அத்தியாயம் 2
சிவராமன், ஒரு தெளிவுடன் காரை ஸ்டார்ட் செய்து…… சென்னையில் உயர் வகுப்பினர் மட்டும், வசிக்கும் குடியிருப்பு நோக்கி, தன் கார் பயணிக்க….. அவரின் இதயம் மட்டும் கனத்துடன் வந்தார்……
காலையில் அவர் தன் மனைவிக்கும், பேத்திக்கும் கொடுத்த வாக்கு அத்தகையது…..
அப்படி காலையில் என்ன நடந்துன்னு பார்த்துட்டு வந்துடலாம்,
ராமன், எப்போதும், காலை 5.30க்கு எல்லாம், நடைப் பயிற்சிக்கு செல்லும் வழக்கம் கொண்டவர். அதனால் தான் 70 வயதிலும், திடகாத்திரமாக இருக்க காரணம்…. அது மட்டுமில்லாமல், தன் மனைவி இந்திராணியும் ஒரு காரணம் என்பார் அவர்……
இந்திராணி…. பெயருக்கு எற்றார் போல் இந்திர லோகத்து ரம்பை தான் அவர்…. முகத்தில் அமைதி, பாசம், பரிவு எப்போதும் இருக்கும்…. பசி என்று வந்தவரை….. வயிறு குளிர வைப்பவர்……
தன்னுடைய நடைப்பயிற்சி முடித்து வரவும், இந்திர ராணி குளித்து முடித்து….. மஞ்சள் பூசிய முகத்துடன் வரவும் சரியாக இருந்தது…..
அதைக் கண்டு ஒரு நிமிடம், தன்னுடைய இளமை காலத்துக்கே சென்று விட, அதில் அவரையே மறந்து தன் மனைவியின் கன்னம் கிள்ள, இந்த வயதிலும், தன் முகச் சிவப்பை மறைக்க அரும் பாடு பட்டார்…… ராணி, அதையும் ரசிக்கத் தான் செய்தார்…. அந்த பெரிய மனிதர்…..
இருவரும் தங்களுடைய தனி உலகில் இருந்தது ஒரு வினாடித் தான்…..
அதற்குள், மாமா என்று தன் மருமகள் அழைக்க…. தன் மனைவியின் அழகில், இருந்து வெளியே வர கொஞ்சம் சிரமம் கொண்டார்…..
சொல்லு மா,
இந்தாங்க மாமா காபி… என்று தந்து விட்டு அவர் செல்ல…..
ராணி, காவேரி, டிபன் ரெடியா மா…..
ரெடியாத் தான் இருக்கு அத்தை…. என்று சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டார்….
செல்லும் தன் மருமகளை அவர் பார்க்க……
ஏங்க, அப்படி பாக்குறீங்க…..
இல்ல மா, எப்படி கலகலப்பா இருந்த பொண்ணு….. இப்போ இப்படி இருக்கா…..
எல்லாம் மகனை பிரிந்த ஏக்கம், தாங்க, அவன் வந்தா சரியாப் போகும்,
இவர்கள் பேசிக் கொண்டு இருக்க, தாத்தா, என்ன காலையிலே ரொமான்ஸா என்று தாத்தாப் பாட்டியை கிண்டல் செய்துக் கொண்டே வந்தாள்….. அவர்களின் செல்லப் பேத்தி இதழினியள், பெயருக்கு ஏற்றார் போல் பூ போல் மனம் கொண்டவள்…..
வில்லென்ற புருவம், மீன் போன்ற கண்கள், கூர் நாசி….. அதில் ஒற்றைக் கல் மூக்குத்தி, பால் நிறம்…..
அவள் கிண்டல் செய்ததும், ராணி பாட்டி….. அவள் காதை திருகி, உனக்கு ரொம்ப சேட்டை அதிகமா ஆகிடுச்சி….. என்று சொல்ல,
அவளும், பொய் வலிக் கொண்டு சிணுங்க….. பேத்தியை காப்பாற்றி விட்டார், அவளின் தாத்தா……
லவ் யூ டார்லிங்…. என்று சொல்ல,
உனக்கு தான் ஒரு டார்லிங் பார்த்தாச்சு இல்லை, அப்பறம் என் புருஷனை டார்லிங் ன்னு சொல்ற, என்று செல்லமாக அதட்ட…..
அவள் கண்கள் கலங்கி விட்டது…..
செல்ல பேத்தியின், அழுகைக் கண்டு, இருவரும் பதறி என்ன ஆச்சி டா மா, ரொம்ப வலிக்குதா, சாரி டா மா…..
ஐயோ! அது எல்லாம் ஒன்னும் இல்லை தாத்தா, என்று அவள் கண்களை துடைக்கவும், காவேரி மாமா பிரெஷ் ஆகிட்டு வாங்க….. சாப்பிடலாம்…..
வரேன் மா, தமிழ் செல்வன் எங்கம்மா, காலையிலே, எங்க போய் இருக்கான்…
அது தான் நேத்தே சொன்னாரே மாமா….. அவரு பிரண்ட் பொண்ணை பொண்ணு பாக்க வராங்க….. அவரு தான் ஏதோ முடிவு பண்ணனும்ன்னு சொன்னாரே, மாமா…. என்று சலித்துக் கொள்ள,
விடுமா…. அந்த பொண்ணும் பாவம் இல்லை, அப்பா அம்மா இல்லாத பொண்ணு……
சரி மாமா…… விடுங்க அதுப் பத்தி பேசாதீங்க……
சரி மா…. ஏன் மா இன்னக்கி முகமே சரியில்லை….. என்ன ஆச்சி மா….
இன்னும் என்ன மாமா ஆகணும், ஒருத்தரும் என் பேச்சு கேக்குறது இல்லை…… ஏன் என் உணர்வுக்கு கூட மரியாதை குடுக்குறது இல்லை……
அப்படி எல்லாம் இல்லை மா… என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
நீங்க செஞ்ச காரியம் அப்படி அண்ணி….. நீங்க இந்த வீட்டுக்கு வந்ததில இருந்து ஒரு நல்ல விஷயம் ஆவது நடந்து இருக்கா…. சொல்லுங்க, என்று குத்தும் கேள்வியைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்தார்…. ராமகிருஷ்ணனின் மகள் தமிழரசி…..
சிவராமகிருஷ்ணுக்கு தமிழ் மீது பற்று அதிகம்…. அதனால் தான், தன் மகன், மகள், பேரன், பேதிக்கு எல்லாம்….. தமிழ் பெயர்களையே வைத்திருக்கிறார்…..
அரசி போதும் நிறுத்து என்று கிருஷ்ணன் சத்தமிட……
வாயை மூடிக் கொண்டார்…. தமிழரசி,
ஏங்க, நீங்க போய் குளிச்சி முடிச்சிட்டு வாங்க, நான் உங்களுக்கு….. டிபன் எடுத்து வைக்கிறேன்……
சரி மா…. அவர் சொல்லி விட்டு சென்று குளித்து முடித்து தயாராகி, வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை என மிளிர்ந்தார்…..
அவர் தன்னை ஒரு முறை, கண்ணாடியில் பார்க்கவும், ராணியும், இதழினியும், அவர்களுடன்….. தமிழரசியின் மகள், வேல்விழியும் வந்தாள்…..
வேல்விழி, பெயருக்கு ஏற்றார் போல், மனதில் பட்டதை பட்டென்று பேசக் கூடியவள்…. தன் தாயை போல் அல்லாமல், நல்ல மனமும் தைரியமும் கொண்டவள்…..
இவர்கள் வர, வா ராணி என்ன விஷயம்….
அவர் தயங்கி தயங்கி நிற்க…..
சொல்லுமா…. எங்கிட்ட என்னமா உனக்கு பயம்….
அட போங்க நீங்க…. வேற பயமா எனக்காக…. காமெடி பண்ணாதங்க ஊருக்குத் தான் நீங்க ராஜா…. உங்களுக்கு நான் தான் ராணி அது நியாபகம் இருக்கட்டும்……
உத்தரவு மகாராணி…. என்று அவர் சிரிக்க…. எல்லாரும் பெயருக்கு சிரித்து விட்டு,
ஏங்க…. நம்ம பேரன் வீட்டுக்கு…. எப்போங்க வருவான்,
தெரியல மா…..
ஏன் தாத்தா, அப்போ அண்ணா என் கல்யாணத்துக்குக் கூட வராதா…. நான் என்ன தாத்தா பண்ணேன்…..
அவனுக்கு, உன் கல்யாண விஷயம் தெரியாது, மா…..
ஏது மாமாக்கு தெரியாதா…. அட போங்க தாத்தா….. உங்களுக்குத் தான் மாமாவை பத்தி தெரியல, நமக்குத் தான், அவரு எங்க என்ன பண்றான்னு தெரியாது…….
தெரியாதுன்னா நான் சொல்லல டா…. மத்தப்படி அவனுக்கு தெரியும்…..
ஐயோ!! தாத்தா, நான் என்ன கேக்குறேன்…. நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க…..
ஆமாங்க, எனக்கும் என் பேரனை பாக்கனும் போல இருக்கு….. எப்படியாவது பேசிக் கூட்டிட்டு வாங்க….
சரி ராணி, இங்க பாரு இதழ் மா….. உன் கல்யாணத்துக்கு, அவன் கண்டிப்பா வருவான்… அதுக்கு இன்னும் ஒரு மாதம் டைம் இருக்கு சரியா…. சும்மா மனசை போட்டு குழப்பிக்காம ஹாப்பியா இரு….
ம்ம்ம்ம்ம்….. தாத்தா….
என்னடா குரலில் ஸ்ருதியே இல்லை……
எனக்கு, இன்னைக்கே அண்ணாவை பாக்கனும்…..
ஆனா, வெளிய வாங்கன்னு அவன் சொல்றான்…. இங்க வந்தா தான் பாப்பேன்னு நீங்க சொல்லறீங்க…..
தாத்தா, நான் இன்னும் ஒரு மாதம் தான் இருப்பன்…. என் ஆசை இது தான் தாத்தா…. ப்ளீஸ்…..
ஆமா, தாத்தா ப்ளீஸ்…… நானும் இன்னக்கே, மாமாவை பாக்கணும்…..
ஏங்க….
என்ன உனக்கும் இன்னைக்கே உன் பேரனை, பாக்கணும் அவ்வளவு தானே…..
அதே தானுங்க…..
முயற்சி பண்றேன்…. அவன் காலேஜ் க்கு தான் போறேன்…… பேசி கண்டிப்பா கூட்டிட்டு வரேன்….. சரியா,
என்று பேசிக் கொண்டே, அனைவரும் கீழே வர…. காவேரி….. உணவை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்….
காவேரி என்று தன் மாமா அழைக்க…. கலங்கிய கண்களை…. யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டு…… மீதி உணவை எடுத்து வர சென்று விட்டார்…..
அவர் எடுத்து வர, அனைவரும்…. உண்டு இவரும் சென்று விட்டார்….. அவன் ஒரு காரியம் செய்து இருக்கிறான் அதை பற்றி கேட்டு விட்டு…… அப்படியே இந்த காரியத்தையும் சாதித்து விடலாம் என்று…..
இதை எல்லாம் யோசித்துக் கொண்டு தன்னை தானே நொந்துக் கொண்டு, தான் வந்தார்…….
அவரின் நினைவுகளை, காரின் ஹார்ன் சத்தம் கலைத்தது…..
அப்போது தான், அவர் நிமிர்ந்து பார்க்க செக்யூர்ட்டி வந்து வீட்டு கேட்டை திறந்து அவர் வீட்டுக்கு வந்ததை உறுதி செய்ய……
மனதிலோ 5 கால் அடிக்க….. என்ன செய்வது என்று தெரியாமலே….. காரின் உள் அமர்ந்து வந்தார்…..
தான் பார்த்து பார்த்து ஆசை ஆசையாய், வழி அமைத்து…. தான் விரும்பிய செடிகளை நட்டு, இரண்டு புறமும்….. தோட்டம் அமைத்து, கட்டிய….. அரண்மனை வீட்டுக்கு முதல் முறையாக ஏன்டா வருகிறோம் என்று தோன்றியது… ஏன்னென்றால், தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கை முதல் முறையாக காப்பாற்றவில்லை…. காப்பாற்றவில்லை…. என்பதை விட, தன் பேரனை பார்த்ததும் அதை மறந்தது தானே நிஜம்…..
ஒருவராக, வீட்டிற்கு வர… அங்கோ…. ராணி அம்மா, கையில் ஆர்த்தி தட்டுடனும், முகம் முழுக்க சிரிப்புடனும்…. நின்று இருக்க, ஒரு கார் மட்டுமே வர அதிலே பாதி ஏமாந்து விட்டார்…..
சரி ஒருவேளை பேரன், கணவரின் காரில் தான் வருகிறான் என்று காரின் உள்ளே தலையை விட்டு பார்க்க….. அங்கே அவரின் பேரன் இல்லை…… பதிலுக்கு, கிடைத்தது ஏமாற்றம் தான்…..
கண்கள் கலங்க அவரை நிமிர்ந்து பார்க்க…. அவரோ தரையை பார்த்தார்….
ஏங்க, அவன் நான் பாக்கனும் சொல்லியும் வரலையா…..
இல்ல ம்மா…. என்னால அதை பத்தி பேசவே முடியல…… என்று தன் நிலைமையை சொல்ல…… அவரோ எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்…..
இவரும் உள்ளே செல்ல….
ஏன்பா, அவனை திரும்பக் வீட்டுக்கு கூட்டி வர போறிங்களா…. இந்த வீட்டுல, ஒரு வயசு பொண்ணு இருக்கா…. அது நியாபகம் இருக்கட்டும்…..
அரசி, இது அவன் வீடு….. உனக்கு இஷ்டம் இருந்தா இங்க இரு…. இல்லனா பாரின் ல…. பிசினஸ் பண்ற, உன் வீட்டுக் காரை வரவழைத்து அவர் கூட போய்ட்டு….
அப்பா…. நான் உங்களுக்கு, தொந்தரவா போய்ட்டேன் இல்லை…..
நான் அப்படி சொல்லல….
சரி விடுங்க…. அப்பா என்று அவரும் உள்ளே செல்ல,
தன் மனைவியை எப்படி சமாதானம் செய்ய போறோம் என்று யோசித்துக் கொண்டே….. அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்து விட்டார்…. அந்த பெரியவர்……
இவர் இப்படி இருக்கு……. நம்ம ஹீரோவோ…..
கல்லூரி, வேலை முடிந்து… அடுத்து, ஒவ்வொரு வளாகமாக, சுற்றிப் பார்க்க சென்று விட்டான்…..
மனதில் பழைய கசப்பான நினைவுகள் எல்லாம் துரத்த… அதை துரத்த…. இவன் ஓடிக் கொண்டு இருக்கிறான்….
அப்படி என்ன தான் நடக்குதுன்னு அடுத்த எபி ல பாக்கலாம்….. கதை எப்படி போகுதுன்னு கமெண்ட் பண்ணுங்க…..
