ராட்சசன் 5

இன்று…

கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், 

” இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று ஒருபுறம் பெருமையாக மார்தட்டி கொண்டாலும், ஆண்டிற்கு ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை போலீஸ் துறையின் புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் ரவுடிகள் மற்றும் தாதாக்களின் அட்டகாசம் பரவலாக அதிகரித்து வருகிறது. ” என்று நாளிதழில் உள்ள செய்தியை தட்டித்தடுமாறி வாசித்த அச்சிறுவன். 

தன் அருகில் அமர்ந்து பைபிள் வாசித்துக்கொண்டிருக்கும் மதர் மேரியிடம் ,

“மதர் இந்த ரவுடிகள், தாதாக்கள்னா யாரு ?? இவங்க ஏன் கொலை பண்ணிட்டு இருக்காங்க ??” – தன் வயதிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்டான் அச்சிறுவன்.

” அவங்க பணத்துக்காக தப்பான காரியங்களை செய்யிறவங்க. பொது மக்களுக்கு கஷ்டம் கொடுக்குறவங்க , அவங்க ரொம்ப ஆபத்தானவங்க ” என்றார் மேரி.

“ ஓ அப்போ அவங்களுக்கு யாரு பனிஷ்மென்ட் குடுப்பாங்க ”

“போலீஸ் தான் பனிஷ்மென்ட் குடுப்பாங்க. போலீஸுடைய வேலையே  இந்த மாதிரி தப்பு பண்றவங்களை தண்டிக்கிறது தான்”

” ஓ அப்போ நான் பெரியவன் ஆனதும் போலீஸ் ஆகி தப்பு பண்றவங்க எல்லாருக்கும் பனிஷ்மென்ட் கொடுப்பேன். இந்த ரவுடிங்க ஏற்படுத்தின கலவரத்துல தான என் அம்மா அப்பா செத்து போனாங்க. நான் அதுக்கு போலீஸ் ஆகி அவங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுப்பேன் ” – என்று உறுதியுடன் கூறிய அச்சிறுவனை கண்ட மதர் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.

இன்று மும்பையில்…

 

பங்களாவுக்கு முன்பு நின்றிருந்த மதன் அர்ஜுனிடம்,

“அர்ஜுன் இது யார் வீடு டா ?” – என்று கேட்டான்.

” வா உனக்கே தெரியும் ” – என்ற அர்ஜுன் காம்பெளண்ட் கேட்டின் மீது கையை வைத்து மெல்லத் தள்ளவும், அது சத்தம் இல்லாமல் உள்ளே திறந்து கொண்டது.

அர்ஜுன் வாசற்படிகளில் ஏறி அழைப்பு மணியின் பொத்தானில் கை வைத்து அழுத்திவிட, இருவரும் மெளனமாய் காத்திருந்தனர். அப்பொழுது கதவின் தாழ்ப்பாள் விலகவும், அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நின்றிருந்தார்.

அர்ஜுன் அவரை பார்த்து மெலிதாய் புன்னகைத்து,

“ஹலோ பாஸ்கர் ஸார்” என்றான்.

பாஸ்கர் அர்ஜுனை கண்டதும் சற்றே அதிர்ச்சியாகி,

“அர்ஜுன் நீங்களா! வாட்  ஏ சர்ப்ரைஸ் உள்ளே வாங்க” பதற்றத்தை மறைத்தபடி வரவேற்றார்.

பாஸ்கர், ஹோட்டல் பரடைஸின் உரிமையாளர் என்பதை அவரைப் பார்த்ததும் கண்டுகொண்ட மதனோ, ‘இந்த நேரத்தில இவர் வீட்டுக்கு ஏன் அழைச்சிட்டு வந்திருக்கான்’ என்று எண்ணியவன் ஒருவித குழப்பத்துடன் தன் நண்பனை பார்த்தான்.

அப்பொழுது, “ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்!” என்ற அர்ஜுனிடம்,

“அதெல்லாம் இல்லை உள்ளே வாங்க” என்றார் பாஸ்கர்.

இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். பாஸ்கர் அர்ஜுனிடம்  “என்ன அர்ஜுன் புதுசா திருமணமான கணவன் மனைவி தற்கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடிஞ்சதா?” என்று வினவினார்.

“ம்ம்ம் குற்றவாளிக்குப் பக்கத்திலேயே வந்துட்டோம் ஸார் பட் ஒரே ஒரு சந்தேகம்.”

பாஸ்கரின் முகம் இப்பொழுது சற்று வெளிறியது.

“வாட் டு யூ மீன்?” – குரல் நடுங்கியது.

“ரெண்டு பேர் மேல சந்தேகப்படறோம் ஸார். ஒருத்தர் நீங்க! இன்னொருத்தர் யாருன்னு நீங்க தான் சொல்லணும். ஏன்னா இதை நீங்க மட்டும் தனியா செய்யுறீங்களா இல்லை உங்களுக்கும் ஒரு பாஸ் இருக்கானான்னு தெரிஞ்சிக்கணும். சின்னதாய் ஒரு குழப்பம். அதைத் தெளிவுப்படுத்திக்கத்தான்” – என்பதோடு நிறுத்திக் கொண்ட அர்ஜுனின் இதழ்கள் நகைத்தது.

அர்ஜுன் சொன்ன மறுகணம் பாஸ்கர் சட்டென்று பின்னால் நகர்ந்து மேஜையின் இழுப்பறையைத் திறந்து எதையோ எடுக்க முயல,

அதை கணப்பொழுதில் கவனித்த மதன் சற்றும் யோசிக்காமல் தனது முதுகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்டலால் பாஸ்கரின் வலக்கரத்தில் சுட,

வலியில் துடித்தபடி அவர் கீழே சரிந்தார். 

பின்பு அவருடைய அருகில் சென்ற அர்ஜுன் அவரது நெற்றிப் பொட்டில் தன் பிஸ்டலை வைத்து அழுத்தி,

” ஏதாவது வில்லத்தனம் பண்ண முயற்சி செஞ்சா. ரெண்டு பேரும் தயவு தாட்சண்யம் பார்க்காமே சுட்டு கொன்னுட்டு போயிட்டே இருப்போம் ” – கடுமையாக எச்சரித்தான் .

அவரோ வலியில் துடித்தபடி சரி என்பதாய் தலையசைக்க அர்ஜுன் நிதானமான குரலில் பேச்சைத் தொடர்ந்தான்.

“ஸாரி ஸார் எனக்கு வேற வழியில்லை. சட்டத்துக்கு முன்னாடி எல்லாருமே சமம் தான். நீங்க ஒருத்தர மொபைல்ல பணம் கேட்டு மிரட்டுற ஆடியோ ஆதாரம், அப்புறம் உங்க ஹோட்டல் ரூம்ல இல்லீகளா யாருக்கும் தெரியாம பொருத்தப்பட்ட ஹிட்டன் கேமராஸ்ன்னு உங்களுக்கு எதிரா எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு. அதனால என்கிட்ட பொய் சொல்ல முயற்சி பண்ணாம என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.”

” என் மேல எப்படி உங்களுக்கு சந்தேகம் வந்தது ” – என்று கேட்டார் பாஸ்க்கர்.

“ இந்த கேஸ் ஆரம்பிச்சித்ததுல இருந்து உங்க மேல எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்துட்டே தான் இருந்துச்சு. அடிக்கடி நீங்க எனக்கு போன் பண்ணி இறந்து போனவங்க மேல கரிசனம் இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டீங்க. அது எல்லாமே எனக்கு கொஞ்சம் ஓவறா தெரிஞ்சுது. அப்பவே எனக்கு தெரிஞ்ச நம்பகமான போலீசை வச்சு. உங்களை மறைமுகமா கண்காணிக்கச் சொன்னேன். உங்க செல்போன் பேச்சுக்களை சைபர் க்ரைம் மூலமாய் மானிட்டரிங் பண்ணச் சொன்னேன்.”

பாஸ்கரின் உடல் வியர்வையில் நனைந்திருந்தது. 

“உங்க செல்போனை மானிட்டர் பண்ணிப் பார்த்த போது உங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சிது. பல பெரிய ஆளுங்க கூட எல்லாம் புரியாத கோட் வார்ட் யூஸ் பண்ணி பேசிருக்கீங்க. ஸோ இது எதுவுமே நீங்க தனியா பண்ணல நிறைய பேர் சப்போர்ட் பண்றாங்கன்னு தெரியுது”

பாஸ்கர் இப்போது உச்சபட்ச வியர்வையில் இருந்தார். தலை கவிழ்ந்த படி அமர்ந்திருந்தவர். சில நொடிகள் கழித்து,

“அர்ஜுன் நீங்க நினைக்கிற மாதிரி இந்த விவகாரத்துக்கு நான் முழுகாரணம் இல்லை. நான் ஒரு அம்பு மட்டுமே.” 

“தெரியும் ஆனா இதை எய்தது யாரு ? உங்களை போல இப்படி எத்தனை அம்புகள் அப்பாவிகளை வதைக்க காத்துக்கிட்டு இருக்குன்னு? தெரிஞ்சிக்க தான் நான் இங்க வந்திருக்கேன் ” 

” எனக்குத் தெரியாது. எல்லாமே ஃபோன் காண்டாக்ட் தான் முகத்தை கூட பார்த்தது கிடையாது ” 

“சரி இதுல உங்க வேலை என்னனு சொல்ல முடியுமா?” 

நீண்ட மௌனத்திற்கு பிறகு ஆரம்பித்தார் பாஸ்கர்,

“ ஹனிமூனுக்கு வர்ற கப்பிள்ஸ். காதல் ஜோடிகள் அப்புறம் வெளியூர்ல இருந்து எஜூகேஷனல் டூருக்கு வர்ற பொண்ணுங்க தங்கியிருக்கிற ரூம்ல.”

“சொல்லுங்க சார்?? செய்யிறதுக்கு அசிங்கமா இல்லை சொல்றதுக்கு மட்டும் அசிங்கமா இருக்கு  ”

“ அவங்களுக்கு தெரியாம கேமரா வச்சிருவோம். ”

“ என்ன மாதிரி கேமரா எங்க எல்லாம் வைப்பீங்க ??”

” பாத்ரூம்ல. பெடரூம்ல எல்லா இடத்துலயும் இருக்கும். வால் க்ளாக் , ஸ்விட்ச் போர்ட்ன்னு அவங்க கண்டே பிடிக்க முடியாத இடத்துல எல்லாம் வச்சிருப்போம் ” 

“அப்புறம் என்னன்னு நான் சொல்லட்டா. அந்த பொண்ணுங்களுடைய அந்தரங்கங்களை வீடியோ எடுத்து அவங்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட வேண்டியது. போலீசுக்கு போவேன்னு சொன்னா விடீயோவை நெட்ல போட்டுருவேன்னு பயமுறுத்த வேண்டியது. பணம் தர முடியாதவர்களை பெரிய பெரிய பணக்கார வெறி புடிச்ச நாய்ங்களுக்கு…” சொல்ல முடியாது நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன்,

“ச்ச சொல்லவே அசிங்கமா இருக்கு. நீங்க பண்ற இந்த எச்ச வேலைக்கு  கூலியா பெரிய தொகை உங்க அக்கவுண்டுக்கு வந்து சேரும். இல்லையா பாஸ்கர் ஸார்?” – பற்களை கடித்தபடி கேட்டான்.

மதன் அவர்களை குறுக்கிட்டு,

“இதுல உங்களுக்கு பேமெண்ட் எப்படி பாஸ்கர் ?” என்று கேட்க,

“அது அது வந்து” 

“மொத்தமா நனைஞ்சுட்டீங்க பாஸ்கர் இனிமே எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க முயற்சி பண்ணாதீங்க. அப்புறம் நிறைய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் .” – எச்சரித்தான் அர்ஜுன்.

நீண்ட பெருமூச்சுடன் ஆரம்பித்த பாஸ்கர் “இனிமேல் பொய் பேசி எனக்கு பயனும் இல்லை நான் சொல்லிடுறேன் ” 

“ ம்ம் ஆகட்டும் ”

“ஒரு விடியோவுக்கு அஞ்சு லக்ஷத்துல இருந்து ஒரு கோடி ரூபாய் வர கிடைக்கும். பணக்கார வீட்டு பசங்கன்னா ஒரு கோடிக்கும் மேல கூட கிடைக்கும். எவ்வளவு வந்தாலும் எனக்கு அதுல ஐம்பது சதவீதம் ஷேர் உண்டு. !” 

“சரி இனி முக்கியமான விஷயத்துக்கு வருவோம் அந்த தம்பதிகள் வினீத் , மீனாவ ஏன் கொலை செஞ்சீங்க?? யாரு செஞ்சது ?”

“ அவங்க போலீசுக்கு போவோம்ன்னு சொன்னாங்க. ”

“சரி அப்புறம் ?”

“நான் உடனே இந்தத் தகவலை எனக்கு மேல உள்ளவங்களுக்கு அனுப்பினேன். அவங்க தீர்த்துக்கட்டிடாங்க. கொலைன்னு தெரிஞ்சா மாட்டிக்குவோம்ன்னு தற்கொலை மாதிரி செட் பண்ணி வச்சோம். உங்களால என்னை கண்டு புடிக்க முடியாதுன்னு நினைச்சேன் பட் என்னை நெருங்கிட்டீங்க.”

“இதுவரைக்கும் எத்தனை பேர் வாழ்க்கையில விளையாடிருக்கீங்கன்னு சொல்ல முடியுமா?” 

“அது வந்து ” 

“கணக்கு வச்சுக்க முடியாதளவுக்கு நாசம் பண்ணிருக்கீங்க ” பற்களை கடித்தபடி அர்ஜுன் கூறினான்.

“அர்ஜுன் சார் இப்பவும் சொல்றேன் நான் வெறும் அம்பு தான். மும்பையில் ஒரு ஹோட்டல்ல நடக்குறதை மட்டும் தான் நீங்க கண்டுபுடிச்சிருக்கீங்க. இந்தியா முழுக்க இது நடக்குது. தோண்ட தோண்ட இது போய்கிட்டே இருக்கும் சார். உங்களால முடியாது. நீங்க முடிச்சிடீங்கன்னு நினைக்கிறீங்க அப்படி தானே, ஆனா இது தான் ஆரம்பம். இப்போ வேணும்ன்னா நிறுத்துவாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல வேற ஒரு ரூபத்துல இது நடக்க தான் போகுது.” 

” நடக்காது நான் இருக்குற வரைக்கும் நடக்க விடமாட்டேன் “- உறுதியுடன் கூறிய அர்ஜுன். தன் அலைபேசியில் தொடர்பு கொண்டு,

கோவிந்தனுக்கு அழைப்பு விடுத்து ஹோட்டலுக்குள் ரைட் நடத்துமாறு உத்தரவு விடுக்க. அவனது வீரர்கள். கண்ணிமைக்கும் நொடியில் ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கே இருந்த வீடியோ ஆதாரங்கள். மறைந்து வைத்திருந்த கேமராக்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து. பாஸ்கரின் லீலைகளில் தொடர்புடைய அவனது ஊழியர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

” உன்னையெல்லாம் இங்கையே போடணும் டா ” – மதனின்  கையில் இருந்த பிஸ்டல் பாஸ்கரின் நெற்றிப் பொட்டை பலமாய் அழுத்தியது. கோபத்தில் நின்றிருந்த மதனை தடுத்த அர்ஜுன்,

“ நோ மதன் இவனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுப்போம் ”

“ இல்லை அர்ஜுன். இவனை விட்டா கொஞ்ச நாள்ல வெளிய வந்து மறுபடியும் அதே தப்பை தான் பண்ணுவான் ”

” குற்றங்களை தடுக்குறது. குற்றவாளிகளை பிடிக்கிறது மட்டும் தான் நம்ம கடமை. தண்டனை கொடுக்குறது சட்டத்தோட கடமை. நாம சட்டத்தை கையில எடுக்க கூடாது அது சரியா இருக்காது. இவனுக்கான தண்டனை இவனுக்கு கிடைக்கும் ” – என்றான் அர்ஜுன்.

அர்ஜுன் தனது பட்டப்படிப்பை முடித்த உடன்  UPSC தேர்வில் ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறையும் தோல்வியை மற்றுமே சந்தித்தும்.  கொஞ்சமும் மனம் தளராமல் ! விடா முயற்சியுடன் படித்து நான்காவது முறை அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று வெற்றிகரமாக தன் IPS ட்ரெயினிங்கை முடித்து ACP (அசிஸ்ஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் ) யாக பொறுப்பெடுத்து  உள்ளான்.

ராம்குமார் ப்ரீத்தா தம்பதியரின் செல்ல மகனான ACP அர்ஜுன், வேகம் விவேகம் என்று இரு அஸ்திரங்களைக் கொண்டவன். பொறுமையாகவும் அதே நேரம் விவேகத்துடன் வேகமாய் செயல்பட்டு தன் குறிக்கோளை வெல்வதில் சிறந்த வில்லாளி பார்த்தனுக்கு சற்றும் குறைந்தவன் இல்லை இவன்.

தேவைக்கேற்ற கோபம் அவனது முறுக்கு மீசைக்கு அழகு. அவனது கனிவான பேச்சு அவனின் ஆண்மைக்கு எடுத்துக்காட்டு.

அர்ஜுனுக்கு தான் பார்க்கும் உத்தியோகம், மற்றும் தாய்க்கு பிறகு மிகவும் பிடித்தது யார் என்றால். அது மதுமதி தான். 

மது மீது அவன் கொண்டுள்ள நேசம்  இன்றோ நேற்றோ வந்ததல்ல . சிறு வயது முதலே அவள் மீது அவனுக்கு ஒரு பிரியம். தனது சிறு வயதிலே மதுமதி தன் பெற்றோரை இழந்துவிட, அர்ஜுனுக்கு அவள் மீது எப்பொழுதும் தனி அக்கறை உண்டு. ‘மதுவுக்குன்னு யாரும் இல்லை அர்ஜுன், நாம தான் அவளை பத்திரமா பார்த்துக்கணும் அவன் கிட்ட சண்டை போடாத, அவளை எப்பவும் அன்பா பார்த்துக்கோ’ என்று ப்ரீத்தா அவன் மனதில் இதை ஆழமாய் பதித்து விட, இவள் நம் வீட்டு பெண் இவளுக்கு யாரும் கிடையாது நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கடமை உணர்வு, நாளைடைவில் வளர்ந்து காதலாய் மாறி இப்பொழுது இன்று திருமணத்தில் வந்து நிற்கிறது.

இன்னும் சில நாட்களில் மதுவை மணக்கப் போகிறோம் என்கின்ற சந்தோஷ கடலில் ஆணவன் சுகமாய் நீந்தி கொண்டிருக்கிறான் ஆனால் அவள்? அவளது மனதில் அர்ஜுனுக்கான இடம் எதுவோ? 

தன் அன்பு அத்தையின் மகனாக அர்ஜுனை மதுவுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அவன் மீது காதல் உண்டா என்றால்? காதலிக்க முயன்று கொண்டிருக்கிறாள், தன் அத்தைக்காவும் தன்னை உண்மையாக நேசிக்கும் அர்ஜுனுக்காவும். 

ப்ரீத்தாவுக்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த மதுவுக்கு இப்போது இந்த நொடி வரை அர்ஜுன் மீதும் காதல் இல்லை, திருமணத்தின் மீதும் ஆர்வம் இல்லை.

இதே நேரம்  ஜுவாலாவோ அர்ஜுனை தவிர வேறு எவனையும் தன்னவனாய் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்க, இதை அறிந்தால் அர்ஜுனின் மனநிலை என்னாகும். அதை விட மதுமதி அறிந்து கொண்டால்? அவள் முடிவு என்னவாக இருக்கும் இருவரில் யாருடைய காதல் கைகூடும்??

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!