தனல் பூ – 1

அந்தி மாலை பொழுதடையும் நேரம், மும்பை மாநகரில் இப்போதுதான் ஜனங்களின் ஆரவாரம் துவங்கிய நிலையில் இருந்தது… 

 

 

அனைத்து வேலைகளையும் அமைதியாய் சிரித்த வண்ணமே, பொதுமக்கள் செய்து கொண்டிருக்க, மாலைச் சூரியன் அனைவரிடமும் இருந்து விடைபெற்று கொண்டு புறப்பட்டது.

 

 

அதே நேரம் தன்னுடைய காரில் கணத்த முகத்துடன் ஏறிய பிரதாப், விருட்டென வீட்டிற்கு புறப்பட்டான்.

 

 

பிரதாப், கிரேக்க சிற்பங்களை போன்ற நல்ல ஆறடி உயரம், கன்னியர்கள் கண்டு மயங்கும் அழகிய உருவம், அனைவரிடமும் சிரித்த முகத்துடன் கூடிய பேச்சு, பணியில் எப்பொழுதும் வெற்றி, தோல்வி காணாத தோள்கள், சிந்தித்து செயல்படுபவதில் கெட்டிக்காரன், எதற்கும் அஞ்சாதவன்…. என அவன் பெருமைகளைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்.

 

 

பரம்பரை பரம்பரையாக தன் குடும்ப வழி எவ்வழியோ அவ்வழியே தனக்கும் சரியானது என முடிவெடுத்ததால், திரைப்பட தயாரிப்பு துறையில் முன்னணியாக விளங்கி கொண்டிருக்கிறான்.  

 

 

அவன் கம்பெனியின் பொறுப்பை தலைமேல் ஏற்றுக் கொண்ட பிறகே அது அசுர வளர்ச்சி அடைந்தது என்று சொன்னால் மிகையாகாது. 

 

 

நாளடைவில் தனக்குப் பிடித்தமான டைரக்சன் வேலையையும் கையில் எடுத்துக் கொண்டான். இப்போது ஹிந்தி சினிமாவின் தலை சிறந்த தயாரிப்பாளர் கம்பெனி மற்றும் டைரக்டராக தற்போது பிரதாப் செங்கோல் நாட்டி வைத்திருக்கிறான்.

 

 

இப்போதுதான் ஒரு பிரஸ்மீட்டில் முடித்துவிட்டு திரும்பி வருகிறான். அங்கே அனைவரிடமும் சிரித்த வண்ணம் பேசிக்கொண்டிருந்த அவன் காரில் கனத்த முகத்துடன் ஏறினான். 

 

 

வீடு திரும்பிய பிறகு தன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் அள்ளி வீசியடித்து உடைத்த வண்ணம் கோபத்தோடு இருக்கின்றான்… 

 

 

ஆயிரம் நல்ல  பழக்கவழக்கங்கள் கிடைக்க பெற்றாலும் இவனுடைய பயங்கரமான கெட்ட பழக்கம் இது ஒன்றே.

 

 

பொருட்கள் சிதறும் சப்தம் கேட்டு ஓடி வந்தான் காரின் அருகே நின்ற மாதவன்.

 

 

“சார் சார் என்ன ஆச்சுன்னு இப்டி பன்ரேங்க? நம்ம தொழில்ல இப்டி ஆகிறது சகஜம் தான். நம்மதான் தைரியமா எதிர்த்து போராடனும் சார்” என்று தன்னிலையில் இல்லாமல் தவிக்கும் பிரதாப்பிற்கு புத்தி ஓதிக் கொண்டே இருந்தான்.

 

 

“அடேய், நானே கோவத்தோட உச்ச கட்டத்துலே இருக்கேன், நீ வேற ஏன்டா என்னிய கூட கொஞ்சம் டென்ஷன் ஆக்குற …

 

 

அந்த நாய்‌ இப்டி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லடா, பணத்துக்கு ஆசைப்பட்டு எதிரி கூட்டத்தோட சேர்ந்துட்டாளே. இதுக்கு மேல நான் என்னடா பண்ணுவேன்… 

 

 

அவகிட்ட என்னத்த சொல்லி என்ன பண்ண முடியும்…”

 

 

“அது சார்…”

 

 

“நீ மொதல்ல சார், மோர்னு கூப்பிட்றத நிறுத்துடா எனக்கு அதுவேற பயங்கர டென்ஷனை கிளப்புது..”

 

 

 

( ஆம், பிரதாப்பும் மாதவனும் பாலியம் தொட்ட நண்பர்கள், இப்போ  பிரதாப்புக்கு  இருக்கிற  ஒரே ஒரு  சொந்தம்னா  அது  மாதவன் தான். சிறு வயதிலே அப்பா அம்மாவை இழந்து கம்பெனிக்கு பொறுப்பேற்றதில் இருந்து இப்போ வர எல்லாமே 

 

மாதவன் தான் ) 

 

 

“சரிடா.. போனது போயிட்டா. இனிமே அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகுது? இப்போ நீ என்ன பண்ணலாம்னு இருக்கிற? அத சொல்லு மொதோ… நான் என்னால என்ன பண்ண முடியுமோ அத பண்றேன்.”

 

 

“என்னடா புரியாம பேசுற, நாம செய்யக்கூடிய விஷயமா இருந்தா நான் ஏன் இப்டி புலம்ப போறேன்… 

 

 

படத்தோட முதல் பாகம் வெளி வந்து பயங்கர வெற்றி குடுத்தது… 

 

 

இப்போது அதோட அடுத்த பாகத்துக்கு எல்லாம் தயாரான பிறகு இப்டி பண்ணிட்டாளே!.. அந்த அரவேக்காடு மாது.”

 

 

“என்னதான் படத்தோட ஹீரோயின் ஆஹ் இருந்தாலும் இப்டி அவ நம்மளோட எதிர் பார்ட்டிய காரணம் இல்லாம கல்யாணம் பண்ணது கொஞ்சம் புதிரா இருக்குடா பிரதாப்.”

 

 

“சோழியன் குடுமி சும்மா ஆடுமா? கண்டிப்பா நமக்கு பின்னால் பெரிய சதி உருவாகுதுடா. எதுக்கும் நம்ம கொஞ்சம் கவனமா இருக்கனும்டா.” 

 

 

“சரிடா நீ கவலை படாத அதான் நான் இருக்கேன்ல… நீ சாப்பிட்டு நிம்மதியா தூங்கு, எனக்கு இந்த பிரச்சனையை சரி செய்ய ஒரு வாரம் மட்டும் டைம் குடு.”

 

 

ஒரு வாரத்தில் இவனால் என்ன செய்ய முடியும் என்று பிரதாப்புக்கு தெரியவில்லை. ஆனாலும் நண்பனை இதற்கு மேல் வருத்தக் கூடாது என்பதால் பொய்யாய் சரி என்று தலையை ஆட்டி வைத்தான்.

 

 

இருவரும் இணைந்து இரவெல்லாம் மதுவை குடித்து கவிழ்த்தி, ஒரே அட்டகாசம் செய்தனர். முடிவில் பிரதாப் மனம் பிரச்சனையை கொஞ்சம் மறந்ததும், மாதவன் அவனை கைத்தாங்கலாய் பிடித்து சென்று அவன் அறையில் படுக்க வைத்தான்.

 

 

அடுத்த நாள் காலை பிரதாப் கம்பெனிக்கு கிளம்ப தயாரான நிலையில், “மாதவா ,மாதவா!…. என்ன ஆளவே காணும் . நான் இருக்கிறேன்னு பகுமான சொல்லிட்டு நேத்து ராத்திரியோட ராத்திரியா எங்கையும் ஓடிப் போய்ட்டானா? சரி நம்ம கிளம்புவோம்” என்று புறப்பட்டான்.

 

 

கம்பெனிக்கு வரும் வழி எல்லாம் தன் உயிர் நண்பனுக்கு போன் செய்து பிரதாப் ஓய்ந்தே போய் விட்டான்.. 

 

 

கம்பெனியை அடைந்த உடன் அங்கே பத்திரிகை, மீடியா என அனைவரும் ஆபிஸ் முன்னே படையெடுத்து நிற்க, ‘இப்ப இவனுங்கள வேர சமாளிக்கணுமா?!’ எனும் அலுப்பு பிரதாப்பின் மனதினுள்.

 

 

இதற்கிடையில் மாதவன் வேறு போனில், “டேய் நண்பா! எனக்கு ஒரு பத்து நாள் லீவு வேணும். என்ன தேடாத..” என்று சொல்லிவிட்டு பிரதாப் பதில் சொல்லும் முன்பே காலை கட் செய்துவிட்டான்.

 

 

குழம்பிய வண்ணம் அகம் இருந்தாலும் முகத்தை சிரித்த வாக்கில் வைத்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினான் பிரதாப்..

 

 

“சார், முதல் படமே இன்னும் வெற்றி நடை போட்டுட்டு இருக்கு, அதுக்குள்ள ரெண்டாம் பாகம் வரபோதுன்னு சொல்லி இருக்கீங்க. அதுக்குள்ள எப்படி சார் கதையை தயார் செஞ்சீங்க?”

 

 

“அட என்னங்க நீங்க?.. முதல் படம் வந்து கிட்டத்தட்ட பத்து மாசம் ஆக போது. முதல் படத்துக்கு கதை ரெடி பண்ணும் போதே ரெண்டாவது பாகத்துக்கும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டேன். எவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் படம் ரிலீஸ் ஆகிவிடும்” என்று பொய்யாக ஒரு புன்னகையை கூறி விட்டு நகர…

 

 

“சார், இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போங்க. முதல் பாகத்தை மாதிரியே ஹீரோ, ஹீரோயின் அப்புறம் நீங்கனு உங்க வெற்றிக் கூட்டணி இந்த படத்துலயும் இருக்குமா?”

 

 

“நிச்சயம்‌ இருக்கும்…..”

 

 

“சார்…. சார்..” என்று சிலர் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வர முற்பட்டனர்.

 

 

ஏற்கனவே உச்ச கட்ட கடுப்பில் இருந்த பிரதாப் அடுத்து வந்த கேள்விகளை தவிர்க்க தன்னுடைய பாடி கார்ட்ஸ் மூலம் சிக்னல் கொடுத்து விட்டு… உள்ளே நுழைந்தான்.

 

 

வெளியே மீடியா ஆட்கள், “சார் ஹீரோயின் பத்தி பரபரப்பா ஒரு நியூஸ் போய்ட்டு இருக்கே அது உண்மையா?

 

 

சார் ஏன் எதுக்குமே ஆன்செர் பண்ண மாட்டிக்கிங்க.. அதே ஹீரோயின் தான் வேணும்னு ரசிகர்கள் அங்க ஆர்ப்பாட்டம் பன்றாங்க , அத பத்தி எதுனா சொல்லுங்க சார்?..” என்று காற்றின் வழியிலேயே தன் கேள்விகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

 

 

தன்னைச் சீண்டும் விதமாக அவர்கள் கேட்கும் கேள்விகள் காதில் நுழைந்தாலும், எதையும் கேட்கத் அதுபோலவே நடித்த பிரதாப் கோபக்கனலில் கொந்தளிக்கும் கண்களோடு தன் அறையை அடைந்தான்…

 

 

‘எவ்வளவு தைரியம் இருந்தா என்ன வம்பு இருக்குற மாதிரி கேள்வி கேட்பாங்க?

 

 

இந்த மாதவன் என்ன பண்ண போறான்?., எங்கே போனான்?., இங்க நான் ஒத்தையில உட்கார்ந்துகிட்டு என்ன பண்ண?., எப்படி இத சமாளிக்க?’ என ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

 

 

அவனது அடுத்தடுத்த நாட்களும் இப்படியே கடந்தன…

 

 

இரண்டு வாரம் கழிச்சு , மாதவனிடம் இருந்து போன் அழைப்பு. 

 

 

எடுத்த வேகத்தில், “அடேய் மாதவா! பத்து நாள் லீவு ,நடூல போன் பண்ணாலும் எடுக்கறது இல்ல., இங்க இந்த பத்து நாள் எனக்கு நரகம் போல பித்து பிடிச்சு அலைஞ்சு, அவன்கிட்ட இவன்கிட்டனு பொய் சொல்லி, எவ்வளவு கேள்விக்கு பதில் சொல்லி.. நொந்து நூடுல்ஸாகிட்டேன்டா. எண்ணிய இப்டி தனியா விட்டுட்டு போற அளவுக்கு இந்த டைம் உனக்கு அப்டி என்ன அவசர வேலை?”… என மூச்சு வாங்க பேசி முடித்தான் பிரதாப்.

 

 

அந்த பக்கம் இருந்து.. சப்தம் ஏதும் இல்லை.

 

 

“அடேய் , இருக்கியா ? இல்ல செத்து கித்து தொலைச்சுட்டியாடா ?”

 

 

“இருக்கேன் பிரதாப்”

 

 

“அப்போ பேசுடா…”

 

 

“சரி எனக்கு இப்போ.. ஒரு ஆடி கார் வாங்கி தருவியா? இல்ல லம்போகினியா?….”

 

 

“அமரர் ஊர்தி வாங்கித்தரலாம் இருக்கேன். நான் இங்க என்ன நிலமைலே இருக்கிறேன், நீ என்னடானா.. காரு வாங்கிதா ,வீடு வாங்கித்தானு சொல்லி என்ன கடுப்பு ஏத்திக்கிட்டு இருக்க..”

 

 

“நான் சொல்லப் போறத, இல்ல இல்ல நான் காட்ட போறத பாத்தா ,கண்டிப்பா எனக்கு கார் வாங்கி தருவ. சொல்ல முடியாது வீடு கூட வாங்கி குடுப்ப…”

 

 

“உனக்குத்தான் ஏற்கனவே மூன்று கார் ,ஐந்து வீடுன்னு இருக்கே?… கடைசியா உன்னோட பிறந்த நாளுக்கு கூட ஒரு ஆடி குடுத்தேனே ,இப்போ எனக்கு உதவி பண்ணுவியா ? மாட்டியா? அதை சொல்லுடா முதல்ல..”

 

 

“சரி சரி அழாத, உன் போனுக்கு ஒரு போட்டோ அனுப்பிருக்கேன் பார்த்துட்டு கூப்டு.,” என சொல்லிவிட்டு மாதவன் போனை துண்டித்தான்…

 

 

போனில் ,…. ஒரு பெண்ணுடைய போட்டோ, ஆம்! அவளேதான்… விறுவிறுவென மாதவனை அழைத்தான் பிரதாப்…

 

 

“மாதவா,…..” என்று சந்தோஷம் கொப்பளிக்க கூப்பிட்டான்.

 

 

“பார்த்தாயா, என் திறமையை…” என பெருமை பீற்றினான் மாதவன்.

 

 

“ஆமாம்டா, அவளுக்கு நல்லா வேணும்… கல்யாணம் பத்தின அனவுன்ஸ்மெண்ட் வந்து ஒரு மாதம் கூட முடியல, அதுக்குள்ள இப்டி ஆயிட்டே அவ நிலைமை… 

 

 

இதற்குத்தான் உண்ட வீட்டுக்கு உபத்திரம் பண்ண கூடாதுனு சொல்லுவாங்க பெரியவங்க… சரி சரி அவளை நான் மன்னிச்சுட்டேன்னு சொல்லி…. இங்க அழைச்சுட்டு வா…”

 

 

“என்னடா சொல்ற எனக்கு கொஞ்சம் விளங்குற மாறி சொல்லு, உண்ட வீடு உண்ணாத வீடுன்னு பொலம்பிட்டு இருக்க,.. ஒரு பத்து நாள் தானே உன்ன விட்டுட்டு வந்தேன் அதுக்குள்ள இப்டி பையித்தியம் ஆயிட்டியே ..”

 

 

“பையித்தியம்., ஏன்டா நான் பையித்தியம் ஆகணும்… அவதான் பையித்தியம் ஆகணும்… எவனையோ நம்பி கல்யாணம் முடிச்சதுக்கு இப்போ பாரு எங்கையோ வயக்காட்டுக்குள்ள என்னத்தையோ கிளறிக்கிட்டு இருக்கா…”

 

 

“அடேய் … ஓஹோ…. ஹாஹா…. எனக்கு புரிஞ்சுருச்சு…”

 

 

“என்னடா ஆச்சு ஏன் சிரிக்குற…”

 

 

“உன்ன வச்சுக்கிட்டு ஒரு ஊறுகாய் கூட போட முடியாது போலடா … அவ ஸ்மிர்தி …. இவ சரஸ்வதி… ”

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!