தாரகையின் மாயோன் _25

மாயோன் _25

“நான் தான்  இனியாவிடம் புவனேஷ்க்கு ஃபோன் செய்து இங்கே கிளம்பி வரும்படி சொல்ல சொன்னேன்”என்றார் விக்ரம்.

இனியா புவனேஷ்க்கு ஃபோன் செய்து ஸ்ருதி  வீட்டுக்கு வருமாறு கூற ,”என்ன‌ இனியா சொல்ற நீ ..ஸ்ருதி அப்பா வீட்ல இருப்பாரு அது நியாபகம் இருக்கா இல்லையா?”என்றான் புவனேஷ்.

“அச்சோ அண்ணா ப்ளீஸ் நான் சொன்னதை மட்டும் கொஞ்சம் செய்றிங்களா. ஸ்ருதி வீட்டுக்குப் வாங்க அவ்வளவு தான் .’என்று அழைப்பை துண்டித்தவள் சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

புவனேஷ் ஸ்ருதிக்கு அழைத்து பார்க்க அவள்  அழைப்பை ஏற்காமல் இருந்தாள். அவளுடைய ஃபோன் தான் இனியாவிடம் இருந்ததே. இனியா புவனேஷ்க்கு போன் செய்துவிட்டு  ஸ்ருதியின் வீட்டுக்கு வந்தவள்  ஸ்ருதி ஃபோனை எடுத்து வைத்துக்கொண்டாள். நடந்த கலவரத்தில் ஸ்ருதி  இதை கவனிக்க வில்லை. ஆனால் இதை விக்ரம் கவனித்து விட்டார்…விக்ரம் நடந்த விஷயத்தை கூற ஸ்ருதி ,இனியாவை கட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்‌..

விக்ரம்,”மாமா சொல்லுங்க நம்ம பிள்ளைகளோட திருமணத்தையே எப்ப நடத்தலாம்.”

“என்னடா விளையாடறியா இந்த திருமணம் நடக்காது”என்று மீண்டும் ஆரம்பித்தார் மணிமாறன்.

“ஏன் நடக்காது கண்டிப்பா நடக்கும் “என்றார் நதியா.

மணிமாறன்,”ஏய் என்னடி விளையாடறியா?”

நதியா,”ஏங்க விளையாடறதுக்கு நாம இரண்டு பேரும் என்ன சின்ன பிள்ளைகளா 

வாங்க நாம தட்டு மாத்திக்கலாம்”

“தட்டு மாத்தனுமா.?என்ன விக்ரம் எல்லாம் பிளான் போட்டு செய்ற போல எப்படிடா உட்கார்ந்த இடத்திலிருந்து இத்தனை பேரை வர வச்ச நீ”

“என்ன மாமா நீங்க உங்க எதிரில் தானே உட்கார்ந்திருந்தேன் .நான் ஏதும் பண்ணலையே?”என்றவரை மணிமாறன் முறைக்க

“அப்பா ப்ளீஸ்பா எனக்கு ஒண்ணுமே புரியல .நதியா அத்தை, கல்பனா அம்மா ,அப்பா, கார்த்திக் அண்ணா , அபி எப்படி வந்தாங்க சொல்லுங்கப்பா”என்று கேட்டாள் ஸ்ருதி

“அது ஒன்றும் இல்லடா. இனியா எனக்கு ஃபோன் செய்து நீங்க எப்போ அப்பா ஊருக்கு வருவீங்க என்று கேட்டதும் எனக்கு சந்தேகம்தான் இதுவரை இனியா அப்படி என்கிட்ட கேட்டது கிடையாது. அப்போ நான் நாளைக்கு வருவேன் என்று சொல்லி ஃபோனை வைத்தாலும் அடுத்து கொஞ்ச நேரத்தில் நான் இனியாவுக்கு போன் செய்தேன்.அப்போதுதான் அவள் இங்கு நடந்த அனைத்தையும் கூறினாள். அதிலும் நீயும் புவனேஷும் விரும்பறீங்க என்று தெரிந்ததும் எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு ஸ்ருதி. நான் உடனே சரவணன் அண்ணாவுக்கும், நதியா அக்காவுக்கும் ஃபோன் செய்து நாளைக்கு காலைல நம்ம வீட்டுக்கு கிளம்பி வரும்படி சொல்லிட்டேன் .ஆனால் இதுல  தன்னால வந்து சிக்கினது நம்ம  மணிமாறன் மாமா மட்டும் தான்..

மாமா இந்த  திருமணம் நடக்காதுன்னு நீங்க சொல்லிட்டு இருக்கீங்க.. ஆனாங கடவுள் உங்களை எப்படிங்க வரவழைத்தான் பாத்தீங்களா?”

“டேய் ரொம்ப ஆடாதடா .நீ என்ன சொன்னாலும் அந்த ஓடுகாளி  மகளுக்கு என் மகனை கட்டி வைக்க முடியாது”என்றவரை அங்கிருந்த அனைவரும் முறைக்க விக்ரம் கடுங் கோபத்துடன் அவரை நெருங்க விபரீதம் புரிந்த நதியா தன் கணவரை நெருங்கியவள்.

“என்னங்க போதும் நிறுத்துங்க …இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க என்ற நதியா தம்பி சாரிப்பா அவருக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் .

அவர் தட்டு மாத்தலனா என்ன நான் மாத்திக்கிறேன்” என்றவர் அனைவரின் முன்னிலையிலும் தட்டுமாற்ற முதன்முறையாக ஸ்ருதி தான் அணிந்திருந்த சல்வாரிலும் ,புவனேஷ் தான் அணிந்திருந்த பேண்ட் சர்ட்டில் இவர்கள் நிச்சயம் எளிமையாக நடந்தது.

மணிமாறன் தன் மனைவியை எதிர்த்து எதுவும் பேச முடியாதவராக அமர்ந்திருக்க ஸ்ருதி மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றவள் அனைவரும் சிரித்த முகமாய் இருக்க தன் மாமா மட்டும் இப்படி இருக்க தன்னவனை அழைத்துக் கொண்டு அவரின் காலில் விழுந்தாள் .

திடீரென்று அவளின் செயலில் ஸ்தம்பித்து போன மணிமாறன் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றியிருப்பவர்கள் பார்க்க சரவண ராஜன்,” உங்க வரட்டு கௌரவத்தை தயவுசெய்து தூக்கி போடுங்க சார்.. பாவம் பிள்ளைங்க அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்ந்திட்டு போகட்டுமே .ஸ்ருதி யாரு உங்க தங்கச்சி பொண்ணு தானே.ஆசிர்வாதம் பண்ணுங்க சார்.”

“நீங்க சொல்றது எனக்கு புரியுது சரவணராஜன் . ஆனால் என்னால நடந்த எதுவும் மறக்க முடியலையே ..இதோ நிற்கிறானே என் குடும்பத்தை தலை குனிய வச்சிட்டு என் தங்கச்சியை   அழைச்சுட்டு ஓடி வந்தான் .அந்த‌ அதிர்ச்சியில் எங்க அப்பா இறந்துட்டார் என் குடும்பமே நிலைகுலைந்து போச்சு.க்ஷ”என்றவர் கண் கலங்கினார்.

“மாமா ப்ளீஸ் அம்மா ,அப்பா ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க. அதுக்காக நீங்க என்னை ஏன் மாமா தண்டிக்கறீங்க.. ப்ளீஸ் மாமா எனக்கு நீங்க வேணும் மாமா. உங்க ஒருத்தருக்கு விருப்பமில்லாமல் இந்த திருமணம் நடக்க கூடாது .உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் திருமணம் செய்துக்கறேன் ..இல்லனா கடைசிவரை இப்படியே இருந்துக்கறேன்.” என்று அழுதாள்

ஸ்ருதி.

“அப்பா ப்ளீஸ்பா புரிஞ்சுக்கோங்க நானும் கோபமா தான் இருந்தேன் . அதுக்காக எத்தனை காலம் அப்படி இருக்க முடியும் . ப்ளீஸ் நீங்க எங்க இரண்டு பேரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க’என்றான் புவனேஷ்.

நதியா ,”என்னங்க  பிள்ளைகள் ஆசிர்வதம் பண்ண போறீங்களா இல்லையா? “என்றிட‌ அவரோ அசைந்து கொடுக்காமல் அப்படியே நின்றார்.

ஸ்ருதி,” மாமா ப்ளீஸ்  எனக்கு புவனேஷ் மாமாவைப் பார்க்கும்போது எங்க அம்மாவோட நினைப்பு தான் வரும்..என்னுடைய உயிர் பிரியும் வரை நான் உங்க எல்லார் கூடவும் இருக்கனும் ..அதிலும் என் புவனேஷ் மாமாவின் அருகிலே இருக்கனும் ஆசைப்படறேன்.. ப்ளீஸ் மாமா புரிஞ்சுக்கோங்க”என்று கையெடுத்துக்  கும்பிட்டு அழுதாள்.

“ஸ்ருதி ப்ளீஸ் அழாதடி இதுக்கு மேல நீ அவர்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசியமில்ல விடு” என்றான் புவனேஷ்.

“ மாமா எனக்கு என் அம்மாவின் சொந்தம் கண்டிப்பா வேணும் .மாமா ஆசிர்வாதம் பண்ணாம நம்ம நிம்மதியா வாழ முடியாது மாமா”

நதியா,”என்னடா இது கையை கீழ போடு ஸ்ருதி.. உங்களுடைய திருமணம் கண்டிப்பா நடக்கும் புரியுதா 

?நான் சம்மதம் சொல்லிட்டேனே?என் சம்மதம் மாமாவோட சம்மதம் மாதிரிதான் .

நீ மனசை போட்டு குழப்பிக்காத “என்றவர் அவளின் கழுத்தில் தங்க ஆரத்தை அணிவிக்க போக…

“அத்தை ப்ளீஸ் இப்ப எதுவும் வேண்டாம் அத்தை .மாமாவின் முழு சம்மதம் இல்லாமல் நான் எதையும் வாங்க விரும்பல”

“என்னங்க இப்படி அமைதியா இருக்கீங்க .இது நீங்க உங்க வருங்கால மருமகளுக்காக வாங்கி வச்சது தானே பிடிங்க.. உங்க கையால அவ கிட்ட குடுங்க”என்றும்..

அவர் அப்படியே இருக்க கார்த்திக் அவனிடம் வந்தவன்,” அங்கிள் புவனேஷ்க்கு ஸ்ருதிய விட நல்ல பொண்ணு கிடைக்க மாட்டா. புவனேஷ் வாழ்க்கையில் நடந்த எல்லாமே நம்ம ஸ்ருதிக்கு தெரியும் .இருந்தும் அவள் புவனேஷை திருமணம் செய்வதில் உறுதியா இருக்கா.ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க அங்கிள்”

” என்னப்பா சொல்ற இவளுக்கு எல்லா விஷயம் தெரியுமா ?

” 

கார்த்திக் ,”ஆமா அங்கிள் எல்லாமே தெரியும்”என்று சொன்னதும் தன் கையிலிருந்த ஆரத்தை எடுத்து ஸ்ருதியிடம்  கொடுக்க புவனேஷ் அந்த ஆரத்தை தான் கையில் வாங்கியவன் அவளுக்கு அணிவிக்க அனைவரும் கைத்தட்டி ஆரவாரம்  செய்ய பெரியவர்கள் அவர்களை மனதார வாழ்த்தினர்.

மணிமாறன் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் பேச்சில் கரைந்து கொண்டிருந்தவர் கார்த்திக் கூறியதைக் கேட்டதும் முற்றிலுமாக அவர்களிடம் சரணடைந்தார் .

அவருக்கு ஸ்ருதியை பிடித்திருந்தாலும் அவரின் வரட்டு கௌரவம் அதுக்கு இடம் கொடுக்காத தாலும் அதேநேரம் ‘திருமணத்திற்குப்பின் ஸ்ருதிக்கு புவனைஷின் காதல் விஷயம் தெரியவந்தால் என்ன ஆகுமோ?’ என்ற கேள்வி அவரை குடைந்து கொண்டிருக்க கார்த்தி கூறிய விஷயம் பெரிய விடையாக கிடைத்தது.

ஸ்ருதியும் , புவனேஷும் மணிமாறன் நதியாவிடம் ஆசீர்வாதம் வாங்க மணிமாறன் தனது தங்கை மகளையும், மகனையும் மனதார வாழ்த்தினார்.

புவனேஷ் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற இவர்களின் திருமண தேதியை குறிக்க முடிவுசெய்யப்பட்டது.

இப்படியே வானரப் படைகள் அபிஷேக் வீட்டில் தங்க செமஸ்டர் தேர்வு வர அதையும் வெற்றிகரமாக எழுதி முடித்தனர். கார்த்திக் ,புவனேஷ் இருவரும் இவர்களுக்கு உதவி செய்தனர்.

கார்த்திக் வானரப் படைகள் டூருக்கு போற வரைக்கும் எல்லாரும் இங்கே வீட்டிலேயே தங்கனும் என்று கூறியவன் பெரியவர்களிடம் சம்மதம் கேட்க விக்ரமும்  சம்மதம் தெரிவிக்க புவனேஷ் அவனும் இங்கே தங்கினான்.

இனியா மன மகிழ்ச்சியில் தூங்கிக்கொண்டிருந்தாள்… ஊஞ்சலில் இவள் ஆடிக்கொண்டிருக்க இவளின் பக்கத்தில் கார்த்திக் வந்து அமர இவளோ வெட்கப்பட்டவளாக அவளின் தோள் சாய அவனும் இவளை இறுக்கி அணைத்தவன்

இருவரும் இதே மோன நிலையில் சிறிது நேரம் இருந்தனர். பிறகு வித்தியாசமான சத்தம் வர இனியா கார்த்திக்கை  நிமிர்ந்து பார்த்தவள் அவனை பிடித்து தள்ளினாள்.

அவன் கண்களிலிருந்து ரத்தம் வழிய நாக்கு தொங்கி முகம் கோரமாக அவளை  மேலும் மேலும் இறுக்க அவனின் கூர்மையான நகங்கள் பெண்ணின் உடம்பில் பதிந்து ரத்தம் வர அந்த உருவம் அவளை அலேக்காக தூக்கி சுற்ற அதில் “கார்த்திக் என்னை காப்பாத்துங்க” என்று அலறியவளை  கீழே இறக்கிய

அந்த உருவம்”ஏய் உனக்கு எத்தன தடவ சொல்றது .அவனை கூப்பிடாதேன்னு சொன்னா கேட்க மாட்டியா?” என்று அவளின் கழுத்தை நெறிக்க பேச்சு வராமல் தத்தளித்தவளை மாயமாய் அங்கு வந்த கார்த்திக் அவளை காப்பற்றியவன் அந்த உருவத்தை விரட்டி அடித்தான்.

இனியா கனவு கண்டு அலற ஸ்ருதி அவளை எழுப்பி அவளுக்கு தண்ணீர் குடிக்க வைத்து படுக்க வைத்தவளுக்கு பயம் இருந்தாலும் இனியா அம்மா சொல்லியது ஞாபகம் வந்ததால் பயமில்லாமல் அவளுடன் படுத்துக் கொண்டாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!