மலர் -24
முதலாளியின் கட்டளைக்கு அடி பணியத் தொடங்கினாள்.
அன்று வந்த அந்த மன நிலை சரியில்லாத பெண்மணியை அதற்கு மேல் காணவில்லை. யாரோ சமூக சேவை செய்பவர்கள் அழைத்துச் சென்றிருந்தனர். அக்காவை அழைத்துச் செல்ல வந்திருந்த முரளிதான் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்தான். மாதங்கள் நகர்ந்தன. முரளி பரிட்சைக்கு முன்பாகவே வேலைக்குச் செல்ல தொடங்கி இருந்தான். அவன் இன்டெர்ன்ஷிப் செய்த கம்பனியிலேயே அவன் திறமைக்கு வேலையும் கொடுத்து விட்டார்கள்.
நாட்கள் மெல்ல நகரத் தொடங்கின. சில நாட்கள் கணவன் செல்லக் குட்டிகளுடன் காலையில் ஜாகிங் செல்லும் போது இவள் மாடியில் நின்று காபிக் குடித்துக் கொண்டே பார்ப்பாள் (அதாம்பா சைட் அடிப்பா ) அதை அவனும் ஓரக்கண்ணால் பார்ப்பானேத் தவிர நல்ல வேலையாக எந்த பனிஷ்மெண்ட்டும் கொடுக்கவில்லை.
அதற்கு பதிலாக அவன் தான் புது அவதாரம் எடுத்திருக்கிறானே ?
பார்த்தாலே சண்டை வந்து விடும் என்று இருந்தவர்கள் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். இந்த சில மாதங்களில் இதுதான் பெரிய வெற்றி.
சாதாரணமாக உடை உடுத்தி இருந்தால், “என்ன நான் இன்னும் உன்ன பிச்சைக்காரியாவேதான் வச்சுருக்கேன்னு காட்றியா” என்பான். நன்றாக உடுத்தி இருந்தால் “தளுக்கி மினுக்கி என்ன மயக்கரியா” என்பான். இதற்கு அவன் தன்னை பார்க்காமலே இருக்கலாம் என்று தோன்றும். ஒரு ஞாயிறு அன்று தோழியின் ரிசெப்சனுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
இவன் வாங்கி கொடுத்த நாக பழ வர்ண புடவை அவளின் நிறத்தை இன்னும் எடுத்துக் காட்டியது. அதில் இடையில் தெரிந்த இடை பற்றி கேட்க வேண்டுமா ?
பார்த்தவன் மயங்கித்தான் போனான். ஆனால் ஒத்து கொள்ளத்தான் மனம் வரவில்லை.
அவள் தனித்திருக்கும்போது,
“என்னடி! இப்படி அப்படி இடுப்பை காட்டி மயக்க பாக்கிறியா? எல்லாத்தையும் மூடிக்கிட்டு கிளம்பு. அதை இதை காட்ட வேண்டியது அப்புறம் அவன் அங்க தொட்டான்னு இவன் இங்க தொட்டான்னு ஒப்பாரி வைக்க வேண்டியது” திட்டிக் கொண்டே சென்று விட்டான். அவன் சொல்லுக்கு பிறகு பாவம் அவள் பேரழகியாக இருக்கிறாய் என்று பலரும் சொன்னாலும் மனதில்தான் ஏறவில்லை.
நாக்கை சப்புக் கொட்டி சாப்பிடுவான். ஆனால் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டான். ஆனால் இவள் அவன் தேவை அறிந்து சமைக்கவும் பரிமாறவும் கற்றுக் கொண்டாள் . அதற்கான ரெஸ்பான்ஸ் ஜீரோதான்.
“ஏண்டா! இப்டி ரசிச்சு ருசிச்சு சாப்பிடறியே ஒரு நாள் உன் பொண்டாட்டிகிட்ட சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லேன்.”
“எதுக்கு சொல்லணும் ? நாம நல்லா சாப்பிடத்தான் வேலைகாரங்க சமயல் செய்யறது.” வேலைக்காரர்கள் என்னும்போது அவள் முகத்தின் மீது அழுத்தமாக பார்த்தான்.
பிறகு என்ன? பார்க்கலாம்.
எதையுமே உணராதவளாக, அமிர்தாவின் வீட்டில் உள் அறையில் தன் மகனை கொஞ்சிக் கொண்டிருந்தாள் கோதை. அவள் இனி அந்த வீட்டை விட்டு எங்கும் போக மாட்டாள்.
அது வரை கண் கூட திறக்க முடியாமல் தன் வீட்டில் படுத்திருந்த அமிர்தா, மதியத்திற்கு மேல் மெதுவாக கண் விழித்தாள். பதறி அடித்து கொண்டு வந்தார்கள் விசாலமும் முரளியும்.
“எப்படி இருக்க அம்மு? அம்மாவை மன்னிச்சுடு டி ?
“அக்கா! எப்டிக்கா இருக்கு? டாக்டர்கிட்ட போலாமா ?”
“இல்லடா. இப்ப கொஞ்சம் பரவால்ல. இனியாவை வர சொல்லு. அந்த அம்மாவை கூட்டிட்டு வந்தியா ?”
“யாருக்கா அவங்க ?”
“அவங்க என்னோட மாமியார். அவங்க சாப்டாங்களா ?”
“சாப்டங்கக்கா”
தம்பியின் உதவியுடன் மெதுவாக எழுந்திருந்தாள்.உதடு கிழிந்திருந்ததால் பல் தேய்க்க முடியவில்லை. ஏதோ பேருக்கு வாயை கழுவி அன்னை ஊட்டிய கஞ்சியை உறிஞ்சிக் கொண்டாள் . குளிக்க முடியவில்லை . மிகவும் அவஸ்தை பட்டு போனாள் . உடல் வேதனையை விட மனதின் வலி அதிகமாக இருந்தது. அவனின் கொடூரமான வார்த்தைகள்?
“அக்கா! அவரு மேல போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாமா ?
“என்னடா இது இப்டி பேசற ?”
“என்னக்கா ? நீ இப்டி பேசற? உன்ன வீட்டுக்கு எப்டி கூட்டிட்டு வந்தேன் தெரியுமா ? கல்யாணம் ஆகி ரெண்டு உசுரா வர்றதுக்கு பதில் அரை உசுரா வந்த”
“இருக்கட்டுமே டா அதான் உசுரோட இருக்கேனேடா ?”
“ம்! காதல் கொண்ட மனம். அப்டித்தான் பேசும். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.”
கையை கட்டிக் கொண்டு இனியா கத்தினாள்.
“ஏண்டி! அப்டி இருந்தா என்ன ?”
“டேய் இவகிட்ட பேசறதே வேஸ்ட். வாடா நாம ஸ்டேஷனுக்கு போகலாம்”
“நீங்க போய் கேஸ் குடுத்தா ? ஒன்னும் ஆகாது. என்னோட சைட்லேர்ந்து அவருக்கு எந்த அவமானமும் வர கூடாது. ஏற்கனவே அவரு ரெஜிதாவால அவமானப்பட்டது போதும்.
“அதான?” இனியாதான் சலித்துக் கொண்டாள் .
அன்று என்ன நடந்தது? அமிர்தாவுக்கு உடம்பில் என்ன?
“ஒரு வார்த்தை நல்லா இருக்குன்னு சொல்ல கூடாதா” பாட்டி கேட்ட கேள்விக்கு அவள் சமையலுக்கு வந்தவள் என்பதை அவன் தெளிவாகச் சொல்லி விட்டான்.
அவள் வேலை செய்பவள் அவ்வளவே. இவளுக்குத்தான் மற்றவர்கள் முன் அவமானமாக இருந்தது.
அந்த மன நிலை சரியில்லாதப் பெண் அவர் இருந்த இடத்தில இருந்து தப்பித்து ஓடி வந்து விட்டார். வழக்கம்போல வெள்ளிக் கிழமை மற்றவர்களுக்கு சமைக்கும் போது அதில் இருந்து சிறிது எடுத்து வந்து அந்த பெண்ணிற்கும் கொடுத்தாள் . இவள் கெட்ட நேரம் அதை ஆனந்த் பார்த்து விட்டான்.
இல்லாத அதிசயமாக அமிர்தாவை தன்னறைக்கு அழைத்தான்.
“எதுக்குடி அவளை தொட்ட ?”
நொடியில் அவன் கண்கள் சிவந்திருந்தது.
ஒன்றும் புரியாமல் குழம்பினாள் அமிர்தா .
“எதுக்குடி அவளை தொட்ட ?” சொல்லிக் கொண்டே அருகில் இருந்த தண்ணீர் வைத்திருந்த கண்ணாடி ஜாடியை வீசி அடித்தான்.
பயத்தில் இரண்டடி பின்னே நகர்ந்தாள்.
“இதை முழுக்க உன்னோட கையால க்ளீன் பண்ணனும். பண்ணுடி”
திகைத்து நின்றாள்.
“பண்ணுடி” கர்ஜனையை பயந்தவள் மெதுவாக சுத்தம் செய்ய தொடங்கினாள். நடுவில் சில இடங்களில் கைகளில் குத்த ஆரம்பித்தது. அவள் கையில் இருந்து வரும் ரத்த சொட்டுக்களை ஆனந்தமாக ரசிக்க தொடங்கினான். பிறகு கடுப்பானவன் உடனேயே வேலைக்கு கிளம்பி விட்டான். கையில் என்ன அடி என்று கேட்ட பாட்டியிடம் கையில் கண்ணாடி குத்தி விட்டது என்று மட்டுமே சொன்னாள் .
கையில் மருந்தை தடவிக் கொண்டு அறையில் அமர்ந்து யோசிக்க தொடங்கியவளுக்கு அவனின் செயல்பாடு வித்தியாசமாக இருந்தது. அவனுக்கு எப்போதுமே தன்னை பிடிக்காது என்பது தெரியும். ஆனால் முகத்தில் அந்த குரூரம்? அவளுக்கு நினைக்கவே பயமாக இருந்தது. அந்த பெண்ணை தொட்டதால் தான் அவனுக்கு இத்தனை கோபம் என்று தான் அவள் நினைத்தாள்.
ஒருவேளை ரோட்டில் இருப்பவள், பிச்சைக்காரி, பைத்தியம் என்பது ஏதாவது காரணமாக இருக்கலாம் என்றது தோன்றியது. அவனுக்கு அருவருப்பாக இருக்குமோ அவனுக்கு பிடிக்க வில்லை என்றால் தொட வேண்டாம் என்றும் நினைத்தாள் . இதனால், தான் இந்த வீட்டை விட்டே போகப் போகிறோம் என்று அவள் அறிய வில்லை.
தினமுமே, இரவில் அலுவலகம் விட்டு வந்த ஆனந்த் வெளியில் அந்த பெண்ணை பார்த்து இகழ்ச்சியான புன்னைகையுடன் வந்தான்.
அன்று இரவு நல்ல மழை, அந்த பெண் அவர்களின் வீட்டு வாயிலில் தான் இருந்தார். மழையில் நடுங்கியவருக்கு உடல் குளிரெடுக்க ஆரம்பித்தது. இவளுக்கோ தவிப்பாக இருந்தது. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆனந்தின் அறைக்கு சென்றாள் . கவனமாக வெளியில் தான் நின்றிருந்தாள்.
கதவை திறந்து பார்த்தவன்,
“என்ன இந்த நேரத்துல இங்க வந்துருக்க ? பஸ்ட் நைட்டுக்காகவா? இங்க வச்சுட்டு போ” இகழ்ச்சியுடன்தான் சொன்னான்.
அப்போதுதான் அவளுக்கும் தான் கையில் பாலுடன் வந்திருப்பது புரிந்தது.
“இல்ல! உங்க கிட்ட ஒரே ஒரு விஷயம் சொல்லணும்”
பாலை டேபிளில் வைத்து விட்டு கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.
என்ன என்பது போல் பார்த்தான்.
“அது அவங்க மழைல நினைச்சுக்கிட்டு இருக்காங்க.
“எவங்க ?” புரிந்தும் புரியாதது போல கேட்டான்.
“அதான் மன நிலைமை சரி இல்லாதவங்க காலைல நான் சாப்பாடு கொடுத்தேனே? பாக்கவே பாவமா இருக்கு. இன்னிக்கு ஒரே ஒரு நைட்டு மட்டும் உள்ள ஷெட்டுல படுக்க வைக்கலாமா ?” தலை குனிந்து சொல்லிக் கொண்டிருந்ததால் அவளுக்கு அவனின் கோபம் தெரியவில்லை.
“ஷட் அப்! டாமிட்! அவள பத்தி பேசாத. அந்த பொம்பளைய பத்தி பேசாத. அவளாலதான் நான் இப்டி இருக்கேன்”
அவன் கத்தியதில் அவன் முகத்தை பார்த்தவளுக்கு பயமாக இருந்தது.
“ப்ளீஸ்! அவங்கள பார்த்தா பாவமா இருக்கு.”
“பாவமா இருக்கா ? என்ன பார்த்து எத்தனை பேரு பாவம் பரிதாபமா பார்த்துருப்பாங்க?அந்த ஓடுகாலி, பெத்த புள்ளன்னு கூடப் பாக்காம என்ன விட்டுட்டு ஓடிப் போனவ தெரியுமா ? வெறும் பணம் நகை படுக்கை சுகம் சீ ! நினைக்கவே குமட்டுது. எங்கப்பா கொடுக்காதது அவளுக்கு எவன் குடுத்தான்?
நாய்ங்கள விட்டுட்டு தள்ளி இருன்னு சொன்னதுக்கே உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்ததே, அவ ? பெத்த புள்ளய விட்டுட்டு வெறும் ஒடம்பு சுகத்துக்காக வேற ஒருத்தனோட ஓடிப் போனவ. எங்கப்பா ஆக்ஸிடென்ட் ஆகி கால் எரிஞ்சு போய்ச் சிறிது மூச்சு விட்டவன்,
எவ்ளோ கஷ்டப்பட்டாரு தெரியுமா ? டிரஸ் கடை வச்சுருந்தோம். முழுக்க எரிஞ்சு போச்சு. தாத்தாவும் பாட்டியும் என்னையும் பார்த்துகிட்டு அப்பாவையும் பார்த்துகிட்டு? கைல காசு இல்லாம நாங்க கஷ்டப்பட்டபோது இவ ? இன்னொருத்தனோட பட்டுப் புடவை கட்டிட்கிட்டு நகையைப் போட்டுக்கிட்டு காருல வலம் வருவா.தே** மு**”
“ப்ளீஸ்! அப்டி சொல்லாதீங்க. அவங்க அப்டியே இருந்தாலும் பெத்த புள்ளை அந்த மாதிரி தப்பான வார்த்தையை அம்மாவைப் பார்த்துச் சொல்லக் கூடாது.
அந்த அம்மா இவரின் அன்னையா? தன்னுடைய மாமியாரா? இவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பெண் இத்தனை வருடங்களாக வீட்டு வாயிலில் இருந்தும் தாத்தா பாட்டி கூட ஏன் கண்டுக் கொள்ளவில்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது.
கம்பீரமான ஆணின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. ஏனோ அவன் கண்களில் இருந்த வந்த கண்ணீர் இவளால் தாங்க முடியவில்லை.
“அவங்க யாரா வேண்ணாலும் இருக்கட்டும் . இன்னிக்கு ஒரே ஒரு நாள் ராத்திரி இங்க படுத்துக்கட்டுமே காலைல எங்கையாவது விட்டுடலாம். நம்ம வீட்டு வாசல்ல இருக்கறவங்களைப் பார்த்தும் நாம இப்படி விடறது நமக்குத் தான் பாவம். கடவுள் இதை மன்னிக்கவே மாட்டாரு. “
“முடியாது!” இப்போதும் அமைதியாகவே தான் சொன்னான்.
சொல்லி முடித்தாகி விட்டது என்று நகரப் போனவனை சட்டென அவன் மணிக்கட்டை பிடித்து விட்டாள் .
ஏற்கனவே கொலை வெறியில் இருந்தவனுக்கு அது இன்னும் வெறுப்பை ஏற்றியது.
அவள் கையை பார்த்தான். சட்டென அவள் கைகளை எடுத்துக் கொண்டாள் .
அவளை பளீரென அடிக்க வந்த கையை அடக்கிக் கொண்டு அருகில் இருந்த பெல்ட்டை எடுத்தான்.
நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்தவள்,
“சாரி! சாரி! உங்கள தொட்டது தப்புதான். சாரி ப்ளீஸ்” கையெடுத்து கும்பிட்டாள் .
“யாரு டீ நீ ? பத்து பைசாவுக்கு லாயக்கில்லாதவ நீ என்ன தொடரியா? உனக்கு, அவளுக்கு உங்க எல்லாருக்கும் பணம் தானடி தேவை ? பணத்துக்காக***வந்தவ நீ., என்ன தொடரியா ?”
முள் மலரும் ..
