கெட்டவன் 16

அனு யோசித்து பதில் சொல்லட்டும் என்று பொறுமையாக வெற்றி இருக்க, அவளோ வெற்றியின் பொறுமையை சோதித்து பார்க்க நினைத்து விட்டாள் போலும்.

அவன் கேட்டதற்கு பதில் கூறாமல், அவனை பார்ப்பதையே தவிர்த்து விட்டாள் பாவை.

ஒரு வாரம் முழுதாக கடந்து விட்டது.

அவனுக்கு பொறுமை காற்றில் பறந்து போனது.

கல்லூரிக்கு செல்லும் பொழுது தூக்கி விட்டான் அனுவை.

“என்ன டி நினைச்சிட்டு இருக்க? பாவம் பார்த்து ஒரு வாரம் டைம் கொடுத்தா ஓவரா போறியா நீ?” பற்களை கடித்தான் வெற்றி.

“காலேஜ் போகணும் கெட்டவன் சார், ப்ளீஸ் என்னை விட்டுருங்க!” என்றவளை கோபத்தோடு பார்த்தான்.

“கேட்டதுக்கு பதில் சொல்லு டி?” கர்ஜித்தான் வெற்றி.

“எ… என… எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை கெட்டவன் சார்!” என்றாள் திக்கி திணறி.

அவனின் கண்களில் தீப்பொறி பறந்தது. கோபத்தை அவளின் மேல் காட்ட முடியாமல், கார் ஸ்டியரிங்கில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

இவள் பயத்தில் எச்சில் விழுங்கி, அவனை பயத்தோடு பார்த்தாள்.

“எனக்கு ஒண்ணு வேணும்னா அதை கேட்டு வாங்குற ரகம் இல்லை டி நான். வேணும்னா அதை தூக்கிட்டு வந்துருவேன். உன்கிட்ட நான் அனுமதி கேட்கல. நீ எனக்கு வேணும்!” என்றான் அழுத்தமாக.

இவளுக்கு பயத்தில் நெஞ்சி குழி ஏறி இறங்கியது.

“எனக்குதான் விருப்பம் இல்லைனு சொல்றேன்ல!” என்று விசும்பினாள் அனு.

“என்னை பிடிக்காததுக்கு காரணம் சொல்லு டி?” அவன் குரலின் கடுமை கண்டு உடல் நடுங்கினாள் அனு.

“ஏனா நீங்க ரொம்ப கெட்டவங்க!” அழுதே விட்டாள் சிறு பெண்ணவள்.

“கெட்டவனா கட்டிக்க மாட்டியா டி?” அவளின் அழு மூஞ்சியை பார்த்துக் கூட இவன் மனம் இறங்கவில்லை. கோபம் கடலளவை விட பெரிதாக இருந்தது.

இவள் இட வலமாக தலை அசைத்து, “கட்டிக்க மாட்டேன்!” என்றாள்.

“நீ கட்டிக்கலைன்னா நான் உன்னை விட்டு வைப்பேன்னு நீ நினைக்கிறியா?” மிரட்டலாக கேட்டான் வெற்றி.

இவளுக்கு திகில் பரவியது.

“தூக்கிட்டு போய் குடும்பம் நடத்துவேன் டி!” என்றான்.

இவளுக்கு அந்த வார்த்தை பிடிக்கவில்லை. அதனால், முகம் சுளித்தாள்.

அவளிடம் கோபமாக பேசினாலும், அவளின் படிப்பில் அக்கறையாக இருந்தான் வெற்றி. அதனால் அவளை வேறு எங்கும் அழைத்து செல்லாமல், கார் கல்லூரிக்கு அருகில் சற்று தொலைவில் நின்றிருந்தது. அவள் எட்டி நடந்தால் இரண்டு நிமிடத்தில் சென்று விடலாம்.

கார் நின்றதும் வெளியே பார்த்தாள். தப்பித்து விடலாம் என்று நினைத்து, அனு கார் கதவை திறக்க, கதவை லாக் செய்து விட்டான் அந்த கெட்டவன்.

இவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது அவனின் செய்கை.

கதவில் பல்லி போல் ஒட்டிக் கொண்டாள் அனு.

அவனை திரும்பி கூட பார்க்கவில்லை. வெளியே பார்த்த வண்ணம் கதவை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் சீட்டை நொடியில் அவன் கீழே இறக்க, சீட்டோடு சேர்ந்து அனுவும் கீழே சரிந்திருந்தாள்.

“ஆஹ்….!” திடீரென்று நடந்து விட்ட அதிர்ச்சி அவளிடம்.

யோசிக்காமல் அவளின் மேல் படர்ந்தான் வெற்றி.

எப்பொழுதும் மென்மையாக முத்தம் வைப்பவன், இன்று அவளின் கீழ் இதழை பற்களால் கடித்து சுவைத்தான்.

அழுத்தமான வன்மையாக முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான். அனுவுக்குதான் மூச்சைடைத்து விட்டது.

அவனின் மார்பில் கை வைத்து அவனை பின்னால் தள்ள, அவனோ இரு கைகளையும் ஒற்றை கையால் பிடித்து சிறை செய்து விட்டான்.

பூக்குவியல் தேகத்தால் அந்த கெட்டவனின் பாரத்தை தாங்க முடியவில்லை.

அவள் மயக்கமாவதற்கு முன் அவளின் இதழ்களுக்கு விடுதலை அளித்து விட்டு, அவளின் வெண் சங்கு கழுத்தில் சிறிது நேரம் முகம் புதைத்து அவனை அவனாகவே சரி செய்து கொண்டிருந்தான். ஐந்து நிமிடம் கழித்து அவளை விட்டு பிரிந்தான் வெற்றி.

அவளின் இதழ்கள் ரத்த நிறத்தில் சிவந்து விட்டது அவன் கொடுத்த வன்மையான முத்தத்தில்.

கீழ் இதழில் லேசான காயம் வேறு. அவளுக்கு எரிச்சலை தந்தது.

இப்பொழுது கார் அன்லாக் செய்து விட்டான். ஆனால், அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அவன்.

அனு மெதுவாக காரை விட்டு இறங்கினாள். அவன் பாரம் தாங்காமல் உடல் சோர்வாகி விட்டது போல் உணர்ந்தாள்.

அவள் கல்லூரிக்குள் சென்று விட்டதை உறுதி படுத்தி விட்டு, அதன் பின்தான் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

அனுவின் உதடுகள் கோவை பழம் போல் சிவந்திருந்தது. அவளிடம் லேசான தேம்பல் வேறு. ஒரு நொடியில் அவளுக்கு மரண பயத்தை காட்டி விட்டான் வெற்றி.

உண்மையில் கார் லாக் செய்ததும் அவளின் உயிர் அவளிடமே இல்லை. ரொம்பவே பயந்து விட்டாள் சிறு பெண். நல்ல வேலை வெறும் இதழை மட்டும் தின்றான்.

வெற்றி காரை லாக் செய்ததும், அவளிடம் ஏகப்பட்ட தேவையில்லாத கற்பனைகள் அந்த நேரத்தில் தோன்றி மறைந்தது.

“என்னாச்சி அனு?” அவளின் விழிகளின் ஓரம் மின்னிய கண்ணீர் துளிகளை பார்த்து அவளிடம் கேட்டாள் நிஷா.

சிறு குழந்தை போல் உதட்டை பிதுக்கியவள், வெற்றி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கேட்ட விஷயத்தை மட்டும் கூறிவிட்டு, காரில் நடந்ததை மறைத்து விட்டாள்.

“அதுக்கு ஏன் அனு அழுற?” என்று கேட்டாள் நிஷா.

“அது… அவர் ரொம்ப மிரட்டுற மாதிரி கேட்டாரு, அதான் எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு!” என்று சமாளித்தாள் அனு.

“நீ என்ன நினைக்குற அனு?” நிஷா கேட்ட கேள்வியில் திரு திருவென்று அவளை பார்த்து விழித்தாள் அனு.

“நீ வெற்றி சாரை பற்றி என்ன நினைக்குற? உனக்கு அவரை பிடிச்சிருக்குதா அனு?”

அவள் கேட்ட கேள்வியில் விதிர் விதிர்த்து நின்றிருந்தாள் அனு.

“ஹேய் லூசு நிஷா, அவரே ரொம்ப கெட்டவர்!” என்றாள் விஷாகா.

“எனக்கு அவரை பார்க்கவே பயமா இருக்குது நிஷா? சில டைம் ரொம்ப நல்லவரா இருக்காரு, எந்த அளவுக்கு நல்லவரா தெரியுறாரோ அதே அளவுக்கு திடிர்னு ரொம்ப கெட்டவரா மாறுறாரு. அவரை போய் எனக்கு எப்படி பிடிக்கும், அதுவும் கல்யாணம் எப்படி? ஒரு கெட்டவரோடு என்னால எப்படி வாழ முடியும்? அவரை பார்த்தாலே பயம் மட்டும்தான் வருது!” என்றாள் அனு.

“அனு நீ நினைக்கிற மாதிரி வெற்றி சார் கிடையாது. கோபம் மட்டும்தான் அவருக்கு அதிகமா வருது, மற்றபடி ரொம்ப நல்லவர்!” என்று வெற்றிக்கு ஹீரோ மகுடம் சூட்டினாள் நிஷா.

“அவரை பற்றி முழுசா தெரியாமல் எப்படி நீ அவர் நல்லவர்னு சொல்ற?” சிறு குரலில் கேட்டாள் அனு.

“அவரை பற்றி உனக்கு என்ன தெரியணும் அனு? நீ சொல்றதே வித்தியாசமா இருக்குது?” என்று கேட்டாள் அனு.

அவன் வீட்டை சுத்தம் செய்யும் போது அவனின் அறையில் பார்த்த ஒரு விஷயத்தை தோழியிடம் எப்படி கூற முடியும்? என்று யோசித்தாள் அனு.

“சொல்லு அனு, உனக்கு அவரை பற்றி என்ன தெரியணும்?” என்று மறுபடியும் கேட்டாள் நிஷா.

விஷாகாவும் அவளின் பதிலுக்கு ஆர்வமாக காத்திருந்தாள்.

“அவரோட அம்மா சூசைட் பண்ணிக்கிட்டாங்கனு ஒரு டைம் என்கிட்ட சொன்னாரு. அவங்க அம்மா எப்படி இறந்தாங்கனு தெரியணும், அப்பறம் அவரோட வயசு தெரியணும், படிச்சிருக்காரா இல்லையானு தெரியணும், உண்மையா அவர் நல்லவரா இல்லை கெட்டவரான்னு தெரியணும், அப்பறமாதான் எதையும் யோசிக்க முடியும்!” என்று கூறிய அனுவை பார்த்த நிஷா, “இவ்ளோதானா? இதை அந்த லூசுகிட்ட கேட்டா சொல்ல போகுது!” என்றாள்.

“லூசா, யாரு அது?” என்று விஷாகாவும் அனுவும் புரியாமல் கேட்டனர்.

“அதான் வெற்றி சார் கூடவே ஒண்ணு இருக்குமே!” என்று நிஷா கூறியதும், “ரவி அண்ணனையா சொல்ற?” என்று கோபமாக கேட்டாள் அனு.

“ஆமா, அந்த லூசுதான்!” என்றாள் நிஷா.

“அண்ணனை அப்படி சொல்லாத நிஷா, அண்ணே ரொம்ப ரொம்ப நல்லவர்!” என்றாள் அனு.

“அந்த லூசு எனக்கு ரெண்டு மூணு டைம் கால் பண்ணி, என்கிட்ட பேச ட்ரை பண்ணுது, நான் ரவினு சொல்லுது, அப்பறம் உடனே கால் கட்டாகுது, என்னனு தெரியல!” என்று நிஷா கூறியதும், விஷாகாவும் அனுவும் அதிர்ச்சியாகி விட்டனர்.

“அட நான் சொல்றது உண்மைதான் ப்பா, நானே கேட்டேன், நீங்கதான எனக்கு கால் பண்ணீங்கனு, அதுக்கு இல்லைனு பச்சையா பொய் சொல்லுது அந்த லூசு!” என்றாள் நிஷா.

அனுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“நான் இன்னைக்கு மொபைல் எடுத்துட்டு வந்திருக்கேன், காலேஜ் முடிஞ்சி வீட்டுக்கு போகும் போது அந்த லூசுக்கு கால் பண்ணி வெற்றி சாரை பற்றி விசாரிப்போம், ஓகே வா?” என்று கேட்டாள்.

“இல்லை, அவர்கிட்ட விசாரிக்க வேணாம் நிஷா, அவரோட வீட்டு அட்ரஸ் கேட்டு அவங்க அம்மாகிட்ட பேசுவோம், ரவி அண்ணே அம்மாவும் கெட்டவனும் கொஞ்சம் க்ளோஸ் மாதிரி தெரியுது, ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னை கெட்டவன், ரவி அண்ணே வீட்டுக்கு அழைச்சிட்டு போனாரு, அப்போ அவங்களும் கெட்டவனும் கண்ணால எனக்கு தெரியாம எதோ பேசிக்கிட்டாங்க!” என்றாள் அனு.

“அப்போ உனக்குதான் அட்ரஸ் தெரிஞ்சிருக்குமே அனு?” என்று கேட்டாள் நிஷா.

“கெட்டவனோட போகும் போது பயந்துகிட்டே போனேன், அதுனால சரியா ரூட் கவனிக்கல, வேற ரூட்ல காரை ஓட்டிகிட்டு போனாங்க!” என்றாள் அனு.

“காலேஜ் முடிஞ்சதும் எப்படியும் வெற்றி சார் உன்னை கூப்பிட வருவாரு, அதுனால நீ அவரோட அமைதியா வீட்டுக்கு போ, வீட்டுக்கு போனதும் ரெடியா இரு, நான் உன்னை வீட்டுக்கு வந்து அழைச்சிட்டு போறேன்!” என்றாள் நிஷா.

“எது பண்ணாலும் கவனமா பண்ணுங்கப்பா!” என்றாள் விஷாகா. இருவரும் சேர்ந்து தேவையில்லாமல் பிரச்சனையை விலை கொடுத்து வாங்க போகிறார்களோ என்ற பயம் அவளுக்கு.

நிஷா கைபேசியோடு தனியாக சென்று ரவியின் எண்ணுக்கு அழைத்தாள்.

அங்கே ஆபிஸில் இருந்தான் ரவி. நிஷாவின் எண்ணை பார்த்ததும், அவனின் கண்கள் ஒளிர்ந்தது.

அவன் அவளின் அழைப்பை ஏற்றதும், “ஹெலோ ரவி!” என்றாள் நிஷா.

“நான்… நான் தான்!” என்ற ரவிக்கு வார்த்தை தடுமாறியது.

நிஷாவுக்கு அவனின் தடுமாற்றம் சிரிப்பை வரவழைத்தது.

“நான் உங்கள மீட் பண்ணனும் ரவி!” என்றாள் நிஷா.

இவனுக்கு இதயம் திடீரென்று வேலை நிறுத்தம் செய்தது.

“உங்க அட்ரஸ் எனக்கு வேணும், இன்னைக்கு ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வரேன், உங்கள பார்க்க முடியுமா?” என்று கேட்டாள்.

“என்னை பார்க்க வரீங்களா?” என்று ஆச்சர்யமாக கேட்டான் ரவி. அவனின் காதுகளை அவனால் நம்ப முடியவில்லை.

“உங்கள பார்க்கதான் வரேன், சென்ட் மீ யுவர் அட்ரஸ் ப்ளீஸ்!” என்றாள்.

இவன் உடனே அவளின் வாட்சப்க்கு வீட்டு அட்ரஸ்ஸை அனுப்பி வைத்தான்.

“வெற்றி சார்க்கு மட்டும் தெரிய வேணாம், நீங்க மட்டும் தனியா வாங்க!” என்று அன்பு கட்டளை இட்டாள் நிஷா.

காலேஜ் முடிந்ததும் வெற்றி அனுவை அழைத்து போக வந்தான்.

இருவரிடமும் பலத்த அமைதி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

அவளை வீட்டில் விட்டுவிட்டு அவளிடம் எதுவும் பேசாமலேயே சென்று விட்டான் வெற்றி.

அவன் சென்று அரை மணி நேரத்தில் நிஷா அனுவின் வீட்டு முன் நின்றிருந்தாள் ஸ்கூட்டியில்.

“ஃப்ரென்ட்டோட சேர்ந்து பார்க் (பூங்கா) போய்ட்டு வரேன்ம்மா!” என்று கூறி விட்டு நிஷாவின் வண்டியில் ஏறிக் கொண்டாள் அனு.

அடுத்த பதிவில் பார்ப்போம். 

இந்த எபி பிடிச்சிருந்தா குட்டி ஹார்ட் கொடுங்க ஃப்ரெண்ட்ஸ். 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!