தாரகையின் மாயோன்

மாயோன்-27

“மாமா ,அத்தை நான் உங்க பொண்ணு இனியாவை விரும்பறேன் .உங்கள் சம்மதத்தோட அவளை திருமணம் செஞ்சுக்க ஆசைப்படறேன்” என்று கார்த்திக் கூற அதில் சிவக்குமார் அளவில்லா மகிழ்ச்சியும் ,லட்சுமி அதிர்ச்சியும் அடைந்தனர் .

சிவக்குமாருக்கு கார்த்திக்கை முதன்முதலில் சந்தித்து பேசியதுமே ‘இவர் தனது மகளுக்கு கணவனாக வந்தால் நன்றாக இருக்குமே ‘என்ற எண்ணம் தோன்ற இதை தன் மனைவியிடம்  பகிர்ந்து கொண்டார்.

பார்வதி ,”என்னங்க நீங்க இரண்டு பேரும் எலியும், பூனையும் போல அடிச்சுக்கிட்டே இருக்காங்க . அப்படி இருக்கும்போது எங்கிருந்து ஒத்துமையா வாழ்வாங்க. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்க முடியாதுங்க .இது நம்ப பொண்ணு வாழ்க்கை ஆச்சே..”

“புரியுது மா லட்சுமி இருந்தாலும் என்னுடைய ஆசையை நான் சொன்னேன். இனியாவுக்கும் ,கார்த்திக்கும் விருப்பம் இருந்தால் மட்டும் தான் இந்தத் திருமணம் நடக்கும்” என்றார் சிவக்குமார்.

“என்னமோ சொல்றீங்க பார்க்கலாம் .ஆனால் இதுங்க இரண்டும் கண்டிப்பா திருமணத்திற்கு சம்மதம் சொல்லாதுங்க “என்ற லட்சுமி இப்பொழுது கார்த்திக் கூறியதை கேட்டவர் அதிர்ச்சியுடன் தன் கணவனை பார்க்க அவரோ தன் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இனியா கார்த்திக் தன் பெற்றோரிடம் இவ்வளவு சீக்கிரமாக தங்களின் காதலைப் பற்றி கூறியதை நினைத்தவள் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அதிர்ச்சியில் நின்றாள்.

கார்த்திக் லட்சுமி , சிவகுமாரின் பார்வை பரிமாற்றத்தை பார்த்தவன் “மாமா உங்களுக்கு சம்மதமா”என்று கேட்டான்.

“கண்டிப்பா மாப்பிள்ளை நீங்க எங்க வீட்டுக்கு மருமகனா வந்தா எனக்கு அதை விடவும் சந்தோஷம் வேறு எதுவும் இல்ல”

“சந்தோஷம் மாமா அத்தை உங்களுக்கு விருப்பம் இல்லையா ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க?”

“கார்த்திக் தம்பி அது இல்லப்பா என்னால இத நம்ப முடியல”

“ஏன் அத்தை நம்ப முடியல

ஒரு நிமிஷம் இருங்க ‘என்றவன் மறுபடி இனியாவை பார்க்க அவளோ அதே நிலையில் இருக்க எழுந்து சென்று அவளை தாடையில் தட்ட அதில் தன்னிலை அடைந்த இனியா கார்த்திகை முறைத்தவள் தனது பெற்றோரை பார்க்க சிவக்குமார்,” என்ன இனியா என்னடா ஆச்சு?”

“அது வந்து அப்பா நீங்க எங்க இரண்டு பேரையும் தப்பா நினைக்கலையே.? எனக்கு எனக்கு கார்த்திக் வேணும்பா உங்களுக்கு அப்புறம் கார்த்திக் மட்டும்தான் என்னை பாதுகாப்பா ,என் மீது அன்பா இருப்பார்னு தோணுது பா .ப்ளீஸ்பா மாட்டேன் சொல்லிடாதீங்க .அம்மா ப்ளீஸ்மா . கார்த்திக் எனக்கு நல்ல தோழனா,அப்பாவா ,அம்மாவா அனைத்து உறவுமா இருப்பார்மா “என்று கலங்கிய வளை லட்சுமி அணைத்துக்கொண்டார் 

சிவக்குமார் ,” நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே எங்களுக்கு இதில் முழு சம்மதம் இனியா .உனக்கு நம்ம கார்த்திக்கை விடவும் நல்ல மாப்பிள்ளை கண்டிப்பா கிடைக்க மாட்டார்மா”

“அப்பா என்னப்பா சொல்றீங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா’

“இனியா அப்பா ஏற்கனவே கார்த்திக் தம்பிக்கு உன்னை திருமணம் செய்து கொடுக்க விரும்பினார்டா.  நான் தான் இதெல்லாம் நடக்காது சொன்னேன் “என்ற லட்சுமி நடந்ததை கூறினார்.

“மாமா எல்லாருக்கும் நாங்க இரண்டு பேரும் விரும்பியது அதிர்ச்சியா இருந்துச்சு, ஆனால் பாருங்க நீங்க அதை முன்கூட்டியே யோசித்து இருக்கீங்க .கவலைப்படாதீங்க மாமா என்னுடைய அம்மு இனி என்னுடைய சொத்து அவளை கண் கலங்காம பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என்றவனை இனியா ஆனந்தக் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அழாத டி அம்மு .இனி நீ தேவையில்லாமல எதுக்கும் அழ வேண்டிய அவசியம் இல்ல” என்றவன் அவள் கண்களை துடைத்தான்.

இதைப் பார்த்த இனியாவின் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

“அத்தை நீங்க இன்னமும் உங்க சம்மதத்தை சொல்லல”

லட்சுமி, ” கார்த்திக் தம்பி எனக்கு முழு சம்மதம் தான்பா .ஆனால் ஆனால் இனியா விஷயம் எல்லாமே உங்களுக்கு தெரியுமா. அபிஷேக் சொல்லி இருப்பான் நினைக்கின்றேன்”என்றதும்… 

இதில் இனியாவின் முகம் மாற அவளின் முக மாற்றத்தை பார்த்த கார்த்திக் ,”அத்தை “என்று சத்தமிட ..

சிவக்குமார் ,”என்ன லட்சுமி உனக்கு அறிவு இருக்கா இல்லையா ஏன் இப்படி பேசுற?அவளுக்கு இருக்கிறது பிரச்சனையே கிடையாது .அதை நீ முதல்ல மனசில் வை” என்றார்.

“என்னங்க நான் உண்மையத்தான் சொல்றேன். கார்த்தி தம்பிக்கு திருமணத்திற்கு அப்புறம்  விஷயம் தெரிஞ்சா.. தப்பா நினைப்பாரா இல்லையா .அதுக்காகத்தான் சொல்றேன்”

“அத்தை ப்ளீஸ் இனி இதைப்பத்தி பேசாதீங்க. இனியா இனி என்னுடைய பொறுப்பு அவளை நான் அந்த நிகழ்வில் இருந்து மீட்டுட்டு வருவேன் .அவளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை  அத்தை”

“கார்த்திக் ப்ளீஸ் அம்மா உண்மையை தான் சொன்னாங்க. அதுக்காக ஏன் நீங்களும் ,அப்பாவும் இப்படி பதட்டப்படறீங்க என்றவள் அம்மா பசிக்குது வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு காபி கொடுக்க சொல்லி எவ்ளோ நேரம் ஆகுது .இதுதான் நீ என்னுடைய புருஷனை நீங்க கவனிக்கும் லட்சணமா “என்றவள் சூழ்நிலையை இயல்பாக்கி னாள்.

“அச்சோ என்னங்க இவள் இப்படி பேசறா.நாம இருக்கோம் சொல்லி கொஞ்சமாச்சும் பயம் இருக்கா  பாருங்க?”

“லட்சுமி  உண்மையை சொல்றதுக்கு எதுக்கு பயம் சொல்லு பாக்கலாம்”என்று இனியா கூற…

“அடி கழுதை பேர் சொல்லியா கூப்பிடற”

“அதானே உண்மையை சொல்றதுக்கு எதுக்கு பயப்படனும் லட்சுமி .என் பொண்ணு சரியா தான் சொல்றா “என்று சிவகுமாரும்  கூற கார்த்திக் தன்னவளை ரசித்துக்கொண்டிருந்தவன்

“ஏய் வாயாடி என்னடி பேசுற நீ..அச்சோ அத்தை இத்தனை நாள் இவளை வச்சிட்டு எப்படி தான் சமாளிச்சீங்களோ?”

“யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் சொல்வாங்க இல்லையா மாப்பிள்ளை .இனி நான் பட்டதையெல்லாம் நீங்களும் பட போறீங்க எனக்கு இவ கிட்ட இருந்து விடுதலை “என்று லட்சுமி மறைமுகமாக தனது சம்மதத்தை உணர்த்தினார்.

இனியா தன் அம்மாவை கட்டிக் கொண்டவள் ,”லட்சுமி அப்போ நான் உனக்கு இத்தனை நாள் பாரமா இருந்தேனா ? அம்மா என்ன சொல்றாங்கன்னு பாருங்க அப்பா”

“இனியா வாய மூடுடி என்னடி பேச்சு பேசுற. நீ எங்களுக்கு ஒரே பொண்ணு இப்படி எல்லாம் பேசாதடி”

“விடு லட்சுமி பிள்ளை விளையாட்டுக்கு தானே சொல்றா.சரி போ மாப்பிள்ளைக்கு காபி கொண்டு வா”என்றார் சிவக்குமார்.

“வேண்டாம் அத்தை நான் இன்னொருநாள் வரேன் “என்றவன் கிளம்பினான்.

இனியா தன் வானரப்படைக்கு  அழைத்து ,’ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் “என்று சொல்லவும் அனைவரும் ,’அப்படி என்ன முக்கியமான விஷயம் தெரியலையே ?’என்று ஆவலோடு காத்திருக்க இனியா சுற்றுலா செல்ல தயாரானவள் தன் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

அபிஷேக், “ஏய் ரௌடி பேபி  ஏண்டி இப்படி எங்களை மண்ட காய விடற என்ன விஷயம் சொல்லு”

“டேய் இப்போ தானடா வந்தேன் அதுக்குள்ள எதுக்கு திட்ற.போடா போய் எனக்கு குடிக்க ஏதாவது கூலா வாங்கிட்டு வா பாக்கலாம்”

“என்னடி அதிகாரம் தூள் பறக்குது” 

“ஆமாண்டா இனி அப்படித்தான் .நீ உன்னுடைய இன்னொரு அம்மாவை அவமதிக்கிறடா”

“இன்னொரு அம்மாவா அதாருடி”

“அடேய் உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு .உனக்கு இன்னொரு அம்மா  யாரு உனக்கு வரப்போற அண்ணி தானே?”

“ஆமாண்டி அதுக்கு நீ ஏன் இப்படி குதிக்கிற.. எங்க அண்ணி வரும்போது நான் அவங்ககிட்ட பேசிக்கறேன்”

“அடேய் எருமை கொலை பண்ணிடுவேன் .என்ன விளையாடறியா”

“லூசு என்னடி உளர்ற உண்மையைதான் சொல்றேன்.  எங்க அண்ணி எப்போ வீட்டுக்கு வருவாங்கன்னு ரொம்ப ஆவலா பாத்துட்டு இருக்கேன்.நான் அவங்க கூட செல்ல சண்டை போடுவேன். அவங்க கையால சாப்பிடுவேன்.இன்னும் என்னென்ன எல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன் தெரியுமா. நீ வீட்டுக்கு வந்தாலும் உனக்கும் சமைச்சுப் போட சொல்றேன் டி ஓகே வா”

“அபி ப்ளீஸ் இனி இப்படி பேசாதடா “என்று இனியா கலங்க ஸ்ருதி ,அபியை திட்டியவள்,” ஏய் லூசு அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்றான் .நீ ஏண்டி இதுக்கு  இப்படி எமோஷனல் ஆகற”

“இல்ல ஸ்ருதி இவன் விளையாட்டுக்குத்தான் சொல்றான் தெரிந்தாலும் என்னால தாங்க முடியல டி . அவர் இல்லனா நான் செத்துடுவேன்டி  “என்று ‌அழுதவளை அபிஷேக்  ஓடிவந்து அணைத்துக் கொள்ள அவளோ அவளைப் பிடித்து தள்ளினாள்.அவளை சமாதானம் செய்யும் பொருட்டு தன் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டே,” சாரி இனியா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி .இனி அப்படி ஒரு வார்த்தையை சொல்லாத .என்னால தாங்க முடியாது .ப்ளீஸ் அழாத”எனவும் இனியா அவனின் செயலில் தன்னையும் மீறி சிரிக்க  அப்பா சிரிச்சுட்டாடா என்றவன்இனியா இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் எனக்கு அண்ணியா வரமுடியும்.. சரி சொல்லு என்ன அப்படி முக்கியமான விஷயம்”என்று கேட்டான்.

” உங்க அண்ணா அப்பா, அம்மாகிட்ட நேரடியா வந்து நாங்க இரண்டு பேரும் விரும்பறோம் 

திருமணம் செய்துக்க ஆசைப்படறோம் னு சொல்லிட்டாரு டா” என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூறினாள்.

இனியா கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் கலந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ய பாலாஜி,” ஏன் டா அபி  உங்க அண்ணன் தைரியத்திற்கு ஒரு அளவு இல்லையா? என்னடா இப்படி பண்ணிட்டாரு”

“அவன் அப்படிதான்டா முடிவு எடுக்க மாட்டான் எடுத்துட்டா ,அந்த முடிவில் தெளிவா இருப்பான் என்ற அபிஷேக் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இனியா. நீ எப்ப நம்ம வீட்டுக்கு வருவன்னு நான் ரொம்ப ஆவலோட காத்துட்டு இருக்கேன் ”

“டேய் நீ கொஞ்சம் சும்மா இருடா என்ற ஸ்ருதி இனியா அண்ணா இவ்ளோ வேகமா எல்லாத்தையும் முடிக்கிறாரே..ஒருவேளை  நாம ஊருக்கு போய்ட்டு வந்தவுடன் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்திடுவங்களோ? ”

இனியா,”போடி இவளே நான் மேற்கொண்டு படிக்கணும் .திருமணம் பத்தியெல்லாம் யோசிக்க முடியாது”

ஸ்ருதி ,”ஏய் என்னடி சொல்ற .நீ உங்க அண்ணா சொல்ற மாதிரியே சொல்றியே? அவரும் அப்படித்தான் நான் மேற்கொண்டு படிச்சா தான்  திருமணம் சொல்றாரு .என் அவஸ்தை அவருக்கு புரிய மாட்டேங்குதே” என்றவள் வானரப்படைகள் யாரையோ பார்த்து சிரிப்பதை பார்த்தவள் இவளும் அங்கு இருப்பவர்களை பார்த்து அதிர்ச்சியில் வாய்ப்பிளந்தாள்.

 

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!