மலர்-13
அமிர்தாவின் வீட்டிற்கே வந்து விட்டாள் இனியா.
வா இனியா என்ன பொண்ணு பாக்க வர்றதா சொன்னாளே அமிர்தா . பையன் யாரு உங்க ஆளுங்களா?எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டாள் அமிர்தாவின் அன்னை. அதற்குள் வேறு சுடியை மாற்றி கபவுடர் போட்டு கொண்டு வந்து விட்டாள் அமிர்தா.
“பக்கோடாவும் டீயும் போட்டு தரவா ?”
“ஆமா முதல்ல அத கேட்காம கிளம்பும்போது கேளு திட்டினாள் அமிர்தா.
ஏண்டி ரொம்ப நாள் கழிச்சு வந்த பிள்ளையை பார்த்த சந்தோஷத்துல எங்க அதெல்லாம் நினைவுக்கு வருது?
“சரி! பரவால்ல, நாங்க எங்கையாவது ஹோட்டலுக்கு போறோம்.”
:எதுக்குடி ஹோட்டலுக்கு? ட்ரெண்ட்ஸ்ல அறுபது சாத்வீகம் ஆப்பர் போட்டுருக்கான் . போலாமா ?”
இருவரும் ஜோடி சேர்ந்து, பைக்கில் பறந்தார்கள். அந்த பிரபலமான மால் உள்ளே செல்லும் வழியில் ஆனந்தின் கார் லேசாக இனியாவின் வண்டியில் இடித்து விட்டது. இனியா டக்கென்று பாலன்ஸ் செய்து கொண்டாள் . அமிர்தாவும் சற்று உயரம் என்பதால் சட்டென கால்களை கீழே ஊன்றி விழாமல் பார்த்துக் கொண்டாள் .
அவ்வளவுதான் இனியாவிற்கு வந்ததே கோபம்? இனியாவா இல்லை சிவனை மிதித்த காளியா ரேஞ்சில் பொங்கி விட்டாள் . அதில் இடம் பொருள் பார்க்காமல் அவள் வாயை விட்டதுதான் பெரிய தவறு. உனக்கு எவன்டா லைசென்ஸ் குடுத்தான்? இதில் ஆரம்பித்து என்னென்னெவோ சொல்லிக் கொண்டிருந்தாள். வண்டி ஓட்ட தெரியலன்னா போய் வீட்டுல அம்மா மடில தூங்க வேண்டியதுதானே? ரோட்டுல வந்து உசுர எடுக்கற ? பல்லுக்கிடையில் தான் அவள் கடித்து துப்பி இருந்தாள் . ஆனாலும் சென்று விட்டான் என்று நினைத்த ஆனந்தின் காதுகளில் அது தெளிவாகவே விழுந்தது.
அவள் கத்த ஆரம்பித்து விட்டதால் அவன் மன்னிப்பு கேட்கவில்லை(அப்டியா!) அவளின் வார்த்தைகள் அவன் மனதை துளைத்தது. இருப்பினும் மனதை காம் பண்ணிக் கொள் என்று நினைத்ததும் அது கல்லாகவே மாறியது. இருவரும் அவரவர் வேலைகளை பார்க்கச் சென்றனர். சில துணிகளை இருவரும் வாங்கி கொண்டனர். அதே போல அங்கேயே பீட்டர் இங்கிலாந்து கடையும் இருக்கவே இனியா ஒரு வேளை ஓகே சொன்னால் விக்ரமிற்கு எது போல துணி வாங்கலாம் என்று பார்த்தாள் .
“இப்போ எதுக்குடி இது? “அமிர்தா கடிந்து கொண்டாள் .
“இரு டி அப்போதான் அடுத்த மாசத்துக்கு பட்ஜெட் போட முடியும் ”அடக்கினாள் தோழியை.
அப்படியே அங்கேயே நின்றிருந்தவள் மனம் ஆனந்தின் உடை பற்றி சிந்திக்க ஆரம்பித்தது.
அவளுக்கு ஏன் அந்த நினைப்பு வர வேண்டும்? நம்மோட ரேஞ்சுக்கு அவரை பாக்கறதையே அவரு விரும்ப மாட்டாரு. இதுல இது வேறையா ?
மூளை அலாரம் அடித்தது. மனதை மாற்றிக் கொண்டவள் அன்னை தந்தை திருமண நாளுக்கு தந்தைக்கு வாங்கலாமா என்று யோசித்தாள் .
‘நீ யாருக்குடி பாக்கற ?”
“இல்லடி அப்பாவுக்கு. கல்யாண நாள் வருதுல்ல. அதான்”
அங்கிருந்து கிளம்பிய இருவரும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து கொண்டனர். இருப்பதிலேயே விலை குறைவான காபியை ஆர்டர் செய்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
“என்னடி இது? திடு திப்புனு விக்ரம் வீட்டுலேர்ந்து பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்லற?”
“ஆமாண்டி அந்த கூத்த ஏன் கேட்கற?”
“”விக்ரம் ஆஸ்பத்திரில இருக்கும்போது நான்தானே பார்த்தேன். அப்போ அவருக்கு என்ன புடிச்சு போச்சு, அசால்டாகச் சொன்னாள் இனியா.
“இதுல என்னடி இருக்கு? நம்ம வேலையத்தானே நாம பார்த்தோம்?” சந்தேகமாக வினவினாள் அமிர்தா.
அதில்லடி. அவருக்கு தொடைக்கு மேல, இடுப்பு எலும்புலையும் அடிபட்டு இருந்தது. முதல்ல ட்ரெஸ்ஸிங் பண்ணறதுக்கு அவரு ஒத்துக்கவே இல்ல. ஜென்ஸ் நர்ஸுதான் வேணுன்னு ஒரே அடம் . அதுக்கப்புறம் சொல்லி புரிய வச்சு எல்லாமே நாந்தான் பண்ணேன். அதுல தான் சாருக்கு ஞான கண் திறந்துடுச்சாம்” இனியா கிண்டல் போல சொன்னாலும் அவள் முகத்தில் இருந்த வெட்க சிரிப்பும் முக சிகப்புமே அவளுக்கு விக்ரமை பிடித்திருக்கிறது என்பதை விளக்கியது.
“யாரு முதல்ல ப்ரபோஸ் பண்ணது? நீயா? அவரா ?”
‘ம்ம் அவங்க அம்மா!” அசால்டாக காபியை உறிஞ்சிக் கொடும் காலை ஆட்டிக்கொண்டும் சொன்னாள் இனியா.
அவள் சொன்னதும் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் இருந்த காபியை புற்ப் என்று துப்பி விட்டாள் . அதற்கும் அசைய வில்லை இனியா .
இவளின் சிரிப்பை மின் படிக்கட்டுகளில் இறங்கி வந்த ஆனந்த் பார்த்துக் கொண்டே தான் இருந்தான். அவன் கண்களில் என்ன இருந்தது? (எனக்குத் தெரியும். ஆனால் இந்த முறை அவன் கண்களிலும், மனதிலும் என்ன இருந்தது என்பது உங்கள் கற்பனை)
பெத்த புள்ளைக்கு பொண்டாட்டி எப்படி இருக்கணும்கறது அவளோட முகத்தை பார்த்து இல்ல, மனச பார்த்துதான் முடிவு பண்ணுவா ஒரு அம்மா. அவனை இப்டி கண்ணும் கருத்துமா பார்த்துக்கற பொண்ணுதான் கிடைக்குமான்னு ஏங்கிட்டு இருந்தேன். கடவுள் காண்பிச்சுட்டாரு. என் பையன கட்டிகிரியான்னு கேட்டாங்க”
“அதுக்கு மேடம் என்ன சொன்னீங்க ” மீதம் இருந்த காபியை மெதுவாக உறிஞ்சினாள்
“வேற என்ன ? முதல்ல உங்க பையன் கிட்ட கேளுங்க. அப்புறம் வீட்டுல வந்து பேசுங்கன்னு சொல்லிட்டேன்”
“அது சரி. விக்ரமுக்கு ஏற்கனவே ஒரு பொண்ணுகூட காதல் இருந்துச்சே ?”
“அவங்க அம்மா சொன்னதையே தான் அவரும் சொன்னாரு”
“அந்த பொண்ணு கிட்ட தெளிவா பேசாம எந்த முடிவும் எடுக்காத இனியா”
” அது அப்புறம். விக்ரம வளர்த்த சித்தப்பா இருக்காராம். அவரு ஓகே சொன்னாதான் அடுத்ததாம். அதனால் நான் ரொம்பல்லாம் யோசிக்கல”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பிளேசரை எடுத்து கைகளில் மடக்கிக் கொண்டவன் அப்படியே கைக் கட்டி இவர்கள் இருவரையும் அழுத்தமாக பார்த்தான்.
இவன் முகத்தை பார்த்ததுமே சட்டென இருக்கையில் இருந்து பயத்துடன் எழுந்து நின்றுக் கொண்டாள் அமிர்தா . அமிர்தாவை தொடர்ந்து இனியாவும் வந்தவனையே உற்று நோக்கினாள் . ஆனால் எழுந்திருக்கவில்லை. அமர்ந்த நிலையில் இருந்து அவனைப் பார்க்கவும் இன்னும் அதிக உயரமாகத் தெரிந்தான்.
இனியாவின் கையில் லேசாக நிமிண்டிஎழுந்து நின்று சொன்னாள்.
“இனியா இவருதான் என்னோட பாஸ். ”
அமிர்தா சொன்னதும் இனியாவின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. ‘அமிர்தாவுக்கு நம்மளால பிரச்சனை வந்துடுமே,சாரி சொல்லு இனியா.’ மனதும் மூளையும் சொன்னாலும் வாயில் இருந்து மட்டும் வார்த்தை வரவில்லை. ஆனால் மனது மட்டும் “வாவ் எவ்ளோ சூப்பரா இருக்கான் என்று கூவியது, நேரம் காலம் தெரியாமல்.
ஒரே ஒரு நிமிடம் தான் ஆனந்த் அவர்களை அழுத்தமாக பார்த்தான். அதற்குள் அமிர்தாவிற்கு சர்வமும் ஒடுங்கிப் போயிற்று.
அவன் சென்றதும் தான், தான் மூச்சு விட மறந்ததே அமிர்தாவுக்கு நினைவுக்கு வந்தது. நெஞ்சை பிடித்துக் கொண்டு ஒரு பெரு மூச்சு விட்டாள் .
மறுநாள் என்ன நடக்குமோ? அமிர்தாவுடன் சேர்ந்து நாமும் சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்வோம்.
“என்னடி இது அந்தாளுக்கு போய் இவ்ளோ பயப்படற ?
“வாய மூடுடி. அவனுக்கு நாம பேசினா எங்க இருந்தாலும் காதுல விழுந்திடும். முதல்ல வீட்டுக்கு போகலாம். அதுதான் நமக்கு நல்லது”
‘ஏண்டி இவ்ளோ பயப்படற? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் விடு”
“நீ வேற ஏண்டி? அந்தாளு திட்டினா சாதாரண விஷயம். அமைதியா இருந்தா பெரிய பூகம்பமே வந்துடும் ”
அமிர்தாவை வீட்டில் விட்டு விட்டு இனியாவும் புறப்பட்டாள்.
வாயிலில் நின்றவள் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. புதன் கிழமை நாலு மணிக்கு எங்க வீட்டுல இருக்கணும், கட்டளையுடன் புறப்பட்டாள்.
அன்றைய தினம் நடந்ததை இரவில் நினைத்து பார்த்த இனியாவிற்கு,அமிர்தாவும் ஆனந்தனும் நல்ல ஜோடி என்றுத் தோன்றியது.அப்படி நடந்தால் தோழியின் கஷ்டங்கள் தீர்ந்து விடுமே என்று சந்தோசப் பட்டாள் . அவள் எண்ணமே நினைவாகும்போது தோழிக்காக கவலைப் படைப்ப போவதும் இனியா தான்…
மறுநாள் காலை வழக்கம் போல தாத்தாவுக்கு காபி கலந்து கொண்டு போனாள் அமிர்தா. அவளிடம் கேட்காமலே அந்த காபியை எடுத்து அவன் குடிக்க ஆரம்பித்து விட்டான். இவள்தான் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தாள்.
“இந்த காபி வேற மாதிரி இருக்கே ?”
“இது பித்தளை பில்டர்ல போட்ட டிகாக்ஷன். அதோட சுகர் இல்ல. கருப்பட்டி காபி”
மனதில் என்ன தோன்றியதோ அமிர்தாவை பாராட்டினான். அவனின் ஒரே ஒரு வார்த்தை ரொம்ப “நல்லா இருக்கு” அவளுக்கு மனதில் உற்சாகத்தை கொடுக்குமா ? கொடுத்தது. ஆனால் அமிர்தாவுக்கு அவ்வளவு எளிதில் ஆனந்தத்தை கொடுத்து விடுபவனா ஆனந்த் ?
அவனின் ஆர்ப்பாட்டத்தை விட அவனின் அமைதி தான் அவளை ஆட்டிப் படைத்தது. ஒவ்வொரு வினாடியும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று பயந்து நடுங்கினாள்.
காலை சிற்றுண்டியில், ஒன்றும் தெரியாதது போல, தாத்தாவிடம் பிரட்டில் ஜாமை தேய்த்துக் கொண்டே
தாத்தா நம்ம கம்பனியோட எக்சிபிஷன் *மால்ல நடக்குது. அதுக்குதான் பிரபரேஷன் எப்படி இருக்குன்னு பார்க்க போய் இருந்தேன். ரொம்ப அருமையா எல்லாத்தையும் செட் பண்ணி இருக்காங்க. ரெஜிதா, ஷீ ஸ் பெர்பெக்ட்.
“இதுக்கு முன்ன பண்ணவங்களும் நல்லாத்தானே பண்ணிக்கிட்டு இருந்தாங்க” தாத்தா கேட்டார்.
“எஸ் க்ராண்ட் பா, ஆனா கூட இன்னும் இவங்களோடது வேற மாதிரி , நம்மளோட எல்லவிதமா டைல்சையும் எக்ஸ்போஸ் பண்ணற மாதிரி ரொம்ப இம்ப்ரெசிவா இருந்துச்சு. நாம ஒரு நாள் போகலாம். அப்போதான் உங்களுக்கு நான் சொல்லறது புரியும்”
” சரி பா!” அமைதியாக இட்லியை விண்டு வாயில் போட்டுக் கொண்டார்.
வேண்டுமென்றே பேச்சைத் தொடர்ந்தவன், “ஆன் தாத்தா! இன்னொரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட கன்சல்ட் பண்ணனும்”
“என்ன” என்பது போல நிமிர்ந்து பார்த்தார்.
“நேத்து நான் அங்க போகும் போது ஒரு டூ வீலர் வண்டில லைட்டா பட்டுருச்சு. அதுக்கு அதுல இருந்த பொண்ணுங்க கத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதான் அவங்க மேல மான நஷ்ட வழக்கு போடலான்னு இருக்கேன். என்னதான் இருந்தாலும் அப்டி பப்லிக் பிளேஸ்ல என்னை அவமான படுத்தி இருக்க கூடாது. அதுலயும் போய் அம்மா மடில படுத்து தூங்க சொல்லறா ஒருத்தி. எனக்கு வந்த கோபத்துக்கு இறங்கி ஒரு அப்பு அப்பனும்போல இருந்துச்சு.
அவன் சொல்ல சொல்ல பாட்டிக்கு அருகில் நின்றிருந்த அமிர்தாவுக்கு தொண்டை விக்கித்து போயிற்று.
முள் மாறுமா?
