மலர் -22

 

மலர் -22

அவர்கள் இருவருமே தனித்தனி அறையில் இருப்பதும் தெரியாதா? அதை மாற்ற நினைத்தவர்கள் இரவில் அமிர்தாவையே ஆனந்துக்கும் பறிமாறச் செய்தார்கள். பல்லைக் கடித்த ஆனந்துக்கும் தயங்கிய மருமகளுக்கும் பெரியவர் சொன்ன ஒரே பதில், “வேலைகாரங்க பாக்கறாங்க . நம்மளோட மதிப்பை நாமதான் தக்க வச்சுக்கணும்” பேரனை பார்த்து முறைத்தார். வேறு வழி இல்லாமல் இருவரும் ஒத்துக் கொண்டனர்.  அப்படி ஒரு நாள் பரிமாறும்போது கணவனின் அருகில் நின்று சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்தாள். அப்போது தவறுதலாக அவன் கை அவளின் மேல் பகுதியில் பட்டு விட்டது. இவளுக்குத்தான் உடலில் ஏதோ ஒரு மாற்றம். அவனோ சாம்பாரை ரசித்து ரசம் போல குடித்துக் கொண்டிருந்தான். இதை கவனித்த பாட்டி யாருக்கும் தெரியாமல் தாத்தாவை கிள்ளி கவனிக்க செய்தார்.

 ஒரு நொடியில் அமிர்தாவின் முகம் சிகப்பாகி இருந்தது. அதை பெரியவர்கள் இருவரும் ரசித்தனர். ஆனால் அன்று முதல் அமிர்தா இன்னும் சற்று தூரமாகவே நின்று பரிமாற பழகிக் கொண்டாள்  என்பது வேறு விஷயம். 

இன்று வேண்டுமானால் ஆனந்துக்கு  இவளின் ஸ்பரிசம் உரைக்காமல் இருக்கலாம். அனால் என்றேனும் ஒருநாள் அவன் அவளின் தீண்டலுக்கு ஏங்குவான். அப்போது அது கிடைக்கப் போவதில்லை.

முதல் மாதம் கையில் காசு இல்லாமல் அமிர்தாவின் குடும்பம் சற்று திணறித்தான் போயிற்று. அமிர்தா தாத்தாவிடம் கடன் வாங்கி இருந்தாள் .  

அடுத்த மாதம் ஓ.டி செய்து அதை திருப்பிக் கொடுத்துவிட்டாள் . எப்போதும் அமிர்தாவை பணத்துக்காக வந்தவள் என்று குற்றம் சாடும் பேரனுக்குத் தெரிவதற்காக வேண்டுமென்றே தெரியாதது போல கேட்டார். அது “போன மாசம் உங்ககிட்டேர்ந்து கடன் வாங்கி இருந்தேனில்லை. அதுதான்”

“பரவல்லம்மா! அது எதுக்கு திருப்பி கொடுத்துக்கிட்டு?”

“இல்ல தாத்தா! அது தப்பு. அப்புறம் உழைக்கணுங்கற எண்ணம் வராது. உங்களுக்கு குடுக்கறதுக்காவே தான் நான் எக்ஸ்ட்ரா வேலை செஞ்சேன். ஏதோ நான் இங்க இருக்கேன். சாப்பாடு போடறீங்க அதுக்கு மேல என்ன வேணும் ?”

வாயில் நின்று இவர்கள் பேசுவதை பேரன் கவனித்தான். அமிர்தா அறியவில்லை. 

பேரனுக்கு எதையோ உணர்த்தியவர் “சந்தோஷம் மா. உனக்கு எப்ப வேணுன்னாலும் எங்கிட்ட தயங்காம கேளு.” 

“சரி தாத்தா!”

“உனக்கு ஒரு க்ரெடிட் கார்டு வாங்கி தர்றேன். உனக்கு என்ன வேணுமோ யூஸ்  பண்ணிக்கோ”

“அசோ! வேணவே வேணாம். அத வேற வச்சுக்கிட்டு பெரிய தொல்லை. நம்ம கைல என்ன பணம் இருக்கோ அத வச்சுக்கிட்டு வாழனும். இந்த கார்டுல யூஸ்  பண்ணா  கட்டுப்பாடே இல்லாம போய்டும். அதனால இந்த தொல்லையே வேணாம்.”

தலைக்கு மேல் கும்பிட்டவளை பார்த்தவருக்கு சிரிப்புதான் வந்தது. பேரனும் உதட்டில் சிரிப்பை மறைத்தவாறு செல்வதை திருப்தியுடன் பார்த்துக் கொண்டார் பெரியவர். 

முதலில் சில நாட்களுக்கு அந்த வீடு பழக்கப்பட கஷ்டமாக இருந்தாலும், தன்  வாழ்வில் பல பிரச்சனைகள் இருக்கிறது என்பதை முத்துவும் வைரனும் அமிர்தாவுக்கு முதலில் மறக்கடித்தார்கள். பிறகு வந்த நாட்களில் தானாகவே மறந்து கூட போய்  விட்டது. அந்த  அளவுக்கு அவள் வீட்டில் இருக்கும் போது அவளையே சுற்றி சுற்றி வந்தார்கள். அவள் குளிக்க செல்லும்போது கூட அவர்களிடம் பர்மிசன் கேட்க வேணும். அவள் எந்த உடை உடுத்த வேண்டும் என்று அவர்களே தான் சொல்வார்கள்.

“என்னம்மா அமிர்தா தினமும் சுடியே போடற ?வேற புடவை கட்ட  வேண்டியது தானே ?”

“இல்ல பாட்டி! இவங்களோட விளையாடறதுக்கு வேணுன்னு இவனுங்கதான் எனக்கு தெனம் சுடியை எடுத்து கொடுக்கறாங்க.”

“ஏண்டா உங்கம்மாவுக்கு ட்ரெஸ் கூட நீங்க  தான் சொல்லுவீங்களா ?” ஆச்சர்யமாக கேட்டார் தாத்தா.

“அது சரி அவ பாத்ரூமுக்கு கூட அவங்க கிட்ட பர்மிசன் கேட்டுத்தான் போகணும் அது தெரியாதா உங்களுக்கு ?”

“உங்கம்மா பாவண்டா” இரண்டு குழந்தைகளையும் ஆசையாக கொஞ்சினார் தாத்தா. 

பாட்டியின் சொல்லுக்காக குழந்தைகளை செல்லமாக கடிந்து கொண்டு மஞ்சள் வர்ண சேலையை எடுத்து கட்டி கொண்டு வந்தாள் . அன்று அதிசயமாக ஆனந்தும் வீட்டில் இருந்தான். 

“ம்..! வெள்ளிக்கிழமை புடவ கட்டி இருக்கியே? மங்களகரமா இருக்கு. சாமி அறைக்கு சென்று விபூதி குங்குமத்தை இட்டு கொண்டு விளக்கேற்றி சாம்பிராணி ஏற்றி பூஜை செய்தாள் . வீடும் மங்களகரமாக இருந்தது. 

 

நடக்க போகும் விபரீதம் அறியாமல் அனைவரும் அந்த ரம்யமான காலைப் பொழுதை ரசித்தனர். 

வழக்கம்போலச் சமையல் செய்பவர்களுக்கு அமிர்தா சமையல் செய்தாள். வாரத்தில் ஒரு நாள் அவர்களுக்குத் தேவையானதை இவளே செய்து கொடுப்பாள்.

“பாட்டி! உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” பின் தலையை லேசாகச் சொரிந்து அசடு வழிய வந்து நின்றவளை பார்த்து,

“என்னடி தங்கம்?”

“அது ஒன்னும் இல்ல, இங்க நம்ம வீட்டுல வேலை செய்றவங்களுக்கு வாரத்துல ஒரு நாள் நான்  சமையல் செய்யவா?”

“இது என்ன புது பழக்கம்?” பேப்பர் படித்துக் கொண்டிருந்த தாத்தா தான்  கேட்டார்.

“அவங்களும் பாவம் அம்மா பொண்டாட்டி எல்லாரையும் விட்டுட்டு வந்துருப்பாங்க. தெனமும் அவங்களே சமைச்சு அவங்களே சாப்பிடணும். இதுவே வேற யாராவது செய்து குடுத்தா அவங்களுக்கு வீட்டுல இருக்கற மாதிரி ஒரு சைக்கலாஜிக்கல் கம்பர்ட் இருக்கும் அதுதான்.”

“இது உன் வீடு உனக்கு என்ன தோணுதோ அதைச் செய்.”

“தேங்க்ஸ் பாட்டி!” கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள்,  

“போடி எச்சி பண்ணிட்டியே ?” செல்லமாகச் சிணுங்கினாள். 

“இந்தாங்க இதையும் தொடச்சுக்கோங்க” மறு கன்னத்திலும் கொடுத்தாள் பேத்தி.

இதை எல்லாம் ரசிக்க  வேண்டியவனோ கணினியில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தான். 

மதியம் இவள் பெரியவர்களுக்குப் பரிமாறிப் பிறகு தானும் ஒரு வாய் போட்டுக் கொண்டு வேலை செய்பவர்களுக்குப் பறிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே பெரிய ஜாகுவார் கார் வந்து நின்றது. 

ஏற்கனவே வீட்டில் நடந்த பிரச்சனையில் கொலை வெறியுடன் வந்திருந்தாள் ரெஜிதா. அப்போதுதான் இவர்கள் வீட்டில்,

“என்ன அமிர்தா வச்ச சாப்பாடு அத்தனையும் காலியா ?”

“ம்! ஆமா!  பாட்டி”  சிறு வெட்கத்துடன் சொன்னாள். 

“அம்மா ரொம்ப நாளைக்கு அப்புறம் வயிறு நிறைய சாப்பிட்டோம். அம்மா கையால சாப்பிட்ட  மாதிரி இருந்துச்சு. ரொம்ப நன்றிங்க. நீங்க  எல்லாரும் நல்லா  இருக்கனும்” தலைமை சமையல்காரர் மனதார வாழ்த்தினார்.

மற்றவர்களும் மனதார வாழ்த்தினார்கள். அனைவரும் அமிர்தாவை புகழ்வதை பார்த்து முறைத்துக் கொண்டு வந்த ரெஜிதா, 

“ஆனந்த்! ஆனந்த்!”  என்று கத்தினாள். 

ஜாமினில் வெளியில் வந்திருந்தாள்

உள் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அங்கே வந்தான். அதற்குள் பாட்டி “வாம்மா! ரெஜிதா உட்காரு” என்றார்.

“என்ன பண்ணறத பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி பேசறீங்களா ? என்னை  அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னா உங்க பேரனுக்கு புத்தி சொல்லி வெயிட் பண்ணி இருக்கணும். ஆனா நீங்க? உடனே இந்த வேலைக்காரியை  கல்யாணம் பண்ணி வச்சுடீங்கல்ல ?” 

முதலில் பளீரென அமிர்தாவின் கன்னத்தில் அறைந்த  ரெஜிதா, “நீ என்னடி ஒன்னும் இல்லாத பிச்சைக்காரி எதை காட்டி ஆனந்தை  மயக்கின? எங்கிட்ட இல்லாதது உன்கிட்ட என்னடி இருக்கு?” சொல்லிக் கொண்டே சட்டென அமிர்தாவின் புடவையை பிடித்து உருவி விட்டாள் . 

சட்டென மேலே கையை வைத்து மூடிக் கொண்டவள் அங்கே நின்ற ஆனந்தின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டாள் . நொடியில் தன்னிச்சையாக அங்கே சோபாவின் மேல் இருந்த துணியை எடுத்து அமிர்தாவின் மேல் போர்த்தினான் ஆனந்த் .

ரெஜிதாவை பளாரென்று  அடிக்க துடித்த கையை அடக்கிக் கொண்டார் தாத்தா.

“வாட் இஸ்  திஸ் ரெஜி ?”

உள் அறையில் ஒளிந்துக் கொண்ட அமிர்தா  அந்த வார்த்தையில் அடிபட்டு போனாள் . 

‘எவ்ளோ பெரிய விஷயத்தை செஞ்சுருக்கா ? இன்னமும் ரெஜியா ?’ மனம் உடைந்து போயிற்று. தன்  வாழ்க்கை  தொலைந்தது கண் முன்  விகாரமாகத் தெரிந்தது. திருமணத்திற்கு முன் அவன் பேசிய வார்த்தைகள் காதில் எதிரொலித்தது. 

“என்னதான் நீ பாட்டி தாத்தாவை  மயக்கி என்ன கல்யாணம் பண்ணாலும் என்னோட லவ் அது ரெஜிதா மட்டும்தான். அவ எப்படி வேணுன்னாலும் இருக்கலாம். ஆனா என்னோட அன்பு உண்மையானது. அதை அப்படியே மறந்துட்டு உன் பின்னாடி வந்திடுவேன்னு நினைக்காத”

‘என்னதான் இருந்தாலும் நான் யாரோதானா ? அவரோட காதல் அவளுக்கு மட்டும்தானா ?’அமிர்தாவின் மனம் குமுறியது.  

கமலாம்மா அவசரமாக பாட்டியின் அறையில் இருந்து ஒரு புடவையை கொண்டு வந்து கொடுத்தார். கதவை சாத்திக் கொண்டவளுக்கு அங்கு என்ன நடந்தது என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் அவள் விரும்பவில்லை. புடவையை மாற்றிக்  கொண்டு காலை குறுக்கி  அமர்ந்து அழ ஆரம்பித்தவளுக்கு அழுகை நிற்கவே இல்லை.  இது தனக்கு எதனை பெரிய அவமானம்?

அங்கே நடந்தது எதுவும் பிடிக்காமல் தாத்தா தனது அறைக்கு சென்று விட்டார். பாட்டி  அமிர்தாவை சமாதானப்படுத்த வந்து விட்டார்.

பாதிக்கும் என்ன சொல்லித் தேற்றுவது என்பது புரியவில்லை. பேரன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக் கொண்டிருந்தார். காதல் கொண்ட மனம் அவளிடம் இன்னும் மண்டியிடுவது அந்த வயதானவளுக்குத் தெரியவே இல்லை. 

“வாட் ஐஸ் திஸ் ரெஜி ?” ஆனந்தின் குரல் மிரட்டியது.

“அதையேதான் நானும் கேட்கறேன். எப்படி எப்பிடிடா உன்னால உடனே அடுத்தவளை கல்யாணம் பண்ண முடிஞ்சுது? எப்படி டா உன்னால எனக்கு துரோகம் பண்ண முடிஞ்சது?”

அவனுக்கு மிக அருகில் கண்கள் கலங்க நின்றிருந்தாள். நிதானமாக நின்றவனின் மூச்சும் கோபத்தில் வேகமாக வந்த அவளின் மூச்சும் ஒன்றாகக் கலந்தது.

“நான் உனக்கு துரோகம் பண்ணல ரெஜி . எங்கேஜ்மெண்ட் அன்னிக்கு என்ன நடந்ததுன்னு  யோசிச்சு பாரு. உனக்குத்தான் எல்லாத்துக்குமே  வேற பிரண்ட்ஸ் இருக்காங்களே? அப்புறம் ஒப்புக்கு சப்பானியா நான் எதுக்கு ? என்னோட தாலி எதுக்கு?”

ஆனந்திடம் குழைந்தாள்.  கண்களை துடைத்துக் கொண்டாள் . 

“ம்ம்! ஒத்துக்கறேன். நாந்தான் தப்பு பண்ணினேன். ஏதோ கோபத்துல சொன்னா  அதை  அப்டியே எடுத்துக்குவியா? எல்லாத்தையும் மறந்துடலாம்.  நீ தாத்தா பாட்டிக்காக  தானே கல்யாணம் பண்ணிகிட்ட ?

நீ அவ கூட செக்ஸ் வச்சிகிட்டியா? இல்ல தானே? இருக்காது. உன்னால எனக்கு துரோகம் பண்ண முடியாது. எனக்குத் தெரியும்.” அவளேப் பேசிக் கொண்டிருந்தாள்.

“ இந்த சனியனை டைவர்ஸ் பண்ணிடு . நாம ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம், கல்யாணம் பண்ணிக்கலாம். ஹனி மூனுக்கு ஸ்விஸ் போகலாம், அங்க நீயும் நானும் மட்டும். உனக்கு எவ்ளோ குழந்தைங்க வேணுமோ அவ்ளோ பெத்துக்கலாம். ஜாலியா ரொமான்ஸ்  பண்ணலாம் , ஓகேவா ?”

முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!