10…ராட்சசனின் காதல் பாவை..
போன பகுதியில் :“ஏங்க நேத்தே சொன்னேன்ல அந்த பிள்ளைங்களுக்கு இங்கே யாருமே தெரியாதுன்னு அப்படி இருக்கும் போது அவங்களை எப்படி கேப்பாங்க ஏதாவது ஒன்னு பண்ணிகிட்டே இருக்க வேண்டியது வாங்க உள்ள.”என்று அவர அவரை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
இனி..
இருவரும் வீட்டில் இருந்து கிளம்ப இவ்வளவு நேரம் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தவன் இவர்களை ஃபாலோ செய்து கொண்டு அங்கு இருந்து கிளம்பும் முன்பு சுனிலுக்கு போன் செய்தான். சில ரிங்குகள் சென்றவுடன் சுனில் ஃபோனை எடுக்க.
“ என்ன அவ பேரு கண்டுபிடிச்சியா.”என்று படபடப்பாக கேட்டான் சுனில்.
“சார் அந்த பொண்ணோட பெயர் கண்டுபிடிக்க முடியல ஆனா அந்த பொண்ணு வீட்ல இருந்து கிளம்பிடுச்சு சார் இப்ப நான் என்ன பண்ணட்டும்.”என்று கேட்டான் அவன்.
“உன்னால அவ பேர கூட கண்டுபிடிக்க முடியாதா நான் அர்ஜென்ட்ன்னு சொன்னேனே அது உன் காதுல விழலையா அவ பேரு இருந்தா தான்டா அவள பத்தின டீடைல் எல்லாம் தெரிஞ்சுக்க முடியும் இல்லன்னா நான் மட்டும் கைலாசம் போக மாட்டேன் என் கூட சேர்ந்து நீங்களும் கைலாசம் வரணும் தெரிஞ்சுக்கோ.”என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னான் சுனில்.
“சார் நான் என்ன சார் பண்றது நீங்க சொன்ன கையோட நான் இன்னும் சில பேர் கிட்ட விசாரிச்சேன் ஆனா அந்த பொண்ணு தெரியுன்றாங்களே தவிர அந்த பொண்ணு பேரு அந்த பொண்ணு யாருன்னு கூட தெரியலன்னு சொல்றாங்க நான் வேற என்ன சார் பண்ணட்டும்.”என்று கேட்டான் அவன் பாவமாக.
“ஐயோ இவனுங்கல்லாம் வெச்சிகிட்ட என்ன பண்றதுன்னு தெரியலையே.”என்று தன் தலையில் அடித்துக் கொண்டவன்.“சரி அந்த பொண்ண பாலோ பண்ணிட்டே போ அந்த பொண்ணோட ஆபீஸ்ல அவளை பத்தி யாருக்குனா தெரியும் அங்க அவ பேரு என்னன்னு விசாரி.”என்று சொன்னான் சுனில்.
“ஓகே சார் நான் அந்த பொண்ண ஃபாலோ பண்ணிட்டு போறேன்.”என்று சொல்லியவன் ஃபோனை வைத்து விட்டான்.
ஆனால் சுனின்னுக்கோ நேரங்கள் செல்ல செல்ல உடலில் இருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிவது போல் இருந்தது ராட்சசன் வந்தால் என்ன செய்வான் என்று நினைக்கும் பொழுதே அவனுக்கு இப்பொழுதே தானே ஒரு குழியை தோண்டி அதில் படுத்து கொள்ளலாம் என்று எண்ணம் கூட தோன்றியது ஆனால் உன் எண்ணம் பலிக்காது என்பது போல் சுனில் என்று விதுரனின் குரல் கர்ஜனையாய் கேட்க அந்த குரலைக் கேட்டவனுக்கு உடல் எல்லாம் நடுங்கத் தொடங்கியது இவர் எப்பொழுது வந்தார் என்பது போல் வேக வேகமாக சென்று அவன் முன்பு நின்றவனுக்கு அவனின் கோலத்தை பார்த்து ஐயோ என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்பது போல் தான் அவன் மனதில் தோன்றியது பயத்துடனே விதுரனை பார்த்தபடி சுனில் நின்று கொண்டிருக்க.
“என்ன சுனில் உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு அவளை பத்தி எதனா தெரிஞ்சுதா இல்லையா.”என்று கர்ஜனையாய் கேட்டான் விதுரன்.
விதுரனின் சீரும் குரலை கேட்டவனுக்கு தொண்டை கூல் எச்சில் விளங்குவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது வேர்த்து விறுவெடுத்து பயத்தோடவே அவனை பார்க்க அவனின் கண்களோ இன்னும் ரத்த சிவப்பாக மாறியது இவனின் அமைதியை கண்டு அதில் இன்னும் தன் பொறுமையை இழந்தவன்.
“சொல்லு சுனில் உன்ன தான் கேட்கிறேன் அவளை கண்டுபிடிச்சியா இல்லையா.”என்று கோபத்தில் டேபிளை ஓங்கி அடித்தபடி கேட்டான் விதுரன்.
அதில் ஒரு நிமிடம் அலறிய சுனில்.
“ஒரு அளவுக்கு கண்டுபிடிச்சிட்டேன் பாஸ்”என்று சொன்னான் சுனில்.
“வாட் ஓரளவுக்கு கண்டுபிடிச்சியா இந்த பதிலை உன் கிட்ட இருந்து எதிர்பார்க்கல சுனில்.” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னான் விதுரன்.
அதில் உடல் நடுங்க திக்கித் திணறி பேசத் தொடங்கினான் சுனில்.
“அந்தப் பொண்ணு இருக்கிற இடம் கண்டுபிடிச்சிட்டேன் பாஸ், அது மட்டும் இல்ல அந்த பொண்ணு எங்க வேலை செய்துன்றதையும் கண்டுபிடிச்சிட்டேன் பாஸ்.”என்று சொன்னான் சுனில்.
“அப்புறம் என்ன எதுக்கு இப்படி தயங்கிட்டு இருக்க.”என்று மீண்டும் கத்தினான் விதுரன்.
“பாஸ் அந்த பொண்ணு இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சு ஆனா அந்த பொண்ணு வேலை செய்ற இடம்.”என்று மீண்டும் தயக்கமாகவே நிறுத்தி நான் சுனில்.
அதில் விதுரனுக்கு கோபம் அதிகமாக டேபிள் மேல் இருந்த பைல்களை அவனை தூக்கி எறிந்தவன்.
“இங்க பாரு சுனில் என்னோட பொறுமையை சோதிக்காத அது தான் நேத்தே சொல்லிட்ட இல்ல அவனோட கம்பெனியில் தான் வேலை செய்றான்னு இதெல்லாம் அவன் சொல்லி தான் அவ செஞ்சு இருக்கா அவளுக்கு நான் யாருன்னு அவளுக்கு தெரிஞ்சே ஆகணும்.”என்று சிங்கம் போல் கர்ஜித்தான் விதுரன்.
அவனின் கோபத்தை பார்த்து இவன் பயந்து நடுங்கிக் கொண்டிருக்க..
அதே சமயம் இங்கு.
இங்கு தங்களை ஒருவன் பின் தொடர்ந்து வருகிறான் என்று தெரியாமலேயே வீட்டில் இருந்து கிளம்பியவர்கள் ஆபீஸ்க்கு வர இவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று பின்னாடியே பாலோ செய்து வந்தவனுக்கு இப்பொழுது அவர்கள் செல்லும் இடத்தை பார்த்து புருவங்கள் சுருங்கத் தான் செய்தது இதை உடனே சுனலிடம் சொல்வதற்கு அவன் போன் பண்ண சுனில் இங்கு விதுரன் முன்பு கை கால்கள் நடுங்கியபடி நின்று கொண்டு இருந்தான் அப்பொழுது ஃபோன் அடிக்க யார் என்று எதிரில் நிற்கும் சிங்கத்திற்கு தெரியாமல் பார்த்தவனுக்கு அவளை ஃபாலோ செய்பவன் இடம் இருந்து போன் வருவதை பார்த்தவன் எதிரில் நிற்பவன் கூட கண்ணுக்குத் தெரியாமல் போக உடனே போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.
“என்ன சொல்லு அவளை பத்தி எல்லா டீடைலும் தெரிஞ்சிடுச்சா.”என்று கேட்டான் சுனில்.
ஆனால் எதிர் முனையில் இருந்து சொல்லியே செய்தியை கேட்டு இவனுக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சி தான்.
“என்ன சொல்ற நீ சொல்றது உண்மைதானா.”என்று கேட்டான் சுனில்.
“ஆமா சார் இதுல ஏன் நான் பொய் சொல்ல போறேன் அவங்க ஆபீஸ் குள்ள போறத நான் பாத்துட்டு தான் உங்களுக்கு இன்பார்ம் பண்றேனே.”என்று சொன்னான் அவன்.
“ஓகே நான் பாத்துக்குறேன் நீ போனவை.” என்று சொல்லியவன் இப்பொழுது நிமிர்ந்து விதுரனை பார்க்க விதுரனோ இவனை கொலை வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான் அதில் பயம் இருந்தாலும் கேட்ட செய்தியில் அவனுக்கு கொஞ்சம் தன் உயிர் தன்னிடமே இருக்கும் என்று நம்பிக்கை வர.
“பாஸ் இப்போ போன் பண்ணது அந்த பொண்ண ஃபாலோ பண்ண சொன்ன ஆள் கிட்ட இருந்து தான். அவன் என்ன சொல்றானா.”என்று மீண்டும் நிறுத்தினான் சுனில்.
“இப்படி நீ நிறுத்தி நிறுத்தி சொன்னா உன் மூச்சை ஒரேடியாக நிறுத்திடுவேன்.”என்று கர்ஜனையாய் விதுரன் கர்ஜிக்க.
“பாஸ் அந்த பொண்ணு இங்க ஆபீஸ்க்கு தான் வந்திருக்கலாம்.”என்று கடகடவென்று ஒப்பிப்பது போல் சொன்னான் சுனில்.
“வாட் என்ன சொல்ற.”என்று சீறினான் விதுரன்.
“ஆமா பாஸ் இப்போ அவன் அதான் சொன்னான்.”என்று சொன்னான் சுனில்.
அதில் தான் முன்பு ஓடிக்கொண்டிருந்த அந்த எல்இடி ஸ்கிரீனை ஒரு நிமிடம் பார்த்தவனுக்கு ஏதோ ஒன்று தோன்ற அடுத்த நிமிடம் சுனிலை அழுத்தமாக பார்த்தான் அவனின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் உடனே அதை செயல்முறைப்படுத்தினான். முதலில் ஆபீஸ் என்ட்ரன்ஸில் இருக்கும் சிசிடிவி கேமராவை செக் பண்ணினான் ஆனால் அதில் அவள் இல்லை அடுத்து அடுத்து என்று அவன் பார்த்துக் கொண்டே வர கிட்டத்தட்ட அது 75 மாடிகள் உள்ள கட்டிடம் குறைந்தது அவன் 30 தலங்கள் அவளை தேடி இருக்க அவள் அங்கு எங்கும் இல்லாததை பார்த்தவனுக்கு இவன் சொல்லியது உண்மைதானா என்று ஒரு நிமிடம் தோன்ற மெல்ல ஓர கண்ணால் விதுரன் பார்காக ஆனால் அவனின் பார்வை மொத்தமும் எல்இடி மேல் தான் நிலைத்து இருந்தது அதில் எச்சிலை கூட்டி விளங்கியவன் மீண்டும் அடுத்தடுத்து தளம் என்று பார்த்துக் கொண்டே வர இப்பொழுது சேல்ஸ் டிபார்ட்மெண்ட் வந்து நிற்கவும் அப்பொழுது இருவர் வாசலில் நின்று பேசிக் கொண்டிருப்பது பார்த்து சுனிலுக்கு அவர்கள் வேலை செய்யாமல் ஏதோ நின்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பது போல் இவனுக்கு தோன்ற இதை தன் பாஸ் பார்த்தால் அவர்கள் நிலை என்னவென்று யோசித்துக் கொண்டிருக்க பேசிக் கொண்டிருந்த ஒரு பெண் சற்று திரும்புவதற்கு அதை எதேர்ச்சியாக இவன் பார்ப்பதற்கும் கண்கள் அகல ஆனால் விதுரனின் கண்களில் அனல் பறக்க அவளைப் பார்த்த விதுரன் திரும்பி சுனில் பார்த்தவன்.
“இன்னும் ரெண்டு நிமிஷத்துல அவளோட டீடைல் எனக்கு வேணும்.”என்று சொன்னான் விதுரன்.
அதைக் கேட்ட சுனில் ஐயோ என்று இருந்தது அந்த பெண்ணை யார் காப்பாற்றுவது என்று மனதில் நினைத்தவன் விதுரன் சொன்ன வேலையை செய்ய தொடங்கினான் உடனே அந்த செல் டிபார்ட்மெண்ட் ஹெட் அழைத்தான்.
“ஹலோ சொல்லுங்க சார்.”என்று சொன்னான் ஹெட்.
“சேல்ஸ் டிபார்ட்மெண்ட்ல யாராவது புதுசா வேலைக்கு ஜாயின் பண்ணி இருக்காங்களா.”என்று கேட்டான் சுனில்.
“ஆமா சார் ரெண்டு பேர் ஜாயின் பண்ணி இருக்காங்க.”என்று சொன்னான் ஹெட்.
“ரெண்டு பேர. சேல்ஸ் டிபார்ட்மெண்டுக்கு ஒத்த தானே தேவையா இருந்தது எதுக்கு ரெண்டு பேர் ஜாயின் பண்ணி இருக்கீங்க”என்று கேட்டான் சுனில்.
“ஒருத்தர் தான் சார் தேவையா இருந்தது, இரண்டு பேர் குவாலிபிகேஷன் ரொம்ப நல்லா இருந்தது சார், அதுலயும் ஒரு பொண்ணு 99% ஓட இருந்தாங்க அதான் அப்புறமா வேற எந்த டிபார்ட்மெண்ட்ல எல்லாம் ஆள் தேவைனா சேஞ்ச் பண்ணிக்கலாம்னு சொல்லி அந்த பொண்ணு எடுத்து இருப்பாங்க சார்.”என்று சொன்னான் ஹெட்
“எனக்கு அதுல ஒரு பொண்ணு பத்தின டீடெயில்ஸ் வேணும் உடனே எனக்கு மெயில் பண்ணி விடுங்க.”என்று அவள் அடையாளத்தை சொன்னான் சுனில்.
“ஓகே சார் இன்னும் கொஞ்ச நேரத்துல அனுப்புறேன்.”என்று சொன்னான் ஹெட்.
“ஓகே கம் ஃபாஸ்ட்.” என்று சொல்லியவன் திரும்பி விதுரனை பார்த்து.“அந்த பொண்ணோட டீடைல் எல்லாம் கேட்டு இருக்கேன் பாஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல கிடைச்சிடும்.”என்று சொன்னான் சுனில்.
ஆனால் விதுரனுக்கு அவன் மனதில் எரிந்து கொண்டிருந்த தீ இப்பொழுது காட்டு தீ போல் இன்னும் கொழுந்து விட்டு இருந்து கொண்டிருந்தது அவளை தன் கையால் கொன்று புதைக்க வேண்டும் என்று வெறி நொடிக்கு நொடி அதிகமானதை தவிர குறையவில்லை.(என்ன சகோ அவங்க ரெண்டு பேர்ல யார் அந்த பொண்ணு நீங்க கண்டுபிடிச்சீங்களா அப்படி கண்டுபிடிச்சா கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.)
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
