அத்தியாயம் 8
என்… கண்மணி…
வாங்க… பைரவியைப் பற்றி ஒரு சின்ன… இல்ல, கொஞ்சம் பெரிய அறிமுகம் பார்த்துவிட்டு வருவோம்!
பைரவி பிறக்கும் முன்னே அவள் தந்தை அருந்ததியை விட்டுப் பிரிந்துவிட்டார். அதன் பின் அருந்ததி தன் அண்ணன், அண்ணி துணையோடு பைரவியைப் பெற்றெடுத்தார்.
என்னதான் பெற்றது அருந்ததியாக இருந்தாலும், பைரவி வளர்ந்தது எல்லாம் அபிராமியிடம் தான். அபிராமிக்கும் நடேசனுக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்று தினம் தினம் வருந்திக் கொண்டிருந்த அபிராமியின் ஏக்கம் தீர்க்கவே பிறந்தாள் அக்னி பைரவி. பைரவி பிறந்து ஒரு சில மாதங்களிலேயே அபிராமியும் கருவுற்றார்.
பைரவி தன் வாழ்வில் வந்த நேரம் தான் தங்களுக்கு இத்தனை வருடங்கள் கழித்துக் குழந்தை உண்டானது என்று கூறி, அபிராமி இன்னும் இன்னும் பைரவியின் மேல் அன்பு கொண்டார். பைரவியின் ஒவ்வொரு வளர்ச்சியின் போதும் நடேசனின் தொழிலும் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. பின் தாராவும் பிறக்க, அபிராமி பைரவியையும் தாராவையும் தன் இரண்டு கண்களாகப் பார்த்துக்கொண்டார்.
சிறு வயதிலிருந்தே பைரவி, அருந்ததியைப் போல் நாட்டியத்தில் ஆர்வம் கொள்ள, பின் அதுவே அவளின் வாழ்க்கையாகிப் போனது. என்னதான் நாட்டியத்தில் ஆர்வம் கொண்டாலும், பைரவி படிப்பிலும் மிகவும் சுட்டி; அனைத்திலும் முதல் மதிப்பெண் எடுப்பாள்.
இப்படியே நாட்கள் அதன் வேகத்தில் போக, பைரவி தன் படிப்பை முடித்துவிட்டு முழு நேரமும் நாட்டியத்தில் இறங்கிவிட்டாள். ஆனால் தாராவோ தன் மேற்படிப்புக்காக மும்பை சென்றுவிட்டாள்.
பைரவி மாதத்தில் ஒரு நாள் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் நாட்டியம் ஆடுவாள். அப்படித்தான் அன்று தன் மனம் நிறைந்த சந்தோஷத்தில் அவள் ஆடிக்கொண்டிருந்தாள்.
மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே
தந்தனை தண்ணீா் கேட்டேன்
அமிா்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
ஆ ஆ ஆ எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய் எதை
நான் கேட்பின் உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் மலா்கள்
கேட்டேன் மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
என்ற பாடலுக்கு அழகாக அபிநயம் பிடித்து ஆடிக்கொண்டிருந்தவளைக் கண்ணிமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தான் மித்ரன்.
அவள் ஆடி முடிக்கும் வரைக்கும் அதே இடத்தில் அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தவனை உலுக்கினான் அவனின் தம்பி ருத்ரன்.
“அண்ணா! அப்படி இங்க நின்னு என்னத்தை அப்படி வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டு இருக்க?” என்று ருத்ரன் கேட்க,
“அது… அங்க…” என்று பைரவி இருந்த திசைப்பக்கம் கை காட்ட, அங்கோ அவள் இல்லை.
“அச்சோ… எங்கே போனாளோ இவ?” என்ற மித்ரன், தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த ருத்ரனைக் கண்டுகொள்ளாமல், அங்கிருந்து அவளைத் தேடி ஓடினான்.
அவள் எங்கும் இல்லாமல் போக, அவளைத் தேடி கோவிலின் வெளியே ஓடினான் மித்ரன். அவன் வெளியே வரவும், பைரவியும் அருந்ததியும் சிரித்துப் பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றனர்.
“ஓ… ஷிட்!” என்று தரையில் ஓங்கி மிதித்தவன், அவள் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
“அண்ணா! என்னாச்சு? எதுக்கு இப்போ இப்படி தலைதெறிக்க ஓடி வந்த?” என்று ருத்ரன் கேட்க,
“அது… அங்க… என்… கண்மணி…” என்று மித்ரன் கூறினான்.
“அண்ணா, என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்போ புரியாத மாதிரி பேசிக்கிட்டு இருக்க?” என்று ருத்ரன் கேட்க, அப்போதே சுயநினைவுக்கு வந்தவன், தன் பின்னந்தலையைக் கோதிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
வந்தான்… தினமும் அதே கோவிலுக்குத் தன் கண்மணியைத் தேடி! ஆனால் அவள் தான் வரவில்லை.
“ஏன்டா… கிறுக்கு பையலே ஊர்ல இந்த ஒரு கோவில் தான் இருக்க என்ன? அப்படி இருக்க அவ எப்படிடா தினமும் இங்க வருவா?” என்று தனக்குத்தானே திட்டிக்கொண்டவன்.
“சரி விடு, பார்த்துக்கலாம்… கண்டிப்பா ஒரு நாள் அவ உன் கண்ணுல படுவா அப்போ பார்த்துக்கலாம்” என்று கூறி கொண்டவன் அங்கிருந்து கிளம்பிய நேரம், அங்கு வந்தார் அருந்ததி.
அருந்ததியைப் பார்த்ததும் கண்கள் மின்ன, அவரின் பின்னால் தன் கண்மணி வருகிறாளா என்று பார்த்தவன் முகம் நொடியில் வாடிப்போனது.
“என்ன அருந்ததி அம்மா, நீங்க மட்டும் வந்து இருக்கீங்க… எங்க உங்க பொண்ணு பைரவி வரலையா?” என்று அந்த கோவிலின் பூசாரி கேட்க, அருந்ததியோ சிறு புன்னகையோடு,
“இன்னைக்கு அவளுக்கு ஒரு முக்கியமான புரோகிராம் இருக்கு, அதான் அவளும் என் அண்ணனும் போயிருக்காங்க” என்று கூறினார்.
“ஓ… அப்படியா? அப்போ சரி அம்மா” என்ற ஐயர், அருந்ததியின் கையில் இருந்த பூஜைக் கூடையை வாங்கிக்கொண்டு அர்ச்சனை செய்யச் சென்றுவிட்டார். கண்மூடித் தன் மகளின் நல்வாழ்வுக்காக அருந்ததி வேண்டிக் கொண்டிருக்க, ஐயர் பூஜை முடித்துப் பூஜைக் கூடையை அவர் கையில் கொடுக்க, அருந்ததியும் வாங்கிக்கொண்டு சிறிது தூரம் தள்ளிச் சென்று அமர்ந்தார்.
“என்ன அருந்ததி, வேண்டுதல் எல்லாம் பலமா இருக்குது?” என்று கேட்டவாறே அவரின் அருகே ஒரு பெண் வர…
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை தேவி…” என்று சோர்ந்த முகத்தோடு அருந்ததி கூறினார்.
“அப்படி ஒன்னும் இல்லையா? ஆனா உன் முகத்தைப் பார்த்தா டன் டன்னா சோகம் அப்பிக் கிடக்கிறது?” என்று தேவி கேட்க, பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்ட அருந்ததி,
“எனக்கு என்ன தேவி கவலை இருக்கப்போகுது? எல்லாம் என் பொண்ணு பைரவியைப் பற்றித்தான்” என்று கவலையோடு கூறினார்.
“அப்படி என்ன அரு உனக்கு கவலை?” என்று தேவி கேட்க,
“பைரவிக்குக் கூடிய சீக்கிரத்தில் நல்லபடியா ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று கூறிய அருந்ததிக்கு, ஏனோ தன் பெண்ணின் வாழ்வும் தன்னைப்போல் ஆகிவிடுமோ என்று பயம்!
“ஏய் அரு… எதுக்கு இப்போ நீ தேவையில்லாமல் கவலைப்படுறே?” என்று தேவி அவரின் தோள் தொட, கண்களில் கண்ணீர் தேங்க அருந்ததி தேவியை நிமிர்ந்து பார்த்தார்.
“ஏய் அரு… எதுக்கு இப்போ அழுவுறே?” என்று தேவி சற்று பதற்றமாகக் கேட்க,
“உனக்குத் தெரியாது தேவி… நான் என் வாழ்க்கையில எவ்வளவு கஷ்டப்பட்டேன், கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்னு! இவ்வளவு நாள் எனக்கு ஒன்னும் அது பெரிய விஷயமா தெரியல. ஆனா என் பொண்ணு இப்போ வளர்ந்துட்டா, அவளுக்குக் கல்யாண வயசு வந்துடுச்சு அப்படின்னு நினைக்கும் போது தான் எனக்கு இன்னும் இன்னும் பயமா இருக்குது” என்று அருந்ததி கூறிவருக்குத் தன் கடந்த கால நினைவுகள் வந்து போயின.
“ஏய் லூசு… எதுக்குடி நீ பயப்படுறே?” என்று தேவி கேட்க,
“எங்கே என் பொண்ணு வாழ்க்கையும்… என்… என் வாழ்க்கை மாதிரி ஆயிடுமோனு…” என்று அருந்ததி அதை முழுதாகக் கூற முடியாமல் கண்ணீர் விட்டு அழ, அவரைக் கஷ்டப்பட்டுச் சமாதானப்படுத்திய தேவி,
“இங்க பாரு அரு… அக்னி வாழ்க்கை என்னைக்கும் அப்படி ஆகாது! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா… நானும் என் ஹஸ்பண்டும் என் பையன் படிப்பை முடிச்சிட்டு இந்தியா வந்தவுடனே சர்ப்ரைஸா உன் வீட்டுக்கு வந்து, என் பையனுக்கு உன் பொண்ணு அக்னியைப் பொண்ணு கேட்கலாம்னு இருந்தோம். ஆனா இப்போ நீ அழுறதைப் பார்த்தா, என் மருமகளுக்குக் கூடிய சீக்கிரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிடுவே போலயே?” என்று சிறு புன்னகையோடு கேட்க, அருந்ததி அதிர்ந்து போய் தேவியையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“தே… தேவி, நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?” என்று அருந்ததி திக்கித் திணறி கேட்க,
“அவ எல்லாம் தெரிஞ்சு சரியாத்தான் அம்மா கேக்குறா!” என்று கூறியவாறே அங்கு வந்தார் தேவியின் கணவர் சக்கரவர்த்தி.
“ஆனா அண்ணா…” என்று அருந்ததி ஏதோ கூற வர,
“இங்க பாரும்மா… எங்களுக்கு உன் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளை மாதிரி ஒரு பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா ரொம்ப நல்லா இருக்கும். உனக்குச் சம்மதம் அப்படின்னா சொல்லு, என் பையன் லண்டன்ல இருந்து வந்ததும் கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று சக்கரவர்த்தி கூற, அருந்ததியோ சிறிது நேரம் யோசித்தார்.
“அண்ணா, தப்பா நினைச்சுக்காதீங்க. இது நான் மட்டும் யோசிச்சு முடிவு எடுக்க வேண்டிய விஷயம் இல்லை அண்ணா. எதா இருந்தாலும் நான் என்னோட அண்ணன், அண்ணி… அதை விட முக்கியமா என் பொண்ணுகிட்ட கேட்கணும். அவளுக்கு ஓகேன்னா கண்டிப்பா இந்தக் கல்யாணம் நடக்கும்” என்று அருந்ததி கூற, தேவி மற்றும் சக்கரவர்த்தி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.
“அட… அதுல என்ன இருக்கு? நீ உன் வீட்ல எல்லார்கிட்டயும் கேட்டுட்டுச் சொல்லு, முக்கியமா உன் பொண்ணுகிட்ட! நானும் இன்னும் என் பையன்கிட்ட இந்த விஷயத்தைப் பத்தி பேசல. ஆனா, கண்டிப்பா அவனோட அம்மாவுக்குப் பிடிச்சிருந்தா அவனுக்கும் பிடிக்கும். ‘கட்டுடா தாலியை’னு சொன்னா போதும், கண்ணை மூடிட்டு தாலி கட்டிடுவான். சரியான அம்மா பையன்!” என்று கூறி சக்கரவர்த்தி சிரிக்க, தேவி அவரை முறைத்து,
“என்னையும் என் பையனையும் கிண்டல் பண்ணலைன்னா உங்களுக்குப் பொழுது போகாதே!” என்று அவரின் புஜத்தில் கிள்ள, அவர்களின் அந்தக் ‘கியூட்’ சண்டையைப் பார்த்து அருந்ததி மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டார்.
“ஏய் அரு, மறந்தே போயிட்டேன் பாரு… அடுத்த வாரம் சித்ரா பௌர்ணமி, அதுமட்டுமில்லாம சிவராத்திரியும் கூட!” என்று தேவி கூற, அதற்கு ‘ஆம்’ என்று தலையாட்டினார் அருந்ததி.
“நான் மறந்தாலும் என் பொண்ணு மறக்க மாட்டா! எங்க இருந்தாலும் ஓடி வந்துடுவா” என்று அருந்ததி கூறிக்கொண்டிருக்க, இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான் மித்ரன்…
யார் இந்த மித்ரன்? இனி மித்ரனின் நிலை என்ன? யாரைத் திருமணம் செய்துகொள்வாள் பைரவி? தேவியின் மகன் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்…
தீராத காதல் தீயாக மோத…
