4.ராட்சசனின் காதல் பாவை

4… ராட்சசனின் காதல் பாவை

போன பகுதியில்:

சுனில் அங்கே நின்று இருந்தான். அவன் செல்லும் வரை அவன் காரையே பார்த்திருந்தவன், திரும்பிக் கீழே அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தான்.

“இந்தப் பெண் இங்கே எப்படி வந்தாள்?” என்று யோசனையாக அவளைப் பார்த்தவன்,

இனி…

“சிஸ்டர், நீங்க யாரு? நீங்க எப்படி இங்க வந்தீங்க?” என்று கேட்டான் சுனில் அவளைப் பார்த்து.

ஆனால் அவளோ மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அவன் கேட்ட கேள்வியில் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஆனால் அவளால் பேச முடியாமல் அவனை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால், அந்த ராட்சசனின் பிடியில் அவள் ஒரு நிமிடம் எமலோகமே போய் வந்திருந்தாள்.

அவள் பேச சிரமப்படுகிறாள் என்று தெரிந்தவுடன், அங்கு நின்ற பாடிகார்ட்ஸிடம் தண்ணீர் கேட்டவன், அதை வாங்கி அவளிடம் குடிக்கக் கொடுத்தான்.

அந்தத் தண்ணீரைக் குடித்தவள், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

“அண்ணா, நான் பார்ட் டைம் ஜாப் பாத்துட்டு வீட்டுக்குப் போயிட்டு இருக்கும் போது, என்னை சில ரவுடி பசங்க துரத்தினாங்க. அவங்களுக்கு பயந்து நான் ஓடி வர, அப்போ இந்த இடத்துக்குள்ள வந்துட்டேன்…” என்று பேச முடியாமல் பேசினாள் அந்தப் பெண்.

அந்தப் பெண் சொன்னது அனைத்தையும் கேட்டவன், ஒரு பாடிகார்ட்டை அழைத்தான்.

“இங்க பாருங்க காட்ஸ், இந்தப் பொண்ணைப் பத்திரமா ஆட்டோ ஏத்தி விட்டுட்டு வாங்க,” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்ட அந்தக் காட், சரி என்பது போல் தலையசைத்தவர், அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றார்.

அவர் அங்கிருந்து சென்றதும், அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒரு இடத்தில் ஒன்று சேர்த்தவன்,

“இங்க பாருங்க, என்னோட பாஸ் பத்தி உங்களுக்கு நான் சொல்லணும்னு அவசியம் கிடையாது,” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்ட அந்தக் கூட்டத்தில் ஒருவன்,

“என்ன சார், எங்களை மிரட்டுறீங்களா?” என்று கேட்டான்.

“நீங்க இவ்ளோ ஓபனா கேட்கறதுனால, நானும் ஓபனா பதில் சொல்றேன். ஆமா. ஆனா இந்த மிரட்டல் எனக்காக இல்ல, உங்களுக்காகவும் உங்க பேமிலிக்காகவும்,” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்டவுடன் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டவர்கள், கடைசியாக அனைவரும் பேசி முடித்து ஒன்று சேர்ந்து சுனிலிடம் பேசத் தொடங்கினார்கள்.

“இப்ப எங்களை என்ன சார் பண்ண சொல்றீங்க?” என்று ஒருவன் கேட்டான் அந்தக் கூட்டத்திலிருந்து.

“உங்க கேமராவில் இருக்கிற வீடியோ, போட்டோஸ் எல்லாமே டெலிட் பண்ணிடுங்க. உங்களுக்கு தேவையானது உங்களைத் தேடி வரும்,” என்று சுனில் சொன்னான்.

“என்ன சார் சொல்றீங்க? எங்களுக்கே லஞ்சமா?” என்று மீண்டும் கேட்டான் ஒருவன்.

“இங்க பாருங்க, நீங்க எப்படி நினைச்சாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல. உங்களுக்கு உங்களைப் பத்தி கவலை இருந்தா, நான் சொன்னதை செஞ்சுட்டு கிளம்பிட்டே இருங்க. உங்களுக்கு வர வேண்டியது உங்க கிட்ட வந்து சேரும்,” என்று சொன்னான் சுனில்.

இவன் இப்படி சொல்லிவிட, அதைக் கேட்டு அனைவருக்கும் விதுரனைப் பற்றி தெரிந்ததால், அதை அங்கேயே டெலிட் செய்து விட்டு சென்றிருந்தார்கள். சுனில் சொன்னது போல் அவர்களுக்கு தேவையானதை அனுப்பி வைத்திருந்தான்.

மீடியா பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைத்து பெருமூச்சு ஒன்று விட்டவனுக்கு, விதுரன் அப்பொழுதுதான் ஞாபகத்துக்கு வந்தான்.

“ஐயோ! இவரு வேற எங்க போய் இருக்காருன்னு தெரியலையே. இனி என்னைக் காப்பாத்துறதுக்குனே ஒருத்தர் வரணும் போலவே,” என்று வாய் விட்டே புலம்பியவன், விதுரனின் காரில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ். மூலம் அவன் எங்கு இருக்கிறான் என்று தெரிந்து கொண்டான்.

மீண்டும் யாருக்கோ மெசேஜ் செய்தான். அவனுக்கு அதிலிருந்து தேவையான மெசேஜ்கள் வந்தவுடன், மீண்டும் ஒரு சில மெசேஜ்கள் செய்தவன், அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

ஈ.சி.ஆர். கடற்கரை ஓரம் ஒரு பீச் ஹவுஸ் அமைந்திருக்க, அதைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு எந்த வீடும் இல்லை. அந்த இடத்தில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லை என்றாலும், அந்த வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அந்த இடமே நிசப்தமாக இருந்தது. புயலுக்கு முன்பு அமைதி என்பது போல், அந்த இடம் மிகவும் அமைதியாக இருக்க, அந்த வீட்டின் வெளிச்சம் மட்டும் பிரம்மாண்டமாக இருந்தது.

அந்த வீட்டுக்குள் ஒரு கார் நுழைய, ஓடி வந்து ஒருவன் கார் கதவைத் திறந்தான். அதில் வந்தது வேறு யாரும் இல்லை, சுனில்தான்.

சுனில் காரில் இருந்து இறங்கியவன்,

“பாஸ் என்ன பண்றாரு?” என்று கேட்டான் சுனில்.

“தெரியல சார். வர சொல்ல பயங்கர கோவமா இருந்தாரு. வந்த உடனே பார்க்குல போய்ட்டாரு. அவரு கோபத்தைப் பார்த்து எங்களுக்கே கொஞ்சம் பயமா இருந்தது,” என்று ஒரு பாடிகார்ட் சொன்னான்.

அதைக் கேட்ட சுனிலுக்கு மனதில் பயம் ஏற்பட்டது.

“ஐயோ! பாஸோட கோவத்தை எப்படி குறைக்கிறது? என்ன பலா போன அந்த புரோக்கர் ஆளால வந்த பிரச்சனை இதெல்லாம். மறுபடியும் அவன் எதனா சொதப்பி வைக்கட்டும், அவன நானே கொன்னுடுவேன்,” என்று சுனில் கோபமாகச் சொன்னான்.

இவன் இப்படி எதிரில் நிற்பவனிடம் சொல்லிக் கொண்டிருக்க, சரியாக அந்த கேட்டின் முன்பு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவன் சுனிலுக்கு அழைத்தான்.

உடனே அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்,

“யோவ், வந்துட்டியா?” என்று கேட்டான் சுனில்.

“சார், வந்துட்டேன் சார். வெளியதான் நிக்கிறேன்,” என்று சொன்னான் அவன்.

“சரி, ஓகே. அங்கேயே இரு. வரேன்,” என்று சொன்னவன் வெளியே சென்றான்.

இவன் வெளியே வந்து பார்க்க, அங்கு ஒரு நாற்பது வயது பெரியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் கோபமாகச் சென்றவன்,

“யோவ், என்னய்யா சொன்ன? என் கிட்ட கார் பார்க்கிங் இல்ல, வெயிட் பண்ணுறேன்னுதானே சொன்ன?” என்று கோபமாகக் கேட்டான் சுனில்.

“சார், கோபப்படாதீங்க சார். சாரோட பேர் கேட்டவுடனே அந்தப் பொண்ணு வர மாட்டேன்னு சொல்லிடுச்சு சார். நான் உங்களுக்கு இன்பார்ம் பண்ணலாம்னு பார்த்தா, நாட் ரீச்சபிள் வந்தது,” என்று சொன்னான் அவன்.

“ஏன்யா, போன் தான் பண்ணணுமா? ஒரு மெசேஜ் பண்ணி இருந்தா கூட பரவாயில்லையே. உன்னால ஏகப்பட்ட பிரச்சனை ஆயிடுச்சு. இதுல ஏதாவது எக்கு தப்பா நடக்கட்டும், உன் உசுருக்கு நான் உத்தரவாதம் இல்லை,” என்று சொன்ன சுனில், காருக்குள் இருக்கும் பெண்ணை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அந்தப் பெண்ணிடம் அவனின் அறை எது என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

அந்தப் பெண்ணும் சரி என்பது போல் தலையாட்டிவிட்டு அந்த அறைக்குள் நுழைய, அங்கு இருந்த நிலவரத்தைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்டாள்.

ஒரு மணி நேரம் முன்பு…

பப்லிருந்து வந்த விதுரன், தனக்கென்று பிரத்யேகமாக வீட்டில் ரெடி பண்ணி வைத்திருந்த பாருக்குள் புகுந்தவன், இருந்த கோபத்தில் கண்முன் தெரியாமல் குடிக்கத் தொடங்கினான்.

ஏற்கனவே அவன் மதுவை அருந்தியிருக்க, பெண்ணவளின் பிஞ்சுக் கரங்கள் அவன் கன்னத்தைப் பதம் பார்த்ததில் அனைத்து போதையும் இறங்கி இருந்தது. அதில் கோபமும் கண்முன் தெரியாமல் ஏறி இருக்க, அதை நினைக்க நினைக்க அவனுக்குக் கோபம் தலைக்கேற, குடிக்கத் தொடங்கினான்.

கிட்டத்தட்ட அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களில் பாதி காலியாகி இருக்க, அப்பொழுதும் அவனுக்குக் கோபம் குறைந்த பாடில்லை. ஏன், போதையும் ஏறிய பாடில்லை.

அதில் இன்னும் வெறி கொண்டவனுக்கு, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அங்கு இருக்கும் மதுபான பாட்டில்கள் அனைத்தையும் போட்டு உடைக்கத் தொடங்கினான்.

அப்பவும் அவன் கோபம் குறையாமல், அங்கிருந்து தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு கண்ணில் தெரியும் பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்து நொறுக்கி இருந்தான்.

அங்கு இருந்த பொருட்கள் மட்டுமே உடைந்ததைத் தவிர, அவன் கோபம் குறையவில்லை.

அவன் ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருக்க, அப்பொழுது அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள். அந்த அறையைப் பார்த்து ஒரு நிமிடம் பதறிப் போனவள், எதிரில் நிற்கும் ராட்சசனைப் பார்த்துப் பயந்து கத்தவே தொடங்கினாள்.

அந்தப் பெண் கத்தியதில் நிமிர்ந்து பார்த்தவனுக்கு, அவள் முகமே கண்ணில் தெரிய, அவளை இழுத்து அவள் கன்னத்தில் நான்கு அறைகள் விட்டிருந்தான்.

அந்த வலி தாங்க முடியாமல் அந்தப் பெண்,

“சார், விட்டுருங்க சார்,” என்று கதறினாள்.

அவள் கதறல் கீழே வரை கேட்க, சுனிலுக்குப் புரிந்து விட்டது அவன் கோபம் எந்த அளவு இருக்கிறது என்று. ஆனால் இப்பொழுது அவனால் எதுவும் செய்ய முடியாது.

அவன் போனால் அவனுக்கும் அதே நிலைதான்.

பாவம், அந்தப் பெண்ணைக் காப்பாற்று என்று கடவுளை வேண்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை இழுத்துக் கட்டிலில் தள்ளியவன், அவள் மீது படரத் தொடங்கினான்.

ஆனால் அவனுக்கு மோகத்தைவிட கோபம்தான் மேலோங்கி இருக்க, அந்தக் கோபத்தில் அவனுக்கு ஹார்மோன்கள் வேலை செய்யாமல் போக, அதில் இன்னும் கடுப்பானவன் அவளை அங்கிருந்து அடித்து விரட்டி இருந்தான் விதுரன்.

அந்தப் பெண்ணோ விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.

அவனின் கோபத்தை அங்கு உள்ள அனைவரும் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் இன்று அவன் கோபம் அனைத்தையும் கடந்து போய் இருப்பதைப் பார்க்கும்பொழுது, அனைவருக்கும் பயம் தோன்றியது.

மதுவை நாடினால் ஓரளவுக்கு அவன் கோபம் கட்டுப்படும். மதுவை நாடினால் முழுவதும் போய்விடும். ஆனால் இன்று இரண்டையும் நாடியுமே அவனுக்கு கோபம் குறையாமல் இருப்பதைப் பார்த்தவர்களுக்கு, தங்களுக்கு என்ன நிலையோ என்று நினைத்துப் பயந்து கொண்டு நின்றிருந்தார்கள்.

ஆனால் விதுரனோ தன் அறையில் இருந்த மிச்ச மீதி பொருட்களையும் அடித்து நொறுக்கி இருந்தான்.

அப்பவும் அவன் கோபம் அடங்காமல்,

“என்னைய வாடி அடிச்ச? என் கண்ணுல படாத வரைக்கும் தான் உனக்கு நிம்மதி. என் கண்ணுல பட்ட அடுத்த நிமிஷத்துல இருந்து உனக்கு நரகம்தான்,” என்று அந்த இடமே அதிரும்படி கர்ஜித்தான்.

வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் உடல் நடுங்கித்தான் போனது.

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

காதல் பாவை தொடரும்…

இப்படிக்கு,உங்கள் அன்புத் தோழி…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!