20.வேய்ந்தனனின் வல்லினம்

20.வல்லினம்

கொடிமலர் போல் சலனமற்று நிற்கும் தன் மனையாளின் மதிமுகத்தை அழுத்தமாக ஏறிட்டது ருத்ரஜித்தின் கண்கள். பெண்ணவளின் நெற்றியில் அவன் இட்ட குங்குமமும், கழுத்தில் அவன் அணிவித்த மங்களநாணும் அவனது உரிமையை பறைச்சாற்றிக் கொண்டிருக்க, அபூர்வாவை நோக்கி அழுத்தமான தன் காலடிகளை எடுத்து வைத்தான் ருத்ரஜித்.

“சொல்லுங்க மாமா. என்ன ஆட்டம் ஆரம்பிக்கப் போகுது?”  மீண்டும் நினைவு கூர்ந்தாள் பெண். 

அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவளைக் கடந்து சென்றவன், கதவினை அடைத்து தாழிட்டுத் திரும்ப, அவனையே புரியாதப் பார்வை பார்த்தாள் அபூர்வா.

“மாமா எதுக்கு இப்போ கதவை அ…டைக்குறீங்க.” வாய் குற்றால அருவியில் குதியாட்டம் போட்டது போல நடுங்கியது ருத்ரஜித்தின் அந்த நெருக்கத்தினால்.

“மா… மா” அதற்கு மேல் அவளது உதடுகள் ஓசையை எழுப்பவில்லை. அந்தளவு அபூர்வாவை நெருங்கியிருந்தான் ருத்ரஜித். அவனது உஷ்ணம் நிறைந்த மூச்சுக்காற்று இவளின் முகத்தின் மீதே பட்டுத் தெறிக்க, மங்கையவளின் மேனியோ, ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது.

தன் கருவிழிகளை உயர்த்தி அவனை புரியாதப் பார்வை பார்த்தவளது கால்கள் அன்னிச்சையாக பின்னோக்கி நகர, பெண்ணவளின் புடவை விலகிய இடையினை வளைத்துப் பிடித்திருந்தான் ருத்ரஜித். அவனது தீண்டலில் புதிதாக பிறந்த பூனைக்குட்டிப் போல் மருண்டு விழித்தாள் அபூர்வா.

அவளது அந்தப் பார்வை வெகுவாக அவனைக் கவர்ந்தது. ஆணவனின் வலிய கரம் பெண்ணவளின் கைகளை வருடிக் கொடுக்க, இடையை வளைத்த கரமோ அவளது மென்மையான இடையின் சருமத்தை வருடியது. பட்டுச் சேலையைத் தாண்டிய பெண்ணவளின் வியர்வை ஆணவனின் கைகளில் பட்டநொடி பெண்ணவளின் முதுகுத்தண்டு சில்லிட்டு நின்றது. 

இது என்ன வகையான உணர்வு என்று பகுத்துப் பார்க்கத் தெரியவில்லை அவளால். ஆனால் உடலில் ரோலார் கோஸ்ட் ரெய்டர் அதிவிரைவாக அடிவயிற்றிலிருந்து மேல் வயிற்றை நோக்கி செல்வதுப் போல் மட்டும் நன்கு உணர்ந்தாள். பின் அந்த உணர்வினைத் தாக்கு பிடிக்க இயலாது தவித்தவள், அவனது நெஞ்சத்தின் மீதே முகம் புதைத்துக் கொண்டாள். 

“மாமா என்ன பண்றீங்க?” சிணுங்களாக வந்தது அபூர்வாவின் வார்த்தைகள். 

தன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு சிணுங்கிக்கொண்டே கூறுபவளைக் கண்டு இதமாக புன்னகைத்தான் ருத்ரஜித். அவளை அப்படியே அணைத்துக் கொள்ளத் துடித்தது அவனது வலிய கரங்கள். இருந்தும் தன்னிடமிருந்து பெண்ணவளைப் பிரித்தவன், அவளது கன்னத்தில் தவழும் கற்றைக் கூந்தலை, அவளது காதோரமாக ஒதுக்கினான்.

“ரொம்ப அழகா இருக்க அபூர்வா. இவ்ளோ நாள் உன்ன சின்ன  பொண்ணுனு நினைச்சேன். ஆனால் தலையில இருக்க மல்லிகைப்பூ, கழுத்தில இருக்கத் தாலி எல்லாம் சேர்ந்து  பார்க்க ரொம்ப அழகா தெரியுற.” என்றவனின் வார்த்தைகள் அவளை மேலும் வெட்கம் கொள்ள செய்தது.

முற்றிலும் வேறோரு ருத்ரஜித்தைக் காண்கிறாள் அல்லவா! தாலிக் கட்டும் போது கூட உர்ரென்று இருந்தவன், தற்போது தன்னிடம் இவ்வாறு இணக்கமாக நடந்துக் கொள்வது அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அவனது அந்த நெருக்கம் பெண்ணவளைப் படுத்தியெடுத்தது. 

“மாமா விடுங்க. நான் போகணும்.” 

“எங்க போகணும்?”  என்றான் ஆளை அசரடிக்கும் பார்வை பார்த்தபடி.

“மாமா.. விடுங்க மாமா.” என்றாள் அவன் பார்வையை பார்க்க இயலாமல்.

“விடனும்னா உன்னை நான் பிடிச்சுருக்கனுமே பேபி.” கைகளைக் கட்டிக்கொண்டே அவன் கூறியதும் தான், அவன் தன்னை விட்டிருந்தது புரிந்தது. கண்களைச் சுருக்கி “சாரி” என்று உதடுகளைக் குவித்துக் கொண்டவள் கேட்க, 

“இல்லை மன்னிக்க முடியாது.” என்றவனோ அவளது கழுத்துக்கு கீழேக் கைக்கொண்டு வர, ஒரு நிமிடம் பதறிப் போனாள் அபூர்வா.

“மாமா…” என்று எதையோ பேச வந்தவளது உதட்டின் மீது தனது ஒற்றை ஆள்காட்டி விரலைக் கொண்டு பட்டும் படாமல் அழுத்தியவன், அவளையே இமை மூடாது பார்த்தான்.

அவன் பார்வை அவளது முகத்தின் மீது மட்டுமே நிலைத்திருக்க, அவனது நெருக்கத்தில் உருகியவள், அவனைப் பார்க்க இயலாது கண்களை மூடிக் கொண்டாள். 

அவளது கழுத்தை நோக்கி கைக்கொண்டு சென்றவன் பெண்ணவளின் விலகியிருந்த புடவையின் மாராப்பினை பட்டும் படாமலே கைவைத்தவன் சரி செய்ய, அவன் அமைதியைக் கண்டு கண் திறந்த அபூர்வாவோ, ருத்ரஜித் தன்னிடம் எதற்காக நெருங்கினான் என்பதை பார்த்தநொடி இன்ப அதிர்ச்சி அடைந்தாள்.

‘இதுக்கு தான் மாமா நம்மகிட்ட வந்தாரா? அய்யோ மானம் போச்சே. இப்படியேவா அவருகிட்ட பேசிட்டு இருந்தேன்.’  என்று நினைத்துக் கொண்டவளுக்கு வெட்கம் பிடிங்கித் திண்றது. 

ருத்ரஜித்தோ அவளது மாராப்பில் விலகியிருந்த புடவையை சரி செய்தது மட்டுமின்றி, அவளது திரண்ட வெண்ணையைப் போன்ற மிருதுவான இடையில் விலகியிருந்த புடவையும் சேர்த்தே சரி செய்தான். பின் நிமிர்ந்தவன் அவளைப் பார்க்க, அவளோ அவன் முகம் காணாமல் தலைக் கவிழ்ந்திருக்க, அவளின் செயல் கண்டு அடக்கப்பட்ட புன்சிரிப்பொன்றை உதிர்த்தான் ருத்ரஜித்.

மெல்ல அவளது தாடையை தன் கைகளைக் கொண்டவன் நிமிர்த்த, தன் கருவிழி இங்கும் அங்கும் அலைப்பாய அவனைப் பார்த்தாள் அபூர்வா.

“என்னாச்சு பேபி? எதாவது தப்பா பண்ணிட்டேனா?”

“இல்லை மாமா. நான் தான் உங்க முன்னாடி தப்பா நின்னுட்டேன் சாரி.” என்றாள் பாவமாக.

“ஏய் பேபி இதுல என்ன இருக்கு? உனக்கு தான் புடவை கட்டிப் பழக்கம் இல்லையே. ஆனால் ஒன்னு புடவைக் கட்டும் போது கவனம் முக்கியம்.” பொறுமையாக எடுத்துரைப்பவனை இமை மூடாதுப் பார்த்தவளோ தலையை ஆட்டினாள்.

“ம்ம்ம் சரிங்க மாமா. ஆனால் உங்க முன்னாடி அப்படி நின்னது சங்கடமா இருக்கு.” 

“ஹேய் எங்கிட்ட அப்படி இருந்தால் தப்பு இல்ல புரிஞ்சுதா?” என்றான் அழுத்தமாக.

முதலில் விழித்தவள், பின் தலையை மலங்க மலங்க ஆட்டினாள்.

“என்ன புரிஞ்சுது பேபி?”

“உங்க முன்னாடி அப்படி இருந்தால் தப்பு இல்லனு புரிஞ்சுது.” என்று தலையை ஆட்டிக்கொண்டே கூறியவளுக்கு அப்போதுக் கூட அவன் கூறிய வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை.

“ரொம்ப தெளிவா இருக்க பேபி. வெரி குட். சோ பிரில்லியண்ட்” என்று வஞ்சமில்லாது அவன் வஞ்சப்புகழ்ச்சி அணியைப் புரிந்தாலும், ருத்ரஜித்தின் உள் மனமோ ஆட்டம் கண்டது.

‘ சோதிக்குறளே என்னைய. இவளுக்கு ஒவ்வொன்னா புரிய வெச்சு நான் குடும்பம் நடத்துறதுக்குள்ள, எனக்கு வயசாகிடும் போலயே?’ என்று பெருமூச்சொன்றை விட்டான்.

“எஸ் மாமா நான் ரொம்ப புத்திசாலி. என்னை யாராலையும் அவ்ளோ சீக்கிரத்துல ஏமாத்தவே முடியாது.” 

“ரொம்ப பயங்கரமான பொண்ணு தான்.” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்.

“மாமா என்னோட அடுத்த மூவ் சீக்கிரமே அக்காவைக் கண்டுப்பிடிக்குறது தான்.” என்று இவள் உரைத்த நொடி ருத்ரஜித்தின் முகம் நொடியில் மாறியது. இவளை விட்டால் பேசிக்கொண்டே செல்வாள் என்று நினைத்தவன், அவளையே அழுத்தமாக பார்த்தான்.

“இப்போ தான் நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சே‌. சேர்ந்தே.” என்றவள் முடிக்கும் முன்னரே அவளது கன்னத்தில் அவன் முத்தமிட்டிருக்க, அதை சற்றும் எதிர்பாராதவள் அவனாக கொடுத்த முதல் முத்தத்தில் திளைக்கத் தொடங்கினாள். உயிர் வரை உண்டான சிலிர்ப்பு அது. 

கண்களை மூடி அவனது முத்தத்தில் மூழ்கிய அந்நேரம் அவர்களது அறைக்கதவுத் தட்டப்பட, பட்டென்று கண் விழித்தவளோ, அவனைப் பார்க்க இயலாது தவித்துப் போனாள். மெல்ல அவளை விட்டு விலகியவன்,

“யாருனு பாரு.” என்று கூறிவிட்டு நகர, ரோபோவைப் போல நடந்துச் சென்றவள், கதவைத் திறந்துக் கொண்டு குடுகுடுவென ஒரே ஓட்டமாக ஓடியிருந்தாள்.

“எதுக்கு இவ இப்படி ஓடுறா?  அடியே அபூ.” என்று புலம்பினார் சரஸ்வதி. பின் ருத்ரஜித்தைப் பார்த்து, “நல்ல நேரம் வந்திருச்சு மாப்பிள்ளை. அபூர்வாவை வீட்டுக்கு கூப்பிட்டு போகலாம். அப்புறம் தம்பி அவ சின்ன பொண்ணு, பல நேரம் சேட்டைப் பண்ணுவா. கொஞ்சம் பொறுத்துக்கோங்க.” என்று தாயாக அவர் எடுத்துரைக்க,

“கவலைப்படாதீங்க அத்தை. அவ இப்போ என் மனைவி அவளை நல்லபடியா பார்த்துக்குறது என் பொறுப்பு.” அவனது வாக்குறுதியில் நிறைவானது தாயின் உள்ளம்.

அதன்பின்னர் அவனும் அறையிலிருந்து கீழே இறங்கியிருக்க, அபூர்வாவின் லக்கேஜ்கள் அனைத்தும் காரில் ஏற்றபட்டிருந்தது. வைஜெயந்தி, இந்திரன் எப்போதோ சென்னை சென்றுவிட்டனர். மணமக்கள் வீட்டிற்குள் வரும்போது செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் இருப்பதால். அபூர்வா ஆசைக்காக கூடுதல் நேரமாக அவ்விடம் இருந்துவிட்டான் ருத்ரஜித். 

“கிளம்பலாமா அபூ?” என்றவன் கேட்க, அபூர்வாவின் முகம் நொடியில் மாறியது‌. ஆனால் இதுதானே நிதர்சனம். பெண்ணுக்கு பிறந்த வீட்டு சொந்தம் என்பது திருமணம் ஆகும் வரை மட்டுமே. 

கண்கள் கலங்கிப் போய் தன் தந்தையைப் பார்த்தாள் அபூர்வா. அழக்கூடாது என்று நினைத்தாலும், அந்நொடி அவளையும் மீறி கண்கள் கசிந்தது‌.

“பாப்பம்மா”  என்று சத்யராஜ் கண்ணீர் வடித்த நொடி, “டாடி” என்று ஓடிச்சென்று அணைத்திருந்தாள் பெண்.

“என் சுயநலத்துக்காக அப்பா உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சிட்டேன்லடா.”

“அய்யோ டாடி அப்படி எல்லாம் எதுவுமே இல்லை‌. நீங்க வேணா பாருங்க அக்கா வருவா.” என்று தந்தையின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள் கூற, அவரோ தன் இளைய மகளின் கண்ணீரினைத் துடைத்து விட்டார்.

“ஏங்க நல்ல நேரம் முடியறதுக்குள்ள அனுப்பனும்.” என்று சரஸ்வதி இடையே குறுக்கிட்ட நொடி.

“ம்மா இப்போ கூட என்னைத் துரத்தி விடுறதுலயே இருக்க?” அபூர்வா கூறியதும் தான் தாமதம் சரஸ்வதியின் விழிகள் கலங்கிவிட்டது.

“அடிங்கு… இந்த வாய்க்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை‌ போற இடத்துலயாவது அமைதியா இருடி.” 

“இருக்க முடியாது சரசு.” என்று பளிப்புக் காட்டியவளை, செல்லமாக அடிக்க கை ஓங்கிய சரஸ்வதியின் கைகள் அந்தரத்திலே இருக்க, தன் அன்னையின் அடியை எதிர்பார்த்தவளோ ஏமாற்றம் கொண்டாள்.

“ம்மா… ஏன் அடிக்கலை இப்போ நான் வேற வீட்டு பொண்ணா?” என்று விழிநீர் வழிய அவள் கேட்ட நோடி, தன் மகளை வாரி அணைத்திருந்தார் சரஸ்வதி.

” நீ என்னைக்கும் என் பொண்ணுடி. தூரமா தள்ளியிருப்ப. அதனால நீ என் பொண்ணுனு இல்லாம ஆகிடுமா? இனிதான் நீ என்னோட பொண்ணுனு எல்லாருக்கும் நிரூபிப்ப. ஏன்னா இந்த சமூகத்துல புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு சின்ன சின்ன விஷயங்கள் செய்தாலும், அவங்க அம்மா வளர்ப்பு அப்படின்னு தான் பேச்சு வரும். அந்த இடத்துல நீதான் அம்மா பேரை காப்பாத்தணும்.” என்றவர் ஆறுதலாக அபூர்வாவின் தலையை வருடி விட,

“என்னோட பெருமையே நீங்க ரெண்டு பேரும் தான். கண்டிப்பா உங்களுக்கு தலைகுனிவை நான் தரமாட்டேன். லவ் யூ மம்மி.” என்றவள் இருவரிடமிருந்து விடைப்பெற, அவளை அழைத்துக் கொண்டு காரில் சென்றான் ருத்ரஜித்.

நான்கு மணி நேர பயணத்தில், அபூர்வாவின் கண்ணீரைத் துடைத்தவன் ஆறுதல் படுத்த, அவனின் தோள்மீது சாய்ந்து உறங்கியபடி வந்தாள் அபூர்வா. இதோ வீட்டை அடைந்து விட்டனர். வீட்டை அடைந்ததும், தன் தோள் மீது குழந்தைப் போல சாய்ந்துக் கொண்டு வந்தவளை அவன் எழுப்ப, தன் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள் அபூர்வா.

“என்ன மாமா அதுக்குள்ள வந்துட்டோமா?”  கொட்டாவி விட்டபடிக் கேட்டாள் பெண்.

“ஹே பேபி நாலு மணி நேரத்துக்கு மேல ஆச்சு?” தன் கடிகாரத்தை அவளுக்குக் காட்ட, ஹீஹீ என்று புன்னகைத்து சமாளித்தாள் அவள்.

மகிழுந்தை விட்டு இருவரும் இறங்கியதுமே, வைஜெயந்தி ஆரத்தி தட்டுடன் வந்தவர் இருவருக்குமே ஆரத்தியினை சுற்றிய பின்னரே உள்ளே அனுப்பினார்.

“ருத்ரா முதல்ல அபூர்வாவை அக்கா கிட்ட கூப்பிட்டு போ. இரண்டு பேரும் ஜோடியா ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்க.” என்றதும் அபூர்வாவிற்கும் ஆர்வம் உண்டானது‌.

“சின்ன அத்தை‌. என் அத்தையவா பார்க்க போறோம்?” 

“ஆமா. உன் அத்தைய தான் பார்க்கப் போறீங்க‌. போடிமா போய் ஆசீர்வாதம் வாங்கிட்டு வா.” 

ருத்ரஜித்தோ சரி என்று தலையசைத்திருந்தாலும், அம்மா அவளை ஏற்றுக் கொள்வார்களா? என்று சிந்திக்கவும் செய்தான்.

“வாங்க மாமா போலாம்.” ஆர்வம் மிகுந்து ருத்ரஜித்தை அழைத்துக் கொண்டு சென்றாள் அபூர்வா. 

“பாருங்க அத்தையைப் பார்க்குறதுல எவ்வளவு ஆர்வம்னு. என்னதான் இருந்தாலும் அக்கா தானே ஒரிஜினல் அத்தை.” என்று வைஜெயந்தி தன் கணவரிடம் புலம்ப, அதைக் கேட்ட அபூர்வாவோ,

“அய்யோ சின்ன அத்தை எனக்கு என்னோட ரெண்டு அத்தையுமே பிடிக்கும். பெரிய மாமியாரை பார்த்தது இல்லை தானே? அதான் ரொம்ப ஆர்வமா இருக்கு.” என்று படபடவென பேசுபவளை மெச்சுதலாக பார்த்தார் வைஜெயந்தி.

“அம்மாடி ரொம்ப நல்லா சொன்னம்மா. ருத்ரா அம்மாவை பார்த்துட்டு வாங்க.” என்று இந்திரனும் கூற, அபூர்வாவை அழைத்துக் கொண்டு சென்றான் ருத்ரஜித்.

“ஏன் மாமா இந்த கதவு மூடியிருக்கீங்க? இதுக்குள்ள தான் அத்தை இருக்காங்களா?” விவரம் அறியா பேதையவள் கேட்க, ஆடவனோ அழுத்தமான பார்வை பார்த்தான்.

“ஆமா அபூ‌. நான் அப்புறம் எல்லாம் விளக்கமா சொல்றேன். அம்மாகிட்ட பார்த்து பேசு. போனதும் அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ.”

“நீங்க கவலைப் படாதீங்க மாமா. எல்லாம் நான் பார்த்துக்குறேன்.” என்றவள் கூற,

“அதுதான் பயமே” என்றான் முணுமுணுப்பாக.

“என்ன மாமா சொன்னீங்க?”

“ஒண்ணும் இல்லை பேபி. அமைதியா நில்லு.” என்றவனோ கதவைத் தட்ட, வத்சலா கதவினைத் திறந்தாள். 

முதலில் ருத்ரஜித்தைப் பார்த்து புன்னகைத்தவள், அவனருகில் நின்ற அபூர்வாவை கண்டுக் கொள்ளவேயில்லை.

ருத்ரஜித் நேராக அறைக்குள் செல்ல, அவன் பின்னே பின் தொடர்ந்தாள் அபூர்வா. அவளுக்கு வழியினை விடாது சாலா மறைத்து நிற்க, அபூர்வாவோ குழப்பத்துடன் பார்த்தாள் அவளை.

“நான் அவரோட மனைவி.” என்று அவளுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டு பெண்ணிவள் கூற, 

“அம்மா சொல்லாமல் உங்களை உள்ள அனுப்ப முடியாது?” என்றாள் சாலா தீர்மானமாக.

ருத்ரஜித்தோ திரும்பி பார்த்தவன், “சாலா நீ இங்கிருந்து கிளம்பு.” என்று அடிக்குரலில் மிரட்ட, தயங்கியபடி அங்கிருந்து வெளியேறினாள் வத்சலா. அதன்பின் அபூர்வாவை அழைத்துக் கொண்டு அவன் உள்ளே செல்ல, ஆதிமந்தரையோ தனது ஒற்றை வார்த்தையால் தடுத்து நிறுத்தினார்.

“அங்கயே நில்லுங்க‌ இரண்டு பேரும்.” என்றவர் திரைக்கு பின் வரவேண்டாம் என்பதை இவ்வாறு கூறியிருக்க, 

“அம்மா…” என்றான் வருத்தமாக.

“உங்க இரண்டு பேருக்கும் என் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும். உன் பொண்டாட்டியைக் கூப்பிட்டு போய் தீபம் ஏற்ற வை.” என்று தன் ஆளுமை நிறைந்த குரலில் அவர் கூறிவிட, அபூர்வாவின் கண்கள் நொடியில் கலங்கியது. மிக ஆர்வமாக வந்தவளுக்கு, அவரது ஒதுக்கம் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது.

ருத்ரஜித்தும் அன்னை சொல்லுக்கு மறுப்பேதும் கூறாமல் பெண்ணவளை அழைத்து சென்றான்.

“அபூ அம்மா சொன்னா அதுல ஆயிரம் விசயங்கள் இருக்கும். நீ எதுவும் பெருசா எடுத்துக்காத. அம்மா ஆசீர்வாதம் எப்போதும் நமக்கு இருக்கும்.” என்றவன் சமாதானம் செய்தபடி அவளை பூஜை அறைக்குள் அழைத்துச் செல்ல, வைஜெயந்தியோ தயார் நிலையில் இருந்தார்.

“மகாலட்சுமியே வீட்டுக்கு வந்த மாதிரி சந்தோசமா இருக்குமா. வீடு நல்லாயிருக்கணும். உன் புருசனோட சந்தோசமான வாழ்க்கையை வாழனும்னு வேண்டிகிட்டு தீபத்தை ஏத்துமா” என்று கூறியபடி தீப்பெட்டியை பெண்ணவளின் கைகளில் கொடுக்க, அவள் தீக்குச்சியை உரசி விளக்கினை பத்த வைத்த அந்நேரம், விஷ்வஜித்துடன் காரில் வந்து இறங்கினாள் பிரகல்யா.

பூஜையறையிலிருந்த குங்குமத்தை எடுத்த அபூர்வாவோ தன் திரு மாங்கல்யத்தின் மீது வைஜெயந்தி சொன்னதுப் போல் வேண்டிக்கொண்டே வைக்க, பிரகல்யாவின் கழுத்தில் மாங்கல்யம் தொங்க, விஷ்வஜித்தின் அருகே வந்து நின்றாள்.

இங்கு அனைவரும் கடவுளை வணங்கி விட்டு முகப்பு அறைக்கு வர, அந்த பிரம்மாண்ட வாசலில், பிரகல்யாவின் கைத்தலத்தை பற்றியபடி நின்றிருந்தான் விஷ்வா.

முதலில் இருவரையும்  பார்த்த  வைஜெயந்தியோ அதிர்ச்சியில் சிலைபோல் நிற்க, அதைக்கண்டு அனைவரும் வெளியே பார்க்க,  ருத்ரஜித் உள்பட அனைவரும் அதிர்ந்து தான் போயினர். விஷ்வஜித்தின் பார்வை மட்டும் ருத்ரஜித்தை விட்டு நகரவேயில்லை.

பழி கொள்ள துடிப்பவனின்

முன்னே வாழ்ந்துக் காட்டுவதும் 

கூட வீரம் தானே….. 

இங்கு அவள் வாழ வந்தாளா?

இல்லை தங்கையின் வாழ்வினை 

மீட்க வந்தாளா…?

சாக துடித்தவளை மீட்டவனோ

கைபிடித்திருக்க…. 

அவனுக்கும் அவளுக்கும் 

இடையே இருப்பது

காதலா? உதவியா?

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!