தாரகையின் மாயோன்

மயோன்-24

மறுநாள் காலை தன் வீட்டிற்கு பயணமானாள்  ஸ்ருதி.

அங்கே ஏற்கனவே வந்திருந்த விக்ரம் தன் மகளை எதிர்பாராதவர் ,”ஸ்ருதி  நான் செல்லாமல் எதுக்கு கிளம்பி வந்த நீ.. என்ன பழக்கம் இது.? “என்றார்.

இவளோ கண்ணீர் அருவியாய்பொழிய அவரையே  பார்த்துக் கொண்டு நின்றாள். அவளின் கண்ணீர் ஒரு தந்தையாய் அவரின் மனதில் வருத்தத்தை கொடுத்தாலும்,” தேவையில்லாம இப்போ எதுக்கு அழற. எதுக்கெடுத்தாலும் எமோஷ்னலஆகாதன்னு உனக்கு நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன்”

“அப்பா போதும்பா இனியும் என்னை தள்ளி வைக்காதீங்க.எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு பா ப்ளீஸ் பா நான் உங்கள வாய்நிறைய அப்பான்னு  கூப்பிட்டுகிட்டே இருக்கனும்..உங்க கூடவே இருக்கனும் தோணுதுப்பா “என்றவள் ஓடிச்சென்று தன் தந்தையை அணைத்துக் கொண்டாள்.

இவரோ அவளை அணைத்தவர் சிறுவயதில் தன் மகள் தன் கைகளில் தவழ்ந்த காலங்கள் நினைவுக்கு வர நீண்ட நாட்கள் பிறகு தன் மகளின் அருகாமையை அனுபவித்தவர் கண்கள் கலங்க மகளுக்கு தெரியாமல் கண்ணீரைத்  துடைத்தவர் ,”  ஸ்ருதி போய் சாப்பிட்டு படுத்து தூங்கு மா”என்றார்.

“அப்பா இன்னமும் உங்களுக்கு உண்மையைச் சொல்ல மனசு வரலையா அப்பா ?”

“என்ன உண்மைய சொல்லு உண்மைய சொல்லுன்னு சொல்ற ..நான் எப்போவும் போலதான் இருக்கேன்.. உனக்கு என்ன ஆச்சு?”

என்று விக்ரம் சத்தம் போட்டுக் கொண்டிருக்க…

“உன் பொண்ணுக்கு என்ன ஆச்சு நான் சோல்றேன் …”என்று வந்து நின்றார் அந்த பெரிய மனிதர்

மணிமாறன்.

மணிமாறனை பார்த்ததும் விக்ரம் முகத்தை சுழிக்க ஸ்ருதி ,’இவர் இப்போ என்ன குழப்பம் பண்ண வந்திருக்கிறாரோ.?’என்று பயத்தில் நிற்க..

“என்ன விக்ரம் வீடு தேடி வந்திருக்கேன்.வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?”

விக்ரம்,”வாங்க “என்று வேண்டாவெறுப்பாய் கூற ,”உன் பொண்ணுக்கு காதல் பித்து பிடிச்சிருக்கு  அதான் இப்படி நடந்துக்கிறா”

“ஹலோ என்ன உளறீங்க”

“என்ன புரியலையா பெரிய இடமா பிடிச்சிருக்கா. அவள் யாரு உன் பொண்ணாச்சே “என்று எகத்தாளமாய் பேசியவரை முறைத்த விக்ரம்

“மிஸ்டர் மணிமாறன் வார்த்தையை அளந்து பேசுங்க. எதுக்கும் ஒரு அளவு இருக்கு ”

“என்னடா பொண்ணை ஒழுங்கா வளர்க்க உனக்குத் துப்பில்ல.. அவள் என் பிள்ளையைதான் விரும்பறா

. நல்ல ட்ரெயினிங் கொடுத்து இருக்க டா..பெரிய இடமா இருக்கு சொல்லி நீ கொக்கி போட்டு பார்த்த அது நடக்கல ..இப்போ உன் பொண்ணையே எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்ப பாக்குற .அது இந்த ஜென்மத்தில் நடக்காதுடா”என்றார் மணிமாறன்.

அதைக்கேட்ட விக்ரமின் முகபாவனைகளை பார்த்து ஸ்ருதியால் அவரின் மனநிலையை யூகிக்க முடியவில்லை.

“மிஸ்டர் மணிமாறன் இங்கே யாரும் உங்க பையனுக்கு என் பொண்ண கட்டிக்கொடுக்க தவம் கிடைக்கல .போங்க போய் உங்க வேலைய  பாருங்க”

“என்னடா இது வம்பா போச்சு .உண்மைய சொன்னா ஏன்டா அப்பனுக்கும், பொண்ணுக்கும் இவ்வளவு கோபம் வருது”

“மிஸ்டர் மணிமாறன் வீடு தேடி வந்து பிரச்சனை செய்யற அளவுக்கு உங்களுக்கு வேணும்னா வேலை இல்லாமல் இருக்கலாம் .ஆனால் நான் அப்படி கிடையாது..என் பொறுமையை சோதிக்காதீங்க”

“என்னடா ஓவரா துள்ளுற.. உன் பொண்ணு என் பையன விரும்பறான்னு சொல்ற.. ஆனால் நீ ஏற்கனவே தெரிந்த விஷயத்தை சொன்ன மாதிரி இவ்வளவு அமைதியா இருக்க 

.இதிலிருந்து தெரியலையா நீ போட்டுக்கொடுத்த பிளான் படி உன் பொண்ணு நடத்துகிறா. என்னமா நடிக்கிறீங்க டா”

“மணிமாறன் போதும் நிறுத்துங்க உங்க இஷ்டத்துக்கு உளராதீங்க‌.. இது ஒரு காலமும் நடக்காது .இந்த வீட்டுக்கு மருமகனா வருவதற்கு அவனுக்கு எந்த அருகதையும் கிடையாது புரியுதா?”என்றார் தன் மகளின் மனநிலையை புரிந்து கொள்ளும் நோக்கத்தில்…

“அப்பா ப்ளீஸ்பா அப்படி எல்லாம் சொல்லாதீங்க .எனக்கு புவனேஷ் மாமா ..வேணும்பா நான் அவரை மனசார விரும்பறேன்”

“ஓஹோ உனக்கு நான் இரண்டு வாய்ப்பு தரேன்.

நான் முக்கியம் அப்படின்னா இங்கேயே இரு .அவன் தான் முக்கியம் சொன்னா வீட்டை விட்டு வெளியே போயிடு’என்றார் விக்ரம்.

“அப்பா நான் வீட்டை விட்டு வெளியே போனா 

நீங்க நிம்மதியா இருப்பீங்களா? சொல்லுங்கப்பா 

என்கிட்ட மட்டும் ஏன்தான் இப்படி நடந்துக்கறீங்க. நீங்க இன்னும் எத்தனை நாளைக்கு தான் என்னை இப்படி படுத்த போறீங்க..என் மேல உங்களுக்கு என்னப்பா கோபம் .நான் பிறந்த கொஞ்ச நாளில் அம்மா இறந்துட்டாங்க அதுதான் கோபமா?

அதுக்கு நான் என்ன பண்றது .நானும் போய் சேர்ந்துட்டா நீங்க நிம்மதியா இருப்பீங்களா?”

அவளின் இந்த வார்த்தைகள் தந்தையாய் விக்ரமை வேதனை படுத்தினாலும்,”உன் தலையெழுத்து அப்படி இருந்தா என்ன பண்ணமுடியும்” என்றவரை உணர்ச்சியற்ற ஜடமாய் பார்த்தவளுக்கு கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது..

“என்னடா இது அப்பாவும், பொண்ணும் மாத்தி மாத்தி நடிக்கறீங்க.விக்ரம் நீ என்ன தலைகீழா நின்னாலும் , உன் வீட்டு மருமகனா என் மகன் வரவே முடியாது .அதற்கு நான் என் சம்மதத்தை சொல்லவும் மாட்டேன் .உன் பொண்ணு கிட்ட சொல்லி அவனை மறந்திட சொல்லு”

“மாமா ப்ளீஸ் ஏன் மாமா இப்படி பேசறீங்க .நீங்களும் எங்க அப்பா மாதிரியே நடந்துக்காதீங்க .உங்களுக்கு ஒரு தங்கச்சி பொண்ணுங்கிற எண்ணத்தில் என் மீது கொஞ்சம் கூட பாசம் இல்லையா மாமா?”

“அட என்னம்மா நீ உன் அப்பனுக்கே உன் மீது அக்கறை இல்ல. நான் எப்படி உன் மீது பாசம் வைப்பேன்னு  நீ எதிர்பாக்கற.நீ என் பிள்ளையை விட்டு விலகிடு.

அதுதான் உனக்கு நல்லது.என் வீட்டுக்கு வந்தாலும் உன்னால சந்தோஷமாக வாழவே முடியாது”

“அப்பா ப்ளீஸ் நீங்களாவது இவருக்கு சொல்லி புரிய வைங்க அப்பா .உங்க கிட்ட நான் கேட்கிறதெல்லாம் ஒன்னே ஒன்னு தான் .எனக்கு என் புவனேஷ் மாமா வேணும்பா .அவர் கூட நான் இருக்கும்போது அம்மாவே என் பக்கத்தில் இருக்கிற உணர்வு ஏற்படுதுப்பா.இந்த ஜென்மத்தில் என்னுடைய கணவர்  அவர் மட்டும்தான் ப்ளீஸ் பா எனக்காக இதை மட்டும் செய்யுங்க”

“ஸ்ருதி நீ என்ன வேலை செய்ற புரியுதா? உண்மையா காதலிக்கிறவங்க யாரும் இப்படி நடந்துக்க வேண்டிய அவசியம் இல்ல..கண்டிப்பா அந்த கடவுள் உங்களை சேர்த்து வைப்பார் .மனசாட்சி இல்லாத இவங்க இரண்டு பேரிடமும் எதுக்கு கெஞ்சுகிட்டு இருக்க “என்று குரல் கேட்க மூவரும் திரும்பிப் பார்க்க இனியா அங்கே நின்றிருந்தாள்.

ஸ்ருதி ஓடிச்சென்று இனியாவை அணைத்துக்கொண்டவள்,” பாருடி இவங்க இரண்டு பேருமே என்னுடைய நிலைமையை புரிஞ்சுக்கல..  ஏன்தான் வாழனும் தோணுதுடி .எனக்கு என்னுடைய புவனேஷ் மாமா வேணும்  இரண்டு பேர்கிட்டயும் சொல்லி புரிய வை இனியா”

“அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லடி . உன் திருமணம் நிச்சயம் நடக்கும்.”என்று இனியா பேசிக்கொண்டிருக்க விக்ரம் எழுந்து வந்தவர் இனியாவிற்கு பின் நின்றிருந்தவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

அவரின் செயலை பார்த்து இனியா ,ஸ்ருதி ஒன்றும் புரியாமல் நிற்க மணிமாறன் அங்கே பார்த்தவர் அதிர்ச்சியில் வாய்பிளந்து நின்றார்.

“வாங்க மாப்பிள்ளை என்ன அங்கே நிக்கறீங்க” என்று புவனேஷை அழைத்துக்கொண்டு விக்ரம் உள்ளே செல்ல,” டேய் என்னடா நடக்குது இங்க  என்னை பைத்தியக்காரன் ஆக்கறீங்களாடா” என்று மணிமாறன் சத்தம் போட,

“ஆமா இல்லனா மட்டும் இவர் ரொம்ப தெளிவா இருக்கார் “என்று நதியா அங்கு வந்து நிற்க..பிறகு கார்த்திக் ,அபிஷேக் அவன் குடும்பமும் அங்கே வந்தனர்.

தன் மனைவி மற்றும் கார்த்திக் ராஜனை பார்த்த  மணிமாறன் எதுவும் செய்ய முடியாதவராக அமைதியாக நின்றார்.

விக்ரமின் செயல் அதுவரை அங்கிந்திருந்தவங்களுக்கும் அதிர்ச்சியை கொடுக்க ஸ்ருதி தன் தந்தையை புரியாத பார்வை பார்க்க..

“என்னடா ஸ்ருதி அப்படி பார்க்கிற  ..அவனுக்கு உன்னை கட்டி கொடுக்கனும் அதுதான் என் ஆசை .புவனேஷ் உன்னுடைய அம்மா மாதிரி இருக்கான்னு எனது நண்பன் என்கிட்ட சொன்னப்போ நானும் அவனை அவனுக்கே தெரியாமல் நேரில் பார்த்தேன். பிறகுதான் நான் முடிவு பண்ணினேன் .நான் இந்த உலகத்தை விட்டுப் போறதுக்குள்ள அவன் கிட்ட உன்னை ஒப்படைச்சிட்டு போயிடனும் . நீ அவன் கூட சந்தோஷமா வாழனும் ஸ்ருதி”

“அப்பா அப்படி சொல்லாதீங்கப்பா உங்களுக்கு எதுவும் ஆகாதுப்பா ..ஏன் பா இப்படி மனசுக்குள்ள போட்டு அழுத்தி வச்சிட்டு உங்க உடம்பை கெடுத்து வச்சிருக்கீங்க .நீங்க சொல்றது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு அப்பா .நான் புவனேஷ் மாமாவ உயிருக்குயிரா விரும்பறேன் பா.நீங்க எங்க திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டிங்கன்னு நான் ரொம்ப மன குழப்பத்தில் இருந்தேன் .இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அப்பா.”என்று கலங்கினாள் ஸ்ருதி.

“ஸ்ருதி போதும் அழாத‌டா..உன் கணவன்  புவனேஷ் தான் நீ கவலைப்படாத “என்றார் விக்ரம்.

“புவனேஷ் மாமா இங்கே எப்படிப்பா வந்தார்..”என்ற சந்தேகத்தை கேட்டாள் ஸ்ருதி.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!