திகள் தொண்டை அடைக்க, இன்னும் ஒரு நொடி இங்கே நின்றால் உடைந்து அழுதுவிடுவோம் என்பதை உணர்ந்தவள், வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வரவழைத்து
“தேங்க்யூ… அன்ட் எக்ஸ்கியூஸ் மீ” என்றுவிட்டு வேகமாக வெளியேறினாள்.
அவளுடைய நடை வேகமாக இருந்தாலும், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
“ஏன் அந்தப் பொண்ணு அழுதுட்டே போறா? எனி ப்ராப்ளம்?” என்று விஷாலி கேட்டாள்.
பத்ரனுக்கு அவளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனம் கத்தினாலும், முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் திரும்பினான்.
“நத்திங் மிஸ் விஷாலி. பாட்டி இப்போதான் கால் பண்ணி நீங்க வர்றதா சொன்னாங்க. வாங்க உட்காருங்க” என்று அவளை அமரச் சொன்னான்.
விஷாலியுடன் பேச ஆரம்பித்தாலும், அவனுடைய மனம் மட்டும் வெளியே ஓடிப்போன திகள்விழியை தேடிக்கொண்டிருந்தது.
வீட்டுக்குத் திரும்பிய திகள்விழியின் முகத்தைப் பார்த்ததும் பெற்றோருக்கு ஏதோ புரிந்துவிட்டது.
அழுதுகொண்டே உள்ளே வந்த மகளைப் பார்த்து பார்வதி பதறினார்.
“திகள்மா என்னாச்சுடா? ஏன் அழற?”
அவள் பதில் சொல்ல முடியாமல் தாயின் தோளில் முகம் புதைத்தாள்.
அருகில் வந்த சோமசுந்தரம் மகளின் நிலையைப் பார்த்து மனம் கலங்கினார்.
உண்மையிலேயே அவர் வாயில்லாத பூச்சிதான். மனைவி, மகள்களைத் தவிர வேறு யாரிடமும் பெரிதாகப் பேசிப் பழகாதவர்.அப்படி பட்டவருக்கு மகளின் வாழ்க்கையை நினைத்து மனம் பதறிப்போனது.
“திகள்மா… நாங்க நடராஜன் சார்கிட்ட பேசுறோம்டா, நீ அழாத” மகள் அழுவதை கண்டு வேதனையோடு சொன்னார்.
“வேண்டாம் அப்பா…அவரு வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணத் தயாராகிட்டாரு. வீட்டுல தீவிரமா பொண்ணு பார்த்து அரேஞ்ச் பண்ணிட்டாங்க. ஒரு சின்ன நம்பிக்கை இருந்ததால இன்னைக்கு அவரைப் பார்க்கப் போனேன்.இனி போக வேண்டிய அவசியம் இருக்காது!”
என்று சொன்னவள் குரல் லேசாக நடுங்கியது.
“கஷ்டமா இருந்தாலும் நான் சரியாகிடுவேன் அப்பா” என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
மகள் தங்களுக்கு சமாதானம் சொன்னாலும் அவளுடைய மனம் எவ்வளவு உடைந்திருக்கிறது என பெற்றோருக்குப் புரிந்தது.
சோமசுந்தரம் அவளுடைய தலையை வருடினார்.
“சரிம்மா, நாளைக்கு நீ கிளம்பணும்ல? உன்னோட பொருட்களை எல்லாம் பேக் பண்ணி வச்சிடு. ஜாயின்ட் பிளைட் தான…”
“ஆமாப்பா. துபாய் போய் அங்கிருந்து பாஸ்டனுக்கு பிளைட் ஏறணும்”
“சரி எல்லாத்தையும் சரியா எடுத்துவை. எதுவும் மறந்துடாத.”
“குட் நைட் திகள், நிம்மதியா தூங்கு! மனசைக் குழப்பிக்காத, உனக்குனு இருக்குறது உன்னைத் தேடி வரும்”
என்று மகளிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் பார்வதி.
மறுபுறம் நன்றாகத் தூங்கி மாலையில் கண்விழித்த நிலா எங்கிருக்கிறோம் என்று சுற்றி பார்த்தாள்.
பின்னர் காலையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ‘ச்சே! இவன்கிட்ட வந்ததும் தூங்கிட்டேன், சும்மாவே ஆடுவான் இப்போ நானே அவனுக்கு ஒரு பாயிண்ட் எடுத்து கொடுத்திருக்கேன்!’ என்று தலையில் அடித்துக்கொண்டு எழுந்து வெளியே வந்தாள்.
அங்கே ருத்ரா சில பைல்களை பார்த்துக்கொண்டிருந்தவன் அவளை பார்த்ததும் பைல்களை மூடி வைத்துவிட்டு எழுந்து, “குட் ஈவ்னிங் மஃபின்! வா சாப்பிடலாம்” என்று அவளிடம் வந்தான்.
“புதுசு புதுசா பண்ற ருத்ரா! எப்பவும் விளையாடிட்டுத்தானே இருப்ப இப்போ அதிசயமா பைல் பார்க்குற?”
அவனை மேலும் கீழும் பார்த்தாள்.
“ஆமா, நீ சட்டை போட்டிருக்கியே! அதான் பெரிய அதிசயம்!” என்று நக்கலாகச் சொன்னாள்.
அவன் கேட்ட தோரணையில் சத்தமாக சிரித்துவிட்டான் ருத்ரா, “சரபனுக்காக நடிக்க வேண்டியிருந்தது ஆரலி. வேலை செய்யாம கேம் விளையாடுனா நம்பர் ஒன் பொசிஷன்ல இருக்க முடியாது. அவனை டிஸ்ட்ராக்ட் பண்ணிட்டு வேலை செஞ்சு பழகிட்டேன். இப்போ அவன் தொந்தரவு இல்லாம ப்ரீயா இருக்கேன்”
அடுத்து தன் சட்டையைப் பார்த்து மீண்டும் சிரித்தான்.
“அப்புறம் இந்த சட்டை விஷயத்துக்கு வருவோம். அவன் கொடுக்குற மாத்திரையை நீ மட்டும் ஆராய்ச்சி பண்ணல மேடம் நானும் ரிசர்ச் பண்ணிப் பார்த்தேன்”
“அவன் தர மாத்திரைகளுக்கு சில பக்கவிளைவுகளை உடம்புல தெரியுற மாதிரி வெளிய காட்ட வேண்டிய கட்டாயம். அதனால சில நேரம் சட்டை இல்லாம சுத்த வேண்டியதாப் போச்சு”
“நானும் சட்டை போடாம ஓபனா சுத்த முதல்ல ரொம்பக் கஷ்டப்பட்டேன் அப்புறம் பழகிடுச்சு!”
“அப்போ குடிச்சது?”
“நான் லைட்டா டிரிங்க்ஸ், ஸ்மோக் பண்ணுவேன் மஃபின். ஆனா முழுநேரக் குடிகாரன் கிடையாது. பாதி பாட்டில்ல கலர் கலரா தண்ணீர் ஊத்தி அடுக்கி வச்சிருந்தேன். அவன் முன்னாடி எடுத்து குடிக்கிற மாதிரி நடிப்பேன். அவனுக்கு நான் எப்பவும் போதையில இருக்கேன்னு தோணணும் இல்லையா?”
என்று கண்களைச் சிமிட்டினான்.
நிலா ‘இவனைத் திருத்தவே முடியாது!’ என்று பெருமூச்சுவிட்டாள். எழுந்து சாப்பிடப்போனாள்.
இருவரும் அமைதியாக உணவை முடித்துவிட்டு எழுந்தனர். சாப்பிடும் நேரம் முழுவதும் இருவருக்கும் இடையில் பெரியதாகப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.
இருவரும் அமைதியாக உணவை முடித்துவிட்டு எழுந்தனர். சாப்பிடும் நேரம் முழுவதும் இருவருக்கும் இடையில் பெரியதாகப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.
“என்ன ஐடியால இருக்க ருத்ரா? இப்படியே என்னை ஃபாலோ பண்ற எண்ணம் இருந்தா இப்பவே சொல்லிடு. நான் பெங்களூரு கிளம்புறேன்!” என்றாள் கடுமையான குரலில்,
அவனோ அதற்கெல்லாம் கொஞ்சமும் அசரவில்லை. நிதானமாக அவளை பார்த்தவன்,
“கண்டிப்பா ஃபாலோ பண்ணுவேன் மஃபின். எனக்கு இப்போதைக்கு உன்னைக் காதல் பண்ணுறதையும், கல்யாணம் பண்ணிக்கிறதையும் தவிர வேற எந்த ஐடியாவும் இல்லை. இத்தனை வருஷம் இழந்த தருணங்களை மீட்டெடுக்கிற வரைக்கும் என்னால நிம்மதியா தூங்க முடியாது. உன்னை விடமாட்டேன்!”
அவனுடைய பதிலில் இருந்த உறுதி நிலாவை மேலும் எரிச்சலடையச் செய்தது.
“நான் உன்னைக் காதலிக்கலைன்னு சொன்னா நம்புவியா ருத்ரா?”
“நம்ப மாட்டேன்!”
“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா?”
“அதுக்காக உடனே கிளம்புன்னு உன்னை அனுப்பவும் முடியாது. நான் காதலிக்கிறதை நிறுத்தவும் முடியாது!”
“உனக்கு எல்லாமே விளையாட்டுதான்!”
“உன்னை பொறுத்தவரைக்கும் நான் விளையாடுறவனா இருந்துட்டுப் போறேன். ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் நினைவுகளோட மட்டுமே வாழ்ந்த பைத்தியம் நான் ஆரலி. இன்னொரு முறை நினைவுகளோட வாழ எனக்கு விருப்பமில்லை. நிஜமா நீ வேணும்!”
ருத்ரா குரலில் விளையாட்டுத்தனம் கொஞ்சமும் இல்லை. இத்தனை வருடங்களாக அவன் மனதிற்குள் ஒருதலையாக வைத்திருந்த காதலை அவளிடம் கொட்டி தள்ளிடும் தீவிரம் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
“ஒருவேளை நான் பழைய ஆரலியா! குண்டா, அசிங்கமா, அறிவில்லாத பொண்ணா இருந்திருந்தா என்னை ஏத்துக்கத் தயாரா இருந்திருப்பியா ருத்ரா?” என தன் கேள்வி அபத்தம் என தெரிந்தும் கேட்டாள்.
ருத்ராவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“நீ இவ்வளவு சேஞ்ச் ஆகி இருப்பேன்னு ஒரு நாள் கூட நான் கற்பனை பண்ணது கிடையாது ஆரலி, என்னோட காதல் முழுக்க நீ சொன்ன குண்டான, அறிவில்லாத ஆரலி மேல தான் வச்சு காத்திருந்தேன்”
“நீ உயிரோட இருப்பேன்னு எதை ஆதாரமா வச்சு இத்தனை வருஷம் வாழ்ந்தேன் தெரியுமா? என் மனசும், என் காதலும் நீ வருவேன்னு உறுதியா சொல்லுச்சு. ஒருவேளை நீ வரலைனா கடைசி வரைக்கும் பைத்தியக்காரனா இருந்து செத்திருப்பேனே தவிர, வேற ஒருத்தியைத் தேடிப் போயிருக்க மாட்டேன்”
ருத்ரா வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவன் சொல்வது உண்மை என்பதை நிலாவுக்கு உணர்த்தியது.
அவள் வருவாள் என்று எந்த நம்பிக்கையில் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தான்? காதல் அன்றி எதுவும் இல்லை.
ருத்ரா சொல்வது போல அவனுக்கு நான் மாறியிருப்பதைப் பற்றிய எண்ணமே கிடையாது. எனக்காக… இந்த ஆரலிக்காக அல்லவா இத்தனை காலம் தவம் இருந்திருக்கிறான்!
அவனுடைய காதல் அவள் தோற்றத்தைக் கடந்தது என புரிந்தபோது, அவளால் அந்த உணர்வின் அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை.
கண்களில் கண்ணீர் திரள, “எனக்கு உன்மேல காதல் இல்லையே ருத்ரா…” என்றாள்.
நிலா வார்த்தைகளில் சட்டென அவனுடைய முகம் மாறியது.
“அப்போ நீயும் நானும் ஒன்னா இருந்ததுக்குப் பேரு என்ன? அதையும் நீயே சொல்லிடு!”
“அது…”
“நடிப்புன்னு மட்டும் சொல்லிடாத ஆரலி! உனக்கு கோபம் வந்தா என்னை அடி, என்னை திட்டணும்னா திட்டிக்கோ. ஆனா உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காத”
“உன்னை வெறுத்து ஒதுக்குனவன் மேல கூட தாய்மையை காட்டத் தெரிஞ்ச உன் மனசு என்னை எப்பவும் வெறுக்காது ஆரலி, அது எனக்குத் தெரியும்”
“அதான் ஆடுற!” என அவனுடைய பேச்சைக் கேட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
சில நொடிகள் இருவருக்கும் இடையில் அமைதி நிலவியது. இதற்கு மேல் தன் மனதை மறைக்க நினைக்காத நிலா வாயை திறந்து பேச ஆரம்பித்தாள்.
“என்னோட பதினைஞ்சு வயசுல இருந்தே உன்னை பிடிக்கும் ருத்ரா”
நிலா வார்த்தைகளில் ருத்ரா பார்வை மென்மையாக அவளிடம் தஞ்சமானது!
“முதல் முறை உன்னைப் பார்க்கும்போது சினிமா நடிகர் மாதிரி அவ்வளவு அழகா இருந்த, உன்னை கிட்ட வந்து பார்க்க முடியாம தள்ளி நின்னே பார்த்து ரசிப்பேன்”
“அடுத்த தடவை உன்னை பார்க்கும்போது இன்னும் அழகா இருந்த, அது காதல் கிடையாது ஏதோ ஒரு கடவுளை பார்க்குற மாதிரி உன்னைப் பார்த்து பூரிச்சுப்போவேன். உன் பக்கத்துல நிக்கிறவங்களை பொறாமையா பார்ப்பேன். முட்டாள்தனமா இருந்தாலும் அந்த உணர்வு சுகமா இருந்துச்சு” என்றவள் கண்களில் இன்னமும் ரசிப்பின் எச்சம் சிதறிக்கிடந்தது.
ருத்ரா என்றாலே அவளுக்கு ஒரு படி மேல்தான்!
“அத்தை வந்து பிரச்சனை பண்ணும்போது, எனக்கு யாருமே இல்லைன்னு நினைச்ச அந்த நொடியில் உன்னோட முகம்தான் கண்ணுக்குள்ள வந்து நின்னுச்சு. உதவிக்காக வரச்சொன்னா வருவியா, இல்லையான்னு கூட தெரியாது. ஆனாலும் உன்னைக் கூப்பிட்டேன்”
“நீயும் என் மேல பாவப்பட்டு வந்ததை என்னால நம்பவே முடியலை. அப்போ எனக்கு எதுவும் வேண்டாம் அம்மாச்சியோட நிம்மதியா இருந்தா போதும்னுதான் நினைச்சு உன் பின்னாடி வந்து நின்னேன்”
நிலா குரல் மெல்ல அழுகையாக மாறிட,
“சத்தியமா அம்மாச்சி உன் கையால அந்த கயிறை போடச் சொல்லுவாங்கன்னு எனக்கு தெரியாது. முன்னாடியே தெரிஞ்சிருந்தா மாமாவோட கல்யாணம் ஆனாலும் பரவாயில்லைனு நினைச்சு உன்னைக் கூப்பிட்டிருக்க மாட்டேன்” என்றாள்.
ருத்ராவின் முகம் இறுக, “அதை கல்யாணம்னு சொல்லாத!” என குரலை உயர்த்தினான்.
“ஒருவேளை அவங்ககூடவே நீ போயிருந்தாலும், பின்னாலேயே வந்து உன்னைத் தூக்கிட்டு வந்திருப்பேன்”
ருத்ரா வார்த்தைகளைக் கேட்டு கோவமாக அவனை முறைத்த நிலா,
“இதான் உன்னோட பிரச்சனையே ருத்ரா! உனக்கு என்ன வேணுமோ அதை அடையணும். அது உனக்கு கிடைக்கணும்னு நினைப்பியே தவிர, அதை அடையறதுக்கு நீ என்ன பண்றன்னு யோசிக்கவே மாட்டேங்கிற”
“உனக்குப் பிடிச்சா அது உன்கூடவே இருக்கணும். பிடிக்கலைனா தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவ, நீ தூக்கிப் போட்டு விளையாடுறதுக்குப் புதுசா கிடைச்சிருக்க பொருளா நான்? உனக்குப் பிடிச்சிருக்குன்றதுக்காக நான் உன்கூடவே இருக்கணும்னு நினைக்குறியே தவிர, என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டேங்கிற!”
“உன்னைப் பத்தி யோசிக்காமலா இத்தனை வருஷம் உயிரோட இருந்தேன்?”
“நீ உயிரோட இருந்ததுக்காக நான் நன்றி சொல்லணுமா?”
அவளுடைய நக்கலான கேள்வியில் ருத்ராவின் முகம் சட்டென்று இறுகியது.
“நான் உன்னை ஏற்கனவே ஒரு தடவை தொலைச்சு ரொம்ப கஷ்டப்பட்டேன் ஆரலி, இன்னொரு தடவை தொலைக்க முடியாது”
அவனுடைய குரலில் இருந்த வலி அவளுக்குப் புரிந்தது.
“உன்னைத் தேடி அலைஞ்சது உண்மை. உன்னை இழந்த வலியில வாழ்ந்ததும் உண்மை. ஒவ்வொரு நாளும் நீ எங்காவது உயிரோட இருப்பேன்னு நினைச்சுத்தான் என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். ஆனா நீ இல்லாத வாழ்க்கையை என்னால ஏத்துக்க முடியாது” என்றவனுடைய கண்களில் தெரிந்த தவிப்பு நிலாவை ஒரு நொடி தடுமாறச் செய்தது.
“அதுக்காக நீ என்னை உன்னோட இருக்க சொல்லிக் கட்டாயப்படுத்த முடியாது”
“சரி கட்டாயப்படுத்தல! பேசிமுடி” என்றதும், அவள் மீண்டும் பேசத் தொடங்கினாள்.
“அன்னைக்கு எல்லாம் முடிஞ்சதும் நீ கோபமா போயிட்ட, அந்தக் கயிறு என் கழுத்துல இருந்தப்போ ஒரு நொடி கூட உன்னை என் கணவனா நினைக்கலை”
ருத்ரா அவளை முறைக்க, “முறைச்சாலும் அதான் உண்மை ருத்ரா. உனக்கு ஏமாற்றமா போயிருக்கும், உனக்குக் கஷ்டமா இருக்கும்னுதான் என் மனசு துடிச்சது. ஏற்கனவே என்னைத் திட்டுவ, அப்போ நான் தப்பானவள்னு முடிவு பண்ணியிருப்பியோன்னு உள்ளுக்குள்ள பயம் வேற!”
“அடுத்த நாள் அம்மாச்சி கயிறை கேட்டதும் கழட்டி கொடுத்துட்டு உன்னைப் பார்க்க வந்தேன்” என்றவளுடைய கண்கள் பழைய நினைவுகளின் வலியை மீண்டும் காட்டியது.
“சாரி ஆரலி…” முதல் முறை அவளிடம் மன்னிப்பு வேண்டினான். யாருக்காகவும் இறங்கி வராத அவன் கர்வம் அவளுக்காக தலைவணங்கி மன்னிப்பு கேட்டது. ருத்ராவின் குரல் உடைந்திருப்பதை கண்டு அவளுக்கும் வருத்தமே!
“சாரி… எதுக்கு சாரி கேக்குற? அடிச்சதுக்கா? அவமானப்படுத்தி வெளியே தள்ளுனதுக்கா? இல்ல செத்துப்போன்னு சொன்னதுக்கா?”
நிலா கேள்விகள் ஒவ்வொன்றும் அவனை இன்னும் சோர்வாக்கியது.
“என்னோட தகுதி எனக்குத் தெரியும் ருத்ரா. தகுதிக்கு மீறி ஆசைப்பட மாட்டேன். இப்போ கூட உன்னோட ஒட்டி உறவாட வரலை. சரபனுக்குத் தண்டனை கிடைக்கணும் அதுக்காக உன் வாழ்க்கைக்குள்ள வந்தேன். உன்மேல என்னை அறியாமலேயே காதல் வளர்த்திருந்தாலும், உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலை இனிமேலும் ஆசைப்பட மாட்டேன்” என்று பெருமூச்சு விட்டாள்.
“நான் நிலாஞ்சின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை வெளியே சொன்னாலும், மனசளவுல உனக்குப் பயந்து நடுங்குற பழைய ஆரலியா இன்னமும் இருக்கேன்.
உன் பக்கத்துல இருக்குற ஒவ்வொரு நொடியும் பழைய விஷயங்கள் ஞாபகம் வந்து என்னைக் கொல்லுது. அன்னைக்கு கூட்டிட்டுப் போனியே ஒரு வீடு… அங்கே என்னால மூச்சுவிடக்கூட முடியலை ருத்ரா”
“என்னோட வேதனை உனக்குப் புரியாது. நான் சொல்றதைக் கேளு, நான் உனக்கு வேண்டாம். என்னை விட்டுடு” என அவனிடம் கெஞ்சினாள்.
உண்மைதான்! அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும், அவள் ஆரலி என்ற நினைவை தந்துகொண்டே இருக்கிறான் என்பதே நிதர்சனம்.
“நிலாஞ்சியா நீ நிறைய கத்துக்கிட்டு ஆளே மாறியிருக்கலாம். ஆனா அடிப்படை ஆரலி தானே மஃபின்? அதை ஏன் ஏத்துக்க மாட்டேங்கிற?” என ருத்ரா அவளை ஆழமாகப் பார்த்தபடி கேட்டான்.
அவளால் பதில் சொல்லமுடியவில்லை.
நிலா கன்னத்தைப் பற்றி தன் முகத்தை அருகில் கொண்டு வந்த ருத்ரா, “லுக் அட் மீ!” என்றதும், தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
“ஒருவேளை உன்னை விட்டுட்டேன்னு வச்சுக்கோ. வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க நினைப்பியா மஃபின்?”
அவனுடைய கேள்வியில் அவள் முகம் அசிங்கத்தை மிதித்து போல சுருங்குவதை கண்டு இதழில் எழுந்த சிரிப்பை அடக்கியவன்.
“உடனே இல்ல… பட் கொஞ்ச வருஷம் கழிச்சு என்னோட இடத்துல இன்னொருத்தனை வைக்க ட்ரை பண்ணுவியா?”
“என்ன பேசுற நீ? உன்னோட இடத்துல நீ மட்டும் தான் இருப்ப ருத்ரா, அசிங்கமா பேசாத!” என்று அவள் சொன்ன மறுநொடியே அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ஏகதச ருத்ரா.
அவன் முகத்தில் வெற்றிப் புன்னகை.
“அப்புறம் என்னடி பிரச்சனை? ராட்சசி என்னை காதலிக்கிறதை ஒத்துக்கோயேன்!
ருத்ரா! பெரிய பணக்காரன், ஒரு குரூப் சேர்மேன், அதிகாரத்துல இருக்குறவன்… இதெல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, ஏகரானு என்னைக் கொஞ்சிச் சாகடி மஃபின்.
செத்துப்போக நான் தயாரா இருக்கேன்” என்று கெஞ்சினான்.
அவனுடைய வெளிப்படையான காதல் வேண்டுகோளுக்கு அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றதும்,
“உன்கிட்ட அமைதியா பேசுறது வேஸ்ட். கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைனா பரவாயில்லை. லைஃப் லாங் காதல் பண்ணிக்கிட்டே இருக்கலாம். ஆனா உன்னை மட்டும் தனியா விட்டுடுவேன்னு கனவு காணாத!”
ருத்ரா பேச்சில் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு ருத்ரா, அதுக்கு ஓகேன்னா உன்னைக் கன்சிடர் பண்றேன்”
“என்ன கண்டிஷன்?”
“என்னை நிலாஞ்சினு சொல்லி ஒருதடனை கூப்டு!” என்றதும் அவளை முறைத்த ருத்ரா,
“ஆரலி என் காதலி! என் மனைவி! என் உயிர்! எல்லாமே அவ ஒருத்திதான். இந்த நிலாஞ்சி அவ பக்கத்துல கூட வரமுடியாது. நான் உயிரோட வாழ ஆசைப்படுறதும் அவளுக்காகத்தான், செத்தாலும் அவ நினைவுகளோட புதைஞ்சிடணும்”
அவன் காதல் நிலாவுக்குள் புதைந்து கிடந்த ஆரலியை ஆட்டிப்படைக்கிறது!
அவனை ரசித்தபடி, “அப்போ நான் போகட்டுமா?” என்று விளையாட்டாக
எழுந்து செல்ல முயன்ற மறுநொடியே அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.
“அரக்கா! விடுடா!” என்றவளுடைய எதிர்ப்பை பொருட்படுத்தாமல் பெட்ரூம் நோக்கி நடந்தான்.
“போறேன்னு சொன்னா காலை உடைச்சுருவேன்டி!”
“அம்மாக்கு கால் பண்ணி சொல்லணும் ருத்ரா, என்னை தேடுவாங்க” என்றவளுடைய பேச்சை காதில் வாங்காதவன், அவளைப் படுக்கையில் தூக்கிப்போட்டான்.
“முதல்ல என்னை கவனி மஃபின். வாரக்கணக்கா தவிக்க விட்டுட்டு போனதுக்கு நாலு நாள் உன்னை வெளியே விடப்போறதில்ல”
“நாலு நாளா? ஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரலை!” என்று அவனை முறைத்தவளிடம், “நீதான் எனக்கு ஏத்த விளையாட்டு ஜோடி மஃபின்! அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன். பட் சூழ்நிலை அமையலை. உன் இடுப்பு… ஹப்பா! கொடிச்சின்னு பேருக்கு ஏத்த மாதிரி வழவழன்னு…” என்றவனின் பச்சை பேச்சை அவன் இதழ்களை கடித்து நிறுத்தினாள்.
உண்மை தெரிந்து, மனம் நிறைந்து, முற்றம் துறந்து கூடும் கூடலில் இருக்கும் சுவையை முழுமையாக அனுபவித்தனர். ஏற்கனவே அவன் ஆகோரபசி கொண்டவன் இப்போது சீக்கிரம் விடவாப்போகிறான்? காலை வரை அவளை தூங்கவிடவில்லை.
இரவு முழுவதும் அவனுடைய காதல் அவளை ருத்ராவினுள் ஆழ்த்திக்கொண்டே இருந்தது.
“ருத்ரா… சத்தியமா முடியல! போதும்!” என உண்மையான சோர்வில் சொல்லியிருந்தால் கூட விட்டிருப்பான். அவன் மீட்டும் சுகதாளங்களின் உணர்வு தாங்காமல் முணங்குபவளை விலக நினைக்க மடையன் அல்லவே ருத்ரா!
மூச்சு வாங்க ஒருக்களித்து படுத்திருந்தவள் இடையில் தலை வைத்து இழைப்பாறியவனுக்கு இன்னமும் போதை தெளியவில்லை.
அவளைப் பருகிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.
