14. வேய்ந்தனனின் வல்லினம்

14.வல்லினம்

மகிமா கூறிய செய்தி விஷ்வஜித்தின் காதுகளில் இடியாக தான் இறங்கியது. ஒன்றை நினைத்து அவ்விடம் வந்தவனுக்கு, அது இல்லாமல் போனால் எப்படி இருக்கும் அதைதான் அந்நேரம் உணர்ந்தான் விஷ்வஜித்.

“இஃப் யூ டோண்ட் மைண்ட் நான் மகிஷாவை பார்க்கலாமா?”  விடைக்கிடைக்காது என்று தெரிந்தும் கேட்டான்.

“ம்ம்ம். வாங்க”  விஷ்வாவை அவ்வீட்டின் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற மகிமா, மகிஷாவை காட்டினாள்.

கண்களை மூடியபடி, கடந்த இரண்டு வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்ணவளை சலனமற்ற பார்வைப் பார்த்தான் விஷ்வஜித். மகிமா அவனது தலையில் இடியாக இறக்கிய செய்தி இதுதான்.  மகிஷாவின் இந்நிலை அவனை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது. எங்கு சென்றாலும் முட்டுக்கட்டையாகி போய்விட, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.

“இவங்களுக்கு எப்படி விபத்து நடந்துச்சு மகி?”

“கார்ல ஓவர் ஸ்பீடா போயிருக்காங்க. இவ சீட் பெல்ட் போடாததுனால கட்டுப்பாட்ட இழந்த கார் விபத்துல சிக்கி, மகிஷாக்கு தலையில பலத்த காயம். டாக்டரா வருவானு ஆசைப்பட்டோம். ஆனால் அந்த நொடியே எல்லாமே மாறும்னு நாங்க யாருமே நினைக்கலை.” விரக்தியுடன் வந்தது மகிமாவின் பதில்.

“அப்போ போயிருக்காங்கனா? மகிஷாவோட இன்னும் சிலரும் போயிருக்காங்களா? அவங்க இப்போ எப்படி இருக்காங்க?” அவள் கூறிய பதிலிலிருந்து வினாவினைத் தொடுத்திருந்தான்  விஷ்வா.

“இன்வெஸ்டிகேசன் பண்ற மாதிரி ஒவ்வொன்னா கேட்குறீங்க? யாருங்க நீங்க? உண்மையிலேயே நீங்க பிரகல்யா பிரெண்ட் தானா?” சற்று எரிச்சல் மேலோங்க கேட்டாள் மகிமா. 

“மகிமா நான் பிரகல்யாவோட பிரெண்ட் தான். அதுல உங்களுக்கு டவுட் தேவையே இல்லை. நௌ சி இஸ் மிஸ்ஸிங். இரண்டு நாள் ஆச்சு. அட்லிஸ்ட் பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு கண்டுபிடிக்கலாம்னு தான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன்.”

“வாட். எப்படி ஆச்சு?” அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்.

“தெரியலை மகிமா, லியாவை யாராவது கடத்தியிருப்பாங்களோனு கொஞ்சம் பயமா இருக்கு?” என்றான் அழுத்தமாக.

“பிரகல்யா ரொம்ப நல்ல பொண்ணு. நான் இன்ஜினியரிங் படிச்சாலும், எங்க வீட்டுக்கு மகிஷா அடிக்கடி பிரகல்யாவை கூட்டிட்டு வருவா. இப்போகூட மகிஷா ட்ரீட்மெண்ட்க்கு பிரகல்யா தான் பணம் அனுப்புறா. அவளுக்கு போய் இப்படி ஒரு நிலைமையா?” ஒரு வித ஆதங்கத்தோடு வந்தது மகிமாவின் வார்த்தைகள்.

“ம்ம்ம். அதுக்காக தான் நெருங்கிய தோழியான மகிஷாவை பார்க்க வந்தேன். ஆனால் அவங்க இந்த நிலையில இருக்காங்கனு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை.”

“எப்படி மகிஷா தான் க்ளோஸ் பிரெண்ட்னு கண்டுபிடிச்சீங்க?”

“இதுல கண்டுபிடிக்க என்ன இருக்கு? உண்மைகளை கண்டுபிடிக்க ரொம்ப சுலபம் தான். ஆனால் பொய்யை கண்டுபிடிக்க தான் கொஞ்சம் கஷ்டம்.” என்று இலகுவாக அவன் கூற மகிமா அதை ஆமோதித்து தலையை ஆட்டினாள். மகிமாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது விஷ்வாவின் கண்கள் அவ்வறையை நோட்டம் விட்டது.

“ஓகே மகி, இப்போவாவது சொல்ல முடியுமா? அந்த விபத்துல மகிஷாவோட வேற யாருல்லாம் போனாங்க?”

“சுஜித் மட்டும் தான் இருந்தாங்க. ஆனால் அவருக்கு பெருசா காயம் இல்லை. எலும்பு முறிவு மட்டும் தான். அடுத்து அவர் எங்க இருக்காருனு தான கேட்பீங்க?” 

“அடடா இதுதான் கற்பூர புத்தினு சொல்வாங்க.” என்று புன்னகையுடன் கூறினான்.

“ஆனால் எனக்கு சுஜித் எங்க இருக்காருனு தெரியலை. அதுனால தான் முன்கூட்டியே நானே சொல்லிட்டேன்.”

“ஓ..” என்று தலையில் கைவைத்தவன், “லேசா தலை வலிக்குது. ஒரு கப் காஃபி கிடைக்குமா?” என்று கேட்டதில், 

“ஐ அம் சோ சாரி. காஃபிகூட கொடுக்காமல் பேசிட்டு இருக்கேன்.” என்று உதட்டை பிதுக்கியவள் விரைந்து அங்கிருந்து செல்ல, அந்நேரத்தை பயன்படுத்தியவன், அவ்வறையிலிருந்து ஒரு புகைப்படத்தை தன் தோள்பையினுள் திணித்துக் கொண்டான்.

பின் மகிஷாவின் அருகில் வந்தவன் பெண்ணவளின் கைகளை அழுத்தமாக பற்றினான்.

“ஹாய் மகி. விடை தேடி உன்கிட்ட வந்தேன். ஆனால் விடைசொல்ற நிலைமையில நீ இங்க இல்லை. ஐ ஹோப் நான் பேசுறது உனக்கு கேட்கும். உன்னோட இந்த நிலை விபத்தா? இல்லை வேணும்னே நடக்கப்பட்ட கொலை முயற்சியா?”  கவலை இழையோட அவன் கேள்வியைக் கேட்க, சலனமின்றி படுத்திருந்தாள் பெண்.

பெருமூச்சொன்றை விடுத்தவன், அவளது கைகளை விடுத்து எழுந்து நிற்க, மகிமா கையில் காஃபியோடு வந்தாள். காஃபியை பெற்றவன் ஒரு மிடறு விழுங்கியபடி,

“நான் இங்க இருந்து போகணுமா? வேண்டாமா?” என்றான் சற்று கடுமையாக.

“ஏன்.. என்னாச்சு?” குழம்பினாள் மகிமா.

“இவ்ளோ நல்லா காஃபி போட்டுக் கொடுக்குறீங்களே. இதை குடிச்ச அப்புறம் இங்க இருந்து போகதான் மனசு வருமா?” என்று புன்னகைக்க, மகிமாவின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

பின் அவளிடமிருந்து விடைபெற்றவன் வாசல் நோக்கி செல்ல, அவனை தடுத்து நிறுத்தினாள் மகிமா.

“பிரகல்யா கிடைச்சதும் மறக்காமல் சொல்லுங்க.” என்றவள் அவளது கைபேசி எண்ணை அவனிடம் கொடுக்க, அதைப் பெற்றவன் தலையசைத்து விட்டு சென்றான்.

இங்கு உள்ளே படுத்திருந்த மகிஷாவின் விழியினோரம் சிறு நீர் துளி திரண்டிருக்க, அறையை அடைத்து விட்டு உள்ளே வந்த மகிமாவோ,  மகிஷாவின் நிலையைக் கண்டு சற்று அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்

                    ***

சலனமில்லா முகத்துடன், புல்லாங்குழலை உதட்டினோரம் வைத்தபடி புன்னகைக்கும் மாயக் கண்ணனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் வைஜெயந்தி. உனது ராதையை நீ கைபிடித்து அழகாய் புன்னகைப்பது போல், என் மகனும் அவனுகேற்ற மங்கயவளை கைப்பிடித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டாமா? ஏன் இவ்வாறு நிகழ்த்தினாய்? என்றவரின் மனம், தன் வயிற்றில் பெறாத மகனுக்காக கண்ணனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தது.

வீட்டிற்கு வந்ததிலிருந்து, அவரது மனதில் இம்மியளவு கூட வருத்தம் குறையவில்லை. முதல் பெண் மண்டபத்தை விட்டு சென்றுவிட்டாள் என்றாலும், இரண்டாவது பெண்ணவளை மணம் முடித்து அழைத்து வரலாம் என்று நினைத்தும், அவ்வாறு நடக்காமல் போனதை அவரால் ஜீரணிக்கவே இயலவில்லை.

தகவல் ஆதிமந்திரையை அடைந்தது. ஆனாலும் அவர் இதுபற்றி இந்திரனிடமோ இல்லை வைஜெயந்தியிடமோ ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. ருத்ரஜித்திடம் பேசுவதற்காக அமைதியாக அவருடைய அறையில் காத்திருந்தார்.

வீட்டின் சூழல் இவ்வாறாக இருக்க, ருத்ரஜித்தின் ஜாகுவார் அவ்வீட்டினை வந்தடைந்தது. ஜாகுவாரின் மிரட்டல் ஒலியில், வைஜெயந்தி பூஜையறையை விட்டு வெளியே வந்திருந்தார். ஏற்கனவே முகப்பு அறையிலிருந்த இந்திரன் அவனிடம் பேசுவதற்காக தயாராகியிருக்க, காரிலிருந்து நேராக உள்ளே நுழைந்தவன், இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, தனது அறையை நோக்கி செல்ல எத்தணித்தான்.

“ருத்ரா.” இந்திரனின் அழைப்பு அவனது செவியை அடைந்தது.

“சித்து, பாஸ்ட் இஸ் ஃபாஸ்ட். அது பத்தி திரும்ப பேச விருப்பம் இல்லை.கொஞ்சம் டயர்டா இருக்கு. நான் ஃபிரஸ் ஆகிட்டு வரேன்.” மிக உறுதியாக சொன்னான் ருத்ரஜித்.

“சரிப்பா நாங்க எதுவுமே பேசல. அம்மா உன்னோட பேச நேத்திலிருந்து காத்துகிட்டு இருக்காங்க.” என்று கூறிய வைஜெயந்தி குரலில் சிறு வருத்தம் எட்டிப்பார்த்தது.

“பார்த்துக்குறேன் சித்திமா. நீங்க எதுவும் நினைச்சி ஃவொரி பண்ணிக்காதீங்க.” வைஜெயந்தியின் கரங்களைப் பற்றி ஆறுதல் கூறியவன், அதன்பின்னரே தன் தாயின் அறை நோக்கிச் சென்றான்.

அழுத்தமான அவனது காலடிகளின் சத்தம், மந்தரையின் அறையை தொட்டதுமே அமைதியடைந்தது. கதவை அவன் தட்ட, அடுத்த நொடியே கதவு வத்சலாவின் மூலம் திறக்கப்பட்டது. ருத்ரஜித்தைக் கண்டு லேசாக முறுவலித்தவள், “வாங்க” என்று கூறியவள்,  அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

அன்னைக்கும் மகனுக்குமான உரையாடல்களில் அவள் இடையில் இருப்பதில்லை. அவள் சென்றதும் கதவை அடைத்தவன், திரைக்கு பின்னே உள்ள கட்டிலின் மீது படுத்திருந்த தன் அன்னையைக் கண்டான். 

அன்னையைக் கண்டதும் அந்த நொடி அவன் சிறுவனாய் மாறிட, அவரிடம் விரைந்து சென்றவன் தரையில் அமர்ந்துக் கொண்டான். தனதருகே அமர்ந்திருக்கும் தன் மகனது தலையை வாஞ்சையோடு வருடிவிட்டார் மந்திரை.

“அம்மா.” என்றவன் தன் தலையை வருடும் அன்னையின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டான். 

“ருத். பிரகல்யா எப்படி இருக்காப்பா.” என்றவரின் ஒற்றை கேள்வியில் அதிர்ந்துதான் போனான் ருத்ரஜித்.

“ம்மா.” என்றவனின் குரலின் நடுக்கம் பெற்றவளுக்கு புரியாதா என்ன? சந்தேகம் ஊர்ஜிதமாய் மாறிவிட கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தார் மந்தரை.

“உங்க நிச்சயதார்த்தப் போட்டோ, வீடியோ எல்லாமே பார்த்தேன்ப்பா. அந்த பொண்ணு கண்ணுல காதல் தான் தெரிஞ்சுது. ஆனால் என் பையன் கண்ணுல அந்த காதல் துளியும் இல்லையே. காதலிக்குறப் பொண்ணு எதுக்குப்பா மண்டபத்தை விட்டுப் போகணும்?” சலனமற்ற அவரது குரலைக் கேட்டு ருத்ரஜித்தின் மனதில் தான் நெருடல் தோன்றியது.

“அம்மா அப்படி எதுவும் இல்லை. எனக்கு விருப்பமில்ல தான். ஆனால்.” என்று தயங்கியவனுக்கு அதற்கு மேல் நா எழவில்லை. நிச்சயம் அவனால் மந்தரையிடம் பொய்யுரைக்க இயலாது. அது போல மந்தரையும் தன்மகனை கட்டாயப்படுத்தி பதில் பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை.

“சரிப்பா. ஆனால் உன்னால யாரும் கஷ்டப்படக்கூடாது. அப்படி ஒரு விசயம் நடந்தால், இந்த அம்மாவை நீ மறந்திட வேண்டியதுதான்.” என்று உறுதியாக கூறும் தாயின் சொல்லில் நொடியில் மாறியது ருத்ரஜித்தின் முகம்.

“ம்மா. நல்லவங்களுக்கு, எவ்வளவு நல்லது வேணாலும் பண்ணலாம். ஆனால் தப்பு செஞ்சவங்களுக்கு நல்லது பண்ணா, நம்மை விட முட்டாள் யாரும் இருக்கமாட்டாங்க. அப்படி நம்ம இருந்து அனுபவிச்ச கஷ்டம், நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லைனு நினைக்குறேன்.” என்றான் பிடிவாதமும் உறுதியும் கலந்த குரலில்.

“அம்மாக்கு பாடம் நடத்துறியா ருத் கண்ணா.” என்றவர் கேட்டாலும் உள்மனமோ பிரகல்யாவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

“இல்லைம்மா. என்னை புருஞ்சுப்பீங்கனு நம்புறேன்.” தன் தாயை ஆதங்கத்துடன் அவன் நோக்க, மந்தரையோ அவனது முகம் பார்க்காது, தனது முகத்தினை திருப்பிக்கொண்டார்.

பெருமூச்சொன்றை விடுத்தவன், அடுத்த நொடியே அறையை விட்டு விறுவிறுவென்று வெளியேறியிருந்தான். கோபத்தில் அவன் முகம் இறுகியிருந்தது. என்றும் அரவணைக்கும், அன்னையின் பாராமுகத்தை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

“இதுக்கு எல்லாம் நீ மட்டும் தான் டி காரணம்.” பிரகல்யாவை நினைத்து உறுமியது அவன் மனம் . அடுத்தநொடியே வீட்டைவிட்டு வெளியேறியவன் நேராக சென்றது என்னவோ அவனது அலுவலகத்திற்கு.

இரவு நேரம் என்பதால் அந்த உயர்ரக கட்டிடமே ஒரு சிலரைத் தவிர்த்து, வெறிச்சோடிக் காணப்பட்டது.  விரைந்து தனதறைக்குள் புயல் போல் நுழைபவனது பின்னே ஓடிக் கொண்டிருந்தான் வைகை.

இரண்டு நாட்களுக்கு பிறகு பாஸை கண்டதில் மகிழ்ச்சியா? இல்லை அவன் கேள்விகளுக்கு ஏதேனும் பதில் கிட்டும் என்ற ஆவலா என்பதை அவன் மட்டுமே அறிவான்.

“இவரு போற வேகமே சரியில்லையே. கோபமா இருக்காரோ?” யோசித்தது வைகையின் மனம். இருந்தும் பின்னே அவனும் விரைந்தான்.

ருத்ரஜித்தோ அவனது இருக்கையில் சாய்ந்து அமர, கதவோரம் நின்ற வைகையோ, “மே ஐ கம் இன் பாஸ்.” என்று மரியாதையோடு கேட்டநொடி.

“வராதனு சொன்னா அப்படியே போயிடுவியா?” என்று அழுத்தமாக கேட்டவன் பார்வை வைகையின் மீது பதிந்தது.

‘ரைட்டு செம ஃபார்ம்ல தான் இருக்காரு’ என்று மனதில் நினைத்தவன், “பாஸ் நீங்க என்ன சொன்னாலும் கேட்பேனே பாஸ்.” என்றான் பணிவோடு.

“அப்போ வாயை மூடிட்டு இங்க இருந்து கிளம்பு.” என்று சாதாரணமாய் அவன் கூறிவிட, வைகையின் முகம் தான் நொடியில் வாடியது.

“ச்சே கிரேட் இன்சல்ட்.” என்று வெளியே வந்து சலித்துக் கொண்டவனுக்கு ஒரே ஆறுதல் அவ்விடம் யாருமில்லை என்பது மட்டுமே. 

அந்நேரம் அடர்நீல நிற குட்டை பாவடையில் ஒயிலாக சாய்ந்தபடி நங்கை ஒருத்தி அவன் முன் வந்து நிற்க, அவளை நிமிர்ந்து பார்த்த வைகையின் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தது.

‘இவ எதுக்கு இங்க வந்திருக்கா?’ சலிப்பும், கடுப்பும் ஒருசேர தோன்றியது வைகைக்கு.

“ஹாய் வைக்ஸ். உன் பாஸ் எங்க?”

“அடடா மேடம் பாஸ்கிட்ட மட்டும் தான் பேசுவீங்களோ?” 

“பின்ன அல்லக்கையோடவா பேச முடியும்?” நக்கலாக ஏறிட்டன பெண்ணவளின் விழிகள்.

“அடடா இதை ஒரு தொடப்பக்கட்டை சொல்லுது பார்த்தீங்களா?” என்றவன் நக்கல் இழையோடு கூற, அவளது விழிகளோ அவனைச் சுட்டெறித்தது. 

“யூ…. யூ…. இடியட்.” என்றவளை இடை நிறுத்தியவன், 

“ஹலோ மேடம் நான் சொன்ன தொடப்பக்கட்டை என்ன உங்க பேரா? நான் பொதுவ சொன்னேன்.” என்றவன் அசட்டையாக வார்த்தைகளை உதிர்த்தான்..

“வந்து உன்னை வெச்சுக்குறேன்.” என்று முறைத்துவிட்டே ருத்ரஜித்தின் அறை நோக்கி சென்றாள் மயூரா. 

“இவ வெச்சுக்குற அளவுக்கு அவ்வளவு மட்டமாவா இருக்கு நம்ம டேஸ்ட்டு.” என்று செல்லும் அவளைப் பார்த்து கூறியவன், அங்கிருந்த இருக்கையில் கடுப்புடன் அமர்ந்துக் கொண்டான்.

“ஹாய் டார்லிங்.” என்று கூறிக்கொண்டே ருத்ரஜித்தின் அறைக்கதவினைத் திறந்தாள் மயூரா.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு அவளது வருகை எரிச்சலைக் கூட்ட, “இப்போ எதுக்கு  வந்த?” என்றான் கடுப்புடன்.

“வொய் ஸ்வீட்ஹார்ட். எதுக்கு இப்படி எரிஞ்சு விழுற?” என்று கூறிக்கொண்டே உடலை வளைத்து நெளித்து நடந்தவள் அவனை நெருங்கியிருந்தாள்.

“கடுப்படிக்காத மயூ. ஆல்ரெடி நான் ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்.”

“வொய் பேபிக்கு டென்ஷன். நான் சில் பண்றேன் பேபி உன்னை.” என்றவள் ருத்ரஜித்தின் மடியில் வந்தமர்ந்தபடி, அவனது நெற்றியை வருடத் தொடங்கியிருக்க, அவளது செயலில் ருத்ரஜித்தின் முகம் பாறைப்போல் இறுகியது.

“ஓ மை டியர் ஸ்வீட்ஹார்ட். நீ இப்போ ஒருவார்த்தை சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லை லிவ்விங்னாலும் ஓகே தான். என் காதலை புருஞ்சுக்கோ பேபி.” என்றவள் அவனது கன்னத்தில் முத்தமொன்றை பதிக்க, அவளது செயலில் கடுப்படைந்தவன் தன்னிடமிருந்து அவளை பிரித்துக் கீழே தள்ளியிருந்தான்.

அவனது செயலில் பொத்தென்று கீழே விழுந்தவளுக்கு, இடுப்பு ஒருபுறம் பிடித்துக்கொள்ள, “அம்மா.” என்று கத்தியவள் எழ முடியாமல் திணறினாள்.

“வலியில நீ சொல்ற வார்த்தை கூட அம்மா தான். ஆனால் லைஃப் ஸ்டெயில் மட்டும் வெஸ்ட்டெர்ன் கல்சர்ரா? இனியொரு முறை அட்வான்டேஜ் எடுத்த? அவ்ளோதான்.” என்று சுட்டு விரலை நீட்டி எச்சரித்தான் ருத்ரஜித்.

அவனது செயலில் கடுப்படைந்தவள், “ஓ…. உனக்கான தேவை முடிஞ்சதும் துரத்துறியா டார்லிங்?” என்றவள் கைகளை ஊன்றியபடி எழுந்தாள்.

“ஸ்டாப்பிட் மயூரா. இனி ஒரு வார்த்தை பேசுனாலும் உன்னை கொன்னுடுவேன்டி. ஐ சே கெட் அவுட்.” என்று உறுத்து விழித்தன ஆணவனின் கண்கள்.

“சபாஷ். பிரகல்யா வந்ததும் இந்த மயூரா கண்ணுக்கு தெரியாமல் போயிட்டா இல்லை. ஒன்னு மட்டும் மறக்காத, அந்த பிரகல்யாவை பத்தி உனக்கு சொன்னதே நான் தான்.” என்றாள் மிடுக்குடன்.

அவளது குத்தலில் ருத்ரஜித்தின் மனதில் கோபத்தீ எழுந்தாலும் அதை வெளிக்காட்டதவன் அந்த அறையே அதிரும் வண்ணம் புன்னகைத்தான். அதன்பின் அவளை நோக்கி அழுத்தமான காலடிகளை அவன் எடுத்து வைக்க, அவளுக்கே உள்ளுக்குள் சற்று உதறல் எடுத்தது.

ஒரு நொடியில் அவளை நெருங்கியவன் தன் ஒற்றை கரத்தால் மயூராவின் இடையை வளைத்து பிடித்தான். அவனது இறுக்கமே பறைச்சாற்றியது ஆணவனின் கோபத்தை. 

தனது மற்றொரு கரத்தைக் கொண்டு பெண்ணவளின் முகவாயை அழுந்தப்பற்றியவன், தன்புறமாக அவள் முகத்தை இழுக்க, வலியில் துடித்தாள் மயூரா.

“ஹேய்… யூ லுக்கிங் சோ ஹாட். இப்படி எங்கிட்ட பேசுறதுக்கு வெளிய நாலு பேர்கிட்ட பேசியிருந்தால், வேற லெவல்ல செட்டில் ஆகியிருக்கலாமே பேப்ஸ்.” என்றவன் அளவுக்கடந்துப் பேச, மயூராவின் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“என்ன பேப்ஸ் கோபமா? ஐ மீன் நான் என்ன சொல்ல வந்தேன் தெரியுமா? இவ்ளோ வருசமா என்ன மட்டும் ட்ரை பண்ணதுக்கு, வேற ஒருத்தனை ட்ரை பண்ணி மேரேஜ் லைஃப்ல செட்டில் ஆகியிருக்கலாமேனு சொல்ல வந்தேன்.” என்று இகழ்ச்சியுடன் கூறியவனின் சூடான மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட்டு சென்றது. பின் அவளது வாயை அழுத்தியிருந்த தன் கைகளை விடுத்தவன், பார்வையாளே அவளை தன்னிடமிருந்து விலக்கியிருந்தான்.

அடுத்த நொடியே ருத்ரஜித்தின் கழுத்தில் மாலையாக கைகளை கோர்த்துக் கொண்டவள், “ஹேய் மை டியர் ஸ்வீட் ஹார்ட். உலகத்தில எவ்வளவு பேர் இருந்தாலும் எனக்கு எப்போதும் ஹீரோ நீ மட்டும்தான். நீ என்ன ட்ரை பண்ணாலும் எனக்கு கோபம் வராது. அப்புறம் உன்னோட இந்த நெருக்கம் எப்போதுமே எனக்கு கிடைக்க என்ன வேணாலும் பண்ணுவேன். அந்த பிரகல்யாவை என்ன வேணா பண்ணிக்கோ, ஐ டோண்ட் கேர். பட் எனக்கு நீ வேணும்.” என்றவள் சடுதியில் ருத்ரஜித்தின் இதழ்களில் இதழ்பதிக்க, அவளது செயலையும் பேச்சையும் அருவருத்தவனோ, பெண்ணவளின் இதழ்களை வலுமையாக கடிக்க, வலியில் துடித்தவள் அவனைத் தன்னிடமிருந்து பிரிக்கப் போராடினாள்.

இவ்வளவு பேசியும் அவள் கீழிறங்கி வருகிறாளே என்ற கோபம் ருத்ரஜித்தின் கடியில் அப்பட்டமாக தெரிந்தது. அவள் வலியில் துடிக்கிறாள் என்று தெரிந்தும் கடித்தான் ஆடவன். மயூராவோ அவனைவிட்டு விலகப் போராடினாள்.

அதன்பின்னரே தன்னிடமிருந்து அவளை அவன் விடுவிக்க, உதட்டில் ரத்தம் கசிய அவனைவிட்டு பிரிந்தவளின் கண்களில் பொழபொழவென்று கண்ணீர் கசிந்தது.

“யூ… யூ பிளடி வேம்பயர். உன்னோட ஆட்டத்தை…. எ.. என்கிட்ட காட்டிட்டல? நீயே என்ன தேடி வருவடா. பிரகல்யா விசயம் வெளியே போகக்கூடாதுனா கட்டாயம் வருவ.” என்று சொடுக்கிட்டு கூறியவள் தனது பலூன் போல் வீங்கிய உதட்டின் காயத்தினை கைக்கொண்டு மறைத்தபடி அங்கிருந்து விறுவிறுவென்று ஓடினாள்.

கதவை திறந்து வேகமாக வருபவளின் முன் சரியாக தன் காலை நீட்டியிருந்தான் வைகை. அடுத்தநொடியே அவனது கால் இடறி கீழே விழுந்தவள் அனல் விழிகள் கொண்டு வைகையை முறைக்க,

“ஹே பார்த்து போறதில்லையா?” என்று வேண்டுமென்றே கேட்டவன், “ஒன்ட் செகெண்ட், போறப்பா மாடல் அழகி மாதிரி தான போன? இப்போ என்ன, உப்பி போன முட்டை போண்டா மாதிரி வர்ற? வாட்ஸ் ஹேப்பனீங்?” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன். 

அவளோ அவமானத்தில் கூனிக்குறுகியவள் , அவ்விடமிருந்து சென்றால் மட்டும் போதுமென்று வேகமாக எழுந்து ஒரே ஓட்டமாக அவ்விடமிருந்து ஓடியிருந்தாள்.

“பாஸ் உங்களை புரிஞ்சுக்கவே முடியலையே? ஒரு சமயம் இவளோட ஒட்டி உறவாடுறீங்க? ஒரு சமயம் அவளை கடிச்சு துப்புறீங்க? இதுல எதுதான் நிஜம்?” என்றவன் பெருமூச்சொன்றை விடுக்க,

“இரண்டுமே நிஜமில்லை.” என்றவனின் பின்னேயிருந்து ஒலிக்கப்பட்ட ருத்ரஜித்தின் குரலில் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தான் வைகைசெல்வன்.

“பாஸ்..” என்றவன் கூற வரும் முன் கைகளை உயர்த்தி நிறுத்திய ருத்ரஜித், “காரை எடு வைகை.” என்று கூறியபடி முன்னோக்கி செல்ல,  பதட்டமாக பின்தொடர்ந்த வைகை, மின்தூக்கியில் அவனுடனே பயணித்தபடி, விரைந்து வந்து மகிழுந்தின் முன்புறமாக ஏறிக்கொண்டான்.

“லெஃப்ட்ல போ வைகை.” என்று மட்டும் கூறிய ருத்ரஜித் சலனமின்றி அமர்ந்திருக்க, மகிழுந்தை விரைவாக சாலையில் செலுத்தியவனுக்கு தூரத்தில் கவிழ்ந்துக் கிடக்கும், மகிழுந்து ஒன்று கண்களில் தென்பட்டது.

“பாஸ் எதோ ஆக்ஸிடென்ட் போல.” என்று தவிப்பாக கூறினான்.

“ம்ம்ம்” என்றானே தவிர்த்து ருத்ரஜித் வேறெதுவுமே பேசவில்லை. விழுந்துக்கிடந்த காரை இவர்களது கார் நெருங்கியிருக்க, காரிலிருந்து ஒரு பெண் குருதி ஒழுக வெளியே வந்தவள், இவர்களது காரை நோக்கி கைகாட்டியபடி தடுமாறி வர, இவர்களது மகிழுந்தைக் கடந்து வந்த லாரி ஒன்று அவள் மீதே மோதியதில் தூக்கி எறியப்பட்டாள் அவள்.

“பாஸ்.” அலறிக்கொண்டு வைகை மகிழுந்தை நிறுத்தியிருக்க, அங்கு விழுந்துக்கிடந்த பெண்ணின் உடையினை கவனித்த வைகையோ, “பா…பாஸ் மயூரா.” என்றான் தடுமாறியபடி.

ஒரு வார்த்தைக் கூட ருத்ரஜித் பேசவில்லை. அவனது முகத்தில் பரிதாபமும் இல்லை. இரக்கம் பார்க்காது இரும்பு போல் அமர்ந்தவனை உணர்ச்சியற்றப் பார்வைப் பார்த்தான் வைகை.

“லெட்ஸ் மூவ் வைகை.” என்று மட்டும் கூறிய ருத்ரஜித்,  கைகளிலிருந்த கைபேசியில் கவனம் பதிக்க, விதிர்விதிர்த்துப் போய் காரை ஓட்டிச் சென்றவனுக்கு இன்னுமே அந்த பதட்டம் குறையவில்லை. கண்முன்னே நடந்த விசயம் வெகுவாக அவன் மனதை பாதித்திருந்தது.

அஞ்சாநெஞ்சனின் நேசமுகம்

தாயிடம் மட்டுமோ….?

ஒருவனோ காதலைத் 

தேடி ஓட,

மற்றொருவனோ தன் 

ஆட்டத்தை அழகாய் ஆடிக்கொண்டிருக்க,

விடைத்தெரியா கேள்விகளுக்கு

விடை தான் என்ன?

தன்னிடம் குழைந்தவள்

மரணித்துக்கிடக்க,

யாரோவென்று எளிதாக கடந்து

செல்லும் இவனும்

ஒரு அரக்கன் தானோ….!

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!