தாரகையின் மாயோன்

உயிர் -16

    மறுநாள் காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களால் இந்த பூமிக்கு வெளிச்சத்தை பரிசாக வழங்கிக் கொண்டிருக்க வினிதா தூக்கம் கலைந்து எழுந்தவள் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள் .

விழித்துப் பார்த்தவள் தன்னவன் மீது படுத்திருப்பதை உணர்ந்து  வெட்கம் கலந்த சிரிப்பை உதிர்த்தவள் எந்திரிக்க முயற்சி செய்தாள்.

விக்ரம் அவளின் செயல்களை கண்டு சிரித்தவன். கண் மூடி தூங்குவது போல் நடித்தவன் அவளை எழ விடாமல் இறுக்கமாக பிடித்திருந்தான்.

தன்னவனின் முகத்தை பார்த்தவள்  மீண்டும் எந்திரிக்க முயற்சி செய்ய அவன் மேலும்  அவளை இறுக்க இதில் பெண்ணவள் தன்னவனின் செயலை நினைத்து சிரித்தவள் அவனின் மீசையை பிடித்து இழுக்க அதில் வலியை உணர்ந்த ஆடவணவன், “அச்சோ ! ராட்சசி  ஏன்டி என் மீசையை இழுக்கிற வலிக்குதுடி” என்று கத்தினான்..

“கல்யாணமாகி ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள நான் உங்களுக்கு ராட்சசியா இருக்கட்டும் இருக்கட்டும்.”  என்று அவள் முகத்தை திருப்பிக் கொள்ள..

“அடியே அது செல்ல மா  சொல்றது டி என் செல்ல ராட்சசி”  

“ஓஹோ சரி விடுங்க  விக்கி நான் போய் குளிச்சிட்டு வரேன்”

” ஏய் அதுக்குள்ள என்னடி அவசரம் தூங்கு பொறுமையா போகலாம் ..”என்று அவளை மறுபடியும் தன் மீது சாய்த்துக் கொண்டான்..

“ மணியாகுது விக்கி ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க ..இந்த வீட்டில் கல்யாணம் ஆகாம இரண்டு பெண்கள் இருக்காங்க ..அவங்க இருக்கும் போது நாம இவ்வளவு நேரம் அறையில் இருப்பது சரி இல்ல ”

விக்ரம் அதைப் புரிந்து கொண்டவனாக அதேநேரம் வினிதாவின் இந்த குணத்தை பார்த்தவனுக்கு , ‘  இப்படி குணவதியா 

இருக்கும் உன்னை ஏன்டி எங்க அம்மாக்கு பிடிக்காம போச்சு ‘ என்று மனதினில் நினைத்தவன் “சரிடா நீ குளிச்சிட்டு வா..” என்று அனுப்பி வைத்தான்.

பிறகு  இருவரும் குளித்துவிட்டு கீழே இறங்க அங்கே சமையலறையில் கண்மணி தன் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

விக்ரம் கரண், ராதாகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருக்க வினிதா சமையலறைக்குள் சென்றவள் கண்மணியும் ,சுந்தரியும் எவ்வளவோ மறுத்தும் அவர்களுக்கு உதவி செய்தாள். 

பிறகு மூவரும் சமைத்த உணவு வகைகளை உணவு மேஜையில் எடுத்துக் கொண்டு வந்து வைக்க அனைவரும் அமர்ந்து உண்டனர் .

கண்மணி,” விக்ரம்  ,வினிதா இரண்டு பேரும் கிளம்புங்க நாம ஒரு முக்கியமான இடத்திற்கு போகனும் “என்றாள்.

விக்ரம்  இவள் எங்கே அழைக்கிறாள் என்று தெரிந்தவன் சிரித்துக்கொண்டே  தன்னவளைப் பார்த்தான்.

வினிதா,” அக்கா எங்க போறோம் கோவிலுக்கா “

“அதான் சொன்னேனே வினி ஒரு முக்கியமான இடத்துக்கு  போறோம். அங்கே போனால் உனக்கே தெரியும் “என்றாள் கண்மணி.

விக்ரம் ,” ஏண்டி உனக்கு கோவிலை விட்டா வேற இடமே தெரியாதா .நீ  வயசானவங்க மாதிரியே கோவில் கோவில் என்று சொல்லிட்டே இருக்க”

வினிதா ,”என்ன விக்கி இப்படி சொல்றீங்க ..கோவிலுக்கு வயசானவங்க மட்டும்தான் போவாங்களா.?பிரச்சனை இருந்தாலும் கோவிலுக்கு போவாங்க ..கோவிலுக்கு போனா நமக்கு மன அமைதி கிடைக்கும் .அதுக்காகத்தான் கோவிலுக்கு போவது “என்றாள் .

விக்ரம்,”சரிடி தெரியாம கேட்டுட்டேன் . இனி எதுவும் நான் பேசல தாயே “என்று கையெடுத்துக் கும்பிட அதை பார்த்த அனைவரும் சிரித்தனர்.

கார்த்திக் ,கிருத்திகா அங்கே வந்தவர்களும்  சிரிக்க ..கிருத்திகா ,”என்னடா  எருமை இப்பவே ஆரம்பிச்சுட்டியா?சூப்பர்டா இந்த மாதிரி உன்னை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”என்றாள்.

“ஏய்  என் நிலைமையை பார்த்தா உனக்கு அவ்வளவு சிரிப்பா இருக்கா எல்லாம் என் தலையெழுத்து 

டி .அண்ணா இவளை பார்த்தீங்களா இவளுக்கு எவ்வளவு வாய் இவளை  எப்படி தான் சமாளிக்க போறீங்களோ போங்க.” என்று கரணைப் பார்த்து கூறினான் விக்ரம்.

“ஆமாண்டா எனக்கும் அதை நினைச்சா கவலையா தான் இருக்கு .வேற என்ன செய்றது ,எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் பேய்க்கு வாக்கப்பட்டா அனுபவிச்சு தானே ஆகனும்” என்ற கரண் கிருத்திகாவை பார்க்க அவள் இருவரையும் முறைத்தவள்  அவர்கள் இரண்டு பேரையும்  தலையில் கொட்டினாள்.

“உங்க இரண்டு பேருக்கும் ரொம்ப திமிர் டா ஓவரா ஆடறீங்க. இருக்குடா  உங்களுக்கு ஒரு நாள்” என்றாள் கிருத்திகா.

கரண்,” டேய் செல்லம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி..இதுக்கே இப்படி பண்ணினா எப்படிடா தங்கம் .மாமா உங்கிட்ட இனி இப்படி நடந்துக்க மாட்டேன் ஓகே வா ..”  என்று அவளை கொஞ்சிக் கொண்டிருக்க அப்பொழுது அங்கே வந்த ராதாகிருஷ்ணன்  “ம்க்கும் “என்றதும் 

கிருத்திகா அவரை பார்த்து விலக ஆனால்..கரண்” ஏன்டி விலகற இங்க வா “என்று அவளை பிடித்து இழுத்தான்.

கார்த்திக்  கண் ஜாடை காட்டியும் கரண் கவனிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க கிருத்திகா அவனின் காலை மிதித்தவள்,” எருமை மாடு அங்க பாருடா” என்றிட.

கரண், ” ஆ ஆ ஆ “என்று கத்தியபடி பார்க்க அங்கே தன் தந்தையைக் கண்டதும் பதறியவன் வலியிலும் எழுந்து  நிற்க ! இவளோ வெட்கப்பட்டவளாக வேகமாக அங்கிருந்து உள்ளே ஓடினாள்.

கண்மணியும் அவள் பின்னே   சென்றவள் ,”என்னங்க அண்ணி வெட்கமா ?பாரேன் எங்க அண்ணியோட முகத்தை கண்ணம் எவ்வளவு சிவந்து இருக்கு”

” போடி இவளே நீ வேற அவர் தான் நேரம் காலம் தெரியாம படுத்துறார் பார்த்தா. நீயும் அவர் கூட சேர்ந்து என்னை ஓட்றியா..? என்றவளைப் பார்த்து கண்மணி கலங்க கிருத்திகா அதைப் பார்த்து பதறியவள்,” என்ன கண்மணி ஏன் இப்போ அழற. ப்ளீஸ் அழாதடி” 

கண்மணி,”இல்லடி எனக்கு நீயும் ,எங்க அண்ணனும் சேர்ந்து வாழணும்னு எவ்வளவு நாளா ஆசை தெரியுமா..?இப்போ என்னுடைய கனவு நிறைவேறப் போகுது ..நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தா எனக்கு அதுவே போதும் “என்றாள் கண்மணி

“கண்மணி என்னை பொருத்தவரை நான் ரொம்ப கொடுத்து வச்சவ ..உன்னை மாதிரி ஒரு நாத்தனார் கிடைக்க, இங்க பாரு என் அண்ணன் கூட நீ சந்தோஷமா வாழ்ந்தா மட்டுமே நாங்களும் சந்தோஷமா இருப்போம் ..அதை ஞாபகம் வச்சுக்கோ “என்றாள் கிருத்திகா.

இவளோ ஒரு கசந்த புன்முறுவலை உதிர்த்தவள் மனதினில்…”என் வாழ்க்கையில் நடந்தது தெரிந்தும் உன் அண்ணன் என்னை ஏன் ஏத்துக்கறார்  அதுவே எனக்கு ‌ சந்தேகமாக இருக்கு,உனக்காக என்னை அவர் ஏத்துக்கிட்டா எங்க வாழ்க்கை எப்படி இருக்குமோ. என்னோட வாழ்க்கை மட்டும் போனால் பரவாயில்லை ..அது ஏற்கனவே வறண்ட பாலைவனம் மாதிரி தான் இருக்கு …

னால் உன் அண்ணாவோட வாழ்க்கை பசுமையா இருக்கு ,அவர் ஏன் இப்படி அடம் பிடிக்கிறார் எனக்கு தெரியல..” என்றவளை முறைத்த கிருத்திகா 

“உனக்கு நான் எதுவும் சொல்லப் போறதில்ல கண்மணி .எங்க அண்ணன்  செய்து காட்டுவான் அப்போ உனக்கு தெரியும்”என்றாள் கிருத்திகா.

“ஓஹோ ! சரி வா நாம போகலாம்.கரண் ஏதோ முக்கியமான விஷயம் அப்பா கிட்ட பேசனும் சொன்னார்” என்றதும் இருவரும் அங்கே சென்றனர்.

கார்த்திக், கரண் இருவரும் 

தங்களின் வாழ்க்கையையே மாற்றப்போகும் முக்கியமான விஷயத்தை பற்றி ராதாகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

 

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!