு ” என்று கூறினான்.
ஆனால் அமுதன் கேட்காமல் “உனக்கு எல்லாம் நாங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உன்னுடைய எல்லை எதுவோ அங்கே நீ நின்னுக்கோ” என்று சொன்னான்.
“அப்போ இங்க இருக்க எனக்கு எதுவும் இல்லைன்னு சொல்லுறீங்க அப்படி தானே நான் போறேன். ஆனால், ஒன்னு இப்படி யாரு மேலயும் அன்பு இல்லமா இருக்கிறதுனால தான் உங்க பசங்களே வந்து உங்களை குத்திட்டாங்க” என்றாள்.
அதற்கு அமுதன் கலங்கி பதில் சொல்வதற்கு முன் ” நீங்க யாருன்னு எனக்கு தெரியல நான் இவனை பார்த்த ஒரு அவசரத்துலயும் கொஞ்சம் கோவத்திலும் தான் அந்த மாதிரி சொல்லிட்டேன் என்னுடைய எண்ணம் எல்லாம் இவனை எப்படியாவது காப்பாத்தணுங்கிறது மட்டும் தான் இருந்தது நான் எதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க தங்கச்சி” என்றான். நீலன்
“யாரும் என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டாம், அதுதான் அவங்களே சொல்லிட்டாங்களே நான் எந்த இடத்துல நிக்கணும்னு சொல்லி அந்த இடத்தில் நான் இருந்துக்கிறேன் ” என்று கண்கள் கலங்க கூறி விட்டு வெளியே சென்று விட்டாள்.
அவள் சென்றதும் நீலகண்டன் அமுதனிடம், ” டேய் யாரு டா அது” என்றான்.
“டேய், அதை ஏன்டா கேக்குற” என்று நடந்தவற்றையெல்லாம் கூறினான்.
“ம்ம்ம் சரி டா எல்லாம் நல்லதுக்குத் தான், ஆமா அந்த பொண்ணை உனக்கு பிடிக்குமா” என்று நீலன் கேக்க, “டேய் ஏன்டா நீ வேற புடிக்கும் பிடிக்காதுன்னு எல்லாம் பார்க்கிற நிலைமையிலா இருக்கோம்” என்றான்.
“அது மத்தவங்களுக்கு உனக்கு இல்லையே, என்று அவனும் விடா படியாக” சொன்னான்.
அமுதன் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஆயாசத்தில் கண்களை மெல்ல மூடவும் அமுதனின் மாமா நீலகண்டனிடம் “வெளியே வா அந்த பொண்ணு கிட்ட போய் பேசலாம்” என்று அழைத்து வந்தார்.
வெளியில் திண்ணையில் அவன் பேசிய வார்த்தைகள் தாங்க முடியாமல் அவள் எதற்கு அழுகிறோம் ஏன் அழுகிறோம் என்று தெரியாமல் அழுது கொண்டிருந்தவர்களின் தோளை மெல்லத் தொட்டார் அமுதனின் மாமா
அவரின் ஸ்பரிசம் பட்டதும் திரும்பி பார்த்தவளை, “நீ எதுக்கு மா இப்படி அழுகுற அவன் ஏதோ தெரியாமல் சொல்லிட்டு இருப்பான்” என்றார்.
“அவர் ஒன்னும் தெரியாம சொல்லலையே, உண்மைதான சொன்னாரு அவருக்கு நீங்க யார வேணா இருந்துட்டு போங்க அவர் சொன்ன மாதிரி நான் ஒரு எல்லையிலேயே இருக்கிறேன் எனக்கு என்னன்னா ஒரு உதவியும் கேட்டு தவிச்சிட்டு இருக்கும்போது எனக்கு தெரிஞ்சவன்னு சொல்றதுல என்ன ஆகிட போகுது அதுதானே நான் கேட்டேன்
இப்படி எல்லாம் இருக்கறதுனால தான் அவங்க பையனே அவங்களை கத்தியால குத்துற அளவுக்கு இருக்குது ” என்று அவர் சொல்லி வாயை மூடவும், அந்த பெரியவர் அங்கிருக்கும் ஜாடியை கிழே தட்டி விட்டார்.
அதைப் பார்த்தவளுக்கு பயம் வந்து தொற்றிக் கொண்டது.
“ஐயா ஏன் இப்படி பண்ணுறீங்க நான் நடந்த உண்மை தானே சொன்னேன்” என்றாள்.
“என்ன நடந்தது என்று தெரியாமல் யாரை பற்றியும் எதை பற்றியும் சொல்லக்கூடாது சரியா? ” என்றார்.
“அதை யாராவது சொன்னா தானே இல்லை நான் தெரிஞ்சுக்கிட்டதால சொல்லாம இருக்க முடியும் ” என்றாள்.
அதைக் கேட்டவர் ஒரு பெருமூச்சு விடுத்து, “இப்போ உனக்கு என்ன தெரியணும்” என்றார்.
“அவரு யாரு உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம், அவங்களோட மனைவி எங்க அவரோட பசங்க ஏன் அவங்கள குத்தினாங்க இதெல்லாம் எனக்கு தெரியனும்” என்றாள்.
அதற்கு பதில் அவர் சொல்ல , அதைக் கேட்டு அப்படியே சிலை என ஆனாள்.
அதேநேரம் அமுதனின் இரு மகன்களும் வேகமாக தங்களின் வீட்டிற்குள் வந்து வண்டியை அதன் இடத்தில் விட்டுவிட்டு வெளியில் இருந்து அங்கிருக்கும் பாத்திரங்களை எல்லாம் உடைத்துக் கொண்டே உள்ளே வர பொன்னம்மாள் பயந்துவிட்டு, ” என்னப்பா ஆச்சு ஏன் இப்படி வரீங்க” என்று உரிமையுடன் கேட்டார்.
அவர் அப்படி கேட்டதும் அமுதனின் இளைய மகன் “உனக்கு அதெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றான்.
இளைய மகன் எப்போதும் இப்படித்தான் கோபமாகவே இருப்பான் என்பதால் பெரிய மகனின் கையைப் பிடித்து, ” ஏன் தம்பி இவ்வளவு கோவமா வரீங்க உங்க அப்பா வேற நேத்து காஞ்சிபுரத்துக்கு போனவர் இன்னமும் திரும்பி வரவில்லை” என்றார்.
“அவரு வரமாட்டாரு இனி அவரை நாங்கள் வரவும் விட மாட்டோம். எவ்வளவு தைரியம் இருந்தா ஒரு லேடியை இங்க கூட்டிட்டு வந்து இருக்கணும் நீயும் அதுக்கு உடந்தையா இருந்திருக்க இல்லை” என்றான்.
“அதுல என்னப்பா தப்பு இருக்கு என்றால் அவரும் பதிலுக்கு என்ன அதுல என்ன தப்பு இருக்குன்னு கேக்குறியா? அப்போ இதெல்லாம் உன் ஏற்பாடு தானா” என்றான் இளைய மகன்
“அப்புறம் தம்பிக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா” என்றார்.
“அவர் வாழ்க்கையில் என்ன குறை எங்க அம்மா இருந்த வரைக்கும் அவங்கள கண்டுக்க கூட இல்லை ஏன்? எங்களுக்கு கூட ஆசையா கொஞ்சி நாங்க பார்த்ததில்லை” என்றான்.
அதற்கு பொன்னம்மா ஒரு நக்கல் சிரிப்பை சிரித்து விட்டு “இதுதான் நீங்க உங்க அப்பன பத்தி தெரிஞ்சுக்கிட்டது” என்றார்.
“நாங்க அனுபவச்ச வழி அந்த மாதிரி எங்க அம்மாவோட பாசம் கிடைச்சதே தவிர எங்க அப்பாவோட அரவணைப்பு எங்களுக்கு கிடைக்கல” என்றான். பெரிய மகன்
“அந்த ஆளு பேசும்போது நடந்துக்கும்போது எங்க அப்பாவாக எனக்கு தோணுது கிடையாது யாரோ ஒருத்தர் மாதிரி தான் எங்களுக்கு தோன்றியிருக்கிற அந்த ஆள் எங்ககிட்ட அந்த மாதிரி தான் நடந்து இருக்கான் ” என்றான் இளைய மகன்
பொன்னம்மா அதற்கும் அமைதியாகவே இருக்க…
“என்ன பொன்னம்மா இவ்ளோ நேரம் வரிஞ்சு கட்டிக்கிட்டு அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ண இப்ப மட்டும் எங்களோட வலியை சொல்லும் போது உனக்கு கஷ்டமா இருக்கு இல்லை ” என்று கேட்டார்கள் .
“நீங்க சொன்ன மாதிரி உங்க அப்பாவோட அரவணைப்பு எப்பவுமே உங்களுக்கு கிடைக்காது அமுதன் தம்பி எப்பவும் உங்களுக்கு அப்பாவாக முடியாது ” என்றார்.
“நீ சொல்றத பார்த்தா அமுதன் என் அப்பனே இல்லைன்னு சொல்லுவா போல ” என்றான் இளைய மகன்…
அதற்குப் பொன்னம்மாள் கண்களை ஒரு நிமிடம் மூடித் திறந்து, ” ஆமா அமுதன் தம்பி உங்க அப்பனே இல்லை ” என்றுக் கூறவும், அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், அப்படியே சிலை என நின்று விட்டனர்.
