அத்தியாயம் 1
சென்னை மாநகரின் பிரபலமான, கல்லூரி…. கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் எல்லாம், வரும் நாள்….
அது மட்டும் இல்லாமல் புது மாணவ, மாணவர்கள் வரவிருப்பதால்…. அந்தக் கல்லூரி வளாகமே பரபரப்பாக, இயங்கிக் கொண்டு இருக்க……
அப்போது தான் தன்னுடைய பி எம் டபள்யூ வில் வந்து இறங்கினார்…..
70 வயது மதிக்கத்தக்க இளைஞர், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷ்னின், தாளாளர்…..
திரு. சிவராமகிருஷ்ணன்……
70 வயதிலும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர்…..
அவர், வந்தவுடன்…. இங்கு இருப்பர்வர்களுக்கு, கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை….. அவர் எப்போதும்…. கோடை விடுமுறை முடிந்து, தொடக்க நாளில் எங்கோ ஒரு வளாகத்திற்கு வருவார்….. ஆனால் எப்போது எங்கு வருவார் என்று தான் தெரியாது…..
இப்போது இங்கு வந்து இறங்கவும், எல்லோருக்கும்…. முகத்தில் ஈ ஆடவில்லை…. பின்னே இருக்காதா, அவரின் பேரன்,….. இங்கே பார்த்துக் கொள்வதால், இங்கு வந்தே கிட்ட தட்ட 5 வருடங்கள் ஆகி விட்டது……
இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், அவன் தான் அவரின் பேரன் என்பது இந்த முதல்வரை தவிர யாருக்கும் தெரியாது….. ஆனால், இங்கு ஒரு மரத்தின் இலை அசைந்தால் கூட அவனுக்கு தெரிந்து விடும்…..
இவ்வளவு ஏன்…. கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷ்னில் எங்கு என்ன நடந்தாலும், அவன் அறியாமல் ஒன்றுமே இல்லை…..
இவர், இந்த எடுகேஷன் துறையை எடுத்து…. ஆரம்பித்து, இதோ 30 வருடங்கள் ஆகி விட்டது… 5 வருடத்திற்கு முன்பு சரிவைக் கண்டு…. இரண்டாம் இடத்தை பிடிக்க….. அதை 6 மாதத்தில் மீண்டும் முதல் இடத்திற்கு கொண்டு வந்தான்….. அன்றிலிருந்து இன்று வரை, அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறான்…..
சரி வாங்க…. அங்க என்ன நடக்குதுன்னு பாக்கலாம்…..
இவரின் வருகையைக் கண்ட, முதல்வர், ஓடி வந்து…. நிற்க,
எபிலன்…. ஏன் இப்படி ஓடி வரீங்க… பொறுமையா வாங்க,….
பரவாயில்லை சார்…. நீங்க வந்து இருக்கீங்கன்னு தெரிஞ்சும்….. வராம எப்படி சார் இருக்க முடியும்…..
சரி, சரி….. வாங்க என்று முதல்வர் அறைக்கு செல்ல…..
இந்த வயதிலும், கட்டி இளங் காளையாய்…. நடந்து வருவதைப் பார்த்து…. அங்கிருக்கும் இளம் பெண்களே, ஆவென்று வாயைப் பிளந்து தான் பார்த்தனர்…..
அவ்வளவு அழகாய் இருந்தார்….. நம் சிவராமகிருஷணன்…..
அறைக்கு வந்து அமர்ந்து விட்டு…..
தன் கம்பீரக் குரலை செருமி, இங்க என்ன நடக்குது எபிலன், தம்பி இங்க இருந்துமா இப்படி எல்லாம் நடக்குது……
இல்லை சார், ஒரே ஒரு பையன் தான் அப்படி பண்ணான், அது தான் தம்பியே, அந்த பையனுக்கு…. பதிலடி கொடுத்துடுச்சே…..
ஏது, அவன் பதிலடி கொடுத்திட்டான், எப்படி தெரியுமா?????
காலேஜ் விட்டு 3 மாசம் சஸ்பென்ஸ் பண்ணினோம் சார், அவ்ளோதான்…..
யோவ், இது தான் உனக்கு தெரியுமா???
அப்படித் தான் கொடுத்தோம் சார்….. தம்பி ரொம்ப சாந்தமா தான் சொல்லுச்சு…..
நீ படிச்ச படிப்புக்கு மரியாதை கொடுக்கணும்ன்னு பார்க்குறேன்….. அதை கெடுத்துக்காத, 5 வருஷமா அவன் கூட இருக்க….
சரி, விடுங்க, உங்களை நம்பித் தானே, அவனையும், இந்த காலேஜ் விட்டு இருக்கேன்……
சார், அது வந்து…..
அவன் கோவத்தை பத்தி தெரிஞ்சிம் பிடிச்ச பிள்ளையார் மாதிரி இருந்து இருக்கீங்க….. என்று தன் கோவத்தை, இழுத்துப் பிடித்துக் கொண்டு, மெதுவாக ஆனால், அழுத்தமாக கேட்டார்…..
முதல்வர்க்கோ, ஐயோ இந்த காலேஜ் ல நான் தான் பிரின்சிபால் ஆனா இங்க என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலயே….. ஆனா ஏதோ ஒன்னு பெருசா நடந்து இருக்கு…. இல்லைனா பெரியவர் இப்படி சொல்லாமக் கொள்ளாம வர மாட்டாரே…..
என்று, தன் மூளையை போட்டு குடைந்துக் கொண்டு இருக்க….
அங்கு வாசலிலோ….. பேராசிரியர்கள் எல்லாம், கையெழுத்து இட்டுவிட்டு, அவரவர் வகுப்பிற்கு செல்ல….. அதே போல், பழைய மாணவர்கள், புது மாணவர்களை…. ராகிங் செய்துக் கொண்டு இருக்க, அங்கே ஒரு வலிய கரம் வந்து அவன் பின் முதுகில் வேகமாக ஒரு அடி தந்துவிட்டு…..
அவன் என்னமோ அமைதியாக தான் சிரித்துக் கொண்டு, நின்றான்……
அடி வாங்கிவனோ, தலை தெறிக்க ஓடி விட்டான்…..
அவன் வந்து மீண்டும் தன்னுடைய, ஆடியை எடுத்துக் கொண்டு….. பார்க்கிங்கில் பார்க் செய்து விட்டு, அழுந்த நடையில் செல்ல….
மாணவர்கள் அனைவரும், களைய ஆரம்பித்தனர்….
அங்கிருக்கும் பேராசிரியர்களோ…. வணக்கம் வைக்க இன்முகமா தலை அசைத்துக் கொண்டே சென்றான்…..
அவன் நேராக சென்றது…. முதல்வர் அறைக்குத் தான்….
இங்கு நம்ம முதல்வரோ, மூளையை பலவாறு குடைந்துக் கொண்டே நிற்க…..
கதவு தட்டும் ஓசையில், தெளிந்து….. நிமிர்ந்து பார்க்க…. தன்னைக் காப்பாற்றவே…..
ஒரு ஆறு அடி கிரேக்க சிற்பம், கண்ணில் ஒரு தீயுடன்…. மெருக்கேற்றிய தன் உடலை எடுத்துக் காட்டும் வகையில், ஆலிவ் க்ரீன் சட்டையும், கரு நீல பேண்ட்டும் அணிந்துக் கொண்டு, இறுகிய முகத்துடன்…. வந்து நின்றான்…..
நம் நாயகன் இளந்திரையன்….
பெயருக்கு ஏற்றார் போல்…..
இளமையும் துள்ளலும் மிக்கவன், திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுவதைப் போல், தவறு எங்கு நடந்தாலும்…. துல்லியமாக கணக்கிட்டு, காலத்தை விட வேகமாக சென்று காரியத்தை முடிப்பவன்….
சிவா, வா ப்பா…. தீரா, எப்படி இருக்க….. (இவர் எப்போதும் இவனை இப்படித் தான் அழைப்பார்)…..
ம்ம்ம்ம்ம்…. பைன் தாத்தா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க, என்று அவர் காலில் விழ…
பெரியவரோ, தடுமாறி…. நல்லா இரு தீரா… என்று ஆசியை அள்ளி வழங்கி விட்டு, தான் எதற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டு…. அவன் அழகில் மெய் மறந்து நின்று விட்டார்…..
என்ன தாத்தா அப்படி பாக்குறீங்க….. என்று வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கேக்க…..
அவரோ பெரு மூச்சு ஒன்று விட்டு, ஒன்னும் இல்லை கண்ணா….. எல்லாரும் ஓரே ஊருல தான் இருக்கோம்….. ஆனா நீ என்னடானா உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கறதே மறந்துட்ட…..
தாத்தா, அதைப் பற்றி பேசாதீங்க…. என்று வந்த ஒரு மில்லி மீட்டர் சிரிப்பும் மறைந்து, கடுக்கடுவென மாறி விட்டது… அவன் முகம்,
இல்லப்பா, நாம எல்லாரும் ஒன்னா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்….. உன்னையப் பாக்காம உங்க அம்மா, அப்பா, பாட்டி, உன் செல்ல தங்கச்சி எல்லாரும் எவ்ளோ ஆசையா எதிர்ப் பார்கிறாங்க…..
நான் உங்ககிட்ட நிறைய முறை சொல்லி இருக்கேன்….. பாட்டியும், பாப்பாவும் வர சொல்லுங்க…. நானே பாத்துக்குறேன்னு,
அது எப்படி ப்பா, உங்க அப்பா அம்மா பாவம் இல்லையா,
தாத்தா, போதும்…. ப்ளீஸ், அவங்கள என் அப்பா அம்மானு சொல்லி, எனக்கு இருக்க கொஞ்ச நிம்மதியும், கெடுத்தடாதீங்க……
தீரா, என்னப்பா பேசுற, எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறியா…..
ஐ நோவ் தாத்தா, என்று ஓங்கி தன் பலம் கொண்டு அங்கிருக்கும் மேஜையைக் குத்த…. அதில் இருக்கும் பொருள்கள் எல்லாம் சிதறி கீழே விழுந்தது…..
நம் முதல்வர் தான் பதறி, தம்பி வேண்டாம் தம்பி….. விடுங்க…. என்றுக் கெஞ்சி கேட்டுக் கொள்ள, மடக்கிய கைகளை கீழே விட்டான்…..
பின் கீழே விழுந்த பொருள்களை எல்லாம், அவனே எடுக்க, முதல்வர் தடுத்து….. பீயுன் சுந்தரை அழைத்து எடுத்து வைக்க சொல்ல, அவரும் செய்து விட்டு…. சென்று விட்டார்….
அவர் செல்லவும், மாணவர்களின் தலைவன் கெளதம் வரவும் சரியாக இருந்தது……
எக்ஸ்கியுஸ் மீ சார் என்று கேக்க….
எல்லோரும், தன்னிலைக்கு வந்து விட்டு…. அவனை உள்ளே அழைக்க,
சார், என்று தீரனை அழைக்க,
சொல்லு….. கெளதம்,
அங்க எல்லாம் ரெடி சார்…. நீங்களும் சாரும் வரது மட்டும் தான் பாக்கி…..
சரி கெளதம், நாங்க வரோம் நீ போய் எல்லாத்தையும் பாரு…. அண்ட் ஒன் திங்க், யாரு வெல்கம் ஸ்பீச், அண்ட் வோட் ஆப் தேங்க்ஸ் குடுக்குறாங்களோ அவங்களை சார் பேர் அட் பண்ண சொல்லி க்கோ என்று தன் தாத்தாவின் கூறி விட்டு மரியாதை நிமித்தமாக வருகிறேன்…. என்று கூறி விட்டு அவனுடன் பேசிக் கொண்டே சென்று விட்டான்…..
இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல், முழித்துக் கொண்டு நின்றனர்…..
அதன் பிறகு, தீரன் முதல்வர்க்கு போன் செய்து ஆடிட்டோரியம் வரவழைக்க….
எல்லாரும், பேசி முடித்து…. சிவராமக்கிருஷ்ணுக்கு மரியாதை செலுத்தி, பொண்ணாடை எல்லாம் போர்த்தி, நல்ல முறையில் வழி அனுப்பி வைத்து விட்டான்….
அவரும், தான் எதற்கு வந்தோம் என்பதை மறந்து, சென்று விட்டு வரும் வழியில் தான் நினைவு வந்தது……
இப்போது, நினைவு வந்து என்ன பயன்….. வீட்டிற்கு சென்றால் என்னவாகுமோ, என்று யோசித்து இப்போதே அவருக்கு, தலை சுற்ற ஆரம்பிக்க, தன்னுடைய ஓட்டுநரிடம் சொல்லி, ஒரு ஓரமாக நிறுத்தி ஆசுவாசம் அடைந்து…. எல்லாவற்றையும் ஏற்றுத் தாங்கும் மனநிலை வந்தவுடன், கார் ஸ்டார்ட் செய்து சென்று விட்டார்…..
தன் குடும்பத்தின் மேல் உயிரே வைத்திருக்கும் இவருக்கு யாரு என்ன செய்ய காத்திருக்கிறார்களோ வீட்டிற்கு போனா தானே தெரியும்….
*******************************
டேய்…. யாரு டா அது…. என் பையனை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது, என்று தன் ஆட்களிடம் காட்டுக் கத்தலில் கத்திக் கொண்டிருந்தார்….
பிரபல தொழில் அதிபர், குணசேகரன்…… இவரின் பெயர் கேட்டால் தெரியாத ஆட்களே இல்லை….. இவரோ தன் மகனின் நிலைமைக்கு யாரு காரணம் என்று கத்திக் கொண்டிருப்பது தான் அந்தோ பரிதாபம்…..
அப்பா, நானே சொல்றேன் அது…. அது வந்து என்று அவன் நீட்டி முழுக்க…..
அடச்சீ, சொல்லித் தொலை என்று உரும,
அவனோ!! மெல்ல, அவர் காதில் சொல்ல….. அவனை விட்டார் ஒரு அடியை,
அதில் இருக்கும் வலி போதாது என்று, காதிலும் வலி வந்தது தான் மிச்சம் அவனுக்கு…… அவன் வலி தாங்கமல் கத்த…. அவனின் அன்னை ஓடி வந்து அவனை காப்பாற்றி அழைத்து சென்று மருந்து இட்டார்…..
ஏன் அண்ணா, தம்பியை அடிச்சீங்க பாவம் அவருக்கே கையில அடிப்பட்டு இருக்கு…. இதுல நீங்க வேற இப்படி அடிச்சா எப்படி சொல்லுங்க…..
டேய்….. நானே கொலை வெறில இருக்கேன்….. சும்மா போய்டுங்க….
அண்ணா ஆளு யாருன்னு சொல்லுங்க…. செஞ்சி விட்டுடுவோம்…..
அதை நீங்க செஞ்சித் தான் டா ஆகணும்…..
அவர், ஆளை சொல்ல…… சரிங்க அண்ணா சரியான நேரம் பார்த்து போட்டு விடுறோம்…..
சரி டா, என்று…. அவன் தோளை தட்டி விட்டு சென்று விட்டார்……
இங்கு, கிருஷ்ணன் வீட்டிலோ ஆர்த்தி தட்டுடன் காத்திருந்தாள் ஒரு பெண்மணி யாரு அவள் எதற்காக காத்திருக்கிறாள்.
