தாரகையின் மாயோன்

மாயோன் -11

கார்த்திக் வெளியேறியதும் ஸ்ருதி தைரியம் வர பெற்றவளாக ,”மாமா நான் யாரும் இல்லாத அனாதை போல நிக்கிறேன் . எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுங்க.அது உங்களால்தான் முடியும் எனக்காக செய்வீங்களா மாமா…” என்று கேட்க,

அவளின் மாமா என்ற அழைப்பில் உருகிய புவனேஷ் அவள் மீண்டும் அனாதை என்று கூறியதும் ,உயிர் துடிக்க வலியை அனுபவித்தவன் அவளை பார்க்க

அவளோ  அழுதவளாக கீழே சரிந்தாள்.

“எனக்கு உங்களைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா நியாபகம் மட்டும்தான் வந்துச்சு.. நீங்க அப்படியே என் அம்மா மாதிரியே இருக்கீங்க .அதனால் தான் நீங்க எவ்வளவு திட்டினாலும் நான் உங்களையே சுத்தி சுத்தி வந்தேன் .மத்தபடி வேற எந்த தப்பான நோக்கமும் இல்ல.நீங்க என்னை ஏன் திட்டிக்கிட்டே இருக்கீங்க.. நான் ஒன்னும் தப்பான பொண்ணு இல்ல மாமா.இனி நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்.எனக்கு அம்மா ஞாபகம் எப்பவும் இருக்கத்தான் செய்யும்.அதிகமா வரும்போது உங்களை  தூரமா இருந்து பார்த்துட்டு போயிடுவேன் .இந்த உதவி மட்டும் எனக்கு செய்யுங்க போதும்.

உங்களுக்கு விருப்பம் இல்லனா சொல்லிடுங்க.. நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.அதை விட்டுட்டு என்னை கேவலமா ‌ பாக்கறதும் ,வார்த்தையால  என்னைக் குத்திக் கிழிக்கவும் செய்யாதீங்க மாமா..”

.என்றவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

புவனேஷ் தான் செய்த தவறை உணர்ந்தவன் ,’அவளின் அப்பா மேல் இருக்கும் கோபத்தை இவள் மீது  காண்பித்துவிட்டேனே?’என்று வருந்தினான்.

புவனேஷ் அவளை நெருங்கியவன் அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளின் தலை கோத அதில் நிமிர்ந்து பார்த்தவளின் கண்களைத் துடைத்தவன் அவளை அணைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

ஆடவணின் ஸ்பரிசம் பெண்ணவளை நிலைகுலைய செய்தாலும் அவனிடமிருந்து விலகியவள்,” என்ன மாமா  உங்களுக்கு என் மீது இத்தனை நாள் இல்லாத அன்பு எங்கிருந்து வந்துச்சு..வேண்டாம் மாமா பரிதாபத்தால்  வந்ந அன்பு நிலைக்காது.நான் என் மனசுல இருந்ததை எல்லாத்தையும் சொல்லிட்டேன். நான் போறேன் மாமா. நீங்க சந்தோஷமா இருங்க.இனி உங்க வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன்” என்று அங்கிருந்து நகர இருந்தவளை பிடித்து இழுக்க அதில் பெண் அவள் நிலை தடுமாறியவள் பூமாலையாய் அவள் மீதே சரிந்தாள்.

ஸ்ருதி அவன் மீது இருந்து எழுந்திருக்க முயற்சி செயதாள். ஆனால் முயற்சி பலனில்லாமல் போனது.. ஆடவணின் கரம் அவளை அழுத்தமாக பிடித்து இருக்க பெண்ணவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவனும் பார்க்க கண்களோடு கண்கள் உறவாடிட நீண்ட நேரம் அவனை பார்க்க முடியாதவளாய் தலை கீழே குனிந்தாள் ஸ்ருதி.

புவனேஷ் அவளை நிமிர்த்தியவன் ,”என்னடி உன் மனசில் இருந்ததை எல்லாத்தையும் சொல்லிட்டேன்னு சொல்ற.முக்கியமான விஷயத்தை நீ இன்னும் சொல்லலையே?”என்றான்.

அவனின் உரிமையான அழைப்பில் உள்ளுக்குள் குளிர்ந்தவள் ,”முக்கியமான விஷயமா அப்படி எதுவும் இல்லையே மாமா உங்களுக்கும் ,எனக்கும் அப்படி என்ன இருக்கு?”

“ஏண்டி இல்ல எங்க என்னை பாத்து சொல்லு நீ என்னை காதலிக்கல”என்றதும் அதில் அதிர்ந்தவள்.

“கண்டிப்பா இல்ல அதுக்கான தகுதி எனக்கு இருக்கா மாமா 

நான் என் காதலை சொன்னா நீங்க என்ன ஏத்துப்பிங்களா? நடக்காத விஷயத்தை சொல்லி மட்டும் என்ன பிரயோஜனம்”என்று கலங்கினாள் ஸ்ருதி

“சரிடி நீ என்னை காதலிக்கல. ஆனால் என்னை இப்படியே தவிக்க விட்டுட்டு பழி வாங்க போறியா சொல்லிட்டு போ” என்று அவனும் கலங்கினான்.

“அச்சோ மாமா நான் என்னைக்கும் அப்படி நினைக்க மாட்டேன்..ஏன்னா நான் உங்களை விரும்பறேன். உண்மையா விரும்பறவங்க யாரும் நாம விரும்பற  யாரையும்  கஷ்டப்படத்த  நினைக்க மாட்டாங்க.”என்றவளை பார்த்து சிரித்த புவனேஷ் அவளின் நெற்றியில் இதழ் பதிக்க ஸ்ருதி தான் உளறி  விட்டதை நினைத்து நாக்கை கடித்தவள் கீழே குனிந்தாள்.

புவனேஷ்,” இப்போ என்னடி சொன்ன. உண்மையை என்னைக்கும் மறைக்க முடியாது .நான் மட்டும் எப்படி உன்னை கஷ்டப்பட விடுவேன் நானும் உன்னை உண்மையா விரும்பறேன் ஸ்ருதி.நான் ஏற்கனவே ஒருத்தியால் ஏமாந்தவன் டி . அதனால்தான் உன் மீது விருப்பம் இருந்தும் ,நான் உன்னை விட்டு விலகிப் போனேன் .பிறகு நீ யாரென்று தெரிந்ததும் கொஞ்சம் கோபமாக தான் இருந்தேன் 

ஆனால் உன்னை விட்டு என்னால் இருக்க முடியுமா  தெரியலடி …ஐ லவ் யூ ஸ்ருதி லவ் யூ சோ மச்” என்றவன் அவளை இறுக்கமாக ‌அணைத்தான்.

அவளும் அவனுள் சுகமாய் புகுந்தவள் ,”இவ்வளவு நாள் நீ ஏன் என்னை விரும்பறத சொல்லல மாமா .அப்பவே சொல்லி இருந்தா நான் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பேன்.நீ என்னை விட்டு எங்கயும் போகாத மாமா.நான் இத்தனை நாள் தனியா இருந்தது போதும் .நீ என்கூட இருந்தா என் அம்மாவே என் கூட இருக்க மாதிரி இருக்கும்.என் அப்பாக்கிட்ட வந்து பேசு மாமா”

“கண்டிப்பாடி உனக்காக நான் அவர் கிட்ட பேசுவேன் .அவர் ஏதாவது எதிர்ப்பு சொல்லட்டும் ..உன்னை தூக்கிட்டு வந்துருவேன் நான் கூப்பிட்டா நீ வருவ தானே ஸ்ருதி?”

“என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க நீங்க இப்ப கூப்பிட்டாலும் நான் வர தயாராக இருக்கேன்”

“அடியே கள்ளி இப்போ வேணாம்டி கொஞ்ச நாள் போகட்டும் நீ மேற்கொண்டு படிக்கணும் இல்லையா?”

“திருமணம் முடிந்த பிறகு நான் படிக்கிறேன் மாமா .எனக்கு உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு.”

“ஏய் என்னடி இப்படி சொல்ற ..சரி சரி நீ செமஸ்டர் எழுதி முடி மத்ததை அப்புறம் பேசிக்கலாம்..சரி வா வெளியே போகலாம்.”என்று அவளை வெளியே அழைத்து வந்தவன்

அபிஷேக்கின் பெற்றோரை அழைத்து நடந்த விஷயத்தைக் கூறிய புவனேஷ் ,”அம்மா நீங்க என்ன பண்ணுவீங்க   தெரியாது .எனக்கு கண்டிப்பா என் ஸ்ருதி வேணும்.விக்ரம் சார் கிட்ட நீங்க தான் பேசி எங்கள் திருமணத்தை நடத்தி வைக்கனும் “என்று கூறினான்.

புவனேஷ் செயலில் வானரக் கூட்டத்தில் உள்ளவர்கள் அபிஷேக்கை தவிர அனைவரும் அதிர்ச்சியில் நிற்க கல்பனாவும் மயக்கம் போட்டு விழாத குறையாக சிலையாக நின்றார்.

அபிஷேக் ,” என்ன எல்லாருக்கும் ஷாக்கா இருக்கா?”

கல்பனா ,”என்னடா கேள்வி கேட்கிற .பின்னே இருக்காதா ?இவன் திடீர்னு வந்து இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடறானே .என்னங்க ஏதாவது சொல்லுங்களேன் விக்ரம் தம்பியை எப்படி சமாளிப்பது.”

“அதுதான் கல்பனா எனக்கும் யோசனையா இருக்கு, சரி விடு எப்படியாவது அவனை சம்மதிக்க வைத்து தான் ஆகனும்”என்றார் சரவண ராஜன்

“அங்கிள் அதெல்லாம் அவர் சம்மதம் சொல்வார் கவலையை விடுங்க என்ற பாலாஜி ஆனால் இவள் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்தவ இப்படி ஒரு காரியத்தை செய்து இருக்கா. பாருங்களேன் “என்றான்.

“ஏன் சார் நீங்க இரண்டு பேரும் எப்பவும் எலியும் ,பூனையும் போல தானே இருப்பீங்க .அவங்க உங்க பின்னாடியே சுத்துவா ஆனால் நீங்க அவளை திட்டி அனுப்புவீங்க. அப்படி இருக்கும்போது இது எப்படி சாத்தியமாச்சு “என்று யோசிப்பது போல் கேட்டான் அன்பு.

“டேய் இரண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க டா டேய் அபி நான்தான் அன்னைக்கே சொன்னேனே என்ற இனியா  என்ன ஸ்ருதி  செல்லம் ரொம்ப சந்தோஷமா இருக்க போலவே சரி சரி ட்ரீட் எங்க சீக்கிரம் சொல்லுடி”

“அது அது உன் அண்ணாகிட்ட கேளுடி “என்று ஸ்ருதி வெட்கப்பட்டுக்கொண்டே கூறினாள்” 

“ஏதே அண்ணாவா அதாரு” என்று சுற்றி தேடுவதைப் போல் பாவனை செய்தாள் இனியா.

“அது வேற யாரும் இல்லம்மா.நான் தான் “என்று புவனேஷ் கூற ,

“ஓஹோ…பாரேன் சார் இப்போ அண்ணாவா மாறிட்டாரு மகிழ்ச்சி”

“அண்ணா ஸ்ருதி உங்களை விரும்பறாளோ என்று சந்தேகமா இருக்குன்னு  இந்த ரௌடிபேபி என்கிட்ட சொன்னாள். அது இப்போ உண்மையா ஆகிடுச்சு .ஆனால் நீங்களும் ஸ்ருதியை விரும்புவதா சொன்னீங்க பாருங்க .அதுதான் ரொம்ப மாஸா இருந்துச்சு.இதையெல்லாம் பார்க்க உங்க நண்பன் வீட்டில் இல்லாமல் போயிட்டான் பாருங்க”என்றான் அபிஷேக் ராஜன்.

“டேய் ஆமாண்டா அவனை ஆளே காணல. எங்க போயிருக்கான்”

“பாரேன் இப்போதாவது அவனை தேடனும் உங்களுக்கு எண்ணம் வந்துச்சே .ஒரு முக்கியமான ஃபோன் வந்துச்சு அண்ணா .அதான் வெளியே போயிருக்கான் கொஞ்சநேரத்தில் வந்துடுவான்”என்றான் அபிஷேக் ராஜன்.

கல்பனா, சரவணராஜன் இருவரும்இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்க புவனேஷ் தனது நண்பனுக்கு அழைத்து அவனிடம் விஷயத்தை கூறியவன்  தன் வீட்டிற்கு சென்றதும் தனது பெற்றோரிடம் கூற அவனின் அம்மா ‌நதியா மகிழ்ச்சி அடைந்தார்.ஆனால் அவனின் அப்பா மணிமாறன்  எதையும் கூறவில்லை.

நதியா ,”என்னங்க விக்ரம் அண்ணாவைப் பார்த்து இது பற்றி பேசிடலாமா”என்று தன் கணவனிடம் கேட்டார்.

“ம்ம் சரி ..”என்றோடு முடித்துக்கொண்டார்

மணிமாறன்.

கல்பனாவும், சரவணன் ராஜனும் தன் மக்களிடம் இந்த திருமணம் நடக்கும் என்று உறுதி அளித்தாலும் விக்ரமை எப்படி சமாளிப்பது என்று யோசித்தவர்கள் தனது தம்பி பிரகாஷுக்கு அழைத்து விஷயத்தை கூறினர்.

“அண்ணா இது தான் சரியான தருணம்.. நாம் இதை பயன்படுத்தி அவங்க குடும்பத்தோட விக்ரமை சேர்த்து வைக்கலாம் அண்ணா ..அவனும் எத்தனை நாளைக்கு இப்படியே தனியா இருப்பான்”என்று பிரகாஷ் கூற கல்பனா ,சரவணராஜன் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஸ்ருதி நீண்ட நாள் கழித்து மகிழ்ச்சியாக உறங்கினாள். இனியாவுக்கு முதல்நாள் நன்றாக தூக்கம் வந்தாலும் ,இன்றைய நாள்  தூக்கம் வராதவளாக புரண்டு படுத்தவள் ஒருகட்டத்தில் கண்ணயர மனதில் ஏதோதோ நிகழ்வுகள் வந்துபோக திடிரென்று படுக்கையிலிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தவள் வெளியே வந்தாள்.

அதேநேரம் கார்த்திக்கும் தூக்கம் வராமல் வெளியே வந்தவன் கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்தான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!