மலர்
உங்ககிட்ட பேசினதுல ரொம்ப சந்தோஷம். சீக்கிரம் பார்ட்னர்ஸ் ஆகலாம் ஆங்கிலத்தில் பேசி முடித்தவன், அங்கே வைத்திருந்த ஆப்பிள் ஜூஸை எடுத்து மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்தான். ஜன்னல் அருகில் நின்று கொண்டிருந்தவனுக்கு மனதில் தன்னுடைய தொழிலை பற்றிய சிந்தனையே இருந்தது. அப்போது சூர்யன் வெளியில் தகித்துக் கொண்டிருந்தார். அவரின் பளபளப்பு கண்ணுக்கு தெரிந்ததே தவிர அவர்களின் கட்டிட காலை உதவியால் கண்ணை தொட முடியவில்லை.
பேருந்தில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த அமிர்த வர்ஷினி சூரியனுக்கு ஹலோ சொன்னாள் .
அடிக்கற வெயிலுக்கு ஹலோ சொல்லற ஒரே ஆள் நீதாண்டி.
அவர்களின் கட்டிடத்திற்கு நேர் கீழே பேருந்தில் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த அமிர்த வர்ஷினி சூரியனுக்கு ஹலோ சொன்னாள் .
அடிக்கற வெயிலுக்கு ஹலோ சொல்லற ஒரே ஆள் நீதாண்டி கிண்டலாக சொன்னாள் அவள் தோழி இனியா .
இவள் சூரியனுக்கு ஹாய் சொல்லுவது முதல் தளத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஆனந்துக்கு அது நன்றாகவே தெரிந்தது. சூரியனுக்கு ஹாயா? அது சரி இவரு மட்டும் இல்லனா அவன் மனதில் எழுந்த கேள்விக்கு இவள் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
அவரு மட்டும் இல்லனா நம்ம கதி அதோ கதிதான். துணி காயாது. இந்த ரோடு கேட்கவே வேணாம். இன்னும் பல கஷ்டங்கள். அதுலயும் மழை பெய்ஞ்சா. அப்பா சாமி தாங்கவே முடியாது. இதுலேர்ந்து நம்மள காப்பாத்தறாரு இல்ல?அதுக்குத்தான் காலையிலேயே குட் மார்னிங் வைக்கறது. இன்னிக்கு சாரு லேட் சொல்லிக் கொண்டே காய் பையில் இருந்து லஞ்சை வெளியில் எடுத்தாள் அம்ரிதா.
அதுசரி சன்னுக்கே டப் குடுக்கற வேலை நம்மளோடது. அப்போ அவரு சரியா வந்தாலும் நமக்கு லேட்டாதான் தெரியும் கிண்டலடித்தாள் இனியா .
இன்னிக்கு என்னடி லஞ்சு கொண்டு வந்த? கேட்டுக் கொண்டே அமிர்தாவும் அவள் தோழி இனியாவும் உணவை எடுத்து பங்கு போட்டு உனன ஆரம்பித்தனர்.
ஏ உங்கம்மா எப்படிடி இவ்ளோ டேஸ்டியா சமைக்கறாங்க? கண்ணை மூடி ரசித்தாள் அமிர்தா .
எங்கம்மா ஊத்தற தலைகாணி தோசையே உனக்கு அமிர்தமாத்தான் தெரியும். தயிர் சாதத்துக்கு இவ்ளோ பில்டப்பா ?
ஏ காலைல எழுந்து உனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு செய்யறாங்க? பாராட்ட வேணாமா ?
பாராட்டு பாராட்டு என்று சொல்லிக் கொண்டே அவளும் உண்ண ஆம்பித்தனர். பேச்சு எங்கெங்கோ போய் இறுதியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் டாக்டர் ராகுவின் வந்து நின்றது.
ஏ ஆளு செம்ம ஹண்ட்ஸாம் இல்ல. இஸ் அப்பா என்ன கண்ணு என்ன கலரு ? அதுலயும் அந்த வைலட் ஷர்ட் அவனை பாக்காத பொண்ணுங்களே இல்ல.
ம்ம் அப்டியா ? அசால்டாக கேட்டாள் அமிர்தா .
சரி சரி நீ பாக்கல. ஆனா நாங்க எல்லாரும் பார்த்தோம். நீதான் சாமியாரிணி ஆச்சே !
அதெல்லாம் ஒன்னும் இல்லை . ஒருவேளை அவருக்கு உன்ன பிடிச்சுருக்குன்னு வச்சுக்கோ. அவங்க வீட்டுல கேட்கற நாகா நட்டு உங்களால குடுக்க முடியுமா ? பையனை டாக்டருக்கு படிக்க வச்சவங்க நம்மள மாதிரி சாதாரண வீட்டுலேர்ந்து பொண்ணு எடுப்பங்களா ? அப்புறம் எதுக்கு பாக்கணும் சைட் அடிக்கணும்? எப்படியும் நமக்குன்னு யாருன்னு எழுதி வச்சுருக்கோ அதுதான். அதை கல்யாணதுக்கு அப்புறமாவே பாக்கலாம், சைட் அடிக்கலாம் லவ் பண்ணலாமே?
ஓகே அமிர்தா நீ சொல்லற மாதிரியே பார்த்தாலும் அது ஒரு கடமையா இருக்காதா ? இனியா கேட்டாள் .
அது கடமையா எனக்கு தெரியல. ஒரு அன்பான குடும்பம். அதுல அழகான கணவன் குழந்தைகள், அவரோட அம்மா அப்பா என்னோட அம்மா அப்பா எல்லாரையும் நேசிக்கறது எப்படி கடமையா இருக்கும். அவரை அவருக்காகவே அப்படியே ஏத்துக்கிட்டா?
அதுக்கு பேரு அட்ஜஸ்ட்மென்ட். ஒரு வேளை கல்யாணம் பண்ணறதுக்கு முன்னாடியே யாராவது உன்னோட மனசுக்குள்ள வரணுன்னா என்ன பண்ணனும்?
அது நடக்கவே நடக்காது. எங்கப்பா யாரை பார்த்து எனக்கு கல்யாணம் முடிக்கறாரோ அவரு மட்டும்தான் என்னோட மனசுக்குள்ள வர முடியும்.
உன்கிட்ட பேசவே முடியாது. நாளைக்கு பாக்கலாம் . சொல்லிக் கொண்டே தன்னுடைய தோள் பையை இரு புறத்திலும் மாட்டிக் கொண்டு இறங்கி பை சொன்னாள் இனியா . அடுத்த நிறுத்தத்தில் இவளும் இறங்க வேண்டிய இடம் என்பதால் அவளும் கண்டக்டர் அருகில் நின்று கொண்டாள் .
இவளின் மனம் கவர போகிறவன் மனதை வேறு ஒருத்தியிடம் தொலைத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறான். ஜூஸை குடித்துக் கொண்டிருந்தவனை கை பேசி அழைத்தது .
பாட்டிதான் அழைத்திருந்தார்.
என்னடா கண்ணா சாப்டியா ?
இல்ல பாட்டி இப்பதான் ஜூஸ் குடிச்சேன். ஒரு மீட்டிங் இருக்கு. அத முடிச்சுட்டு சாப்பிடறேன்.
என்னடா கண்ணா இப்பவே மணி ஆயிடுச்சு. சந்தேகப்பட்டுத்தான் கால் பண்ணேன்.
ஒன்னும் பிரச்சனை இல்லை . நான் சீக்கிரமா மீட்டிங் முடிச்சுட்டு சாப்பிடறேன்.
மனம் நிறைவாக இருந்தது. அன்னை செய்ய வேண்டியதை பாட்டி செய்கிறாள். ஒருநாள் அதுவும் தொலைந்து போகும்போது இவன் என்ன செய்வான்?
பவித்ரா க்ரிஷ்ணமுர்த்தி பிகே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்டி ஆனந்தை பார்க்க வந்தாள் . இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் அளவிட்டுக் கொண்டன.
பவித்ரா ஐந்தடி மட்டுமே. ஸ்டூல் ஹீல்ஸ் அணிந்திருந்தாள். பார்மல் உடையில் கச்சிதமாக இருந்தாள் கூலிங் க்ளாஸ் லிப்ஸ்டிக் கண்ணுக்கு தெரியாத ஸ்டிக்கர் பளபளக்கும் வைர கம்மல், பிளாட்டினதில் அணிந்திருந்த செயின் கையில் அணிந்திருந்த மர வளையல் அனைத்துமே அவளின் பண செழுமையை கூறியது. அவளின் நுனி நாக்கு ஆங்கிலம் அவளின் புலமையை வெளிப்படுத்தியது. அதில் இருந்த நுட்பம் அவளின் திறமையை காட்டியது. அனைத்துமே ஆனந்திற்கு பிடித்திருந்தது. அவளின் திறமை இருந்த இடத்தில் திமிரும் இருந்தது. அது மட்டும் அவனுக்கு பிடிக்கவில்லை.
அவள் பேசி விட்டு அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்.
அவன் முகத்தை ஆராய்ந்தாள். லேசான பிரவுன் நிறத்தில் இருந்த கேசம், நேரான நாசி, மற்றவர்களின் கண்ணை மட்டுமே பார்த்து பேசும் கண்கள் குறிப்பாக பெண்ககளை நோக்கும்போது!
நீங்க என்ன அஸ்ஸஸ் பண்ணது முடிஞ்சுதா?
எஸ்! சிறிய தலையசைப்புடன் பதிலளித்தாள் .
எனக்கு இந்த டீல் ஓகே ! முடிச்சுடலாமா ? கம்பீரமாக வெளி வந்தது அவனின் குரல்.
ஓ! எஸ்! இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
ஹாட் லன்ச் ? (லன்ச் சாப்டீங்களா )
நாட் யட் ! தோளை குலுக்கினான்.
உங்கள பாக்க வர்ற டென்ஷன்ல நானும் சாப்பிடல. சேர்ந்தே போவோமா ?
ஓகே ! உங்களுக்கு பைவ் ஸ்டாரா 7 ஆ !
3யும் ஓகே தான்! அவன் காதருகில் ரோடு சைடு ஷாப்பும் ஓகே தான். பயங்கரமா பசிக்குது. ப்ளீஸ் எங்கையாவது போகலாம் அவளின் பசி அவளின் வார்த்தைகளில் தெரிந்தது. அவர்கள் அங்கே செல்வதற்குள் டேபிள் தயாராக இருந்தது.
முதலில் ஸ்வீட் உண்டனர்.
நமக்குத்தான் ஸ்வீட் சாப்பிட காரணம் இருக்கே? சொல்லிக் கொண்டே உண்டாள் .
அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவை நமக்கு பிட் போடறாளோ ? மனதில் எண்ணினான்.
ம்ம்! நான் சீக்கிரம் கிளம்பனும் அடுத்து இன்னொரு மீட்டிங் இருக்கு சொல்லிக் கொண்டே வேகமாக உண்டாள் .
ம்ம்! நானும் சீக்கிரம் போகணும். பாட்டிக்கு கொஞ்சம் ஒடம்பு முடியல அவனும் சொன்னான்.
வாட் ஹாபேண்ட் ? வாயில் உணவைத் தள்ளியபடி கேட்டாள் .
தெரியல. என்னவோ முட்டி வலின்னு சொல்லிகிட்டே இருக்காங்க. நான் அவங்க கூட இருந்து பாக்கணும். அவங்க கூட இருக்கறதே இல்ல. மனசால என்ன ரொம்ப தேடுவாங்க. பட் என்னோட வேலை பத்தி தெரியும். அதனால் ஒன்னும் கேட்க மாட்டாங்க.
பரென்ட்ஸ்?(பெற்றவர்கள்? )
நோ மோர்! தோளை குலுக்கினான்.
ஓ! சாரி ! பாட்டி தான் வளத்தங்களா ?
ம்ம்! தாத்தா அண்ட் பாட்டி. இருவரும் ஒருவருக்கொருவர் தங்களை பற்றிய விஷயங்களை பரிமாறிக் கொண்டனர். மேரேஜ் ?”
நோ ஐடியா ! என்னோட ஸ்டேட்டஸுக்கு,மைண்ட் செட்டுக்கு வர்ற மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கறது கஷ்டம்.
எனக்கும் அதே சேம். பட் அம்மா அப்பா விடவே மாட்டேங்கறாங்க. அம்மா கூட ஓகே பட் அப்பா ரொம்ப பண்ணறாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல பிரண்ட் கிட்ட பேசின பீல் வருது. டீல் சைன் பண்ணதும் ட்ரீட் என்னோடது. சில வினாடிகள் இடைவேளை கொடுத்தவள்,
கண்ண பார்த்து பேசற ஆம்பளைய ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்கறேன். மனசுக்குள்ள ஏதோ ஒரு நல்ல பீல் வருது. சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு கிளம்பினாள். இவன் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
எந்த பெண்ணையும் அருகே நிறுத்தாதவன் ஒரு பெண்ணுடன் சேர்ந்து லன்ச் ? (உங்களமாதிரியே எனக்கும் ஆச்சர்யம்தான் மக்களே!) இவளால் இவன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் வரும்? பார்க்கலாம்.
மறு நாளும் இனியாவும் அமிர்தாவும் சேர்ந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். மீண்டும் ஆனந்தம் டைல்ஸ் கட்டிடம் இருக்கும் எலைட் என்று பளபளக்கும் அந்த வானளவு உயர்ந்த கட்டிடம் வந்தது.
என்னடி தினம் தினம் இந்த பில்டிங்க இப்படி பாக்கற ? வெளியில் அண்ணாந்து பார்த்த அமிர்தாவிடம் கேட்டாள் இனியா .
அதில்ல! கட்டிடத்தோட உயரம் அங்க இருக்கற மனுஷங்க மனசுக்கு இருக்கறதில்ல இல்ல ? புருவம் சுருக்கி பதிலளித்தாள் அமிர்தா.
இதெல்லாம் ஸ்கை ஸ்க்ரப்பர்ஸ் டீ ! அப்படிதான் இருக்கும். அதோட இதுல இதே மாதிரி இன்னும் பல கம்பனிகள் இருக்கும். இங்க எத்தனையோ ஆயிரம் பேர் வேலை செய்வாங்க. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பாங்க. எல்லாருமே நல்லவங்களா இருக்க முடியுமா ? பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை ரசித்துக் கொண்டே சொன்னாள் இனியா. ஆமா இந்த பில் டிங்கினால உனக்கென்ன பிரச்சனை ? கேள்வியும் கேட்டாள் .
அதில்லடி நம்ம சக்தி அங்கிள் இருக்காரில்ல . அவர் அம்மாவுக்கு ஆபரேஷனுக்கு அஞ்சு லட்சம் தேவைன்னு கேட்டுருக்காரு. அவரு இங்கதானே வேலை பாக்கறாரு. ரொம்ப வருசமா வேலை பாக்கறாரு. ஆனா உங்க மேல நம்பிக்கை இல்லைனு சொல்லிட்டாங்களாம். அதான் என்ன பண்ணறதுன்னு தெரியல. அப்பாகிட்ட கேட்டுருக்காரு. அப்பாவும் முடிஞ்ச வரைக்கும் பற்றி பண்ணறேன்னு சொல்லி இருக்கார்.
அது சரி உங்ககிட்ட இருந்தா நீங்களே குடுத்துடுவீங்களே ?
ஆமாண்டி! வருத்தத்துடன் சொன்னாள் அமிர்தா.
அந்த கம்பனில அவருக்கு குடுக்க முடியாதுன்னு சொல்லல. அவர் மேல நம்பிக்கை இல்லைனு சொல்லி இருக்காங்க. கொஞ்சமாவது மூளை இருந்தா குடும்பமா எப்படி அவருக்கு காசுக்கு உதவறதுன்னு யோசிக்கறத விட்டுட்டு கம்பனில சொன்ன விஷயத்தை யோசிங்க. யாருக்கோ உதவி பண்ணறேன்னு எங்கையாவது போய் மாட்டிக்காதீங்க. முக்கியமா யாருகிட்டயும் கையெழுத்து போட்டு மாட்டிக்க வேண்டான்னு உங்க அப்பாகிட்ட சொல்லி வை !எச்சரித்தவள் பையை முதுகில் மாட்டி கொண்டு வழக்கம்போல் இறங்க வேண்டிய இடத்திற்கு காத்துக் கொண்டிருந்தாள் கண்டக்டர் அருகில். பின்னோடே வந்த அமிர்தாவிற்கு அவள் கண்களில் இருந்த கூர்மை யோசிக்க வைத்தது. கடவுள் ஏதாவது ரூபத்தில் வந்து நமக்கு உதவத்தான் செய்கிறார். ஆனால் நமக்குத்தான் அந்த நேரத்தில் புரிய மாட்டேன் என்கிறது. அதை பற்றி யோசித்திருந்தவளுக்கு வீட்டிற்கு வந்ததும் அதை பற்றிய நினைவே இல்லாமல் போனது. அந்த நேரத்தில் அவள் அதை இன்னும் கொஞ்சம் முக்கியமாக எடுத்திருக்கலாமோ ?
தோழியின் எச்சரிக்கையை மறந்தவளுக்கு கிடைக்கப்போகும் பரிசு ? வெகு பயங்கரம்தான்.
முள் மலரும்….…
