மாயோன் – 21
நதியா,”ஸ்ருதி நீ என்ன டா இப்படி சொல்ற “
“என்னை மன்னிச்சிடுங்க ஆன்ட்டி”என்றவள் அழுது கொண்டிருந்தாள்.
ஸ்ருதி இப்படி கூறியதும் புவனேஷ் மீது உயிரையே வைத்திருப்பவள் ஏன் இந்த திருமணம் வேண்டாம் என்கிறாள் என்று அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது.
நதியா, “ கார்த்திக் கொஞ்சம் புரியும்படியும் சொல்லுப்பா. நீ சொல்றதை வச்சுப் பார்க்கும்போது கண்டிப்பா எங்க வீட்டுக்காரருக்கு இதில் சம்மதம் இருக்கு அப்படித்தானே?”
“உங்களுக்கு கற்பூர புத்தி ஆன்ட்டி உடனே புரிஞ்சுகிட்டீங்க. இனி நான் சொல்ல எதுவும் இல்ல.உங்கள் மகனை கேளுங்க” என்றான் கார்த்திக் ராஜன்.
“புவனேஷ் என்னடா நடக்குது இங்க
?நீயாவது ஒழுங்கா சொல்லு உங்க அப்பா என்ன செய்தார்”
புவனேஷ் தான் ஸ்ருதியிடம் பேசியதை மட்டும் கூறினான். அதைக் கேட்ட நதியா அவனை ஓங்கி அறைய ஸ்ருதி இதைப் பார்த்தவள் அங்கே நிற்க முடியாதவளாய் தனது அறைக்கு ஓடினாள் .
நதியா,”இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல டா .ஒரு பெண்ணோட மனசை இப்படி உடைச்சிட்டியே.
இதே நிலைமை உனக்கு வந்தப்போ நாங்க எப்படி புழுவாய் துடிச்சோம் .அதே மாதிரி தானடா அப்போ இந்தப் பொண்ணுக்கும் இருந்திருக்கும் எதுக்காக இப்படி பண்ண சொல்லு டா”
“அம்மா நான் மனசார எதையும் செய்யல மா.அதுக்காக நான் செஞ்சதை நியாயப்படுத்த விரும்பல.
ஸ்ருதி என்னை மன்னிக்க மாட்டாள் எனக்கு அது தெரியும் .தெரிஞ்சுதான் நான் அப்படி ஒரு காரியத்தை செய்தேன்.என்றவன் அப்பா நீங்க இப்ப கூட வாயைத் திறக்க மாட்டீங்க இல்லையா?”
மணிமாறன் ,”என்னடா என்ன விளையாடறியா?நீ செஞ்சது எதுவும் தப்பு கிடையாது .சரியா தான் செஞ்சிருக்க. தொல்லை விட்டது என்று சந்தோஷமா இருடா”
நதியா ,”நிறுத்துங்க என்ன பேசுறீங்க நீங்க அவன் செஞ்சது சரியா?நமக்கும் ஒரு பொண்ணு இருக்கா ஞாபகம் இருக்கா. அவளும் நாளை இப்படி வந்து நின்னா வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருப்பீங்களா? நீங்க என்ன செஞ்சீங்க உண்மையை சொல்லுங்க.”
“என்ன நதியா ஓவரா வாய் பேசற
நான் சொல்றதுதான் முடிவு இந்த பொண்ணு நம்ம வீட்டு மருமகளா வர முடியாது.டேய் புவனேஷ் கிளம்பு நாம வீட்டுக்கு போகலாம்” என்றார் மணிமாறன்.
“அவனை இப்போ எங்க கூப்பிட்றீங்க.உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? அவள் யாரு உங்களுடைய சொந்த தங்கச்சி பொண்ணு தானே? சின்ன வயசுல இருந்து அம்மா இல்லாமல் வளர்ந்தவளை நாம இதுவரை போய் பார்த்தது கூடக்கிடையாது.ஆனால் அவள் நம்ம வீட்டு மருமகளா வராளே சொல்லி நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்.எல்லாத்தையும் குழிதோண்டி புதைச்சிடுவீங்க போல. உங்ககிட்ட எனக்கு என்ன பேச்சு புவனேஷ்..
சொல்லுடா நீ எதை மனசில் வச்சிக்கிட்டு அப்படி நடந்துகிட்ட”
“அம்மா அப்பாக்கு ஸ்ருதியைப்பத்தி முழுசா புரியவைக்க தான் நான் இப்படி பண்ணேன் .அப்பவும் இவர் புரிஞ்சுக்கல .அதுதான் எனக்கு வேதனையாக இருக்கு, எப்போதிலிருந்து இவர் இப்படி கல்நெஞ்சக்காரரா மாறினாருன்னே எனக்கு தெரியல மா. இந்த ஜென்மத்தில் என் மனைவி என்னுடைய ஸ்ருதி மட்டும் தான் “என்றான் புவனேஷ்.
மணிமாறன்,”டேய் உனக்கு என் சம்மதம் தேவை இல்லையா?”
“அப்பா உங்களோட சம்மதம் வேணும் என்றதால தானே என் ஸ்ருதியை அவ்வளவு காயப்படுத்தினேன்.ஆனால் நீங்க அதை புரிஞ்சுக்கல ..எனக்கு என்னுடைய ஸ்ருதி முக்கியம் என்றவன் கார்த்திக் நான் அவளைப் பார்த்துட்டு வரேன்” என்று ஸ்ருதியின் அறைக்குச் சென்றான் புவனேஷ்.
மணிமாறனும் தன்மகன் தன்னை எதிர்த்து பேசுவதாக நினைத்தவர் வீட்டிற்கு கிளம்பினார்.
ஸ்ருதி அழுது கரைந்தவள் தன் அம்மாவின் படத்தை கையில் ஏந்தியவள்,”அம்மா எனக்கு மட்டும் ஏன் மா இப்படி நடக்குது. நான் அதீத பாசம் வச்ச இரண்டு பேருமே என்னை புரிஞ்சுக்கல மா.நீ உயிரோடு இருந்திருந்தா இது நடந்திருக்காது தானே என்னால முடியலமா.
புவனேஷ் மாமா இப்படி செய்வார்னு நான் எதிர்பார்க்கல .எனக்கு யாரும் வேண்டாம்மா..உன்னுடைய நினைவுகள் மட்டும் போதும் “என்றவளின் வார்த்தைகளில் புவனேஷ் தீச்சுட்டாற் போல் பதறியவன் ஸ்ருதியின் தோளில் கை வைக்க அவனைத் திரும்பிப் பார்த்தவள் அவன் கையை தட்டிவிட்டவள் ,”அம்மா இவரைப் போக சொல்லுங்க” என்றாள்.
“ஸ்ருதி மா நான் செஞ்சது எல்லாமே தப்புதாண்டா.. கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையா கேளு மா”
“நீங்க சொல்றத கேக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல மிஸ்டர் புவனேஷ் .நீங்க இங்கே இருந்துப் போங்க”
புவனேஷ் ஸ்ருதியின் கையிலிருந்து அவனின் அத்தை படத்தை பார்த்தவன் ,”அத்தை அவளுக்கு நான் இங்கே இருக்கறது பிடிக்கலையா? இல்லை என்னையே பிடிக்கலையா கேளுங்க..எனக்கு இப்பவே பதில் சொல்ல சொல்லுங்க நான் இங்கிருந்து போயிடறேன்”
“ஹலோ எனக்கு உங்களை மாதிரி மனசு புண்படும்படி பேசத் தெரியாது.
உங்களை முதல்ல காலேஜில வச்சு பார்த்ததும் உண்மையா சொல்றேன் .எனக்கு எங்க அம்மா முகம் தான் ஞாபகம் வந்துச்சு கருத்து தெரிஞ்சு நான் என் அம்மாவுடைய ஸ்பரிசத்தைக் கூட அனுபவிச்சது கிடையாது .நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.உங்களை காலேஜில் பார்த்த அன்றைய நாளில் இருந்து தினமும் உங்களுடைய ஒவ்வொரு செய்கையையும் நான் எங்க அம்மா கிட்ட வந்து சொல்லாம இருக்க மாட்டேன். அப்பா இருந்தும் இல்லாமல் இருக்கிற எனக்கு மனசு கஷ்டப்படும் போதெல்லாம் எங்க அம்மாகிட்ட தான் புலம்புவேன்.
என்னோட அம்மா சாயலில் உங்களைப் பார்த்தவுடன் என்னோட மனசு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு .எங்க அம்மாவே திரும்பக் கிடைச்சிட்டாங்க நினைச்சேன்
ஆனால் ஆனா நேத்து நீங்க பேசியதைக் கேட்கும்போது நான் எதுக்கு உயிரோட இருக்கனும் என்று தோன்ற ஆரம்பிச்சிடூச்சு..
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க
நான் இப்படியே உங்கள் நினைவுகளோடு இருந்துட்டு போறேன்.உங்களுக்கு என்னை மாதிரி கிடையாது .நல்ல உறவுகள் இருக்காங்க.. அவங்க சொல்றதைக் கேட்டு நடந்துக்கோங்க “என்று கதறி அழுதாள் ஸ்ருதி.
பெண்ணவள் பேசிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகளில் ஆடவன் அவனோ பெரும் துயரத்தை அனுபவித்தவன் தன்னை சமன்படுத்தி கொண்டவன்,”ஸ்ருதி நான் உன்கிட்ட கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல உனக்கு என்னை பிடிக்கலையா சொல்லு”
“டேய் ஏன்டா ஏன் இப்படி என்னை ப் படுத்தற. உன்னை பிடிக்காம தான் உன் பின்னாடி சுத்தி சுத்தி வந்தேனா? நீ என் காதலை ஏத்துக்காம இருந்திருந்தாக் கூட எனக்கு தெரியாதுடா.ஆனால் காதலை ஏத்துக்கிட்டு என்னை வார்த்தையால கொன்னியே என்னால முடியலடா. ப்ளீஸ் என்னை விட்டு வெளியே போ”
“என்னை வெளியே அனுப்ப ஏண்டி இப்படி துடிக்கிற ..வெளியே மட்டும் அனுப்புற எண்ணத்தில் இருக்கியா ?இல்ல உன் மனசில் இருந்து என்னை தூக்கி போட்டுட்டியா? அப்படி ஒரு எண்ணம் இருந்தா இப்பவே சொல்லுடி.உன் கண் எதிரில் என் உயிரை விட்டுடறேன்.நீ என் தொல்லை இல்லாம நிம்மதியா இரு”என்றான்.
ஸ்ருதி ஆதில் அதிர்ச்சியாகி அவனை பார்த்தவள் ,”என்னடா உனக்கு இப்போ பிரச்சனை? ஏன்டா இப்படி என்னை சாகடிக்கிற
என்னால முடியலடா .பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு எப்படிடா என் மேல பழியை போட உனக்கு மனசு வருது .நீ எதுக்குடா சாகனும் .நான் நான் சாகறேன். அப்போதாவது நிம்மதியா இருப்பியா .போ போய் உன்னோட அப்பா சொல்ற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.” என்று அங்கிருந்த கண்ணாடி டம்ளரை கையில் எடுக்க அதற்குள் இவன் பதறியவனாய் அதை வாங்கி வைத்தவன் அவளை ஓங்கி அறைய தன் தாடையில் எரிச்சலை உணர்ந்தவள் கண்களில் கண்ணீர் வர அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை புவனேஷ் இழுத்து அணைத்துக் கொள்ள அவனின் அணைப்பில் நீ தான் எனக்கு எல்லாம் என்பதை உணர்ந்தாள் பெண்ணவள்.
“ஏண்டி இப்படி பண்ற நீ இல்லாம நான் எப்படிடி என்றவன் இப்ப சொல்லுடி நான் உனக்கு வேண்டாமா ?உன்னை விட்டுட்டு போறேன் நீ நிம்மதியா இருப்பியா?”
“ப்ளீஸ் மாமா அப்படி பேசாதீங்க “என்றவள் அவனுள் சுகமாய் புதைய அவனும் அவளை மேலும் மேலும் இறுக்கி அணைத்தவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்தவன்,” ஸ்ருதி வா நாம திருமணம் பண்ணிக்கலாம்” என்றான்.
“மாமா நீங்க என்ன லூசா? உங்க அப்பா எப்படி பேசினார் பார்த்தீங்க தானே?எவ்வளோ ஏங்கியிருக்கேன் தெரியுமா ?நமக்கு தாய்மாமன் ஒருத்தர் இருக்கார் ..
அவர் வந்திட்டா அவர் குடும்பம் நமக்கு உறவாய் கிடைக்கும் .நாமளும் பாசத்தை அனுபவிக்கலாம் ..ஆனால் இது எல்லாத்தையும் உங்க அப்பா ஒரு நிமிஷத்துல சிதைச்சிட்டார் “என்று அழுதவளை தன் தோள்மேல் சாய்த்துக் கொள்ள அவளும் மேலும் அழுக அவளின் விசும்பல் அடங்கும்வரை அமைதி காத்தவன் தான் எதுக்காக அப்படி நடந்துக்கிட்டேன் என்பதை கூற ,இவளோ அவனை அடித்தவள்
“என்னடா என்ன அப்பாவும் ,பிள்ளையும் விளையாடறீங்களா? என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு
. உங்க அப்பாவுக்கு புரியவைக்க உனக்கு வேற வழியே தெரியலையா.அதுக்காக என் மனசை இப்படி கஷ்டப்படுத்துவியா. என்ன நடந்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க என்ற திமிரு அப்படித்தானே?
போடா போ என்கிட்ட பேசாத நான் உன்கிட்ட எதிர்பார்த்தது எல்லாம் உன்னுடைய carring ,affection . .இது மட்டும் தான்.அது எனக்கு உன்கிட்ட இருந்து நிரந்தரமா கிடைச்சா போதுமே.. ஆனா நீ
இப்படி பண்ணிட்டியே மாமா .?”என்றவளை சமாதானம் செய்த புவனேஷ். அடுத்து சொன்னதை கேட்டவள் ஆச்சரியப்பட்டாள்.
