மலர் -32

மலர் -32

“கட்டினா  இந்த மாதிரி ஒருத்தன கட்டணும்”

“ஏண்டி?”

“அவன் கைக்குள்ளயே காலம் பூரா இருக்கனும். இந்த மாதிரி ஒரு ஆள்  ஹக்  பண்ணா  எப்படி இருக்கும்? “

அவர்களின் பேச்சு இவளுக்கு பிபி யை ஏற்றியது.

அதுவரை பொறுத்திருந்தவள்,

திரும்பி அவர்களின் முகத்தை பார்த்தவள்,

“எப்படி எப்படி? என்னோட புருஷன நீங்க  வந்து ஹக்  பண்ணுவீங்களா?”

பயத்தில் அனைவரும் ஓட்டம் பிடிக்க அதில் இருவரின் காதுகளை மட்டும் இவளால் பிடிக்க முடிந்தது.

“சாரி! சாரி! ஆன்டி”

“இவரு உங்களுக்கு ஹண்ட்ஸாம்  நான் ஆன்டியா? ” காதுகளை அழுத்தி திருகினாள்.

“சாரி ! சாரி ! அக்கா”

‘மாமாகிட்ட சொல்லிடுங்க””

“போய் தொலைங்க”அவள் விட்டவுடன், அதில் ஒருத்தி இவனை பார்த்து கண்ணடித்து பறக்கும் முத்தத்தை வீசிவிட்டே போனாள் .

இவனோ சிரிப்பு தாங்காமல் கலகலவென சிரித்துக் கொண்டிருந்தான்.

“என்ன இளிப்பு ? அங்க என்ன பார்வை? கண்ணை  நோண்டிடுவேன் “

சிரிப்பை அடக்கிக் கொண்டவன், 

உஷாராக நடந்ததை  சொல்லவில்லை. 

“அவ என்ன சொன்னான்னு கவனிச்சுயா ?”

“சாரி அக்கான்னு சொல்லிட்டு போனா . நீ அக்கான்னா நான் யாரு?”

“மாமா?” பொருளை உணர்ந்தவள் அடிப் பாவி வாயை பிளந்தாள். “இதுங்கல்லாம் பொண்ணுங்களா?”

“நான் வேண்ணா  போய் பார்த்து கேட்டு சொல்லவா?” லேசாக கண்ணடித்தான். 

கழுத்தை நெறிப்பது போல பாவனை செய்தாள் .

“நீ ஒரு சிரிப்பு போலீஸுன்னு அதுங்களுக்கு கூட தெரிச்சுடுச்சு “சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவள் முகம் சட்டென வாடியது.

“ஆமா! நான் ஒரு சிரிப்பு போலீசுதான். என்னால எப்பவும் எதையுமே சாதிக்க முடியாது. எல்லாருக்குமே என்ன பார்த்தா  காமடியாதான் இருக்கும்.”

“ஏய் எதுக்கு இப்ப சீரியஸா பேசற?”

அதற்குள் உணவு வந்திருந்தது. இவள் எதுவும் உண்ணவில்லை. அவன் எத்தனையோ சொல்லியும் ஒரே ஒரு காபி மட்டுமே குடித்தாள் . ஆனால் அவனோ அடுத்து அடுத்து என்று ஆர்டர் பண்ணிக் கொண்டே இருந்தான்.

ஒரு சமயத்தில் இவள் ஆர்டரை நிறுத்திவிட்டாள் .

“என்னடி  இது ? எனக்கு இன்னும் வேணும்.”

அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அவன் முகத்தை பார்த்தவள் 

“சார்! நீங்க டிப்ரஷன்ல்ல இருக்கீங்களா ?”

அவனுக்கு அப்போதுதான் தன் செயல் புரிந்தது.

யோசித்து பார்த்தான். வீட்டில் இது போல எல்லாம் சாப்பிடுவதில்லை. ஆனால்  சில சமயம்? புதியதாக ஆரம்பித்திருந்ததா? இப்போதெல்லாம் அடிக்கடி நொறுக்கு தீனி பழக்கம் ஆரம்பித்திருந்தது. வெறியாக ஜிம்மில் கிடைப்பதால் உடம்பில் மாற்றங்கள் தெரியவில்லை.

“போதும் சார்! இதுக்கு மேல வேணாம்.” 

“சரி” என்று தலை ஆட்டினான். 

“சார்! ஆர் யூ ஆல் ரைட் ?”

“தெரியல அமிர்தா ! இப்பலாம்  யாரும் வீட்டுல யாருகிட்டயும் சரியா பேசறது கூட இல்லை . தாத்தா பாட்டியும் நம்மளோட பிரிவுல ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. ஏற்கனவே அம்மாவும் விட்டுட்டு போய்ட்டாங்க. இப்ப நீயும் என் கூட இல்ல. பையனோட வாழ்க்கை பேரனோட வாழ்க்கை யார் வாழ்க்கையும் சரியா இல்லையே? என்ன பாவம் பண்ணேன்னு பாட்டி அழறாங்க. அவங்கள எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல. யாரும் எங்கிட்ட சாப்டியான்னு கூட கேட்கறதில்ல. ப்ச்! ஜஸ்ட் லீவ் இட்! உன்னோட மூட ஸ்பாயில்  பண்ணிக்காத.”

அப்போது வந்த பார்சலை வாங்கிக் கொண்டாள் .

“இது யாருக்கு ? முரளிக்கா ?” மனதையும் குரலையும் கஷ்டப்பட்டு இயல்பாக  மாற்றிக் கொண்டான்.

“இல்ல. செந்திலுக்கு!”

“யாரது?” குரலில் கடினம் வந்திருந்தது.

மலர்-39q1

“இது யாருக்கு ? முரளிக்கா ?”மனதையும் குரலையும் கஷ்டப்பட்டு இயல்பாக  மாற்றிக் கொண்டான்.

“இல்ல. செந்திலுக்கு!”

“யாரது?” குரலில் கடினம் வந்திருந்தது.

அது அது உங்க தம்பி…..

நொடிக்கும் குறைவான வேகத்தில் அவன் முகம் மாறி இருந்தது. 

அவளோட புள்ளை … 

“ப்ளீஸ்! ப்ளீஸ்! நான் சொல்லறதை கொஞ்சம் கேளுங்களேன். அவனும் உங்கள மாதிரியேதான். ரொம்ப பாவம்” வேகமாக அவன் காரில் ஏறி கதவை ஓங்கி அடித்து வேகமாக கிளம்பி விட்டான்.

இனி அவனுக்கும் தனக்கு எந்த தொடர்பும் இருக்காது என்பது இவளுக்கு புரிந்தது. 

மனம் மிகவும் சோர்ந்து போய்  இருந்தது. ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து விட்டாள் .

தலை வலியுடன் வெற்றிகரமான தோல்வியுடன் வீடிற்கு வந்து சேர்ந்தான் ஆனந்த். அவள் தன்னை ஒதுக்கி விட்டு மற்றவர்களை உடன் சேர்த்துக் கொள்கிறாள். அவளுக்கு தான் எப்போதுமே தேவை இல்லை என்கிற எண்ணமே இருந்தது. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு .”

அவள், அவன் தோள்  சாய்ந்ததும், அவனின் பிரிவினால் கண்ணீர் சிந்தியதும், அப்போது அவனுக்கு மறந்துதான் போனது.  அன்று அந்த செந்தில் வந்து உதவி என்று கேட்டபோது இவனுக்கு செய்ய மனம் வரவில்லைதான். அதற்காக பல நாள் வருந்தி இருக்கிறான். இதுவே வேறு ஏதாவது விஷயமாக இருந்திருந்தால் இவனே உடன் இருந்து முடித்துக் கொடுத்திருப்பான். ஆனந்தை  பொறுத்தவரை அவன் நல்லவன்தான். அவன் அன்னையின் விஷயம் என்று வரும்போது மட்டும் இவன் அரக்கனாக மாற அவள் மீது வைத்திருந்த அதீத அன்புதான் காரணமா?

மகனின் வாழ்க்கை சரி இல்லாமல் போனது போல பேரனும் தனி மரமாக நின்று விடக்  கூடாதே என்ற எண்ணத்தில்தான் அத்தனை பிடிவாதமாக பெரியவர்கள் அமிர்தாவை திருமணம் செய்து வைத்தார்கள்.. நாட்கள்தான் ஓடிக் கொண்டிருந்ததே தவிர இளையவர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

நேரம் பார்த்து  இதை பற்றி பேசியே ஆக வேண்டும் என்றும் பெரியவர்கள் நினைத்தனர்.

நடக்கப்போவதை யார்தான் அறிவார்?

அன்று விசாலத்துக்கு மனம் ஏனோ சரியில்லை. மகனிடமும் மகளிடமும்  பேசினார். 

“எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு முரளி.  நான் இருந்தாலும் இல்லனாலும் அக்கா தங்கச்சிங்களை விட்டுடாத. அக்கா வாழ்க்கையை சரி படுத்தனுண்டா. நம்ம குடும்பத்துக்காக மெழுகா உருகறா. அவளை வாழ்க்கைல தனி மரமா நிக்க விட்டுடாதடா” 

அன்னை  அவன் அன்னை ஏன் இப்படியெல்லாம் பேச வேணும்? அதையே நினைத்தவனுக்கு மதியம் உணவு இறங்கவில்லை. பர்மிசன் போட்டு வீட்டுக்கு வந்து விட்டான். 

 அங்கே அவன் வந்தபோது விசாலம் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். செந்திலும் கயலும்  பரீட்சைக்கு சென்றிருந்தார்கள். அமிர்தாவும் இன்னும் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கவில்லை. அவசரமாக அம்புலன்சில் ஏற்றினான். பக்கத்துக்கு வீட்டு அக்காவிடம் வீட்டை பூட்டி சாவியை வைத்துக் கொள்ள சொன்னான். ஆனால்  ஆம்புலன்சில் சென்ற வேகத்தில் சவ பெட்டியில் தான் திரும்பி வந்தார் விசாலம். தாத்தாவும் பாட்டியும் விஷயம்  கேட்டவுடன் பதறியடித்துக் கொண்டு வந்தனர்.

பாத்ரூமிற்கு வெளியில் இருக்கும் இடத்தில கால் வழுக்கி அங்கே இருந்த சிமெண்ட் நிலையில் தலையில் அடிபட்டு இறந்திருந்தார். நிறைய டைம்  ஆகி இருக்கு. நிறைய ரத்தம்  வெளியேறி இருக்கு என்றார்கள் மருத்துவர்கள்.

இளையவர்களால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. வீட்டில் இத்தனை பேர் இருந்தும் அவளுக்கு கடைசி நேரத்தில் ஒருவர் கூட அருகில் இல்லையே என்று முரளி அழுதுக்  கொண்டிருந்தான்.  என்னதான் மற்றவர்கள் உடனிருந்தாலும் பெற்றவர்கள் இல்லை எண்றால்  அந்த பிள்ளைகள் அனாதை தானே? கோதையையும் செந்திலையும் வைத்துக் கொண்டு அமிர்தா போராடியதே அன்னை இருக்கும் தைரியத்தில்தான். இப்போது? அவளும் இல்லை.  அன்னை இல்லை என்றால் அமிர்தாவுக்கு தைரியம் இல்லை . ஏன் இந்த உலகில் எதுவுமே இல்லை.

 தந்தை இறந்த போது  அன்னை இருந்தார். எத்தனையோ கஷ்டப்பட்டபோதும் மனதளவில் தளராதவர் விசாலம். அவர்களை பார்த்துத்தான் பிள்ளைகளும் தன்னம்பிக்கையுடன் வளர்ந்தார்கள். 

ஒவ்வொரு நிகழ்வாக அன்னையை பற்றி யோசித்த அமிர்தா., திடீர் திடீரென அழ  ஆரம்பித்தாள்.

 “ஏண்டி என்ன விட்டு போன? நான் யாருகிட்டடி காபி கேப்பேன்? என்ன ஏண்டி இப்டி அனாதையாகிட்டு போன?” பிணத்தை பிடித்துக் கொண்டு அவள் அழுத அழுகை? அருகில் இருப்பவர்கள் எத்தனையோ சமாதனம் சொல்லலாம். போன உயிர் திரும்புமா?

 எக்ஸாம் முடிஞ்சுடுச்சு என்று துள்ளி குதித்துக் கொண்டு வந்த கயல், அம்மா! அம்மா! நான் இன்னும் பத்து  நாளைக்கு தூங்க போறேன். என்ன யாரும் எழுப்ப கூடாது என்று சொல்ல வேண்டும் என்று குதூகலமாக குதித்துக் கொண்டு வந்தாள் . தூரத்தில் இருந்து வீட்டை பார்க்கவும் ஏதோ சரி இல்லை என்று தோன்றியது.

தாத்தாவும் பாட்டியும் இவளின் அழுகையை காண சகிக்காமல் வெளியில் நின்று கொண்டிருந்தனர். கயல் வருவதை பார்த்த பாட்டி . 

“என்னங்க. அந்த குழந்தை வருது”

“நீ இரு! நான் போய்  பார்த்து நிதானமா சொல்லி கூட்டிகிட்டு வரேன். இல்லன்னா அவ சின்ன பொண்ணு. பயந்துடுவா”

ஏனோ கயலுக்கு அடுத்த அடி எடுத்து வைக்கக் கூட பயமாக  இருந்தது. தந்தை இறந்த போதும் வீடு இப்படித்தானே இருந்தது. மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது.

அப்போது அங்கே வந்த தாத்தா அவளிடம் பக்குவமாக பேசி அழைத்துச் சென்றார். செய்தி  கேள்விப்பட்ட ஆனந்தனும் அடித்து பிடித்து வந்து விட்டான். 

அழுது அழுது மயங்கி கிடந்த மனைவியை தன்  கை வளைவிலேயே வைத்துக் கொண்டான். அவளை விட்டு எங்கும் நகரவில்லை. இவர்கள் அனைவரும் இங்கே கதறிக் கொண்டிருக்கும்போது தன் அன்னையின் பசியை பற்றி எப்படி பேச முடியும். செந்தில் வாயை மூடி இருந்தான். ஆனால் அருணுக்கு  கோதையின் நிலை  தெரியும். அவ்வபோது அவருக்கு தேவையானதை அருகில் இருக்கும் ஓட்டலில் வாங்கிக் கொடு என்று செந்தில் கையில் பணத்தை கொடுத்து வைத்தான்.  துணைக்கு இனியாவை வைத்துக் கொண்டு அருணும் ஆனந்தனும் எல்லாவற்றையும் முடித்தார்கள். 

 இந்த சிறு வயதிலேயே தந்தையையும் இழந்து தாய்க்கும் கொல்லி வைக்க போகும் முரளியை பார்த்த தாத்தா பாட்டிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. வீட்டை கடந்து போகுமுன் விசாலத்தின் ஆத்மா பெரியவர்களுக்கு எதையோ உணர்த்தியது. “என் குழந்தையை அப்டியே விட்டுடீங்களே  உங்களை  நம்பித்தானே என் குழந்தையை அனுப்பினேன்” என்று பெரியவர்களிடம் கதறியதோ? 

 அமிர்தா பெல்டால் அடி  வாங்கி வந்த அடுத்த நாள் விசாலம் நெஞ்சில் அடித்து அழுது புலம்பிய வார்த்தைகள். நினைவில் வராமல் இருக்குமா?

காரில் வரும்போது தாத்தா மிகவும் அமைதியாக இருந்தார். பாட்டியும்தான் .

“இந்த சின்ன வயசுலேயே அம்மா அப்பா ரெண்டு பேரையும் இழக்கிறது ரொம்ப பெரிய தண்டனை இல்லை” என்றார் பாட்டி . 

“மனசுல என்ன வச்சுருக்க சுந்தரி?”

“அது..அவங்க வீட்டுல நம்ம கோதையை பார்த்தேன்”

“ம்ம்”

“ரொம்ப பாவமா இருந்துச்சு”

“அதுக்கு?”

“அவளை நாம கூடவே வச்சுக்கலாமா ?”

“என்ன சுந்தரி நடந்தது எல்லாம் உனக்கு மறந்து போச்சா?”

“எப்படிங்க மறக்கும். அவ நமக்கு நம்ம புள்ளைக்கு பண்ணது துரோகம். ஆனா அதுக்குத்தான் கடவுள் அவளுக்கு இவ்ளோ பெரிய தண்டனை குடுத்துட்டாரே? கண்ணுக்கு தெரியாத இடத்துல இருந்தா பரவால்ல. நம்ம வீட்டு  வாசல்ல இருந்தப்போ கூட நாம கண்டுக்காம விட்டுட்டோம். அதனாலதான் அமிர்தா கூட்டிகிட்டு போய்  வச்சுருக்கா. அந்த சின்ன பொண்ணுக்கு இருக்கற அக்கறையும் முதிர்ச்சியும் நமக்கு இன்னுமா வரல?

முள் மலரும் ..

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!