உருத்திரா ❤️33

 

“என்ன முழிக்குற குட்டச்சி! இனி ஷேரிங் ரூம் வேண்டாம், நான் அடிக்கடி வந்துட்டுப் போவேன் நமக்குப் பிரைவசி வேணும்!” என்று சர்வசாதாரணமாகச் சொன்ன பத்ரனை, மூக்கை விடைத்துக்கொண்டு முறைத்தாள் திகள்விழி.

“நீங்க வந்துட்டுப் போறதுக்கு நான் ஏன் தனியா இங்க இருக்கணும்! நீங்க ஒண்ணும் எனக்கு வீடு வாங்கித் தர வேண்டாம். நான் கிளம்புறேன்” என கோபத்துடன் தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு வெளியேற முயன்றவளை, அடுத்த நொடியே ஒற்றைக் கையால் தூக்கிக்கொண்டான் பத்ரன்.

“யோவ் இறக்கிவிடு! என்ன தைரியம் இருந்தா என்னை தூக்குவ?”

“இந்தப் பத்ரன் பொண்டாட்டிக்குத் தனி ஸ்டேட்டஸ் இருக்கு குட்டச்சி!”

அவளுடைய கோபத்தையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், மீண்டும் உள்ளே வந்தவன் அவளைத் தரையில் இறக்கிவிட்டான்.

“இங்கே உன்னோட பாதுகாப்புக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. நம்ம கார் இருக்கு, நீயே டிரைவ் பண்ணு. வேண்டாம்னா டிரைவர் அரேஞ்ச் பண்றேன். உனக்கு என்ன வசதி வேணுமோ அதெல்லாம் இங்க கிடைக்கும். ஆனால் இங்கேதான் நீ இருக்கணும்!” என்ற அவனுடைய குரலில் அத்தனை பிடிவாதம்!

பத்ரனையே பார்த்துக்கொண்டிருந்த திகள்விழிக்கு, அவனுடைய அக்கறை புரியாமல் இல்லை. ஆனால், அந்த அக்கறைக்குப் பின்னால் ஒளிந்திருந்த அதிகாரம்தான் அவளை எரிச்சலடையச் செய்தது.

“யோவ் என்ன விளையாடுறியா! உன் இஷ்டத்துக்கு திடீர்னு வந்து எல்லாத்தையும் மாத்துற. முதல்ல உனக்கும் எனக்கும் சண்டையில்லாம கல்யாணம் முடியுதான்னு பார்ப்போம்.

நேத்து வேண்டாம்னு சொன்ன, இன்னைக்கு வேணும்னு வந்திருக்க. நாளைக்கு எப்படி இருப்பியோ! நிமிஷத்துல ஆட்சி மாறும்போது, இரண்டு வருஷத்துல எதுவும் மாறலாம். சும்மா கம்பி கட்டாம ஊருக்குப் போ!”

சில நொடிகள் அவளை ஆழமாகப் பார்த்தவன், திடீரென்று தோளைக் குலுக்கிக்கொண்டான்.

“சோ மேடம் ஸ்டே பண்ணமாட்டீங்க! நோ ப்ராப்ளம். ஆல்ரெடி உன் திங்ஸ் இங்க மூவ் பண்ணியாச்சு!” என்றவனை, “ஆங்!” என்று அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“உன் ரூம்மேட் நீ போன கொஞ்ச நேரத்துல வந்தா. அவள் மூலமா உன் திங்ஸை ஷிஃப்ட் பண்ணிட்டேன் விழி. சும்மா குதிச்சுக் குதிச்சு சண்டை போடாம வா. வீட்டை சுத்திக் காட்டுறேன்”

என்று அவள் கைகளை பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றான்.

“இது மாஸ்டர் பெட்ரூம்! நம்ம ரூம்!”

விசாலமான அறை, பெரிய கண்ணாடி ஜன்னல்கள், அதையொட்டிய அழகான பால்கனி, அறையின் ஒரு மூலையில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டெடி டேபிள், லாம்ப் என்று அனைத்தும் நேர்த்தியாக இருந்தன. 

அவள் விரும்பக்கூடிய வகையில் அறை அலங்கரிக்கப்பட்டிருந்ததைக் கவனித்தவளுக்கு சிறிது ஆச்சரியமாகக்கூட இருந்தது.

“இந்த ஏற்பாடெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல! சொன்னாலும் அடம்பிடிக்கிறிங்க. முன்னாடி பிடிவாதமா என்னோட காதலை வாங்குன மாதிரி, இப்போ என்னை தக்க வச்சுக்க நினைக்கிறிங்க பத்ரன்! என்னால முழுசா உங்களை நம்ப முடியல!”

எனப் பெருமூச்சோடு சொல்லிவிட்டு ஃப்ரெஷ் ஆகப்போனாள்.

அவளுடைய குரலில் கோபத்தைவிட வேதனைதான் அதிகமாக இருந்தது.

திகளின் மனம் புரிந்தாலும், அவளுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க சாருக்கு வலிக்கிறது! இவன் சரிப்பட்டு வரமாட்டான் என திகள் கம்பி நீட்டிவிட்டால் பொண்ணுக்கு எங்க போறது? என்ற கவலைதான் அவனுக்கு.

அவள் வருவதற்குள் சாண்ட்விச், காஃபி தயார் பண்ணி அறைக்கு எடுத்துவந்தவனை வித்தியாசமாகப் பார்த்தாள்.

என்னமோ பண்ணித்தொல என்ற பாவனையில் பால்கனிக்குப் போய் அமர்ந்தவள் அருகே இடித்துக்கொண்டு மடியில் ஏறாத குறையாக அமர்ந்தான் பத்ரன்.

“ஏன் பக்கத்துல இடம் இல்லையா? இல்லை என் மடி மெத்து மெத்துனு இருக்கா? ம்ச் தள்ளி உட்காருங்க…” என்று சிடுசிடுத்தவளைத் தூக்கி மடியில் உட்கார வைத்தவன்,

“கோவமா இருக்கன்னு அமைதியா போறேன் குட்டச்சி. இதான் சாக்குன்னு ஓவரா பண்ற! ரொம்பப் பேசுனா உதட்டைக் கடிச்சிடுவேன். ஒழுங்கா சாப்பிடு டயர்டா இருக்க!” என்றவனை முறைத்துக்கொண்டே சாப்பிட்டாள் திகள்.

இரவு வரை தொல்லைகளை மட்டுமே கொடுத்தவனை, சமாளிக்க முடியாமல் டென்ஷனாகிவிட்டாள்.

“அதான் இந்த வீட்டுல ஸ்டே பண்ண ஒத்துக்கிட்டேனே! நீங்க இந்தியாவுக்குக் கிளம்புங்க!”

“ஏன்?”

“ஏன்னா எனக்கு டிஸ்டர்ப்பா இருக்கு!” என எரிந்துவிழுந்தாள்.

“நான் என்ன பண்ணேன் விழி?” என்று அப்பாவியாக கேட்டவனை, ஸ்கேலை வைத்து சுளீரென அடித்தாள் திகள்.

“ஈவ்னிங் இந்த டிரஸ் மாத்துனதிலிருந்து உன் பார்வை முழுக்க என் ஷார்ட்ஸ் மறைக்காத தொடைலதான் இருக்குயா காஜி!” என்று கண்களை உருட்டி காளியாக முறைத்தவளை பத்ரன் சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்தான்.

“சேலை இல்லை தாவணில இருக்கும் போது லைட்டா தெரியுற இடுப்பையே நான் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவேன், இப்போ இவ்வளவு குட்டியா டிரஸ் போட்டா நான் என்ன பண்றது? நீ கவர் பண்ணு!”

“எனக்கு பிடிச்ச டிரஸை நான் போடுவேன். நீங்க ஊருக்குக் கிளம்புங்க!” என்றவளின் பேச்சைக் கேட்காமல் வீட்டுக்கு வீடியோ கால் செய்தான்.

இந்தியாவில் அப்போதுதான் எட்டு மணி.

போனை எடுத்த அபிராமி, பேரனிடம் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“பத்ரா விழியைச் சமாதானம் பண்ணிட்டியா? அவ கோவம் போய்டுச்சா?” என்று ஆர்வமாகக் கேட்டார்.

“அவகிட்டயே கேளுங்க பாட்டி!” எனப் போனை விழியிடம் திருப்பியவன், அவளை நெருங்கி அமர்ந்துகொண்டான்.

திரையில் அபிராமியின் முகத்தைப் பார்த்ததும் திகளின் இதயம் ஒருநொடி தடுமாறியது.

இத்தனை நேரம் பத்ரனிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்தவளால், பாட்டியின் முகத்தைப் பார்த்ததும் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. அவரைக் கண்டால் அழுதுவிடுவோமோ என்ற பயத்தில் தலையை குனிந்துகொண்டாள்.

“தங்கம் அபி மேல கோவம் போகலையா? மன்னிச்சிடுடா, சாம்பவியும் நானும் உன்னை மிஸ் பண்றோம்!”

என்றவர் பேச்சில், இவ்வளவு நேரம் வரவா என்ற அழுகை வந்துவிட்டது.

“போ அபி! நான் யார்கூடவும் பேசமாட்டேன்! இவரு கூட சேர்ந்து என்னை அழவச்ச நீங்க யாரும் எனக்கு வேண்டாம்.”

“ம்ச்… குட்டச்சி அழாதடி!”

“என்ன குட்டச்சி? உங்களோட சேர்ந்து இவங்களும் என்னை ஒதுக்கி வச்சாங்க. இப்போ தங்கமா!”

“ஐயோ ஒதுக்கியெல்லாம் வைக்கல தங்கம்! இவன் ஏற்கனவே கோவத்துல இருந்தான். உனக்கு சப்போர்ட் பண்ணா இன்னும் ஆடுவான். அதான் கொஞ்ச நாள் உன்கிட்ட பேசாம பத்ரனை கன்வின்ஸ் பண்ணோம்”

“பொய் சொல்லாத அபி! உன் பேரனுக்கு வேற நல்ல பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சு அவகூட வைப் பண்ணு! நான் இந்த சிடுமூஞ்சியை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்!” என்று கோபமாகச் சொன்னவளைப் பாவமாக பார்த்தார்.

“அத்தை யார்கிட்ட காலைலயே வீடியோ கால் பேசுறிங்க?” என்று சாம்பவி போனைப் பார்க்க, திகள் அவரை முறைத்தாள்.

“விழி தங்கம் எப்படி இருக்க? பத்ரனை மன்னிக்கலைனா பரவாயில்ல அவனை விரட்டி விட்றலாம்… நீ மட்டும் அத்தைகிட்ட வந்திடு பொண்ணே!”

“முடியாது வரமாட்டேன்! இங்கேயே வெள்ளைக்காரப் பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்குவேன். முக்கியமா அவனுக்கு மட்டும் பரதநாட்டியம் ஆடிக் காட்டுவேன். கண்டவனுக்கு என் நாட்டிய உருப்படி தெரிய வேண்டாம்!” என மூக்கை உறிஞ்சியவளை, அபி, பவி, பத்ரன் மூவருமே பாவமாகப் பார்த்தனர்.

‘பேச்சாட பேசுனா, நல்லா அனுபவி!’ என மனசாட்சி காரித்துப்பினாலும், கெத்தாக அமர்ந்திருந்தான்.

“திகள் காலையிலேயே என்ன ரகளை! அத்தை பாவம்…” என்று தங்கையை பார்த்தபடி வந்து அமர்ந்தாள் நிலா.

“அக்கா! இந்தப் பாம்பாட்டி நேத்து வந்ததிலிருந்து டார்ச்சர் பண்றான்”

“எது பாம்பாட்டியா? அடிங்க குட்டச்சி…”

“என்ன பேச்சிது திகள்? அவர்கிட்ட சாரி கேளு!” என்று தங்கையைக் கடிந்துகொண்டாள் நிலா.

“விடுங்க அண்ணி! நீங்க எப்படி இருக்கிங்க? பேபி ஓகேவா?” என்றவன் பேச்சில் கண்களை அகல விரித்தாள் திகள்விழி.

“பேபியா? அக்கா நீ கர்ப்பமா இருக்கியா?” என்ற திகள் கேள்வியில்

நிலா சங்கடமாக தலையைக் குனிந்தபடி, “ஆமாம் திகள்மா!” என்றாள்.

“நான் சித்தியாகப்போறேனா? ஏன் என்கிட்ட சொல்லல? நான் ஊருக்கு வந்திருப்பேன்ல!”

“சாரிடி நாங்க எதிர்பார்க்கல. நீ இப்போதானே போயிருக்க? எதுக்கு அழைச்சல், அதான் இன்னைக்கு சொல்றதா இருந்தேன்” என்று டாக்டரிடம் செக்கப் போனதைப் பற்றி சொன்னாள்.

“எனக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா! எப்பவும் உன்னை மட்டும் மிஸ் பண்ணுவேன். இனி பேபியையும் மிஸ் பண்ணுவேன், இந்த மாதிரி நேரத்துல உன் பக்கத்துல இருந்து உன்னைப் பார்த்துக்க முடியலையே!”

திகளின் அன்பில் உருகிப்போனது நிலாவின் உள்ளம்.

“பேபி பொறக்கும்போது நீ இங்க இருக்கணும் திகள். என்னை அம்மாவா நீ பார்த்துக்கிட்ட மாதிரி, என் குழந்தைக்கு சித்தியா இல்லாம அம்மாவா நீ இருக்கணும்!”

அவளுடைய குரலில் நன்றியும் பாசமும் நிறைந்திருந்தன.

நிலாவை இழந்த வலியிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்த குடும்பத்திற்கு, ஆரலியாக வந்த பெண் மீண்டும் நிலாவாகக் கிடைத்தது ஒரு வரம்.

அந்த வரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் செய்த தியாகங்களும் குறைவில்லை.

அவர்கள் மூவர் மட்டும் இல்லையென்றால், தன்னுடைய வாழ்க்கை எங்கோ தொலைந்திருக்கும் என்று நிலாவுக்கு தெரியும்.

தன்னவள் கலங்கினால் ருத்ராவுக்குத் தெரிந்துவிடுமல்லவா! மனைவியின் தோள்களைச் சுற்றி கையைப் போட்டபடி அமர்ந்தான் ஏகதச ருத்ரா.

“ஹாய் மாமா! வாழ்த்துகள், அக்கா ரொம்ப எமோஷனல் ஆகுறா. அவளை நல்லா பார்த்துக்கோங்க!” என்று தன் கலங்கிய கண்களைத் துடைத்தபடி சொன்னாள் திகள்.

“நான் பார்த்துக்குறேன் திகள். உன் ஸ்டடீஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணு! அப்படியே பக்கத்துல இருக்குறவனையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணி மன்னிச்சா நல்லா இருக்கும். இங்க நிறைய பெண்டிங் வொர்க் இருக்கு” என்ற அண்ணனை முறைத்த பத்ரன்,

“நான் கொஞ்ச நாள் கழிச்சுத்தான் வருவேன். அதுவரை நீயே ஒர்க் பாரு ஹெல்ப்க்கு விமலைக் கூப்பிட்டுக்கோ! ஆல்ரெடி சகுந்தலா அத்தைகிட்ட பேசிட்டேன்… டோன்ட் டிஸ்டர்ப் மீ!” என்று போனை கட் பண்ணிவிட்டான்.

“ஏன் கட் பண்ணிங்க! அக்காகிட்ட பேசணும்”

“என்கிட்ட பேசுடி அழகி! உனக்கு அண்ணி மேல ரொம்பப் பாசமா? உன் அக்கா இடத்துல அவங்க இருக்குறதுனால நிலாவா அவங்களை ஏத்துக்கிட்டியா?”

பெருமூச்சோடு அவனைப் பார்த்த திகள், மெதுவாக பத்ரன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

“அக்காவை பெங்களூரு கூட்டிட்டு வந்தப்போ, நான் ஆரலியா தான் அவங்களைப் பார்த்தேன். நான் மட்டும் இல்ல, யாருமே நிலா அக்காவா ஆரலியை பார்க்கல.

அம்மா, ‘நிலா போல எங்களுக்கு பொண்ணா இரு’னு சொல்லிக் கூட்டிட்டு வந்தாங்க. என்ன இருந்தாலும் ஆரலின்ற மனுஷியை அழிச்சு நிலாவா அவங்களை மாத்துறது தப்புதானே மாமா!”

“ம்ம்ம்…” என பத்ரன் அமைதியாக அவளுடைய தலையை வருடினான்.

“ஆனா அவங்களுக்கு ஆரலியா இருக்கப் பிடிக்கல. ஆரலி இறந்ததாவே இருக்கட்டும், நான் நிலாவா, உங்க பொண்ணா இருக்க ஆசைப்படுறேன்னு சொன்னாங்க. 

சொத்து, பணம் எதுவும் அவங்க கேக்கல, நிலாஞ்சியா எங்க குடும்பத்தோட இருக்க ஆசைப்பட்டாங்க. ஏற்கனவே நிலா இழப்புல இருந்த எங்களுக்கு, திரும்ப நிலா கிடைக்குறானு மனசு சந்தோஷமா இருந்துச்சு.

பெரியம்மா ஹெல்ப்ல சர்டிஃபிகேட் எல்லாம் மாத்துனோம். ஆரலியோ, நிலாவோ எனக்கு அவங்க அக்கா. படிச்சு முடிச்சதும் அக்கா பண்ண முதல் வேலை, அம்மாவோட சொத்துல அவங்களுக்கு எந்த பங்கும் வேண்டாம்னு பத்திரம் ரெடி பண்ணிக் கையெழுத்து போட்டுக் கொடுத்தாங்க!

எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது! அம்மா அழுகையோட, ‘எங்களை விட்டுப் போறியானு’ கேட்டாங்க…”

திகள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“அப்போ அக்கா எனக்கு நீங்க தந்த படிப்பு போதும்மா, என்னைக்கு இருந்தாலும் நான் உங்க பொண்ணுதான்னு சொன்னாங்க… 

ருத்ரா மாமாவை பத்தி ஆல்ரெடி எங்ககிட்ட சொல்லிருக்காங்க, சரபனோட விஷியங்களை கண்டு பிடிச்சதும், தனியா சரபனோட போராட வந்தாங்க.

அக்காவை தனியா விட எங்களுக்கு மனசில்லாம எல்லாரும் நடிக்க வந்தோம்!” என்று முழு கதையையும் சொல்லி முடித்தாள்.

உண்மையில் பத்ரனுக்கு அவர்கள் குடும்பத்தை நினைக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. திகளின் குடும்பத்தின் மீது அவனுக்குள் மரியாதை அதிகரித்தது.

“சரி இந்தக் குட்டச்சிக்கு எப்படி அருமையான டான்ஸ் திறமை வந்தது?” என்று அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடி கேட்டான்.

“சின்ன வயசிலிருந்தே எனக்கு பரதநாட்டியம் ஆடிப் பழக்கம்! அரங்கேற்றம் பண்ணியிருக்கேன். அது இப்போ யூஸ் ஆச்சு!” என்றவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவள் கலைந்த முடிகளை காதின் பின் தள்ளியவன்,

“நாளைக்குக் காலையில என் கூட ஒரு இடத்துக்கு நீ வரணும்! இந்த ஒருதடவை என்னை முழுசா நம்பு!” என்று கேட்டான்.

அவனிடம் மறுக்க முடியவில்லை. சரியெனத் தலையாட்டியவளை அணைத்துக்கொண்டான் பத்ரன்.

“தேங்க்ஸ் குட்டச்சி!”

“சரி, சரி! விடுங்க எனக்குத் தூக்கம் வருது!”

“தூங்கு நான் எங்கேயும் போகல” என்று அவளை விட மறுத்தவன் நெஞ்சில் சாய்ந்தபடியே கண்களை மூடினாள்.

அதே நேரம் இந்தியாவில், ருத்ரா மனைவியை முறைக்க, அவளோ பாவமாக அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அத்தை, பாட்டி இருவரும் எல்லை மீறி அவனை வைத்து செய்துகொண்டிருந்தார்கள்.

இதில் அபிராமி வேறு சும்மா இருக்காமல்,

“என்ன பொண்ணு நீ? புருஷனுக்குப் பயப்படுற இதுவே விழியா இருந்தா பத்ரனை மொக்கை பண்ணிட்டு எங்க கூட வந்திருப்பா!” என சலித்துக்கொள்ள,

“ஏய் கிழவி! உன்னை…” என்று கடுப்பாக எழுந்த ருத்ராவை “ஏகரா அமைதியா இரு” என சமாதானப்படுத்தினாள் நிலா.

“பாட்டி ஏகராவை டென்ஷன் ஆக்காதிங்க!”

‘தெரியாம இவங்க குடும்பத்துல மாட்டிக்கிட்டேன்’ என ஒரு நாளைக்கு நூறு தடவையாவது நினைக்க வைத்துவிடுகிறது இந்த குடும்பம்.

“நான் எங்க டென்ஷன் பண்ணேன்? உன்னை அஞ்சு நிமிஷம் தனியா விட மாடாம வால் பிடிச்சிட்டே சுத்துறான். வீட்டுல பொம்பளைங்க அப்படி இப்படிப் பேசுவோம். இவனை யாரு குறுக்க வரச் சொன்னது?”

“அப்படித்தான் வருவேன்! அவளைத் தனியா விட்டுட்டு எனக்கு பெரிய மயிறு வேலை கிடையாது”

“ஐயோ நிறுத்துங்க! நீங்க பொறுமையா சண்டை போடுங்க. நான் அம்மா வீட்டுக்குக் கிளம்புறேன்” என்று டென்ஷனில் கத்திவிட்டாள்.

அவளும் எவ்வளவு நேரம்தான் பொறுப்பாள்? 

விமலை ஏற்கனவே வரசொல்லியிருந்ததால் சரியான நேரத்துக்கு வந்துவிட்டான்.

“நீங்க பேசிமுடிவெடுங்க. நான் கிளம்புறேன்!” என அண்ணனின் கைகளைப் பிடித்தது மட்டும்தான் ஞாபகம் இருந்தது.

ருத்ரா பாய்ந்துவந்து அவளைத் தூக்கிக்கொண்டான்.

“மஃபின் என்னைவிட்டு போறியா?”

“பாஸ், தங்கச்சிக்கு நீங்க குடுக்குற மெண்டல் டார்ச்சர் பத்தாதுன்னு பாட்டியும் சேர்ந்து குடுக்குறாங்க”

“டேய்…” அபிராமி கோபமாக விமலின் காதைப் பிடித்து முறுக்கினார்.

“கத்தாத பாட்டி! நான் நிலாவை கூட்டிட்டுப் போறேன். நீ தனியா உன் மருமகளோட ஜாலியா வைப் பண்ணு!”

என்றவனை மாமியாரும் மருமகளும் முறைத்தனர்.

“டார்ச்சர் பண்றிங்க இரண்டு பேரும்! அமைதியா இருக்க முடியும்னா சொல்லுங்க இருக்குறேன். இல்ல கிளம்புறேன். எனக்கு பசிக்குது, இரண்டு பேருக்கும் சண்டை போடுறதுல தான் மும்முரமா இருக்கிங்க என்னைக

கவனிக்கல!” என்று சோர்வாக சொன்னவளை கண்டு ருத்ரா உள்ளம் துடித்துப்போனது.

அவளையும் சமைக்கக்கூடாது என்று தடை போட்டுவிட்டார்கள், பின்ன எப்படி சாப்டுறது? 

“சாரி ஆரலி” என அவளிடம் மன்னிப்பு கேட்டவன், பாட்டியை முறைத்துவிட்டு அவளைத் தூக்கிக்கொண்டு பறந்துவிட்டான்.

“இவன் எங்கடா வேகமா போறான்?” மகன் எங்கே போகிறான் என்று தெரியாமல் சாம்பவி கேட்டார்.

“அதுவா அத்தை! நீங்க பண்ண காமெடிக்கு இந்நேரம் பாஸ் பக்காவா பிளான் போட்டிருப்பாரு, சும்மா நிக்காம அந்தப் பொங்கலை வைங்க அப்படியே வடை மேல சட்னி!” என்றான்.

“என்னடா பிளான் போட்டிருப்பான் உன் பாஸ்?”

“ம்ம்ம்… இனி நீங்க நிலாவை சாதாரணமா நெருங்க முடியாது. நான் நினைக்குறது சரின்னா, பாஸ் பழைய வீட்டுக்குப் போயிருப்பாரு”

“என்னடா சொல்ற? அப்போ திரும்ப வரமாட்டானா? நான் சும்மா கிண்டலுக்குத்தான் அவனை வம்பிழுத்தேன்!” என்று பாட்டி பதறினார்.

பேரன் இத்தனை அபத்தமாக ஒரு பெண் மீது பைத்தியமாக இருப்பது அவருக்கு வித்தியாசமாக இருந்தது, விளையாட்டு காட்டவே நிலாவைத் தன்னோடு அதிக நேரம் வைத்துக்கொண்டார்.

“அத்தை, பாட்டி நான் சொல்றதை நல்லா புரிஞ்சிக்கோங்க! பாஸ் நடிக்கிறதுக்காக மட்டும் ஆரலி பேரை உபயோகப்படுத்தல. அவருக்கு நிஜமாவே அவளை ரொம்பப் பிடிக்கும். 

அவளைக் கூடவே வச்சுக்க நினைக்குறாரு! அவரை சீண்டுறதா நினைச்சு உங்க உறவைப் பலவீனமாக்காதிங்க. 

நிலாவால கூட அவரை விட்டுப் பிரிஞ்சு போக நினைக்க முடியாது. ருத்ரா மனதளவில் மோசமாகப் பாதிக்கப்படலாம். அவருக்கு இப்போ மட்டும் இல்ல எப்பவுமே நிலா முக்கியம்னு நீங்க புரிஞ்சுக்கணும்”

என்று விமல் சொன்னதும் அபிராமி அமைதியாகிவிட்டார். 

பேரனை நினைத்து பெருமூச்சுதான் வந்தது.

“சரிடா இனி விளையாடல போதுமா?”

“இனி விளையாடுனா என்ன? விளையாடலைனா என்ன? கொஞ்ச நாளைக்கு அவங்களை ஃப்ரீயா விடுங்க!” என்று அறிவுரை சொல்லிவிட்டுப் போனான்.

“ஹேய் அரக்கா! எங்க போறோம்? எனக்கு ஜூஸ் பிடிக்கல” என முகத்தைச் சுளித்தாள் நிலா.

இருவரும் காரில் போய்க்கொண்டிருந்தனர். அவள் பசியென்றதும் ஜூஸ் வாங்கிக் கொடுத்திருந்தான் ருத்ரா.

“நம்ம வீட்டுக்குப் போறோம். நீ, நான் மட்டும்!” என்றவனை முறைத்த நிலா, அவனைத் திட்ட ஆரம்பித்தாள்.

“ஏழு வருஷம் தனியா இருந்து உன் மூளை துருப்பிடிச்சிருச்சு ஏகரா! முதல்ல வண்டியைத் திருப்பு. பாட்டி காத்திருப்பாங்க”

“நோ ஆரலி! இந்த இரண்டு நாள் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்றவன் குரல் இறுக்கமாக வந்தது.

“இரண்டு நாள் தானே ஏகரா! அவங்க சும்மா காமெடிக்கு பண்ணதை ஏன் சீரியஸா பார்க்குற? இத்தனை வருஷம் அவங்க உன்னைப் பிரிஞ்சு பட்ட கஷ்டம் போதாதா! நான் சொல்றதைக் கேளு”

என்று அவள் எவ்வளவோ சொல்லிவிட்டாள். ருத்ரா கேட்கவே இல்லை.

அவனைப் பொறுத்தவரை, அவள் அருகில் இருந்தால் மட்டுமே அவனுடைய உலகம் சீராக இயங்குவது போல் தோன்றுகிறது. அவளைவிட்டு விலகி இருந்தால் வரும் பதற்றத்தை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை.

அவன் முகம் இறுக்கமாகவே இருப்பதை கண்ட நிலா அவனுடைய தோளில் சாய்ந்துகொண்டாள்.

வீட்டில் அனைத்தும் தயாராக இருக்க மனைவியோடு உள்ளே போனான். அவளுக்கு சாப்பாடை வைத்து ஊட்டிவிட ஆரம்பிக்க நிலா புலம்புவதை நிறுத்தவே இல்லை.

“அத்தை நல்லா சமைப்பாங்க! இங்க சாப்பாடு சுமார்தான், வீட்டுக்கு போகலாம் ஏகரா”

மதியம் வரை மனைவி வாயை மூடவில்லை என்றதும், “போதும், தூங்கு!” என அவளை மடியில் வைத்துக்கொள்ள, “என்னை தூங்கவச்சு ஏமாத்தாதடா! நான் தூங்கமாட்டேன்” என்று வாய் பேசிய மேடம் பத்து நிமிடத்தில் தூங்கிப்போனாள்.

ருத்ரா சிறு சிரிப்போடு அவளை பார்த்தான். 

‘மகன் போறேன்னு சொன்னா, ருத்ரா குடும்பம் விடணும்ல! நீ வரலைனா என்ன, நாங்க வரோம்!’ எனப் பெட்டியோடு நால்வரும் மாலையே ருத்ரா வீட்டு கதவைத் தட்டினார்கள்!

கதவை திறந்தவனின் முன்நின்றவர்களை முறைத்த ருத்ராவைக் கண்டுகொள்ளாமல் நால்வரும் உள்ளே போக, முணுமுணுத்தபடி கதவை அடைத்துவிட்டு உள்ள வந்தவன்.

மீண்டும் கதவு தட்டும் சத்தத்தில் வெளியே வந்தான். அங்கு விமலும், பேபியும் பெட்டியோடு பல்லை காட்டியபடி நின்றனர்.

“சாரி பாஸ்! தங்கச்சியை விட்டு தனியா இருக்க முடியல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!” என்று ருத்ராவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தவர்களை முறைத்தான்.

“எல்லாரும் எதுக்கு இங்கே வந்திங்க? ஆல்ரெடி என்னை டென்ஷன் பண்ணது பத்தலையா! ஒரு நாள் கூட தனியா விட மாட்றிங்க?” 

“சரிவிடுடா ஏதோ கொஞ்சம் விளையாடிட்டோம், உடனே பொட்டியை தூக்கிட்டு பொறந்த வீட்டுக்கு போற மருமக மாதிரி நீ பொண்டாட்டியை தூக்கிட்டு வந்துருக்க” என சாம்பவி மகனை முறைத்தபடி கேட்டார்.

“இப்போதைக்கு மஃபின் டிராவல் பண்ணக்கூடாது சோ இந்த வீட்டுக்கு வந்தேன்… இதேபோல நீங்க பண்ணா அவளை தூக்கிட்டு பாரின்க்கு போய்டுவேன்” என்று நேரடியாகவே மிரட்டினான் ருத்ரா.

என்ன ஒன்று அவன் மிரட்டலில் பயம் தான் வரவில்லை! ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில் அறையிலிருந்து வெளியே வந்த நிலா, ஹாலில் இருந்த கூட்டத்தைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தாலும், தன் அரைகிறுக்கு காதல் கணவன் முகத்தை கண்டு அடுத்த நொடியே சிரிப்பு தாங்கமுடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“நீங்க எல்லாரும் எனக்காக இங்க வந்திங்களா?” என்று சந்தோசமா கேட்டவளை பார்த்து அபிராமி தன் கைகளை விரித்தார்.

“ஆமாம் என் பேத்தியை பார்க்க வந்தோம் தங்கம்!” என்றதும் நிலா அவரை ஓடிச் சென்று அணைத்துக்கொண்டாள்.

“பாட்டி! அத்தை!” என அவளுடைய சிரிப்பும் உற்சாகமும் அந்த வீட்டையே நிறைத்தன.

ருத்ரா சுவரில் சாய்ந்தபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் சந்தோசமாக சிரித்தாலே அவன் கொண்ட ஜென்ம சாபல்யம் தீர்ந்துவிடும்! 

நிலா தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்ததும், அவன் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!