மலர்-36

“இங்க பாருப்பா! உங்கம்மா மாதிரி ஒரு உத்தமிய எங்கையும் பாக்க முடியாது. அவ பண்ண ஒரே தப்பு அழகா புறந்ததுதான். அவளுக்கு நினைவு இருந்த வரைக்கும் உன்னையும் உங்கப்பனையும்தான் நினைச்சுகிட்டு இருந்தா. ஏதோ கடவுளா பார்த்து உன்கிட்ட இவளையும் இவ புள்ளயையும் அனுப்பி இருக்கான். இனிமே இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு”

 

 இந்த உலகத்தில் தனக்கே பெரிய துன்பம், கடவுள் தன்னை  மட்டும் இப்படி செய்து விட்டார் என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்திருந்தவன் தான் ஆனந்த் . தான்  தன்னுடைய தந்தை, தாத்தா பாட்டி இவர்களின் துன்பம், மற்றவர்களின் கேலி, கிண்டல் இதிலேயே கூனி குறுகி போனவன். இத்தனை வருடங்களாக அன்னை விட்டு விட்டு போய் விட்டாள் என்ற சுய பரிதாபத்திலேயே உழன்றவனுக்கு செந்திலின் நிலை எத்தனை மோசமானது என்று புரிந்தது.  அவன் அன்னையின் ஸ்பரிசத்திற்காக எத்தனை ஏங்கி இருந்தால் தன்னை கட்டிக் கொண்டு தூங்குவான் என்பது அமிர்தாவுக்கு புரிந்தது. 

 

 அனைத்தையும் சொல்லி முடித்து கண்களை துடைத்துக் கொண்டவர் ,

“ஏதோ கெட்டதுல  நல்லதா உங்க அம்மாதான் என்ன இங்க அனுப்பி இருக்கா போல”

ஆனந்தும் அமிர்தாவும் அவருக்கு  கை  எடுத்து கும்பிட்டனர்.

மீனாவை பார்த்த செந்தில் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

“என்னடா ராசா? ஒரு தடவ வந்து என்ன பார்த்து விவரம் சொல்லி இருக்கலாமில்ல?”

செந்திலுக்கு அப்போதுதான் தான் செய்த தவறு புரிந்தது.

“என்ன மன்னிச்சுடுங்க பாட்டி “

அன்று இரவு இவர்களுடன் இருந்த ஆனந்த் தூக்கம் இல்லாமல் தவித்தான். மனைவியின் மடியில் இருந்தால் தூக்கம் வருமோ?

சென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி. செந்தில் அவளின் முதுகை கட்டிக் கொண்டும் கயல்  மார்பை கட்டிக் கொண்டும் உறங்கி கொண்டிருந்தார்கள்.

அமிர்தாவுக்கும் வயது ஒன்றும் பெரிய வயது இல்லை. இருந்தாலும் அவளின் மன முதிர்ச்சியினால்  இவர்களை குழந்தைகளாகாவே பார்த்தாள் . 

 

 

மலர் -36

அவளால் ஏன் செந்திலை விட முடியவில்லை என்பது இப்போது புரிந்தது. தாடி மீசை வைத்த  வளர்ந்த குழந்தை தான்  அவன். 

தாய் மடி தேடியது குழந்தை. நேரே அம்மாவை கட்டி கொண்டான். பயத்தில் இவனை தள்ளினார் கோதை. எத்தனை எத்தனை காமாந்தர்களின் பிடியில் கொடுமைகைளை அனுபவித்திருந்தால் இவள் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டும். வேறு பக்கம்  திரும்பி குலுங்கி குலுங்கி அழுதான். அவன் அன்னை அவனை முதுகு புறமாக அணைத்துக் கொண்டாள் . இவன் திரும்பி அன்னையை கட்டிக் கொண்டான். சுருங்கி சூம்பி போய் இருந்த அன்னையின் மார்பகங்களை  இவனின் கண்ணீர் துளிகள் நனைத்தது. அன்னையை வெறுத்து ஒதுக்கியவன் இன்று அவளின் மடி தேடி வந்திருக்கிறான்.

    மறுநாள் வீட்டில் சில பூஜைகள் செய்தார்கள். அனைத்தும் முடிந்ததும்  மீனாம்மாவும் கிளம்பினார். 

ஆனந்த் அவரிடம்  , 

“நீங்க எனக்கு உயிர் குடுத்தவங்கள உயிரோட குடுத்துருக்கீங்க.  நான் எவ்ளோ நன்றி சொன்னாலும் சரியா இருக்காது. ஆனா நான் ஒன்னு சொல்ல முடியும். கோதையோட பையன் உங்களுக்கும் பையன்தான். உங்களுக்கு எங்கிட்ட எல்லா  உரிமையும் இருக்கு. “

“இருக்கட்டும் ராசா. ரெண்டு பேரும் நல்ல செய்தி சொல்லுங்க. அதுவே எனக்கு போதும்”

“இங்க பாரு அம்மு! பிரசவம் பாக்க அம்மா இல்லன்னு சொல்ல கூடாது. நான்தான் உனக்கு”

கண்களில் ஒரு மணி கண்ணீர் வந்தாலும்  சந்தோசத்தினால் கிளிக்கி  சிரித்தாள்.

“செந்திலு! உங்கம்மா ஆசை பட்ட மாதிரியே கடவுள் உன்ன உங்க அண்ணாகிட்ட  வந்து சேர்ந்துட்டார் .பெரியவன் சொல்லறதை கேட்டு நட “

“அதுக்கு என்ன? இவன் என்னோட தம்பி. எனக்கும் அமிர்தாவுக்கும் புள்ள மாதிரி. அவ்ளோ சீக்கிரமா விட்டுடுவோமா? செந்திலின் தோளை கட்டிக் கொண்டான்.

அண்ணனின் பாசமான பேச்சில் திக்கு முக்காடிப் போனான் செந்தில். 

“என்ன மன்னிச்சுடுடா! நான் உன்ன எவ்ளோ இன்சல்ட் பண்ணிட்டேன் “

“மன்னிப்பா? ஆனந்தா?” வாயில் கையை வைத்து கண் விரித்து பார்த்தாள் அமிர்தா.

“அக்கா நீ சைட் அடிக்கிறது பப்ளிக்கா தெரியுது” காதில் கிசுகிசுத்தான் முரளி.

“அட! நீ வேற ஏண்டா? வேண்ணா  நீயும் பார்த்துக்க. நல்லா பார்த்துக்க. உங்க மாமா யாருகிட்டயும் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டாரு. இது உலக அதிசயத்துல ஒன்னு, இப்பவே பார்த்துக்க”

கயல் காலேஜ் சேரும் வரை வீட்டில் தனியாக  இருக்கக் கூடாது என்று அவளையும் அழைத்து சென்றார்கள். செந்திலையும் இனி எங்கும் விட மாட்டேன் என்று ஆனந்த்  முடிவாக சொல்லி விட்டான். அமிர்தா எத்தனையோ சொல்லியும் முரளி கண்டிப்பாக அவர்களின் வீட்டிற்கு வர மாட்டேன் என்று  விட்டான்.

 ஆனந்த்  “என்னடா இது?” என்று ஒரே ஒரு வார்த்தைதான் கேட்டான். பயந்து கொண்டு இவனும் மூட்டை முடிச்சை கட்டினான். அனைவரையும் அழைத்து செல்ல கார்கள் வந்தன. அனைவரும் கார்களில் ஏறிக் கொண்டார்கள். அதுவரை சாதாரணமாக இருந்த அமிர்தாவுக்கு கிளம்புமுன்  ஏதோ ஒரு பயம். 

 அன்று தான் விரட்டி அடிக்கப்பட்ட  இடத்திற்கு எப்படி செல்வது? அத்தனை வெட்கம் கெட்டவளா? அவன் சொன்ன காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. என்னதான் இருந்தாலும் பணத்துக்காக தானே அவரை நான் திருமணம் செய்துக் கொண்டேன்? அன்றும் இன்றும் அவன் மொழியில் தான் ஒரு பிச்சைக்காரிதானே. அது என்றுமே மாற  போவதில்லை. 

 அவள் நினைத்தது எப்படியாவது கோதையை ஆனந்தை ஒன்று சேர்க்க வேண்டும் . அதுதான் நடந்து விட்டதே. இனி ஆனந்தின் வாழ்க்கையில் இவள் யார்? வேண்டுமென்றால் யாரோ ஒரு ரெஜிதா, ராஜி யார் வேண்டுமானலும் வருவார்களே இனி  தான் எதற்கு? அவனின் காதல் பேரவையும் மோக மொழிகளும் தாப பேச்சுகளும், செல்ல தீண்டல்களும் அவளுக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. மூளையின் மூலையில் சைத்தான் அமர்ந்து இவளை யோசிக்க  விடாமல் செய்தது. 

சமையல் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள் .

முரளி வந்து கேட்டான். “அக்கா நீ வரலியா?”

“தெரிலடா! அன்னிக்கு அவரு விரட்டியடிச்ச  இடத்துக்கு எப்படி? அன்னிக்கு நடந்ததை நினச்சா எனக்கு உடம்பு நடுங்குது முரளி.  அவளையும் அறியாமல் அழுகை வந்தது. சமை யல் மேடையை அழுத்தி பிடித்துக் கொண்டு பேசியவளை முதுகு புறமாக கட்டி கொண்டான் ஆனந்த் . 

“ஏன் வரு என்ன நீ மன்னிக்க மாட்டியா? ப்ளீஸ் டி!  என்ன புருஞ்சுக்கோ டீ! எனக்கு நீ வேணும். உன்கிட்டேர்ந்து புள்ளைங்க வேணும். நாம் ரெண்டு பேரும் சேர்நது சந்தோசமா வாழனும். ப்ளீஸ்….”

மன நிலைமை சரியில்லாத எங்கம்மாவுக்கு இரக்கம் காட்டின நீ ஏண்டி எனக்கு கருணை காட்டக் கூடாதா? நானும் அப்ப மன நிலைமை சரியில்லாதவன்தாண்டி . உன்ன அன்னிக்கு அடிச்சது உன்னோட புருஷன் இல்ல. சைக்கோ. ப்ளீஸ் வரு. நீ இல்லாம எனக்கு இனிமே வாழத் தெரியாது. அவளின் பின் தோளில் சாய்ந்துப் பேசினான். கணவனின் கண்ணீரை அவளால் உதாசீனப்படுத்த முடியுமா?

திரும்பி நின்று அவனை அணைத்துக்  கொண்டாள் . அவன் இவள் முகமெங்கும் சாரி சொல்லிக் கொண்டே முத்தங்களால் நிரப்பினான்.

என்னவானதோ என்று பயந்து வந்த முரளி தொண்டையை கனைத்து தான்  இருப்பதை காட்டினான்.

“பாட்டி அங்க காத்திக்கிட்டு இருக்காங்க. அதான்” 

“மாமா உன்கிட்ட சாரி சொன்னது தான் ஹை லைட்” இப்போதும் காதில் கிசுகிசுத்தான்.

“சீ போடா!”

ஆனந்த் வீட்டில் அனைவருக்கும் பெரிய பூசணிக்காயில் த்ருஷ்டி கழித்தார்கள். கமலாம்மா தான் ஆரத்தி எடுத்தார்.

ஆனந்த்  மனைவியை சட்டென கைகளில் ஏந்தி வீட்டிற்குள் அழைத்து சென்றான். 

“மாமா என்ன இது ?”

“இல்லடா உங்க அக்கா கிட்ட  வேற மாதிரி சாரி கேக்கறேண்டா”

“நிறையா சாரி கேளுடா. நீ பண்ணி இருக்கற தப்புகளுக்கு நிறையவே சாரி கேக்கணும்.” தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும் போதே முத்துவும் வைரனும்  ஓடி வந்தனர்.  வழக்கம்போலவே அம்ரிதாவின் மீது பாய்ந்து நக்கி கொஞ்சி கீழே தள்ளி விட்டார்கள். அதை பார்த்த கோதை அம்முவுக்கு ஏதோ என்று பயந்து அழ ஆரம்பித்து விட்டார். 

ஆனந்த்  தான் அன்னையை மடியில் வைத்து சமாதானப்படுத்தினான்.

நாய்களை விட்டு அம்மு கோதையிடம் வந்து,

“அம்மா! என்ன பாருங்க ஒன்னு இல்ல” அருகில் வந்து நின்றவளை கோதை கட்டிக்  கொண்டு அழுதாள்.

பேரனும் பேத்தியும் மருமகளை சமாதான படுத்துவதை கண்ணீர் மல்க பெரியவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஆனந்த்  கோதையை பற்றி எதுவும் சொல்லவில்லை. இருப்பினும் அவளை அவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

ஏதோ எல்லாமே சரியானது போல இருந்தாலும் செய்த தவறுகளில் இருந்து ஆனந்தால்  எளிதில் மீண்டு வர முடியவில்லை.

சில நாட்கள் கௌன்சிலிங் போனான்.  கௌன்சிலர் அமிர்தாவிடம் பேசினார். ஆனால்  அதையும் தாண்டி அவனுக்கு என்ன தேவை என்பதை பாட்டி  புரிந்து கொண்டாள் . 

முள் மலரும்..

மலர் -42

பழைய தாலியில் புதிய முடிச்சுகள் அல்ல. பழைய மனைவி, புதுக் காதலியுடன் புது மனிதனாக மணமகனாக கம்பீரமாக புத்தம் புது தாலியுடன் வந்து நின்றான் ஆனந்த். அன்று தாலியை அன்னை அவிழ்த்து வைத்து விட்டு சென்றதினாலேயேத் தான் அவனுக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் போனது. எப்போது பலரும் உறவு கொண்டாலும் தாலி கட்டிய கணவனைத் தவிர வேறு யாரையும் அந்த நேரத்திலும் நினைக்காத அம்மாவைக் கண்டனோ அப்போதே அவனுக்கு தாலியின் புனிதமும் அன்னையின் மகத்துவமும் விளங்கி விட்டதே. இனி என்ன?

ஒரு நல்ல நாள் பார்த்து அமிர்தாவுக்கும் ஆனந்துக்கும்  திருமணம் நடந்தது. ஆம்! அவர்கள் வீட்டிலேயே  நெருங்கிய சொந்தங்களுடன் இந்த ஏற்பாடு ஆனந்த்  செய்ததுதான்.  தாலி கட்டுவேன் என்று சொல்லி இருந்தானே தவிர எப்போது என்று சொல்லவில்லை. 

சென்ற முறை போல இல்லாமல் இல்லாமல் வந்தவர்களுக்கு பத்து வகையான இனிப்புகளுடன் வயிறும் மனமும் நிறைய  நிறைய விருந்து அளித்தான். செந்திலின் ஆணைக்கிணங்க அவன் சிறிது காலம் இருந்த ஆசிரமத்திற்கும் அள்ளி  அள்ளிக் கொடுத்தான். திருமணம் முடிந்ததும் இவர்களும் நேரில் சென்று குழந்தைகளை  சென்று பார்த்து விட்டு வந்தனர்.

  அமிர்தாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் ஏங்கியது அல்லவா? நெற்றியில் திலகமிட்டவனுக்கு அப்போதே எம்பி ஒரு முத்தம் கொடுத்து விட்டாள் . பெரியவர்கள் கண்டு கொள்ளவில்லை.  சிறியவர்களுக்கு வெட்கம் பிடுங்கியது. அதே சமயம் இனியாவுக்கும் சட்டென ஒரு முத்தம் கிடைத்தது.அதிர்ச்சியில் இருந்தவளை பார்த்து கண்ணடித்தான் விக்ரம்.

புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி என்ன என்றாள்  அமிர்தா. ஆனந்த்  மெதுவாக தலையாட்டி ஆமோதித்தான். இனியாவுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. 

“இது எப்படி?” கையால் செய்கை காட்டினாள்.

தன்  வாழ்க்கை சரியானது போல்  இனியாவின் வாழ்க்கையும் சரியாக வேண்டாமா? அமிர்தாவும் ஆனந்தும் விக்ரமின் அன்னையிடம்  பேசி விட்டு நேராக விக்ரமின் சித்தப்பா வீட்டிற்கும்  சென்று பேசினார்கள்.

“ப்ச்! அட இவங்கள பிரிக்கணும்ங்கறது எல்லாமே என்னோட எண்ணம் இல்ல. அவ இனியா, விக்ரம எப்படி பார்த்துகிட்டான்னு நானே ஆஸ்பத்திரில பார்த்தவன்தான். இவன் முதல்ல ஒன்னுத்தோட சுத்தினான். அப்புறம் இனியா  பின்னாடி சுத்தறான். நாளைக்கு வேற யாராவதுன்னா? அந்த பொண்ணுக்கு நாங்க என்ன பதில் சொல்ல முடியும்? இவன் சீரியஸா இருங்கானா இல்லையான்னு பாக்கத்தான்  சும்மா நகை  நட்டு அது இதுன்னு ஏதோ காரணம் சொன்னேன். அவளுக்காக இவன் எவ்ளோ தூரம் போகறான்னு பாக்கத்தான் .கடைசில பார்த்தா  நானே லோன் போட்டு உங்களுக்கு தேவையான பணத்தை கொண்டு வந்து கொட்டறேன். கல்யாணதுக்கு வந்து சேருங்கன்னு கத்த  ஆரம்பிச்சுட்டான். எங்களுக்கு என்ன தேவை? நம்ம பசங்க நல்ல படியா இருக்கனும் . நாங்களே வந்து இனியா வீட்டுல பேசறோம். எந்த நகையும், பணமும் வேணாம். அவளை மாதிரி ஒருத்தி எங்க வீட்டுக்கு வந்தா எங்களுக்கு சந்தோசம்தான்” 

இவர்கள் வேறொன்று எதிர்பார்க்க, அவர் தன்மையாக பேசினார். தோழியும் நல்ல இடத்திலேயே வாழப் போகிறாள் என்பதில் அமிர்தாவுக்கு பேரானந்தம். பெரியவர்கள்  வந்து பேசுவதற்கு முன்தான் இந்த கூத்து. காதலியிடம் பேசாமல், பார்க்காமல் எத்தனை  நாட்கள் தான் பொறுத்திருப்பது? விக்ரமால் தாங்க முடியவில்லை. இதோ ஏதோ ஒன்றை சாக்கிட்டு ஓடி வந்து விட்டான். 

பவித்ராவும் இனியாவும்தான் இவளை முதலிரவுக்கு அலங்காரம் செய்து அனுப்பினார்கள். விக்ரமும் முரளியும் அறையை தயார் செய்தனர் . பெண்கள் செய்த கிண்டலில் அமிர்தாவுக்கு முகம் சிவந்திருந்தது.

 அழகின் சிகரமாக வந்தவளை அப்படியே அள்ளி  அணைத்துக் கொள்வான் என்று இவள் எதிர் பார்த்திருக்க அவனோ கை கட்டி நின்றிருந்தான். அவன் பார்வை மட்டும் ஏதோ சொல்லியது. இவளுக்கு அடுத்து என்ன புரியவில்லை. 

“ரொம்ப டயர்டா இருப்ப. வா தூங்கலாம்”

  இவளுக்கு ஏதோ ஒரு ஏமாற்றம் . கோபமும் இயலாமையும் அழுகையும் முட்டிக் கொண்டு வந்தது. அதை அவனிடம் காண்பிக்கவும் முடியாது. இன்னமும் அவளுக்கு அவன் மீது பயம்தான். 

 சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருந்தாள். 

 

அடுத்து என்ன ?
முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!