தூரிகை 32❤️

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஊரிலிருந்து அழைப்பு வரவும் இருவரும் அடித்துப் பிடித்து தன் மாமன் வீட்டுக்கு வந்து பார்க்க அங்கு எல்லோரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்துக் கொண்டிருந்தனர். 

அந்த சூழ்நிலை ஏதோ ஒரு பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசித்து, தன் மாமனிடம் பேசினால் எல்லாம் சரியாக வரும் என்று அவரை தேட அவரோ அவர் அறையில் தலையின் மேல் கை வைத்து அமர்ந்திருந்தார்.

உள்ளே சென்று பார்க்க ஒருபுறம் அமுதனும் மறுபுறம் நீலகண்டனும் அமர்ந்து அவர் கைகளை எடுக்க அவர் முகம் அழுது அழுது சோர்ந்து போயிருந்தது. அதைப் பார்த்து அமுதனுக்கு தன் மாமா அவ்வளவு சீக்கிரம் அழும் ரகம் இல்லை அவரே இப்படி அழுதிருக்கிறார் என்றால் என்னவோ நடந்திருக்கிறது என்று அவர் கைகளை ஆதுரமாக பிடித்து “மாமா என்ன ஆச்சு ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கீங்க வெளியே நீலாவும் தலைவிரி கோலமா  இருக்கா அம்மாவும் தலை மேல கை வச்சுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்க என்ன நடந்துச்சு மாமா” என்று கேட்டான்.

“இன்னும் என்ன நடக்கணும் எல்லாமே முடிஞ்சி போச்சு அந்த மகராசி போய் சேர்ந்ததுக்கு அப்புறம் எனக்கு என் பொண்ணு மட்டும் போதும்னு வாழ்ந்தேன் அவளும் என்னை ஏமாத்திட்டா அமுதா” என்று தன் முகத்தை அமுதனின் கைகளில் புதைத்துக் கொண்டு அழுதார்.

அவர் அழுது தீர்க்கட்டும் என்று நீலகண்டன் அவர் முதுகையை நீவி விட  அதில் தெளிந்து அமைதியாக அமர்ந்தாரே தவிர எதுவும் பேசவில்லை… இருவருக்கும் அந்த சூழ்நிலை எப்படி கையாள்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேளை அவர் மெதுவாக தன்னை ஆசுவாசம் செய்துக் கொண்டு அமர “மாமா என்ன நடந்ததுன்னு சொன்னா தானே ஏதாவது செய்ய முடியும்” என்றான் அமுதன்!

“அதை எப்படி சொல்றதுன்னு தெரியல அமுதா” என்று பரிதாபமாக சொன்னார்.

“எப்படியாவது சொல்லித்தானே ஆகணும் சித்தப்பா சொன்னாதானே எங்களுக்கும் தெரியும்” என்று நீலகண்டன் சற்று கோபமாக சொல்லவும்,,

” நீலா மூணு மாசம் முழுகாம இருக்கா” என்றார்.

அதைக் கேட்ட இருவருக்கும் தலையில் ஏதோ இடியை இறக்கியது போல் ஆக இருவரும் ஒரு சேர “என்ன சொல்லுறீங்க” என்றுக் கேட்டனர்.

“நடந்தை தான் பா சொல்றேன்” என்று சோகமாக சொன்னார்.

இது நீலனுக்கும் அமுதனுக்குமே அதிர்ச்சியானாலும் எல்லோரும் சோகமாக இருக்கும் வேளையில் தாங்களும் சோகமாக இருந்தால் அவர்களை எப்படி தேற்றுவது என்று எண்ணிக்கொண்டவர்கள் நொடிப் பொழுதில் தங்களை தேற்றிக் கொண்டு, ” மாமா நடந்தது நடந்திருச்சு யாருன்னு பார்த்து நாமளே கல்யாணம் பண்ணி வச்சிடலாம், “என்றான் அமுதன் 

“அப்படியும் கேட்டு பாத்துட்டேன் யாருன்னு சொல்ல மாட்டேங்குறா “என்றார்.

“இருங்க சித்தப்பா நான் போய் கேட்டு பார்க்கிறேன்” என்று அமுதனையும் தன்னுடன் அழைத்து சென்று நீலாவை தனியா அழைத்து கேட்டனர்.

அவள் அமைதியாக திருதிருவென முழிக்க நீலன் கையை ஓங்கிக் கொண்டு, “நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம் இதுக்கு காரணம் யாரு ” என்று கேட்டான்.

அவள் கண்களை மேலும் கீழும் பார்த்து, ” நானும் உங்க பிரண்டு முத்துக்குமரனும் லவ் பண்றோம் அவரு தான் இதற்கு காரணம் அவர் எனக்காக வெயிட் பண்ணு கண்டிப்பா வந்து  கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு அப்பா கிட்ட சொல்ல முடியல ” என்று  சொன்னாள்.

அவளுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை ஆனால் இதை கேட்டு இருவருக்கும் ஏதோ துரோகத்தை தாங்கிய உணர்வு அமுதனுக்கு தான் குற்ற உணர்வாகி போனது ஏனென்றால் முத்துக்குமரன் ஊருக்கு வருகிறேன் என்று சொன்னபோது கூட நீலன் தடுக்கத்தான் செய்தான் அப்போதே தன் நண்பனின் பேச்சைக் கேட்டு இருக்க வேண்டுமோ, என்று யோசித்தவனுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தவனை நீலன் மேலும் “நான் அப்பவே சொன்னேன்டா அவன் வேணான்னு சொல்லி நீ தான் கூட்டிட்டு வரலாம்னு சொன்ன கூட்டிட்டு வந்ததுக்கு என்ன காரியம் பண்ணிட்டு இருக்கான் பாரு, அவன் நம்பருக்கு போன் பண்ணுடா” என்றான்.

அமுதன் அவன் எண்ணுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனான்.

நீலாவோ எந்த குற்ற உணர்வும் இல்லாமல், ” என்கிட்ட இன்னொரு நம்பர் இருக்கு அதை வேணா தரேன்” என்றாள்.

“சரி தா” என்று அதை வாங்கி அழைக்க, அந்தப் புறமிருந்து இப்போது ஃபோன் எடுக்கப்பட்டு அதில் காதில் வைத்த ஒரு பெண், “சொல்லுங்க ” என்றாள்.

அமுதன் மெதுவாக தன் எச்சிலை கூட்டி முழிங்கி விட்டு, “இது முத்து முத்து,” என்று அவன் தடுமாறினான்.

அவனிடமிருந்து நீலகண்டன் வேகமாக போனை வாங்கி, “இது முத்து ஓட போன் தானுங்க,” என்று கேட்டான்.

அந்தப் பெண்மணி சட்டென்று, ” இது முத்துவோட போன் இல்லங்க எனக்கு நிறைய வேலை இருக்கு நீங்க போன வைங்க” என்று வைத்து விட்டாள்.

” நீ இதுக்கு முன்னாடி இந்த நம்பருக்கு கூப்பிட்டு இருக்கியா” என்று நீலாவிடம் கேட்டான்.

அவள் இல்லை என தலையசைக்க

அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே அமர்ந்து விட, நீலன் அமுதனிடம் வந்து அவன் தோளை தொட நிமிர்ந்து தன் நண்பனின் முகத்தைப் பார்க்கவே அச்சப்பட்டு கொண்டு அந்த இடத்திலிருந்து வேகவேகமாக வெளியில் சென்றவனை பின் தொடர்ந்து நீலகண்டனும் வர, அங்கிருக்கும் கிணத்தடிக்குச் செல்லும் முன் “அமுதா ” என  நீலன் கத்தவும் தன் கால்களை அங்கேயே ஸ்டாம்ப் ஒட்டியது போல் நிறுத்திக் கொண்டானே தவிர திரும்ப வில்லை.…

நீலனே அவன் அருகில் வந்து “நீ எதுக்குடா இப்போ இவ்ளோ ஃபீல் பண்ற” என்று கேட்டான்.

“நான் தானடா அவன இங்க கூட்டிட்டு வந்த எனக்கு இந்த துரோகத்தை ஏத்துக்க முடியலடா ” என்று அவன் தோளில் சாய்ந்தான்.

“இங்க பாரு அமுதா அவனை லவ் பண்ணதுக்கு நீலாவே பீல் பண்ணல நீ எதுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்க நம்ம பிரண்டு தானே அவனை கூட்டிட்டு வந்து அவளை கல்யாணம் பண்ணிக்க சொன்னா முடிஞ்சு போச்சு இப்ப நமக்கு இருக்கிற ஒரே வேலை அவனை தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வருவது அவ்வளவு தானே” என்று தன் நண்பனை தேற்றினான்.

“அது அவ்வளவு ஈஸியான வேலைன்னு நினைக்கிறியா மச்சான்” என்றான். அமுதன் 

“கஷ்டமான வேலை தான் டா அவனோட நம்பர் இப்போ எங்க இருக்குன்னு கேட்போம் அவனோட பழைய ரூமுக்கு போவோம் அங்க இருக்குற பிரண்ட்ஸ் எல்லாரும் விசாரிப்போம் ஒரு பத்து நாள் டைம் எடுத்து எல்லாரையும் பார்த்துட்டு வந்துட்டு சித்தப்பா கிட்ட சொல்லலாம் அது வரைக்கும் சித்தப்பா கிட்ட டைம் கேட்கலாம்” என்று கூறிவிட்டு, இருவரும் உள்ளே வந்து மூவரையும் ஒரு வழியாக தேற்றி விட்டு வெளியே வரும் நேரம் நீலா ஓடி வந்து தன் அண்ணனிடம், ” எப்படியாவது அவரை கூட்டிட்டு வந்துருங்க அவர் இல்லாத வாழ்க்கை எனக்கு ஏதோ ஒன்றுல இருக்கிற மாதிரி இருக்குது” என்றாள்.

 

அமுதனுக்கோ ‘பத்து நாளில் ஒருத்தன் நம்பி லவ் பண்ணி கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இப்படி தப்பும் பண்ண முடியும்’ என்று யோசித்துக்  கொண்டிருந்தான் ஆனால் அதை நீலகண்டன் வாய்விட்டு கேட்டு விட்டான்.

“அவரு ஃபாரின் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு பெரிய பணக்காரர் அதனாலதான் லவ் பண்ணேன். அதுவும் இல்லாம அவரை நான் லவ் பண்ணலனா இதோ இந்த மூஞ்சிக்கு கட்டி வச்சிருவீங்களே” என்று நீலா அமுதனை பார்த்து கூறினாள்.

அமுதனுக்கு யாரோ தன்னை செருப்பால் அடிப்பது போல் இருந்தது ஆனால் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு இந்த புறம் வந்து விட்டான்.

ஆனால், நீலன் தன் தங்கையை அடிக்க கை ஓங்கி அதை கீழே இறக்கி விட்டு “அவனை மாதிரி ஒரு நல்லவனா நீ பார்க்க முடியாது” என்றான்.

“ஏதே இவன் நல்லவனா 5 பைசாக்கு கூட பிரயோஜனம் இல்லாதவன் சரியான பயந்தங்கோலி இவனைக் கட்டிகிட்டு இந்த ஊரிலே என்னை வாழ சொல்லுறீயா” என்றாள்.

“வைரத்தை  கரித்துண்டு நம்புறவ கிட்டயும் கறி துண்டை வைரமுன்னு நம்புறவர்கிட்டயும் ஒண்ணுமே பேச முடியாது என் தலையெழுத்து அப்பா அம்மா இல்லாத என்னை என் சித்தப்பா தூக்கி வளர்த்துட்டாரு நீயும் என் தங்கச்சியா போயிட்ட அதனால உன் வாழ்க்கை சரி பண்ண வேண்டி அவனை கூட்டிட்டு வந்து தொலைக்கிறேன் அது வரைக்கும் அது அவங்களை எதுவும் கஷ்டப்படுத்த அமைதியா இரு ”  என்று கூறி இருவரும் வந்தனர்.

சென்னை வந்து முத்துவின் பழைய வீட்டின் அருகே விசாரித்தப் போதுதான் தெரிந்தது அவன் படிக்கவே இல்லை என்பதும் அவனின் பெற்றோர்கள் அவன் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து விட்டதாகவும் தெரிந்தது. 

இதுவும் அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சையாகி போக தாங்கள் எவ்வளவு முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்றும் புத்தியில் அடித்தார் போல் தெரிந்தது ஆனால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கும் நிலைமையில் இல்லாததால் அவனைப் பற்றி விசாரித்து இப்போது அவன் எங்கு சென்று இருக்கிறான் “ஏதாவது தெரியுமா” அங்கிருந்த ஒருவரிடம்  கேட்டனர்.

“ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கேரளா போறதா இதோ அந்த பையன் கிட்ட வந்து சொல்லிட்டு போனான்” என்று அவன் ஒருவனின் வீட்டை கையை காட்டி விட்டு செல்ல… அங்கு சென்று பார்த்தால் அந்த வீடு பூட்டி இருந்தது அவன் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று தெரிந்ததால் அவனுக்காக இரவும் பகலும் அங்கேயே தவம் இருந்து காத்திருந்து அவனை பிடித்தனர். 

அவன் வந்ததும் வராதமாக அவனை தனக்கு தெரியாது என்று முதலில் பொய் கூறினாலும் பின்பு நீலகண்டன் விட்ட அடியில் அவன் உண்மையை சொன்னான்.

அவன் சொன்ன உண்மையில் இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் வெறும் கையோடு ஊருக்கு வந்து அங்கு நடந்ததை கூறவும் அதைக் கேட்ட அமுதனின் மாமா இதயத்தை பிடித்து அப்படியே சரிந்து விட்டார்.

அவரை தூக்கி கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கண் முழித்துக் கேட்டதில் நீலன் அந்த இடத்திலேயே மயங்கி விட்டான்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page