அத்தியாயம் -4
” நீங்க பாட்டுக்கு உளறாதீங்கடா,”.
“ஓகே பாஸ்”.
” அடிக்கடி என்னை தேடி வர வேணாம் தேவைப்பட்டால் நானே இன்பார்ம் பண்றேன்”.
“ஓகே பாஸ்”.
அப்போது “தேவா தேவா” என தேன் நிலாவின் குரல் கேட்க,, “சரி நீங்க எல்லாம் ஒளிஞ்சிக்கோங்க” என்றதும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடி சென்று அந்த காட்டிற்குள் மறைந்து கொண்டனர் , தேவா அந்தப் பாறையில் அமைதியாக அமர்ந்து கொண்டான் .
“உங்களை எங்கெல்லாம் தேடிட்டு இருக்கேன் , நீங்க என்னடான்னா எப்டி இந்நேரம் இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க”.
“இல்ல தூக்கம் வரல அதனால தான்” .
“ஆமா! நீங்க எப்டி? இங்க வந்தீங்க , உங்களால தான் நடக்க முடியாதே”.
“மெதுவா நடந்து வந்தேன்”.
” இனிமே இப்டி வராதீங்க , உங்களை காணும்னு நான் எப்படி பதறி போய்ட்டேன் தெரியுமா? உங்களுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு தவிச்சு போனே” ,என அவள் பாட்டுக்கு அவனிடம் கத்திக் கொண்டிருக்க
அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவா, இதை அனைத்தையும் மறைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் ரவியும் மற்றும் மற்ற ஆட்களும்.
“அண்ணே! இந்த பொண்ணு இவ்வளவு தைரியமா நம்ம பாஸ் கிட்ட கேள்வி பேசிட்டு இருக்கு பாருங்க, நம்ம பாசோட முகத்தில் இருக்கிற சிரிப்புக்கு இந்த பொண்ணு தான் காரணமோ!”.
“எனக்கும் அதான் தெரியலை , சிங்கம் இப்படி உக்காந்திருக்கு , அந்த பொண்ணு என்ன வாங்கு வாங்கிட்டு இருக்கு பாரு” என அவர்கள் பேசிக் கொண்டிருக்க..
“இங்க பாருங்க தேவ் உங்களுக்கு உடம்பு சரி ஆகுற வரைக்கும் நான் தான் உங்களை பார்த்துக்கணும்னு பாட்டி சொல்லி இருக்காங்க அதுக்காக நான் அப்டி சொன்னேன், சரி நாம வீட்டுக்கு போலாமா ?” என அவள் கேட்க.
“ஒரு நிமிஷம் நில்லு “.
“என்ன?”.
” நீ தனியாவா வந்த” என அவளிடம் கேட்டான் தேவ் .
“ஆமா!”.
“இப்டி தனியாக காட்டுக்குள்ள நடந்து வர உனக்கு பயமா இல்லையா!” என தேவா கேட்க அவன் சொன்னதை கேட்டு சிரித்தாள் தேன் நிலா.
“எதுக்கு? இப்ப சிரிக்கிற”.
“நான் பிறந்ததுல இருந்து இந்த காட்டுல தனியா தான் மூலிகை பறிக்க வந்து இருக்கேன் அப்படி இருக்கும்போது இப்ப எப்படி? பயம் வரும்”.
“சப்போஸ் யாராவது வந்துட்டா என்ன? பண்ணுவ”.
“அதுக்கு ஒரு ஐடியா இருக்கு”.
“என்ன?”.
“எனக்கு ஏதாவது ஆபத்து னா என்னுடைய பிரண்டை கூப்டா கண்டிப்பா அவன் வந்து என்ன பாதுகாப்பா வீட்டில் கொண்டு போய் விட்டுடுவான் தெரியுமா!”.
” அப்படியா!அது யாரு ஃப்ரெண்டு இந்த காட்டுக்குள்ள, அண்ணே ஒருவேளை குரங்கா இருக்குமோ. ” என ஒருவன் ரவியிடம் கேட்க.
“டேய்!, இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் பறவைகள் தான் பிடிக்கும் , கிளி , மயில் அந்த மாதிரி இருக்கும்” என்றான் ரவி.
“அழகி” என்றாள் தேன் நிலா சற்று நேரத்தில் உருமலோடு அவள் அருகில் வந்து நின்றது ஒரு சிறுத்தை.
ஆத்தாடி! சிறுத்தை “என ஒருவன் கத்த போக அவன் வாயை பொத்திய ரவி
” சத்தம் போட்றாதடா எனக்கே பயமா தான் இருக்கு வாயை மூடு” என அவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.
தேவ் அந்த சிறுத்தையை பார்த்து சற்றும் அசறாமல் இருக்க அந்த சிறுத்தை அவன் அருகில் வர ,
“அழகி இவர்தான் அவரு நல்லா பாத்துக்கோ இனிமே இவர் இந்த பக்கம் காட்டுக்குள்ள தனியா வந்தா நீ தான் அவர பத்திரமா பாத்துக்கணும் சரியா” என தேனிலா சாதாரணமாக சொல்ல.
அந்த சிறுத்தை அவள் அருகில் வந்து அவளது முகத்தை தன் நாவினால் வருடியது.
“போதும் போதும் மூணு நாள் தான் பார்க்கல அதுக்குள்ள என்னமோ மூணு மாசம் பாக்காத மாதிரி இவ்வளவு பீல் பண்ற” என்றாள்.
உடனே அந்த சிறுத்தை முகத்தை திருப்பிக் கொள்ள.
“சரி சரி கோவிச்சுக்காத நானும் தான் உன்னை நினைச்சுட்டு இருந்தேன்” என சிறுத்தை நெற்றியில் முத்தமிட அவளையும் சிறுத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
“சிறுத்தை பார்த்து தூரத்தில் இருக்கும் போதே நம்ம கை கால் நடுங்குது நம்ம பாஸ் மட்டும் எப்படி அசரமாக உட்கார்ந்து இருக்கிறார்”.
“டேய்! அவர் சிங்கம்டா அவர்லாம் சிறுத்தை பார்த்து பயப்பட மாட்டார் அதனால தான் அவரு பாஸ் ஆ இருக்காரு பேசாம அமைதியா இருடா” .
” இல்ல அந்த அழகி வந்து நம்மள ஒரே கடியா கடிச்சிற போகுது” .
“அம்மாடி அதை பார்த்தாலே பயமா இருக்கு” என்றான்.
“உனக்கு எப்டி?இந்த சிறுத்தை பழக்கம்”
” அதுவா ஒரு தடவை இந்த சிறுத்தையோட ஜோடி குட்டி போட ரொம்ப கஷ்டப்பட்டுச்சு , அப்ப எங்க பாட்டி தான் வந்து அதுக்கு ஹெல்ப் பண்ணாங்க அதுல இருந்து அது சிறுத்தை நான் தனியா எங்க வந்து காட்டுக்குள்ள வந்தா எனக்கு பாதுகாப்பா வந்துரும்” .
அவன் சற்று சங்கடத்துடன் எழுந்து நிற்க, “வாங்க போலாம் ” என்றவள்,”சரி அழகி நீ போ நான் வீட்டுக்கு போறேன்” என்றதும் சிறுத்தை அவள் முன்னால் வந்து நிற்க.
“இல்லை நான் இவர் கூட போய்க்கிறேன் எனக்கு பயம் இல்ல நீ போ என்றதும் சிறுத்தை சென்ற பின் போகலாமா?” என்றாள்.
“சரி “என தேவ் எழ முயல சட்டென் அவனை தாங்கி பிடித்து அவன் கையை தன் தோளில் போட்டுக் கொண்டவள்,,” எதுக்காக? தேவ் இப்படி அவசரப்படுறீங்க அதான் நான் இருக்கேன்ல உங்க கைய புடிச்சு உங்களுக்கு கூட்டிட்டு போறதுக்கு இப்படி எல்லாம் அவசரப்பட்டு எந்திரிக்க கூடாது கீழ விழுந்து மறுபடியும் கை கால் அடிபட்டுடும் உங்களுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை ஏன்? தான் இப்படி இருக்கீங்களோ!” என அவள் பேசிக் கொண்டிருக்க .
“பயமா எனக்கா ” என சிரித்த தேவ் ,, “நீ எப்பவுமே இப்படித்தானா இல்ல இப்பதான் இப்படியா!”என கேட்டான்.
” என்ன?சொல்றிங்க எனக்கு புரியல!”.
” இல்ல இப்டி பேசிட்டு இருக்கியே உனக்கு வாய் வலிக்கலையா”.
அவனை முறைத்து பார்த்தவள்,, ” இங்க பாருங்க போனா போது, மனசன் ஒத்தையில வந்து இருக்காரு னு நான் உங்களுக்கு துணைக்கு வந்தே, நீங்க என்னையே கிண்டல் பண்ணிட்டு இருக்கிங்க ,வீட்டுக்கு வாயா உன்னை கவனிச்சுக்கிறேன்” என்றவர் தேவை கைதட்டங்களாக அழைத்துச் செல்ல.
“அண்ணே.
“என்னடா?”.
” நம்ம பாஸ் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரா”.
“இல்ல எனக்கு அப்படி தெரியலையே டா”.
“பின்ன இவ்ளோ உரிமையா பேசுதே அண்ணே , நம்ம பாஸ் ம் அமைதியா இருக்காரு” .
“ஆமா !டா அவர் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும், பார்க்கலாம் என்ன ஒரே ஒரு கவலை தான் “என்றான் ரவி.
” என்ன? அண்ணே”.
” நம்ம பாஸ் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டா நாளைக்கு அந்த பொண்ணு கூட அழகியும் அந்த வீட்டுக்கு வரும் தான் பரவால்லையா?”.
“என்னது!”என அவன் அதிர்ந்து சத்தமாக கேட்க அந்த சத்தத்தில் திரும்பி பார்த்தாள் தேன் நிலா.
” என்ன? ஆச்சு”.
” இங்க ஏதோ சத்தம் கேட்குது”.
“ஒன்னும் இல்ல வா” என்றவனை வீட்டிற்கு அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்து விட்டு உறங்கிய தேன் நிலா சிறிது நேரத்தில் சட்டென் வேகமாக வேகமாக எழுந்தவள் அவன் அருகில் வர.
“என்னாச்சு?” எனக் கேட்டான் தேவ்.
“இல்ல நீங்க உங்களுக்கு ஒன்னும் இல்லையே”.
“எனக்கு என்ன? , ஒன்னும் இல்ல” .
” கொஞ்ச நேரத்துல உங்களுக்கு ஏதோ ஆபத்து மாதிரி எனக்கு தோணுச்சு அதனாலதான் நான் பதறி எந்திரிச்சிட்டேன், உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமா!”.
“ஒன்னும் வேண்டாம்” .
“சரி உங்களுக்கு நான் கை கால் புடிச்சு விடவா?”.
” வேண்டாம்”.
” ஏதாவதுனா என்னை கூப்பிடுங்க”.
“சரி ” என்றான் ,
தரையில் படுத்தவள் அவனைப் பார்த்துக் கொண்டே மெதுவாக கண்மூடி உறங்க ஆரம்பித்தாள் தேன் நிலா.
“யாரு? இவ,ஏன் என்கிட்ட இவ்வளவு பாசமா இருக்கா, இவ்ளோ அக்கறையா இருக்கா, இன்னசென்ட் கேர்ளா இருக்கா, மத்தவங்க யாரும் என்கிட்ட பேச அவ்வளவு பயப்படுவாங்க, ஆனா! இவ என்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா வாரா “என நினைத்தவன் அப்படியே அவனும் கண்மூட விடியற்காலையில் வாசலில் பேச்ச குரலைக் கேட்டு கண்விழித்தான் தேவ் .
“அடியே!உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நேத்து ஃபுல்லா நானும் புருஷன் பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியே வரல”.
” ஏன்?” என சாதாரணமாக கேட்டாள் தேன் நிலா.
“என்னடி? இப்படி கேட்டு புட்ட, நேத்து நான் அஞ்சு ரவுடிங்க எங்க வீட்டுக்கு வந்தாங்க தெரியுமா!” .
“அவங்க என்ன?கேட்டாங்க”.
” இந்த ஊர்ல அடிபட்ட ஆள் யாரை யாவது பார்த்தியானு கேட்டாங்க எனக்கு அவ்வளவு பயமாயிருச்சு”.
“எதுக்கு? பயம்”.
“அவனுங்க கைல துப்பாக்கி வச்சிருந்தாங்க தெரியுமா!”.
“அப்படியா! எனக்கு தெரியல”.
“நான் எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன் என்னடி? ஆச்சு உனக்கு”.
” ஒரு நிமிஷம் இங்க வா அக்கா” என்றவளை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல அங்கு அப்பொழுது தான் கண்விழித்து எழுந்து அமர்ந்த தேவை பார்த்ததும்,, ” இவர் யாரு? “என பயந்தபடி கேட்டாள் பரமு.
“இவரைத்தான் அவனுங்க தேடி வந்தானுங்க”.
“என்னடி?சொல்ற “என தேன் நிலாவில் கையை பிடித்து வெளியே இழுத்து வந்து,,
நீ என்னடி என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்க “.என கேட்டாள் பரமு .
“ஆமாக்கா ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம துவைக்க போனப்ப நீ என்னை விட்டுட்டு வந்துட்டில”,
” ஆமா!”.
“அப்போ அடிப்பட்டு கிடந்த இவரை நான் தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் நேத்து தான் கண் முழிச்சு பார்த்திருக்கிறார் பாவம் இவருக்கு யாருமே இல்லன்னு நினைக்கிறேன், இருந்திருந்தா அவரை தேடி வந்திருப்பாங்கல்ல ,, எப்படி கண்ணு மூச்சு பேச்சு இல்லாம இருந்தார் தெரியுமா இவருக்காக தான் நம்ம கோயில்ல நான் சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன்” என்ற தேன் நிலாவே இமக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் பரமு.
“ஏன்?அப்படி பாக்குறக்கா ” என கேட்டவள் வரம் கேட்ட கேள்வியில் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றால் தேன் நிலா.
❤️பரமு அப்டி என்ன? கேட்ருப்பா ,,, உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு கமெண்ட்ல சொல்லுங்க,❤️
