மலர்-34

மலர் – 34

அமிர்தா பதட்டத்துடன் வீட்டுக்குள் அவசர அவசரமாக ஓடி வந்தாள் . அவள் பார்த்த காட்சி, கோதை புஜ்ஜியின்  மடியில் தலை வைத்து உறங்கியதைத்தான்.

கோதைக்கு தலையணை வைத்து அவன் மடியில் இருந்து நகர்த்தினாள்.

அவனோ சிலையென அமர்ந்திருந்தான்.

“என்னங்க” தோளை தொட்டு உலுக்கினாள். 

தன்னிலை அடைந்தவன் “என்னடி இது ?”

பெரியவர்கள் தனிமையில் பேசிக் கொள்ளட்டும் என்று அக்கா நான் பக்கத்துக்கு வீடு அக்காகிட்ட மெஹந்தி டிசைன் புக் வாங்கிட்டு வரேன் கயல் நாசுக்காக வெளியில் சென்று விட்டாள் . 

“நான் ஒரு மகனா தோத்து  போய்ட்டேண்டி” தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.” என்ன இது உடம்பு முழுக்க இப்டி வெந்து போய்  இருக்கு?”

“ஆமாங்க! எனக்கும் தெரியல. ஆனா பல வருசமா அவங்கள வன்புணர்வு செய்ஞ்சுருக்காங்க. பிறப்புறுப்புல கூட சிகரெட் சூடு வச்சுருக்காங்க. ஓவரீஸ்  புல்லா வெந்து போய்  இருக்கு. பல பேரு பல வருசமா ஹைஜீன்  இல்லாம இவங்கள” அதற்க்கு மேல் அவள் சொல்லவில்லை. அவன் கையை நிறுத்தி தடுத்து விட்டான்.

“இதுக்குதான்  அவங்கள  விட மாட்டேன் விட மாட்டேன்னு சொன்னியா? நம்மளோட பணமும் பாவமும் பசங்களுக்குன்னு சொன்னியே. இவங்க என்ன நல்லாத்தானே வளர்த்தாங்க. அன்பு அன்புன்னு கொட்டினாங்களே . நான் மகனா இவங்களுக்கு குடுத்தது வெறுப்பு  தானே?  நான் எங்கேபோய் இந்த பாவத்தை தொலைப்பேன்” குலுங்கி குலுங்கி அழுதான். 

நான் பார்த்த போது  அவங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க தெரியுமா? டயப்பர் முழுக்க நனைந்து போய் இருந்தது. அதுல எல்லாமே இருந்துதுடி. வாயெல்லாம் மஞ்சளா .உடம்பு முழுக்க இஷி  இருந்துச்சு. எதுவுமே புரியாம தெரியாம இருக்கிறவங்களுக்கு என்ன மட்டும் எப்படிடி தெரிஞ்சுது? 

அவன் சொல்ல சொல்ல தலை ஆட்டிக் கேட்டுக் கொண்டாள் . இவள் தலை கோதினாள். மடியில் தாங்கினாள் .  மகனாக எதை எதை எல்லாம் பார்க்க கூடாதோ அனைத்தையும் பார்த்து விட்டானே. என்ன செய்ய முடியும்?’

இவளுக்கும் கணவன் அழுவதை பார்த்து கண்ணீர் கொட்டியது.

இவர்களின் சத்தம் கேட்டு கோதை  எழுந்து விட்டாள் . அவள் வருவதை பார்த்து அவசரமாக இவள் கண்களை துடைத்துக் கொண்டாள் . மனைவியின் இடுப்பைக் கட்டிக்  கொண்டு அழுதவனை அன்னை தோள்  தொட்டாள் .  சட்டென திரும்பியவன் கோதையின் கால்களைக் கட்டிக் கொண்டு கதறினான். கோதைக்கு புரியவில்லை. பயத்தில் அவளும் அழுதாள்.

ஆனந்த் அன்று முழுவதும் பிரம்மை பிடித்தவன் போல்  இருந்தான். 

“இங்க வாங்க!” அமிர்தா அவனின் கை  பிடித்து அழைத்துச் சென்றாள் . அன்றும் இவன் மணிக்கட்டை பிடித்துத்தான் அழைத்துச் சென்றாள் . அப்போது பெல்டால் விளாசியவன், இப்போது அமைதியாக அவள் பின்னே சென்றான். இதுதான் காலத்தின் கட்டாயமா ?

அவள் காட்டிய இடத்தில்  அன்னை தனக்காக வரைந்த சாக்பீஸ் ஓவியம் இப்போது பெயின்டிங்காக  இருந்தது. அங்கே சுவற்றில் இருந்த தன்னுடைய ஓவியத்தை தொட்டு தொட்டு பார்த்து கண்ணீர் வடித்தான். அமிர்தா எதிர்பார்த்தது கோதையை மகன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு எந்த நிர்பந்தமும் அல்லது காரணமோ இருக்கக் கூடாது. இதோ மனதார ஏற்றுக் கொண்டு விட்டான். செய்த தவறுகளுக்காக அவன் என்ன தண்டனை ஏற்பான்? ஆனால் அவனின் மனதின் பாரங்கள்  எப்படி அழியும்?  

இதோ முரளியும் வந்துவிட்டான். நாளை  பதினாறாம் நாள் இறுதி காரியம் நடக்கும். அன்றைய மாலை மீனம்மா வந்திருந்தார்.

மீனாம்மாவும் விசாலமும் முன்னர் அருகருகே இருந்தவர்கள். அந்த காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் பின்னர் காலத்தில் பெரியதாக தொடர்பில் இல்லை . ஆனால்  மீனாம்மா அவ்வப்போது வரும்போது வந்து விசலத்தை பார்த்து விட்டு செல்வார். குழந்தைகளுக்கு நிறைய தின் பண்டங்களை வீட்டிலேயே செய்து கொண்டு வந்து தருவார். அதனால் குழந்தைகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவர் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உடன் இருந்து பார்த்துக் கொள்ளும்  வேலை செய்பவர்.

“அயோ! என்னடி இது அநியாயமா இருக்கு” நெஞ்சில் அடித்துக் கொண்டு வந்தார். ஒரு நோயாளிக்கு உடன் இருந்ததால் அவரால் அப்போது வர முடியவைல்லை .

“பாத்திங்களா மாமி உங்க பிரண்டு எங்களை எல்லாம் தனியா அனாதையா விட்டுட்டு போய்ட்டாங்க.” 

அமிர்தா அவரை கட்டிக் கொண்டு அழுதாள். 

அடுத்த சில மணி நேரங்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோதை எழுந்து தலையை சொரிந்து கொண்டே வந்தார்.

அவர் முகத்தை பார்த்த மீனாம்மா,

“இது கோதை இல்ல?”

“உங்களுக்கு இவங்கள தெரியுமா மாமி?”

“தெரியுமாவா? இவை எனக்கு பொண்ணு மாதிரி? இவளுக்கு ஒரு பையன் உண்டே அவன் எங்க? செந்திலு!”

“ஆமாம் மாமி! அவனும் இங்க தான் இருக்கான். வேலைக்கு போய்  இருக்கான்.”

“இவங்க ரெண்டு பேரும் எப்படி இங்க?”

நடந்த கதைகளை சொன்னாள் .

“இவளோட மருமகளா நீ?  கடவுளோட கணக்கா பார்த்தியா அம்மு? அம்மாவை பார்த்தாலே வெறுப்பை கொட்றவன் உனக்கு புருசனாக்கி இருக்காரு, சொல்லி கொண்டிருக்கும்போதே கதையின் நாயகன் வந்தான்.

“இவருதான் என்னோட வீட்டுக்காரரு” அவன் கையில் இருந்து பையை  வாங்கிக் கொண்டவள் அனைவருக்கும் தேநீர் கலந்து கொண்டு வந்தாள் . 

“நீதான் கோதையோட முத புள்ளையா ராசா?”

பழைய ஆனந்தாக இருந்திருந்தால் மீனாவுக்கு பற்கள் வாயில் இல்லாமல் கையில் கிடைத்திருக்கும் .

இந்த ஆனந்தோ தன்  செய்கையினால் வெட்கப்பட்டு தலை குனிந்தான். 

“உங்கம்மா எப்பவும் உன் பத்தியே தான் பேசுவா.”

“உங்களுக்கு எங்கம்மாவை தெரியுமா? அவங்களுக்கு என்ன ஆச்சு? அவங்க ஏன் இப்டி இருக்காங்க?”

“ஆமா மாமி! இவங்களுக்கு எப்படி இப்டி ஆச்சு?

“நான் சொல்லறேன். இவளுக்கு ஒரு நல்லதுன்னா நான் சொல்லாம என்ன பண்ணுவேன்?”

“இன்னிக்கு இப்டி கோராமா  இருக்கறாளே ? அப்போல்லாம் அப்டி அவ்ளோ அழகா இருப்பா. நிறம்னா அது பாலு கலரு. இடுப்பு கொழுகொழுன்னு ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கும். உங்கப்பனுக்கு  இவ மேல அத்தனை  ஆசை. கொள்ளை பிரியம். அவளோட அழகே அவளுக்கு எதிரி ஆகிடுச்சு. நான் சொல்ல போற விஷயத்தை ஒரு பையனா நீ கேட்கக் கூடாது. ஆனா வேற வழி இல்ல. 

 உங்கப்பா அந்த ஏரியாவுலேயே ஒரு பெரிய துணி கடை வச்சிருந்தார். அப்போதான் எம் எல்  ஏ வா இருந்த  ரங்கா அந்த ஏரியாவுல புதுசா வீடு கட்டி குடி வந்தான். அவனுக்கு உங்க அம்மா மேல ஒரு கண்ணு. உங்கப்பா கடை இருந்த இடம் நல்ல மெயின் இடம். பக்கத்துல இருந்த ரெண்டு பெரு நிலத்தை வித்தாங்க . இந்த உங்கப்பாவோட கடையும் சேர்த்து அந்த இடத்திலேயே  ஒரு காம்ப்ளக்ஸ் கட்டணுன்னு ரங்கா நினைச்சான்.. அதுக்கு உங்கப்பா ஒதுக்கல . 

நேரடியா கடைக்கே வந்து மிரட்டினான்.

” சரி ரவி !போனா  போகுது. நீ இடத்தை எல்லாம் காலி பண்ண வேணாம். உன் பொண்டாட்டிய மட்டும் அப்பப்போ அனுப்பி வை.  அவ இடுப்புல இருக்க மச்சத்தை அப்டியே பிச்சு திங்கணுண்டா.”

ரங்காவின் கழுத்தை இறுக்கி இருந்தான் ரவி.

“என்ன ரவி வாய்ல தானே பேசிகிட்டு இருக்கேன். அதுக்குள்ள கை வைக்கற. சரி போ! உன்ன சும்மா விட்டுடறேன். ஆனா உன் பொண்டாட்டியை  என்னோட வ….. வச்சு காருல ஊர்வலம் வருவேன். அப்போ அவமானம் தாங்காம நீயேத் தற்கொலை பண்ணிக்குவ . வரட்டா….

வீட்டிற்கு வந்த ரவியின்  கண்களிலும் அந்த மச்சம் வெள்ளை நிற தோளில்  பளிச்சென்று தெரிந்தது. “ஒழுங்கா புடவைய கட்ட மாட்ட?” பளீரென்று கோதையின் கன்னத்தில் அறை விழுந்தது. ‘எப்போதுமே சிரிக்க சிரிக்க பேசும் கணவன் முதன் முறையாக தன்னை அறைய காரணம் என்ன?’ விடை அவளுக்கு தெரிந்தபோது ரங்கனின் கைகளில் ஆடையின்றி தவித்துக் கொண்டிருந்தாள். சொன்னபடியே அந்த மச்சத்தை நறுக்கென்று கடித்து ருசித்தான் . 

ரங்கன் பேசிவிட்டு சென்ற மறுவாரம் ரவி இரவில் கடையை மூடுவதற்கு முன் வந்த  இருவர்  கடைக்கு நெருப்பு வைத்து விட்டு ரவியின் இடுப்பிலும் காலிலும் அரிவாளால் வெட்டி  விட்டு சென்றனர். அடுத்த சில நாட்களில் இவள் கணவனுக்கும் மாமியார், மாமனார் அனைவருக்காகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தாள். அப்போது வீட்டிற்கு வந்த ரங்கன் தான் அவளை வன்புணர்வு செய்தான்.

உதட்டிலும் உடலிலும் காயங்களுடன் வந்த மனைவியை சுந்தரியை மாமியார் ஒரு விதமான சந்தேகத்துடன் பார்த்தாள் .

“என்னம்மா என்ன ஆச்சு?”

மாமியார் அருகில் வந்து பார்க்க விடாமல் இல்லங்க அத்தை  கால் வழுக்கி கீழ விழுந்துட்டேன். அதான். “எனக்கு உடம்புக்கு  முடியல நான் வீட்டுக்கு போறேன்.” அவசரமாக ஓட்டம் பிடித்தாள் . எப்போதும் வீட்டுக்கு வரும்போது அம்மா என்று ஓடி வந்து கட்டிக் கொள்வான் ஆனந்த் . ஆனால்  இன்று அன்னை எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தார். “எனக்கு ஒடம்பு சரி இல்ல கண்ணா. கிட்ட வராத உனக்கும் வந்துடும்.” 

இந்த சம்பவம் நடந்த பிறகு அப்போதே தற்கொலை செய்துக்  கொள்ளலாம் என்று தான் கோதை நினைத்தாள் .  அவளை வெறியாக அடைந்தவன் சொன்னது, 

“இங்க பாரு!  நான் ஏதோ ஒரே ஒருதடவை உன்ன ருசிச்சா போதுன்னு நினச்சேன். ஆனா நீ என்ன இப்டி போதை ஏத்தற ? இனிமே எப்பல்லாம்  இந்த நினைவு வருதோ அப்பல்லாம் வருவேன். ஆ இந்த மானம் ரோசம், வெறி இன்னும் ஏதாச்சும் இருந்துதுன்னா அதை எல்லாம் மட்டும் கொலை பண்ணிடு. ஏன்னா நீ இந்த போலீசுக்கு போகறது  இல்ல நீ தற்கொலை பண்ணிக்கறது இந்த மாதிரி ஏதாவது பண்ணா  அப்புறம் உன்னோட குடும்பத்துல இருக்கற ஒருத்தரையும் நான் கொன்னுடுவேனில்ல. வரட்டா? கிளம்பும் முன் உதடுளை பற்களால் பிய்த்து தின்றான். இது அடுத்த தடவைக்கு அச்சாரம்டி “

ரவிக்கு கால்களில் மோசமாக அரிவாள் வெட்டு பட்டிருந்தது. கண்டிப்பாக இடுப்பிலும் காலும் பாதமும் சேரும் விதத்திலும் ஆபரேஷன் செய்து பால் உருளை வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து  லட்சங்களாவது ஆகும் என்றார்கள்.

இவர்களால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதற்கு மேல் தள்ளிப் போட முடியாது, முடியவில்லை என்றால் வேறு எங்காவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று இவர்களை காலி பண்ண சொன்னார்கள். அப்போது தான் கோதை துணிந்து ஒரு மெடிவெடுத்தாள் . ரங்கனிடமே சென்று பணம் கேட்டாள் . 

“உனக்காக எவ்ளோ வேணா செய்யலாம். அதுக்காக அவனுக்கு அவ்ளோ பணம் அந்த அளவுக்குல்லாம் அவன் ஒர்த் இல்ல. சரி போன போகுது போ நான் தானே அவன் இந்த நிலைமைக்கு ஆக்கினேன். பிரயச்சித்தமா இருக்கட்டும்.ஆனா ஒரு கண்டிஷன்.”

 

அவன் சொன்ன படியே பணத்தை கொடுத்தான். அடுத்த சில மாதங்களில் நான் போகிறேன் என்று எழுதி வைத்து விட்டு தாலியையும் அதன் மீது வைத்து விட்டு சென்றவள்தான். கோதை செய்த மிகப் பெரிய தவறு தான் செல்ல போகிறோம் என்பதால் மகனின் மீது அன்பை மழையாக கொட்டியது தான் . ‘மகனுடன் இருக்க அவளுக்கு நாட்கள் போதவில்லை. தான் இல்லாவிட்டால் மகன் தவித்துப் போவானே’  என்று அப்போது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால்  திருப்பி திருப்பி ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். “அம்மா இல்லனாலும் நல்லா படிக்கணும். தாத்தா பாட்டிய படுத்த கூடாது. சமத்தா இருக்கனும்.” இதேதான்.

போகிறேன் என்று விட்டு போனவள் எங்காவது போய் இருந்தால் கூட பரவாயில்லை. இவர்களின் கண்ணெதிரேயே நடமாடிக் கொண்டிருந்தாள் ரங்கனுக்கு சின்ன வீடாக.  வீட்டிற்குள் காம வெறியனாக அவளை ஆடை இன்றி பிய்த்து  தின்பவன் வெளியில் அழைத்து செல்லும்போது காசு மாலையும் பட்டுப் புடவையில் பெரிய காரில் அழைத்து செல்வான். வேண்டுமென்றே ரவி பார்க்கவே அவன் வீட்டிற்க்கு அருகில் இருந்த கடைக்கு அழைத்து செல்வான்.

ஒரு நாள் ரவியின் கடைக்கே அவளை அழைத்து சென்றான்.

 

முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!