தாரகையின் மாயோன்

மாயோன் -22

“ஸ்ருதி  எப்போதும் உன்னை நான் என் நெஞ்சில் சுமந்துகிட்டு தானடி இருக்கேன்…என்னுடைய பாசமும் உனக்கு கடைசி வரை நிரந்தரமா கிடைக்கும்..ப்ளீஸ் டா  என்னுடைய ஸ்ருதி எப்படிப்பட்டவள்  என்று என் மரமண்டை அப்பாக்கு புரிய வைக்க தான் அப்படி நடந்துகிட்டேன்..நீ இன்னைக்கு நடந்துக்கிட்டத பார்த்து அப்பா கண்டிப்பா கொஞ்சம் மனசு மாறியிருப்பார் .ஆனால் அதை ஒத்துக்க அவரோட வீணாப் போன வரட்டு கௌரவம் இடம் கொடுக்கலைடா .யோசிச்சு பாரு அத்தை வீட்டை விட்டு போன உடனே ஊரே தப்பா பேசும்போது அப்பாவுக்கு எப்படி இருந்திருக்கும் . அத்தை பண்ண காரியத்துல தாத்தா உடல் சுகமில்லாம இறந்து போயிட்டாங்க.. அப்பாவுக்கு யாரும் பொண்ணு கொடுக்கலையாம்.அப்புறம் அம்மாவோட அப்பா தான் இவரின் குணத்தை வைத்து பொண்ணு கொடுத்தாராம்.பாட்டிகிட்ட அடம் பண்ணி அத்தையோட போட்டோவை அப்பாக்கு தெரியாமல் வாங்கி வச்சுக்கிட்டு அப்பப்போ எடுத்து பார்ப்பேன்.உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி பாட்டி என்கிட்ட அடிக்கடி சொல்வாங்க .. உனக்கு முறை பெண்ணு பிறந்திட்டாடா..என் போதாத காலம் உங்கள் இரண்டு பேரையும் ஒரே இடத்தில் வச்சு என்னால பாக்க முடியல. நான் சாகுறதுக்குள்ள என் பொண்ணு என்னைத்தேடி வருவாள்.நீ உன் அத்தை மகளை திருமணம் செஞ்சுக்கோடா சொல்வாங்க.

நானும் போ பாட்டி உனக்கு வேற வேலையே இல்ல எனக்கு அந்த பொண்ணு வேணாம் .உன் பொண்ணு பண்ண காரியத்தால்

எங்க அப்பா எவ்ளோ அசிங்கப்படறார் என்று திட்டினாலும் அது என்னமோ அத்தை முகத்தை தினமும் பார்த்தா தான் எனக்கு தூக்கமே வரும் .ஆனால் அத்தை இறந்துபோன செய்தியை கேட்டு பாட்டியும் படுத்த படுக்கையானவங்க போய் சேர்ந்துட்டாங்க..

எனக்கும் அடிக்கடி எங்க அப்பாவுக்கு தெரியாம உன்னை பாக்கணும் தோணும் .ஆனால் எங்கப்பா பட்ட அவமானம் என் கண்முன்னே வரும்போது அந்த ஆசை எல்லாம் காணாமப் போயிடும் .எனக்கு கருத்து தெரிஞ்சு கூட என் எதிரிலேயே அப்பாவை நிறையப்பேர் உன் தங்கச்சி ஓடி போனவள் தானே? அப்படி சொல்வதை கேட்டு இருக்கேன் .அப்போ அப்பா எவ்வளவு கூனி குறுகி நிப்பார் தெரியுமா?ஆனாலும் எனக்கு அத்தை மேல கோபம் வரல வருத்தம் மட்டும் தான் .என் அத்தை என் கூடவே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என்று அடிக்கடி தோன்றும்இவ்வளவும் யாரால் மாமா பண்ண காரியத்தால் தானே?அப்புறம் கோபம் இல்லாமல் இருக்குமா. ஸ்ருதி”

“அதுக்கு நான் என்ன மாமா  பண்ணுவேன்.எல்லாரும் கோபத்தை காட்ட நான் தான் கிடைச்சேனா ?என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு மாமா. ஏன் தான் இந்த பிறவி எடுத்தேனோ தெரியல . என்னால அந்த வலியை தாங்க முடியல மாமா”என்று கதறி அழுதவளை ஆதரவாக அணைத்து சமாதானம் செய்தான் அவளவன்..

நினைவுகள்

************

உந்தன் வலி நிறைந்த வார்த்தைகளை கேட்ட நொடி என் விழிகள் கண்ணீர் சிந்துமே..!!

நீளும் இரவில் உந்தன் நினைவுகளை சுமந்து தலையணையை தோழியாய் நினைத்து உறக்கத்தைத் தொலைத்தேனே…!!

விடியலில் ஆரம்பித்து இரவு வரை உந்தன் நினைவுகள் என்னுள் ஆக்கிரமிப்பு செய்திடுதே…!!

உந்தன் நினைவுகளை சுமந்து 

வாழும் நான் காய்ந்த சரகாய் 

வாடிப் போகின்றேனே…!!

தனிமையில் இருக்கும் நேரம் உன்னைப் பற்றிய நினைவலைகளை சுமக்கும் போது இனம் புரியாத சுகம் என்னுள்ளே …!!

நான் எங்கே ஓடி மறைந்தாலும் உந்தன் நினைவுகளிலிருந்து என்னால் மீளவே முடிவதில்லையே…!!

சிறிது நேரம் பிறகு அவளை விடுவித்தவன் அவளின் முகம் பார்க்க அவளோ கீழே குனிய அவளை நிமிர்த்தி அவளின் முகமெங்கும் மென்மையாக முத்தமிட அந்த மென்மையில் பெண்ணவன் கிறங்கி தான் போனாள்.. 

மீண்டும் அவளை அணைத்தவன் அவளின் பிறை நெற்றியில் அழுத்தமாக இதழ்பதித்தவன் அவளை விடுவிக்க ஸ்ருதி அவனின் முகம் பார்த்தவள் சொல்லா வண்ணம் உணர்வுகளில் சிக்கி தவிக்க அதை புரிந்து கொண்டவன்…

“ஸ்ருதி இங்க பாருடா அம்மா நம்ம திருமணத்துக்கு எப்போ சம்மதம் சொல்லிட்டாங்க ..உங்க அப்பாவுக்காக மட்டும்தான் நான் யோசிச்சேன் .இப்போ எனக்கு அதைப்பத்தியும் பிரச்சனை இல்ல .அம்மா அவங்க முடிவுல தெளிவா இருக்காங்க.. அதுமட்டுமில்லாமல தாத்தா, பாட்டி ,மாமா எல்லாருக்குமே சம்மதம்தான்”

“என்ன சொல்றீங்க மாமா அதுக்குள்ள உங்க தாத்தா ,பாட்டிக்கு   தெரிஞ்சு போச்சா. அவங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா” என்று தன் நேத்திரத்தை (கண்)உருட்டி உருட்டி கேட்டவளின் நெற்றியில் முட்டியவன்

“அவங்களுக்கு நீ யாருன்னு தெரியும் டா. அவங்களுக்கு முழு சம்மதம். இங்க பாரு இனியா நம்ம தாத்தா பாட்டி சொல்லி பழகு புரியுதா?”

“சரி மாமா உன்னால எனக்கு நிறைய உறவு கிடைச்சிருக்கு .ஆனால் ஆனால் பெரிய‌ மாமா..” என்று தயங்கியவளை. 

“அவரைப் பத்தி யோசிக்காத டி ..உன் மாமா அடிப்படையில் ரொம்ப நல்லவர் .அவர் அவருடைய சம்மதத்தை சொல்லிடுவார் போதுமா?”

“சரி மாமா பட் அப்பாவை எப்படி சமாளிக்கிறது தெரியலையே”என்று முழித்தவளை தலையில் லேசாக கொட்டியவன்”அடியேய் அடுத்து கவலைப்பட  ஆரம்பிச்சிட்டியா?  கார்த்திக்   இருக்கும்போது நமக்கென்ன பயம்.”

“ஆமா மாமா கார்த்திக் அண்ணா  மட்டும் இல்ல அம்மா ,அப்பா அபிஷேக் எல்லாருமே நமக்கு இந்த விஷயத்தில் உதவி செய்வாங்க”

“ஆமாண்டா சரி நாம வெளிய போலாமா ?அம்மா நமக்காக காத்துக்கிட்டு இருக்காங்க”

“சரி மாமா  போகலாம்”இவர்கள் வெளியே வந்ததும் அனைவரும் பதட்டத்துடன் காத்திருக்க நதியா ,”டேய் புவனேஷ் என்னடா ஆச்சு .அவளுக்கு புரிய  வச்சுட்டியா?”

“அதை உங்க மருமக கிட்ட கேளுங்க மா அவளே சொல்வா”

நதியா ,”ஸ்ருதி என்னம்மா உனக்கு இப்போ கோபம் போச்சா ? உன் மாமாவை பத்தி கவலைப்படாதமா .அவர் கோபம் வந்தா என்ன பேசறோம்னு தெரியாம பேசுவார் .மத்தபடி அவர் ரொம்ப நல்லவர் ஸ்ருதி‌”

“எனக்கு புரியுது அத்தை. நீங்க என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு மனசு தாங்கல.. அதான் அப்படி பேசிட்டேன். சரிங்க அத்தை மாமா எங்க காணல.

“ஸ்ருதி அவர் அப்பவே கிளம்பிட்டாருமா 

அவரைப் பற்றி நீ கவலைப்படாதே. அவரை இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைப்பது என்னுடைய வேலை என்றவர் நான் தான்டா உன் கிட்ட சாரி கேக்கனும். உன் மாமாவும் இதோ இருக்கிறானே இந்த பயலும் என்று புவனேஷை காட்டி கூறியவர் உன் மனசை கஷ்டப்படுத்திட்டாங்க அவங்களுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் சாரி டா “

“அம்மா என்னம்மா நீங்க இப்போ தான் அவள்  மலை இறங்கி இருக்கா நீங்களும் அதையே ஞாபக படுத்தாதீங்க” என்றான் புவனேஷ்.

ஸ்ருதி புவனேஷை முறைக்க நதியா

,”டேய் திருட்டு படவா வாய திறக்காத அமைதியா நில்லுடா ..அடிச்சுபுடுவேன் பாத்துக்க”

“அம்மா தாய்க்குலங்களே  என்னை ஆளை விடுங்க.” என்றவன் கார்த்திக்கின் பக்கத்தில் அமர கார்த்திக் அவன் தோளில் கை போட்டவன் ,” என்னடா மச்சி  என் தங்கச்சி கை ,கால்ல விழுந்து  சமாதானம் பண்ணிட்டியா? “என்றவனை முறைத்த புவனேஷ் 

“போடா டேய்  உன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன் பாரு “என்று எழுந்தவனை ,”சரி டா  உட்கார் நான் எதுவும் கேட்கல “எனவும் அங்கிருந்த அனைவரும் அவர்களை பார்த்து சிரித்தனர்.

ஸ்ருதி,”அத்தை மாமா பேசியது எனக்கு கஷ்டமா தான் இருந்துச்சு, பட்  அவருடைய இடத்தில் இருந்து பார்க்கும்போது அவர் சொல்றது நியாயம் தானே?”

“என்னடா பெரிய நியாயம் அவர் அப்படித்தான் விட்டுத்தள்ளு..ஸ்ருதி நீ உன் படிப்பை முடிச்சுட்டு எங்க வீட்டுக்கு மருமகளா வர தயாராக இரு. நான் உனக்காக ஆவலுடன் காத்துக்கிட்டிருப்பேன் சரியா?”

“ம்ம் சரிங்க அத்தை “என்று வெட்கப்பட்டுக்கொண்டே கீழே குனிய ,”கல்பனா  என் மருமகளுக்கு வெட்கத்தை பாருங்களேன்”

“பின்னே இருக்காதா நதியா.இப்போ உங்களுக்கு சந்தோஷம்தானே ?விக்ரம் தம்பி  சம்மதம் சொல்றது தான் இப்போ பிரச்சனையே “என்றார் கல்பனா.

நதியா,”கல்பனா என்ன நீங்க கார்த்திக்கும் ,புவனேஷும் இருக்கும்போது அதை நினைச்சு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை அப்படித்தானே கார்த்திக் “

“ஆன்ட்டி உங்களுக்கு என் மேல எவ்வளவு நம்பிக்கை சிங்கத்தோட குகையில்  போய் சிங்கத்தை தனியா சமாளிக்கனும்…விக்ரம் அங்கிளை  இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு. என்றவன் என்னடா வானரங்களா அடுத்து போருக்குத் தயார் ஆகலாமா?”என்று கேட்டான் கார்த்திக் ராஜன்.

“கண்டிப்பா அண்ணா நாங்க ரெடி .”என்று வானரக் கூட்டங்கள் கோரசாக கூற அதில் மகிழ்ச்சி அடைந்த புவனேஷ் ,ஸ்ருதி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் கண்கள் வழியாக செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

கார்த்திக் இனியா எதுவும் கூறாமல் இருக்க ,”என்ன இனியா மேடம்  உங்கள் கருத்து என்னவோ?” என்றான்.

இனியா அவளின் முடிவை சொல்ல அனைவரும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

 

 

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!