தூரிகை 35❤️

அமுதனுக்கு காயங்கள் மெல்ல ஆறியது. ஆனால், என்ன இங்கு வந்ததிலிருந்து பழையது யோசிச்சு மன காயங்கள் அதிகமாகின… 

இவளுக்கும் நீலன் சொன்னதிலிருந்து யோசித்துப் பார்த்தாள். அமுதனை தனக்கு பிடிக்குமா?  என்று கேட்டுக் கொண்டாள்.

ஆனால், அவளுக்கு தெரியவில்லை அவள் அவளாகவே இருந்தது அவனுடன் நேரத்தில் மட்டும்தான், நீலன் சொன்னானே ஒரு முறை வாழ்ந்து தான் பாருங்கள் என்று வாக்கியம் மட்டும் அவள் மனதில்  ஓடிக் கொண்டிருக்க…  ‘ஒரு முறை வாழ்ந்து பார்க்கலாமா? ‘என்று யோசித்தாள்.

அப்போது நீலன் அவன் உடலை துடைக்க தண்ணீர் துண்டுடன் உள்ளே செல்லும் நேரம் அவனை வழி மறித்து அதை இவள் செய்வதாக் கேட்டாள். 

அவன் வேண்டுமென்றே தர மறுக்க, “அண்ணா குடுங்க இனி அவரோட எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்,” என்றாள்.

அவன் அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் “சரிமா” என்று அதை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

இவள் உள்ளே சென்று அவனுக்கு துடைக்கும் போகும் நேரம் அவன் தடுத்து, ” ஏய் நீ எதுக்கு வந்திருக்க போய் நீலனை அனுப்பு அவன் எல்லாத்தையும் செய்வான் ” என்றான்.

அவள் அதற்கு அவன் வாய் மேலே கை “வைத்து இனி எல்லாத்தையும் செய்ய நான் இருக்கேன் “என்றாள்.

“நான் இருக்கேன் னா எனக்கு புரியல” என்றான்.

“நீங்க வண்டில வரும்போது என்ன சொன்னீங்க, எனக்காக உயிரோடு திரும்ப வரணும்னு சொன்னீங்களா இல்லையா எனக்கும் உங்களுக்காக வாழனும்னு ஆசையா இருக்கு” என்று பேசிக்கொண்டே அவன் சட்டை பட்டன்களை எல்லாம் கழட்ட அவனுக்கு கூச்சம் வந்து தொற்றிக் கொண்டது.

அவள் கை பிடித்து, கண்களாலேயே வேண்டாம் என்றான்.

அவள் அவன் கையை எடுத்து விட்டு அவனை துடைத்து விட்டு பின் பெரியவரிடம் சென்று அவன் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்க அவர் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சொன்னவுடன் அவள் தனக்கு பிடித்த உணவை சமைத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

அதில் திறந்து பார்க்க, அதில் அவனுக்கு பிடித்த தன் அன்னை அடிக்கடி சமைத்து தரும் சாதம், ரசம் வாலை கருவாடு தொக்கு அதுவும் சுட சுட இருக்க, “ஏய் இதை எதுக்கு டி செஞ்ச ” என்று கேட்டான்.

“இல்லைங்க இது எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் இதை இப்படி சூடா கொதிக்க கொதிக்க சாப்பிட்டு பாருங்களேன் ரொம்ப நல்லா இருக்கும், இருங்க நானே ஊட்டி விடுறேன்” என்று அவனுக்கு தன் கை சூட்டைப் பொறுத்துக் கொண்டு அவனுக்கு ஊட்டி விட்டாள்.

இரண்டு வாய் வாங்கிய உடனேயே அவனுக்கு தன் தாயின் ஞாபகம் வர கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது, அவன் கண்களில் கண்ணீர் துளிகள் வந்ததும் தன் சேலை முந்தானையில் அதை துடைத்துவிட்டு “ஏங்க காரமா இருக்குங்களா பிடிக்கலையா?” என்று கேட்டாள்.

அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக உண்டான். ஆனால் அவன் கண்களில் கண்ணீர் மட்டும் குறைவே இல்லை அவளும் எந்த கேள்வியும் கேட்காமல் அவன் கண்களை துடைத்துக்கொண்டே ஊட்டிக் கொண்டிருந்தாள். 

அவன் உண்டு முடித்து விட்டான் ஆனால் அவன் கண்கள் கலங்குவது மட்டும் நிற்காமல் இருக்க மேலும் துடைத்துவிட்டு “ஏங்க அழுதுகிட்டு இருக்கீங்க ” என்று கேட்டதற்கு அவன் எதுவும் பேசாமல் அவள் கைகளை தன் கன்னங்களில் ஒற்றிக்கொண்டு “எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்திருச்சு, எங்க அம்மா எனக்கு இது பிடிக்கும்னு சொல்லி அடிக்கடி செய்வாங்க, அதுக்கப்புறம் எனக்கு இது பிடிக்கும்னு சொல்லி செஞ்சு தர யாரும் இல்ல அதனால தான் நான் சாப்பாடு சாப்பிடுவதையே நிறுத்திட்டேன் ” என்று தன் உணர்வுகளை சாதாரணமாக கூற அவன் கண்களை துடைத்து விட்டு அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்து, “இனி நான் செஞ்சி தரேங்க” என்றாள்.

அந்த வார்த்தை அவன் அன்னையே மீண்டும் வந்தது போல் இருக்க அவளின் மார்பு கூட்டினுள் தஞ்சம் புகுந்தான்.

அவளும் தாயை தேடிய ஒரு பெரிய குழந்தைக்கு தாயாகி போனாள்.

இருவரும் தன்னிலை மறந்து சுற்றம் மறந்து தங்களின் வயது மறந்து எவ்வளவு நேரம் அந்த நிலையிலேயே இருந்தார்களோ தெரியவில்லை, நீலன் வந்து குரல் கொடுக்கும் வரை அந்த நிலையிலேயே இருந்தனர். அவன் தங்களை அந்த கோலத்தில் பார்த்ததும் வெட்கம் தாங்காமல் குழலி வெளியே ஓடிவிட்டாள்.

அவன் அமுதனிடம் “மச்சான் கல்யாணம் பண்ணிக்கிறியா டா” என்று கேட்டான்.

“முதல்முறையா ஆசையாவும் இருக்கு பயமாவும் இருக்கு மச்சான்” என்றான்.

“என்ன பயம் டா ”

“இதுக்கு மேல கல்யாணம் என்கிறது இந்த சமூகம் ஏத்துக்கமா என்கிற பயம் என்னால் அவ கூட வாழ முடியுமா என்கிற பயம் ” என்றான்.

“ஒரு மனுஷனுக்கு துணையே இந்த வயசுக்கு மேல தான்டா இருக்கணும் ஆனா உனக்கு இப்பதான் வாழ்க்கையே ஆரம்பிக்குது அதனால எதை பத்தியும் யோசிக்காம கல்யாணம் பண்ணிக்கோடா, அதுவும் குழலி ரொம்ப நல்ல பொண்ணுடா” என்றான்.

“நீ சொன்னா சரியா தான்டா இருக்கும் என்று அவனை அணைத்துக் கொள்ள பழைய அமுதன் அவனுக்கு திருப்பி கிடைத்து விட்டான் ” என்று ஆனந்தம் அவனுக்கு வந்தது.

அதன் பிறகு அவளுடன் வாழும் ஆசையுடனே தன்னைத்தானே தேற்றிக்கொண்டு உடம்பு சரியாக அதிகமாக ஒத்துழைத்தான்.

இங்கு கர்ணாவிற்கு ஒரு கால் அறுவை சிகிச்சை செய்து, ஒரே காலுடன் வீட்டிற்கு வந்தான்.

 மருத்துவமனையில் சேகரும் சேகரின் நண்பரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர். அப்போது கர்ணா அவர்களிடம் “அந்த அமுதன பத்தி ஏதாவது தெரிந்ததா” என்று கேட்டான்.

இருவரும் ஒரு சேர “இனிமே அத பத்தி யோசிக்கிற நிலைமை இல்லை, சார் உங்களை இனிமே டிபார்ட்மெண்ட்க்கு சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லி இருக்காங்க,” உங்களோட ஆர்டர் என்று அவன் கொடுத்துவிட்டு இறுதியாக ஒரு வணக்கத்தை வைத்து விட்டு சென்று விட்டான்.

கர்ணாவிற்கு இப்போது தான் புத்தியில் உரைத்தது. அவனிடம் ஒழுங்காக பணம் வாங்கிக்கொண்டு அழகாக இருந்திருக்கலாமோ என்று கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் வந்து என்ன பலன் அதனால் அமைதியாக அவனும் வீட்டிற்கு சென்று தன் வாழ்க்கையை தொடங்கி விட்டான்.

இங்கு 15 நாட்கள் கழித்து அமுதனின் உடல் நலம் நன்றாக தேறி வந்தது. 

அவர்களுக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் என நிச்சயிக்கப்பட்டது. அமுதன் சென்னைக்கு சென்று வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டதற்கு கூட ஒன்னும் தேவையில்லை.. அங்க போனா மனசு மாறிடுவ எல்லாத்தையும் இங்கயே முடிச்சுட்டு மூணு மாசம் இருந்துட்டு போங்க என்றார். அவனின் மாமா!!

“மாமா அது வரைக்கும் என் பிசினஸ்” என்றான்.

“அது எல்லாம் நல்லாத்தான் நடக்கும் நீ இனி உன் வாழ்க்கை பாக்குற வழியை பாரு ” என்றார்.

அவர் சொல்லுக்கு அவன் எப்போது மறுப்பு தெரிவித்திருக்கிறான் அதனால் அவனும் சரி என்று சொல்லிவிட்டான்.

எதிர்பார்க்கும் வயதில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டவர்கள் இன்று, காலம் கடந்த பின்பு திருமணத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கோவிலிலேயே எளிமையாக திருமணம் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட, அவன் பட்டு வேட்டி சட்டையில் அவனுக்கே உரிய கம்பீரத்தில் அழகாக இருந்தான்.

இவளும் இளஞ்சிவப்பு நிற பட்டுப்புடவை பாந்தமாக உடுத்தி மிதமான ஒப்பனையில் தன்னை கண்ணாடியில் பார்க்க தன்னையே தனக்கு பிடித்து புதிதாக ஒரு வெட்கம் வந்து ஒட்டிக் கொள்ள நீலனின் மனைவி, ” அழகா இருக்க வா போகலாம்” என்றாள்.

“எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு அக்கா, இந்த வயசுல கல்யாணம் பண்றது” என்றாள்.

அவள் அவளை திருப்பி “எத்தனையோ பேருக்கு முதல் திருமணமே இப்பதான் நடக்குது அப்படி நினைச்சுக்கோங்க அவ்வளவு தானே! ” என்று சிரித்த முகமாக திருமணத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அவளும் தலை குனிந்து கொண்டே வர அமுதன் அவளை பார்க்க புதுவிதமான உணர்வு தோன்றியது. இத்தனை வயதாகியும் அவனுக்கு அதற்கு பெயர் தெரியவில்லை,, விவரம் தெரிந்த நாளிலிருந்து படிப்பு படிப்பு என்று படிப்புக்காக ஓடியவன் அதன் பின்பு பணம் பணம் என்று பணத்திற்காக ஓடியவனுக்கு இன்று தன்னில் ஏற்படும் மாற்றங்கள் கூட  புரியாமல் அமைதியாக இருந்தான்.

அவள் வந்து அவன் அருகினில் நிற்க குனிந்து அவள் காதோரத்தில், “ஏய் என்னடி இன்னைக்கு இவ்ளோ நீட்டா டிரஸ் பண்ணியிருக்க இந்த கலர் உனக்கு பொருத்தமா இருக்கு” என்றான்.

“அப்போ நான் அழகு இல்லை, இந்த புடவை தான் எனக்கு அழகுன்னு சொல்லுறீங்களா” என்றாள்.

அவன் அதற்கு “எனக்கு அதெல்லாம் தெரியாது பட் யு லுக் குட் ” என்றான்.

“உங்களை ” என்றாள் அவள்…

“என்னை என்ன” என்று தன் புருவங்களை உயர்த்தி கேட்டதில் தன்னையே மறந்து பார்த்தாள்.

“நானாவது உன் டிரஸ் நல்லாயிருக்குன்னு கம்ப்ளீமெண்ட் குடுத்தேன் நீ அது கூட இல்லை” என்றான்.

அதற்கு அவள் தன்னுடைய கண் சிமிட்டலை அடித்து விட்டு “நீ எது போட்டாலும் அழகுதான்யா” என்றாள்.

“என்னடி ரெஸ்பெக்ட் இல்லாம பேசுற” என்றான்.

“அப்படித்தான் பேசுவேன் போயா” என்று தன் உதடு மடித்து சிரித்தாள்.

இருவரும் அவர்கள் அவர்களாகவே இருப்பது தன்னைச் சேர்ந்தவர்களிடம் மட்டும்தான் அதன் பிறகு ஐயர் மந்திரத்தை ஓதி மங்கள நானை கொடுக்க அவனோ அதை தன் மாமன்தான்கொடுக்க வேண்டும் என்று கூறி அவரிடமிருந்து வாங்கி அவர்களுக்கு மங்கள நானை கட்டி விட்டான். 

அவர்கள் அழைத்திருந்த சில பேர் மட்டும் வந்து அவர்களை மனதார வாழ்த்துக்கள் சென்றனர்.

அதன் பிறகு எல்லா சடங்குகளும் முடிந்து இரவு சாந்தி முகூர்த்தத்திற்கு தயார் செய்து கொண்டிருக்க அமுதனுக்கு கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்து விட்டது.

நீலன் தான் அவனை ஒரு வழியாக சமாதானப்படுத்தி, 

சாந்தி முகுர்த்த அறைக்கு அனுப்பி வைத்தான்.

அவளுக்கும் இதேபோல் ஒருமுறை ஒரு மிருகத்திடம் மாட்டிக் கொண்டு அவஸ்தை பட்டது நினைவுக்கு வர, அவளுக்கும் ஒரு மாதிரி படபடப்பாகத்தான் இருந்தது. இருந்தபோதிலும் மெல்ல அந்த அறைக்கு சென்றாள்.

இம்முறை அவன் அவளுக்காக காத்திருந்தான் ஒரு வித தயக்கத்துடன், அவள் வந்தவுடன் பேச்சு வார்த்தைகள் எல்லாம் முடிந்து பின், அமுதன் கேட்ட வார்த்தையில் அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page