ஸ்ருதியின் நிலைமை அனைவருக்கும் புரிய அவளை எப்படி தேற்றுவது என்று குழம்பி நின்றனர்.
கல்பனா தேவி ,” ஸ்ருதி நான் உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன் .நடந்து முடிஞ்சத நினைத்து கவலைப்படாதடா .நாங்க இருக்கும்போது உனக்கு என்ன கவலை அழக்கூடாது.அம்மா நான் இருக்கேன்டா” என்றார்.
ஸ்ருதி,” அம்மா நீங்க என் கூட கடைசி வரை இருப்பீங்களா?”
கல்பனா தேவி,” கண்டிப்பாடா அதில் உனக்கு சந்தேகமே வேணாம் ஸ்ருதி”
“அடியே லூசு நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே கல்பனா அம்மா நம்ப மூன்று பேருக்கும் அம்மா தான் சரியா”என்று ஸ்ருதியின் கண்களை துடைத்தான்.
“சரிடா அப்போ அண்ணா. அவர் என்னை தங்கச்சியா ஏத்துக்குவாரா”
” கார்த்திக்கிட்ட நீ நடந்துக்கற விதத்தை பொறுத்து அவன் உன்னை தங்கையாய் ஏத்துப்பான் .அது உன் சமத்து” என்று சிரித்தான் அபிஷேக் ராஜன்
“டேய் பிள்ளையை ரொம்ப மிரட்டாத.ஸ்ருதி நீ இங்க வாடா அப்பா நான் இருக்கேன் “என்று அவளை அழைத்தார் சரவண.
“அதானே போடா டேய் இவன் இப்படித்தான் ஏதாவது சொல்லிட்டே இருப்பான் “என்றவள் சரவணன் ராஜனின் மடியில் சலுகையாக படுத்துக்கொண்டாள்.
ஸ்ருதி வேற யாரும் இல்லங்க சரவண ராஜன் தம்பி
பிரகாஷின் உயிர் நண்பன் விக்ரமின் மகள்தான் . ஸ்ருதியின் அம்மா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அப்பொழுது பெண் குழந்தை இல்லாத சரவணராஜன் தம்பதியினர் ,”இவளை நாங்க வளர்த்துக்கறோம் .நீ வேறு ஒரு திருமணம் செய்துக்கோ “என்று எவ்வளவு சொல்லியும் விக்ரம் அதற்கு சம்மதம் சொல்லவில்லை.
தன் மனைவியின் நினைவு அவரை மிகவும் வதைக்க தொழில் அதிபரான அவர் மேலும் தொழிலில் கவனத்தை செலுத்தியவர் இப்பொழுது நகரத்தில் முதல் 10 இடத்தில் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விக்ரம்.
ஆனால் அவர் தன் மகளை சரிவர கவனிக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.சிறுவயதில் இருந்தே ஸ்ருதியை பணியாளர்கள் தான் வளர்த்து வந்தனர்.அன்பிற்கு ஏங்கி வந்த ஸ்ருதி பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவள் நல்ல மதிப்பெண்கள் பெற்று நகரத்தில் மிக பெரிய கல்லூரியில் சேர்ந்தாள். அங்கே தான் அபியும் மற்ற நண்பர்களும் இவளுக்கு அறிமுகமாகினர்.இந்த ஐவர் படையினர் கல்லூரியில் நட்புக்கு உதாரணமாக திகழ்ந்தனர்.
ஒரு நாள் அபி இவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.அங்கே அபியின் சித்தப்பா பிரகாஷின் புகைப்படத்தை பார்த்த ஸ்ருதி ,”இவர் எனக்கு தெரிந்தவர் என்றவள் உங்களுக்கு என்ன உறவு” என்று விசாரித்தாள்.
கல்பனா தேவி,” அவர் என்னுடைய மச்சினர்” என்று கூறியவர் ஸ்ருதியை பற்றி விசாரிக்க ஸ்ருதி கூறியதை கேட்ட சரவண ராஜன் மற்றும் கல்பனா தேவி அதிர்ச்சியும் ,மகிழ்ச்சியும் ஒரு சேர
அடைந்தனர்.
கல்பனா தேவி ஸ்ருதியை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டவர் சிறுவயதில் நடந்ததைக் கூறினார்.
ஸ்ருதி இதில் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானவள் அதிலிருந்து கல்பனா தேவியை அம்மா என்றுதான் அழைத்து வந்தாள்.
சரவண ராஜன் விக்ரமிடம் இதைப் பற்றிக் கூற விக்ரம் தன் மகளுக்கு இப்படி ஒரு நட்பு வட்டமும், சொந்தமும் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியுற்றார்.
சரவண ராஜன், “ஸ்ருதி எங்ககூடவே இருக்கட்டும் விக்ரம்” என்று கூறினார்.
“வேண்டாம் அண்ணா அவள் இங்கேயே இருக்கட்டும் .ஒரு முறை பாசத்தை அனுபவித்துவிட்டால்.. அவளால் உங்களை விட்டு பிரிய முடியாது .ஒரு வீட்டுக்கு வாழப் போற பெண்ணுக்கு அதிகமாக பாசத்தை கொடுத்து வளர்க்க கூடாது.அங்கே அவளுக்கு எப்படி வாழ்க்கை அமையும் என்று சொல்ல முடியாது.
இதே அன்பையும், பாசத்தையும் அவள் அங்கேயும் தேடுவாள்
பெண்கள் எப்போதும் பாசத்திற்கு அடிமையாகக் கூடாது” என்று மறுத்துவிட்டார் விக்ரம்.
விக்ரம் அவரின் மனைவி பாரதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வீட்டிற்கு ஒரே பெண்ணான பாரதி வீட்டிற்கு செல்லப் பெண்.
விக்ரமை திருமணம் செய்து கொண்ட பிறகும் அவரின் அம்மா வீட்டின் நினைப்பிலேயே இருந்து வந்தார் பாரதி.நிறைய நேரம் விக்ரம் தன் மனைவியிடம் சந்தோஷமாக நெருங்கும் போதெல்லாம் பாரதி தன் வீட்டில் உள்ளவர்களை பார்க்கவேண்டும் என்று புலம்பிக் கொண்டிருப்பாள் இதனால்தான் விக்ரம் இப்படி கூறுகிறார்.
அதற்காக அடிப்படையாக கொடுக்க வேண்டிய பாசத்தை அந்த குழந்தைக்கு கொடுக்காமல் வளர்த்து வந்த இவரை என்ன செய்யலாம்.
இப்பொழுது கூட சரவணராஜன் விக்ரமிடம் ஒரு வாரம் மட்டும் ஸ்ருதி இங்கே தங்க அனுமதி வாங்கி இருக்கிறார் .
இனியா கிளம்பி வர அனைவரும் அபிஷேக் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே தடபுடலாக விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க கார்த்திக் வீட்டில் இருந்தாலும் இவர்கள் வந்தது தெரிந்தும் வெளியே வரவில்லை..
அனைவரும் உண்டு முடித்தவர்கள் அவரவர் அறைக்கு செல்ல ஸ்ருதி ,இனியாவுக்கு தனியறை ஒதுக்கப்பட்டிருந்தது.
இனியாவுக்கு ,’கார்த்திக் வீட்டில் இருக்கிறாரோ இல்லையோ?’என்று நினைத்தவள் ஒருவேளை அபிஷேக்கின் பெற்றோர்கள் அவனை நண்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனரோ’என்ற சந்தேகமும் எழ இதை எப்படி கேட்பது என்று யோசித்தாள்.
“அம்மா நான் கார்த்திக் அண்ணாவை பாக்கனும்” என்று ஸ்ருதி இனியாவின் வேலையை சுலபமாக்கினாள்.
“வாடா அவன் அறையில் தான் இருக்கான்.நாம போய் பார்க்கலாம்” என்ற கல்பனா தேவி இனியாவை பார்த்து தயங்கினார்.
இனியா அதை புரிந்து கொண்டவள் “ஆன்ட்டி நீங்க இரண்டு பேரும் போங்க.. நான் ரூமுக்கு போறேன்..” என்றவள்,’ பரவாயில்ல அவர் இங்கதான் இருக்கிறார்..’ என்று நினைத்தவள் அறைக்குச் சென்றாள்.
இனியா அறைக்குச் சென்று கொண்டிருக்க அவளின் எதிரே அவளை கடந்த சென்ற உருவத்தைக் கண்டவள் பயந்து நடுங்கியவளாக அப்படியே நின்றுகொண்டிருந்தாள்.
அப்பொழுது திடீரென்று ஒரு குரல் “ஏன் பயப்படுற
நிக்காத உன் அறைக்கு போ “என்று சத்தமாக ஒலிக்க அந்தக் குரலைக் கேட்ட பெண்ணின் மனம் மகிழ்ச்சியடைய அதில் வேகமாக அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
கல்பனா தேவி கார்த்திக் அறைக்கு சென்றவர் ஸ்ருதியை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கார்த்திக் ஸ்ருதி யார் என்று தெரிந்து கொண்டவன் சிறுவயதில் அவளை இரண்டொரு முறை பார்த்த பொழுது தூக்கி கொஞ்சிய ஞாபகம் வர அதை நினைத்து சிரித்து கொண்டான்.
கார்த்திக்கு பெண் குழந்தைகள் என்றாலே மிகவும் பிடிக்கும் .தனக்கு ஒரு தங்கை இல்லையே என்று எப்பொழுதும் அவன் நினைத்ததுண்டு.அப்படி ஒரு சில நேரம் அவனுக்கு ஸ்ருதியின் குழந்தை முகம் மனக்கண்ணில் வந்து போவதும் உண்டு.அபியை திட்டும் போதெல்லாம் கூட தன் அம்மாவிடம் நீங்க ஒரு பெண் பிள்ளையை பெத்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்.. என் பேச்சைக் கேட்டு நடந்து இருப்பாள். ஆனால் இந்த அபிஷேக் கொஞ்சம் கூட சொல் பேச்சை கேட்கவே மாட்றான்”என்று கூறுவான்.
கார்த்திக் அந்த நினைவுகளில் சுழன்று கொண்டிருக்க ஸ்ருதி ,”அண்ணா “என்று கார்த்திக்கிடம் சென்றவள் அவனின் காலில் விழுந்தாள்.
கார்த்திக் “ஏய் என்ன இது எந்திரி மா”” என்று பதறினான். கல்பனா தேவிக்கும் அது அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அவர் சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.
“அண்ணா நீங்க என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பதான் நான் எந்திரிப்பேன்”
ஸ்ருதியின் செயலில் புல்லரித்துப் போனவன் தன் அம்மாவைப் பார்க்க ,” ஏன்டா பிள்ளை எவ்ளோ நேரம் இப்படியே இருப்பாஆசீர்வாதம் பண்ணுடா”என்றார்.
கார்த்திக் ராஜன்,”மனம் போல வாழ்க்கை அமையட்டும்.எந்திரி மா… “என்றிட அங்கே கௌளி சத்தமிட்டது..
“அண்ணா நான் உங்களை இப்படி கூப்பிட்றது உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லடா “என்று பேசிக்கோண்டிருக்க அழைப்பு வர அதை எடுத்து பேசியவன்,” டேய் சொல்லுடா புவனேஷ் எப்படி இருக்க , நாளைக்கு வீட்டுக்கு வரியா “என்று பேசிக்கொண்டிருந்தான்.
புவனேஷ் பெயரைக் கேட்டதும் ஸ்ருதி முகம் சுருங்கியவளாக, “அம்மா நாம போலாமா “என்றாள்.
அதைக் கேட்ட கார்த்திக் ,”ஸ்ருதி கொஞ்ச நேரம் நில்லுடா..இதோ பேசி முடிச்சிடுவேன்”என்றான்.
“ஸ்ருதி நீ அண்ணாக்கிட்ட பேசிட்டு வாடா. நான் உங்களுக்கெல்லாம் பால் எடுத்துட்டு வரேன்”என்ற கல்பனா அங்கிருந்து சென்றார்.
புவனேஷ்,”டேய் நீ எந்த ஸ்ருதிகிட்ட பேசிகிட்டு இருக்க”என்று கேட்டான்.
“உங்க காலேஜ் ஸ்டூடண்ட் ஸ்ருதி அபிஷேக் ஃப்ரண்ட் அவளை தான் டா சொல்றேன். அவங்க ஃப்ரெண்ட் எல்லாம் இங்கே வந்து இருக்காங்க”என்றான் கார்த்திக்.
“அவளா ச்சே அவள் சரியான பணத் திமிர் பிடித்தவள் ஆச்சே”
கார்த்திக்,”டேய் நீ என்னடா பேசற. ஒரு நிமிஷம் இரு என்றவன் ஸ்ருதி நீ உன் அறைக்கு போடா நாம காலையில் பேசிக்கலாம்”என்றான் .
கார்த்திக் கூறியதை வைத்தே ‘புவனேஷ் ஏதோ தன்னைப்பற்றி சொல்லி இருக்கிறான் ‘என்று நினைத்தவள் வரும் போது கார்த்திக்கின் அறைக்கு மிகவும் சந்தோசமாக வந்தவள் போகும்போது மன சங்கடத்துடன் தான் வெளியேறினாள்.
“புவனேஷ் ஏன்டா இப்படி பேசற
.அந்த பொண்ணு அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது .அது எனக்கு நல்லாவே தெரியும் .ஏற்கனவே அபி அவளைப் பற்றி நிறைய சொல்லி இருக்கான்”
“ஆமா அவளை நீதான் மெச்சிக்கனும் இன்னொரு நாள் அதை பத்தி பேசலாம்” என்ற புவனேஷ் அழைப்பை துண்டித்தான்.
கார்த்திக் புவனேஷ் கூறியதை நினைத்து குழம்பியவன்,’இவன் ஏன் இப்படி பேசுறான் . யாரைப் பத்தியும் இப்படி பேசமாட்டானே…’ என்று யோசித்தான் .
தாரகையின் மாயோன் தொடர்ந்து வரும் கனவினால் தூக்கத்தை தொலைத்த நாயகி.அவளுக்கு உறுதுணையாக இருந்து அவளை அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர உதவும் அவளின் நண்பர்கள். நாயகன் அவளை உயிருக்கு உயிராக விரும்பினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக ஆரம்பத்தில் அவளை வெறுப்பது போல்…