உங்க அம்மா என்னை உனக்கு துணையாக இருக்க சொல்லிட்டு போனாங்க.. நான் உன் அறையில் தான் படுத்தேன். தூக்கம் வரல அதனால இங்க வந்து படுத்துட்டேன்… அம்மா உனக்கு போன் பண்னறதா சொன்னாங்க பண்ணலையா இனியா..
“அப்படியா அத்தை நான் தூக்கத்தில் கவனித்திருக்க மாட்டேன். நான் பேசிக்கறேன் . காலேஜுக்கு நேரமாகுது நான் கிளம்பறேன் …”என்றவள் தனது அறைக்கு வந்தவள் போனை எடுத்து பார்க்க அதில் அவளின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி இவளுக்கு அழைத்திருந்தனர். இரவு தூங்குவதற்காக பெண்ணவள் தனது ஃபோனை அமைதியான முறையில் (silent mode )போட்டு படுத்திருந்தாள்.
பிறகு லட்சுமிக்கு அழைத்து யார் என்ன என்று விசாரித்துவிட்டு இதை தன் அம்மாவிடம் நேரில் வந்தவுடன் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்தவள் கல்லூரிக்கு கிளம்பினாள்.
இனியா கல்லூரிக்குள் நுழைய அங்கே எதிரே ஒருவன் அவளை கடந்து செல்ல மனதில் இனம்புரியாத உணர்வு தோன்ற அவனை பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் பெண்ணவள் திரும்பிப்பார்க்க அவனோ அதற்குள் கூட்டத்தோடு கூட்டமாக கலந்திருந்தான்.
இனியா திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தவள் அங்கே ஸ்ருதி இருப்பதை கவனிக்காமல் அவளை இடித்து விட ,” என்னடி யாரை அப்படி வேடிக்கை பார்த்துட்டு வர நீ…”
“ஆங் …அதெல்லாம் ஒன்னும் இல்லடி சரி வா.. அபிஷேக் வந்துட்டானா…?”
“வந்துட்டான் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா …”
“ஸ்ருதி இப்போ நான் எதையும் கேட்கிற மனநிலையில் இல்லை புரிஞ்சுக்கோ…”
“ஆஹான்… என்னடி ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க , நான் சொல்றத கூட கேட்க மாட்டேங்கிற… ஏன் இவ்வளவு லேட்டா வந்திருக்க..”
“அம்மா ஊருக்கு போய்ட்டாங்களா அதான் கிளம்பி வர நேரமாகிடுச்சு .. வேற எதுவும் இல்லை டி. சரி சொல்லு அப்படி என்ன முக்கியமான விஷயம்..?”
“ஆமா போ நான் சொல்ல மாட்டேன். அந்த எருமை அபி சொல்வான்…”
“சரி டி வா போகலாம்..”
“இனியா நம்ம கிளாஸ்க்கு புதுசா ஒரு பையன் வந்து ஜோயின்ட் பண்ணியிருக்கான்…வா அறிமுகப்படுத்தி வைக்கிறேன்…”
இவர்கள் அங்கே செல்ல புதியவன் அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தான்.
“வினித் இவள்தான் இனியா..” என்று அறிமுகப்படுத்தி வைக்க அவனும் கைகொடுக்க இவளும் இயல்பாய் கைகொடுக்க அப்பொழுது அவனின் கைகளின் ஸ்பரிசத்தில் வித்தியாசமான உணர்வு தோன்ற தீச்சுட்டாற் போல் கையை உருவியவள் அவனின் முகத்தை பார்த்தவள் கோபம் வரபெற்றவளாக அங்கிருந்து நகர்ந்தாள்.
அதைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக நிற்க! வினித் முகம் சுருங்கிப் போக அபிஷேக் அவனிடம் சாரி கெட்டவன் இனியாவை தொடர்ந்து சென்றான்.
“ஏய் ரௌடி பேபி என்ன இப்படி பண்றே.. அவன் கைதானே கொடுத்தான் .. எதுக்கு இப்படி பிஹேவ் பண்றே…”
அபி நீ சொன்னா நம்ப மாட்டடா … எனக்கு அவன் கை கொடுத்ததும் இரவில் கனவில் வரும் அவனுடைய ஞாபகம் தான் வந்துச்சு.. எனக்கு பயமா இருக்குடா, என்னால நார்மலா இருக்க முடியல …நேத்து ஃநைட் என்ன நடந்தது தெரியுமா ..?”என்று அனைத்தையும் கூறி முடித்தாள் .
“நீ சொல்றத எப்படி எடுத்துக்கறது எனக்குத் தெரியல டி . வினித்தைப் பார்த்தா உனக்கு ஏன் அப்படி தோணுது…சரி எதையும் போட்டு குழப்பிக்காதே… நான் இதைப்பற்றி கார்த்திக்கிட்ட பேசறேன் .. அவனுக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க ..அவங்க இதுக்கு சொல்யூஷன்ஸ் சொல்வாங்க சரியா…?”
“அவர்கிட்டேயே வேணாம் வேணாம் டா… இதுவரை நேரில் பார்க்காத என்ன ஏனோ அவருக்கு பிடிக்கல..அதனால் தேவையில்லாத நீ அவருகிட்ட இது பற்றி பேச வேண்டாம்…”
“இல்ல டி இப்போ கூட அவன் உன்னை தேடி தான் வந்தான் .உனக்கு தெரியுமா அவன் உன்னை நேரில் சந்திந்து மன்னிப்பு கேட்கணும் னு ஆசைப்பட்டான்…”
“எதே… இது என்னடா அதிசயமா இல்ல இருக்கு ,வேணாம் அபி சொல்றதைக் கேளு எனக்கு அவரை சந்திக்க விருப்பம் கிடையாது…”
“சரி டி கொஞ்சம் நீ டைம் எடுத்துக்கோ… வீட்டுக்கு போறியா கூட்டிட்டு போய் விட்டுட்டு வரவா…”
“சரி வா கேன்டீன் போகலாம் என்று அழைத்து சென்றவன் அவளுக்கு சூடாக காபி வாங்கிக் கொடுத்து அவளை இயல்பாக்க முயற்சி செய்தான்.
அவனது வானரப் படைகளும் அங்கே வர நடந்த அனைத்தையும் அவர்களிடம் கூற இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்தனர் நண்பர்கள்.
“இனியா எனக்கு ஒரு ஐடியா தோணுது ..நீ ஒரு நாள் எங்க வீட்டில் தூங்காம எங்க யார் வீட்டுக்காவது வந்து தூங்கி பாரேன்… “என்றான் அன்பு.
“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல டா .அம்மா யார் வீட்டுக்கும் நம்பிவிட மாட்டாங்க…”
“ஏன் இனியா நாம இத்தனை வருஷம் பழகி இருக்கோம் .இன்னும் அம்மாவுக்கு எங்க யார் மீதும் நம்பிக்கை இல்லையா..?” என்று பாலாஜி கேட்க..
“டேய் உங்க இரண்டு பேருக்கும் எதுவுமே புரியாதா …?நான் பெண் பிள்ளைங்க கூட பிறக்காட்டியும் அம்மா அடிக்கடி சொல்வாங்க … எந்த பெத்தவங்களும் பெண் பிள்ளைகளை நம்பி மத்தவங்க வீட்டிற்கு விடமாட்டாங்க ..அதிலும் ஒரு இரவு தங்க ஒத்துக்கவே மாட்டாங்கன்னு சொல்லியிருக்காங்க..” என்றான்
அபிஷேக்.
நீ சொல்றது அப்சலூயிட்லி ரைட் ( Absolutely )அபி என் வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு தான்.. எனக்கும் ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு போகனும் அவங்க கூட தங்கனும் ஆசையா இருக்கும் .ஆனா அம்மா, அப்பா அதற்கு சம்மதம் சொல்லவே மாட்டாங்க ..” என்றாள் ஸ்ருதி.
இப்படியே அனைவரும் பேசிக்கொண்டிருக்க ஆனால் கண்டிப்பாக இனியாவுக்கு இடமாற்றம் அவசியம் இதைப் பற்றி அவளின் பெற்றோரிடம் பேச வேண்டும் என்றும் முடிவு செய்தனர் நண்பர்கள்.
மாலை கல்லூரி முடிந்து அனைவரும் வீட்டுக்கு திரும்ப இனியா எப்பொழுதும் விரைவாக வீட்டுக்கு செல்பவள் இன்று மனநிலை சரியில்லாத நிலையில் கடற்கரை சென்று அங்கேயே கொஞ்ச நேரம் நேரம் செலவழித்தாள்.
இரவு நேரம் வீட்டிற்கு திரும்பியவள் ஏதோ சிந்தனையில் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க அங்கே எதிரே ஒரு உருவம் நின்று கொண்டிருக்க அதைப் பார்த்து தடுமாறியவள் பயத்தில் கண்ணை மூடினாள்.
“இனியா கண்ணைத் திற..” என்று எப்போதும் போல் அந்த உருவம் இவளை மிரட்டியது..
” நீ போ எனக்கு உன்னை பார்த்தாலே பயமா இருக்கு ,மாயோன் என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அங்கே அவளை கடந்து சென்ற ஒருவன் , என்ன இந்த பொண்ணு யாரும் இல்லாத சாலையில் இப்படி தனியே கத்திக்கிட்டிருக்கா…’என்று நினைத்தவன் அவளை கடந்து சென்றான்.
அவளோ மாயோன் என்னை காப்பாத்துங்க என்று கத்தியதில் இவனுக்கு தெளிவாக கேட்க திரும்ப அங்கே வந்தவன் கண்ட காட்சி கண்ணை மூடிக்கொண்டே வண்டி ஓட்டுவதை தான். இவளுக்கு என்ன பைத்தியமா என்று நினைத்தவன் அவளை இன்னும் வேகமாக நெருங்க வண்டியிலிருந்து இறங்கியவன் தடுமாறி கீழே விழப் போனவளை வேகமாக ஓடிவந்து அவளை வண்டியிலிருந்து பூப்போல தூக்கியவன் அவளை நிற்க வைத்தான்.
ஆனால் இனியா எதிரே இருப்பவனை அணைத்துக்கொண்டு மாயோன் மாயோன் என்று அரற்றிக் கொண்டிருந்தாள்.
“ஹலோ என்ன பண்றீங்க நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க..” என்று அவளை தள்ளி நிற்க வைக்க முயற்சி செய்தான்.
இனியா எதையும் காதில் வாங்காத வளாக “மாயோன் பாருங்க மறுபடியும் அவன் வந்துட்டான்..”
என்று அழுது கொண்டிருந்தாள்.
ஒன்றும் புரியாதவனாய் நின்றவனுக்கு அந்த குரலை எங்கோ கேட்டது போல் இருக்க மீண்டும் மீண்டும் அந்தக் குரல் அவனின் மனதில் ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டிருந்தது .
அதில் இனிமையான உணர்வை அனுபவித்தவன் இப்போது அவளை வேறு யாரோ ஒருத்தியாக நினைக்கத் தோன்றாது அவளை நிமிர்த்தினான்.
“இனியா அவனைப் பார்த்தவள் என்னைவிட்டு போகாதீங்க எத்தனை முறை சொல்லி இருக்கேன்…” என்று மீண்டும் அவனுள் புதைந்தாள்..
இப்போது அவளின் எதிரே இருப்பவன் முற்றிலுமாக குழம்பி நின்றான்.
தாரகையின் மாயோன் தொடர்ந்து வரும் கனவினால் தூக்கத்தை தொலைத்த நாயகி.அவளுக்கு உறுதுணையாக இருந்து அவளை அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர உதவும் அவளின் நண்பர்கள். நாயகன் அவளை உயிருக்கு உயிராக விரும்பினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக ஆரம்பத்தில் அவளை வெறுப்பது போல்…