ராஜேந்திரன், பார்வதி, சிவயாழினி, அர்ஜுன் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி விட்டு டைனிங் டேபிள் இருக்கையில் அமர்ந்தனர்..
ஏற்கனவே சமைத்த உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்திருந்தார் பார்வதி..
பின்னர் மசாலா தோசை சுட கிட்சன் செல்ல போனவரை தடுத்து நிறுத்திய யாழினி, “அம்மா.. நீங்க சாப்பிடாம எங்க போறீங்க.. வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க அம்மா.. கோவிலுக்கு போகணும்..” என்றாள்..
பார்வதி, “பாப்பா.. உனக்கு பிடிச்ச மசாலா தோசை சுட போறேன் டா..” என்று பாசமாக கூறினார்.
யாழினி, “என்னம்மா.. ஏற்கனவே நிறைய சமைச்சு வச்சிருக்கீங்க.. இதையே எப்படி சாப்பிடுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.. இதுல மசாலா தோசை வேறையா.. வேணாம் மா.. வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க.. மசாலா தோசை நைட் சுட்டு கொடுங்க.. நல்ல சாப்பிடுறேன்.. நான் எங்கே போயிட போறேன்.. இன்னும் அஞ்சு வருஷம் உங்களை தொல்லை பண்ணிட்டு இங்க தான் இருக்க போறேன்.. அது வரை உங்களை விட்டு எங்கையும் போக மாட்டேன் பாரு.. இன்னைக்கே என்னை வீட்டை விட்டு அனுப்ப முடிவு பண்ணி தான் எனக்கு பிடிச்ச எல்லாத்தையும் சமைச்சு கொடுக்கிறீங்களா…” என்று விளையாட்டாக கேட்டாள்..
மகளின் பேச்சை கேட்ட பார்வதி, “ஏய் பாப்பா.. என்ன பேசுற.. உனக்கு பிடிச்சதை எல்லாம் சமைச்சு கொடுக்கணும்னு நினைச்சது தப்பா.. நீயே போன தான் காலேஜ் ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு வந்த.. ஹாஸ்டல்ல நல்ல சாப்பாடு கிடைச்சிருக்குமான்னு தெரியல.. அதனால தான் உனக்கு பிடிச்ச எல்லாத்தையும் காலை உணவா சமைச்சேன்.. இனி கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் நான் வெஜ் சமைச்சு தரலாம்னு நினைச்சேன்… ஆனா நீ இவ்வளவு பேசுனதுக்கு அப்புறம் மத்தியானம் நான் வெஜ் சமைக்கிறதா இருந்த நான் என் முடிவை மாத்திட்டேன்.. காலையில வச்ச சாம்பாரை சூடு பண்ணி மத்தியான சாப்பாடுக்கு கொடுக்கிறேன்.. சாதம், சாம்பார் மட்டும் சாப்பிட்டுக்கோ..” என்று பொய் கோபத்தோடு யாழினியை வம்பிழுத்தார்..
யாழினி, “அப்படி மட்டும் பண்ணிடாதீங்க அம்மா.. இனிமே உங்களை வம்பிழுக்க மாட்டேன்..” என்று கூறி விட்டு உணவை வெளுத்து கட்ட ஆரம்பித்தாள்..
பார்வதி மகளின் பேச்சை கேட்டு முகத்தில் புன்னகை தோன்றியது.. சிரித்த படியே மகளின் அருகில் அமர்ந்து உணவை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தார்..
அர்ஜுன் அவளை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான்.. அவனது தலையில் நங்கென்று கொட்டி விட்டு உணவில் கவனத்தை செலுத்தினாள்.. அவனும் தலையை தேய்த்து கொண்டு அவளை முறைத்து பார்த்து கொண்டே உணவில் கவனத்தை செலுத்தி உண்ண ஆரம்பித்தான்..
மனதிற்குள், “இருடி.. இதுக்கும் சேர்த்து நாளைக்கு உனக்கு கொடுக்கிறேன்.. பிறந்தநாள்னால தப்பிச்ச…” என்று மனதிற்குள் நினைத்து கொண்டான்..
யாழினி தம்பியின் எண்ண ஓட்டத்தை அறிந்தது போல், “நாளைக்கும் நீ தான் என்கிட்ட இருந்து வாங்கி கட்டிப்ப.. மூடிட்டு சாப்பிடு டா தடிமாடு..” என்று தம்பியை கலாய்த்து சிரித்தாள்..
சிவயாழினி, அர்ஜுன் இருவரும் ஒருவருக்கொருவர் பாசம் அதிகமாக வைத்திருக்கின்றனர்.. ஆனால் பாசத்தை வெளிகாட்டுவது குறைவு.. எப்போதும் எலியும், பூனையும் போல் சண்டை போடுவதே அதிகம்.. ஏதாவது திருட்டுத்தனம் செய்தாலும் இருவரும் சேர்ந்தே செய்வர்… மாட்டி கொண்டால் இருவரும் சண்டை போடுவது பாவ்லா செய்து தப்பிப்பார்கள்.. அதை பற்றி அறிந்தே வைத்திருந்தனர் ராஜேந்திரன், பார்வதி தம்பதியினர்..
பார்வதி, அர்ஜுன், சிவயாழினி மூவரும் கலகலப்பாக சிரித்து கொண்டிருந்தனர்.. ஆனால் ராஜேந்திரன் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார்… உணவை சாப்பிட்டு கொண்டிருந்தாலும் அவரது நினைப்பு முழுவதும் கோவிலுக்கு சென்ற பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பதிலேயே இருந்தது.. தனது மனைவி, மகனை திசை திருப்பி எப்படி மகளை மட்டும் தனியாக கோவிலை சுற்ற அனுப்ப வேண்டும் என்று ஒரு திட்டத்தை வகுத்து கொண்டார்.. ராஜேந்திரனை மூவரும் கவனிக்கவில்லை.. அவரை பார்வதி கவனித்திருந்தாலும் கணவனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்தே ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டிருப்பார்.. ஆனால் பார்வதி தான் கணவன் ராஜேந்திரனின் கவனிக்க தவறி விட்டாரே..
அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு கோவிலுக்கு புறப்பட பார்வதி, அர்ஜுன், சிவயாழினி மூவரும் காரில் ஏறி அமர்ந்தனர்…
ராஜேந்திரன், “எனக்கு முக்கியமான ஒரு கால் பேசணும்.. பேசிட்டு வந்திடுறேன் ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க..” என்று காரின் அருகில் இருந்து நகர்ந்து சென்று யாருக்கோ அழைத்து பேச ஆரம்பித்தார்..
“நாங்க எல்லாரும் அரை மணி நேரத்தில கோவிலுக்கு வந்திடுவேன்.. என் பொண்ணை தனியா கோவிலை சுற்ற அனுப்புறேன்.. அவளை கடத்திட்டு போய் தாலி கட்டி அவ கூட ஒண்ணா இருந்திடு.. அவ உன் கூட ஓடி வந்திட்டா.. நீங்க இரண்டு பேரும் ஒண்ணா வாழ ஆரம்பிச்சிட்டீங்கன்னு சொல்லி என் பொண்டாட்டியை நம்ப வச்சு ஏமாற்றி பொண்ணை பார்க்க வர விடாம பண்றேன்..” என்று பேசினார்..
“நம்ம பேசுன மாதிரி எனக்கு பணத்தை மட்டும் கொடுத்திடு.. என் பொண்ணு எப்படியும் உன் கூட இருக்க மாட்டேன்னு அடம்பிடிப்பா அப்போ எங்களை கொன்னுடுவேன்னு மிரட்டு அதை கேட்டு பயந்து எங்களுக்கு ஒன்னும் ஆககூடாதுன்னு உன் கூடவே இருப்பா.. எக்காரணம் கொண்டும் அவளுக்கு நான் தான் அவளை என் தொழிலை நஷ்டத்தில இருந்து காப்பாற்ற உன் கிட்ட விற்றேன்னு தெரியவே கூடாது.. நான் எப்பவும் போல அவளுக்கு ரொம்ப பிடிச்ச அப்பாவாவே இருக்கேன்..” என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்தார்..
பின்னர் எதுவும் தெரியாதது போல் மெதுவாக காரின் அருகில் வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்து திரும்பி மகளை பார்த்து மென் புன்னகை புரிந்து விட்டு கோவிலை நோக்கி காரை ஓட்டினார்..
சிவயாழினியும் தந்தை செய்த சதி பற்றி எதுவும் தெரியாமல் சந்தோசமாக வெளியே வேடிக்கை பார்த்த படியே பயணத்தை தொடர்ந்தாள்..
யாழினியின் அருகில் அமர்ந்திருந்த அவளது அன்னை பார்வதி ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தார்..
பார்வதி, “எனக்கு ஏதோ தப்பா நடக்க போறது மாதிரியே தோணுது.. பாப்பாக்கு ஏதோ ஆபத்து வர்ற மாதிரி உள் உணர்வு எச்சரிக்குது.. என் பொண்ணுக்கு வர போற ஆபத்தில இருந்து கடவுள் தான் அவளை காப்பாத்தனும்..” என்று மனதிற்குள் கூறி கொண்டு பதற்றத்தோடு அமர்ந்திருந்தார்.. ஆனாலும் கோவிலுக்கு செல்வதால் எந்த ஆபத்தும் மகளை நெருங்காது என்ற நம்பிக்கையில் அதை அப்படியே விட்டு விட்டார்..
கார் வீட்டை விட்டு புறப்பட்டதும் கண்காணித்து கொண்டிருந்தவர்களில் ஒருவன் குறுங்செய்தியை அனுப்பி விட்டு அவர்களை பின் தொடர ஆரம்பித்தனர்..
தனது போனில் வந்த குறுங்செய்தியை பார்த்து குரூரமாக புன்னகைத்த ருத்ரவேந்தன்.. தனது ஆட்களை அழைத்து சில விஷயங்களை கூறி அதை நிறைவேற்ற கட்டளை இட்டு அழைப்பை துண்டித்தான்…
அவன் கூறியதை கேட்ட அவனது ஆட்களும் அடுத்த பதினைந்து நிமிடங்களில் கோவிலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்… அங்கிருந்த ஆட்களை அனுப்பி விட்டு தங்களது ஆட்களை கோவில் முழுவதும் கோவிலுக்கு சிறப்பு பூஜைக்கு வந்த பொது மக்களை போல் தங்களது குடும்பத்துடன் கோவிலை சுற்றி கொண்டிருந்தனர்…
அதை பார்த்த கார்த்திக்கின் ஆட்களில் ஒருவன் கார்த்திக்கிற்கு அழைத்தான்..
மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், “பாஸ்.. உங்க திட்டப்படியே எல்லாம் சரியா நடக்குது.. நம்ம ஆட்கள் தான் கோவில்ல இருக்காங்க.. மற்ற ஆட்களை எல்லாம் நம்மளோட அடியாட்கள் சொல்றதை கேட்டு போயிட்டாங்க..” என்று கூறி விட்டு தனது முதலாளி பேசுவதற்காக காத்து கொண்டிருந்தான்..
கார்த்திக், “சரி.. நான் சொன்ன மாதிரியே எல்லாம் சொதப்பாம சரியா பண்ணிடுங்க.. எந்த தப்பும் நடக்க கூடாது.. அவ இன்னைக்கே எனக்கு சொந்தமாகணும்.. அவளை கடத்தி என்னோட கெஸ்ட் ஹவுஸ்சுக்கு கொண்டு வாங்க.. அவளை மொத்தமா எனக்கு சொந்தமாக்கிட்டு தாலி கட்டணுமான்னு யோசிக்கிறேன்..” வில்லத்தனமாக சிரித்த படியே கூறி கொண்டு அழைப்பை துண்டித்தான்..
கார்த்திக் தனது கையில் இருந்த சிவயாழினியின் புகைப்படத்தை பார்த்து, “உன்னை கொஞ்சம் நாள் முன்னாடி தான் மால்ல வச்சு பார்த்தேன்.. உன் அழகு என்னை மயக்கிடிச்சு.. உன்னை அப்பவே தூக்கிட்டு போய் உன்னையே எனக்கு சொந்தமாக்கணும்னு நினைச்சேன்.. வெறும் ஒரு நாளுக்காக.. உன்னை கடத்தலாம்னு வர்றதுக்கு முன்னாடியே தப்பிச்சிட்ட.. அதுக்கப்புறம் தான் உன்னை பத்தி விசாரிச்சேன்.. உன் அப்பனோட தொழில் நஷ்டமாகிடுச்சுனு தெரிஞ்சது அதை வச்சே அவனுக்கு உதவி பண்றது மாதிரி பேசினேன்.. அவனும் நம்பிட்டான்.. உனக்கு நல்ல பையனை பார்த்து நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்கணும்னு நினைச்சவனை ஏமாத்தி அவன் கிட்ட என்னை விட நல்ல பையன் இல்லாத மாதிரி நடிச்சு அவனே உன்னை கல்யாணம் பண்ண முடியுமான்னு கேட்க வச்சேன்.. அதே மாதிரி அவனும் பண்ணான்.. என் பிளான் படியே உன்னை எனக்கு இன்னைக்கு கொடுக்க போறான்…” என்று கூறி வில்லத்தனத்துடன் சத்தமாக சிரித்து கொண்டிருந்தான்..
கார்த்திக் வில்லத்தனமாக சிரித்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவனது அடியாட்களும் அவனது பாதுகாவலர்களும் முகமூடி அணிந்து கொண்டு வந்த நபர்களால் கடத்தப்பட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பாழடைந்த குடோனில் கட்டி வைக்கப்பட்டனர்… அனைவரையும் கடத்துவதற்கு முன்பே அடித்து மயக்கமடைய வைத்திருந்தனர் ருத்ரனின் ஆட்கள்..
கார்த்திக்கின் ஆட்களை கடத்தி விட்டு அங்கே அவனது ஆட்களை போல் நின்றனர் ருத்ரனின் ஆட்கள்.. இதை பற்றி எதுவும் அறியாத கார்த்திக் தனது திட்டம் நிறைவேறும் இன்றே சிவயாழினி தனக்கு சொந்தமாக போகிறாள் என்று நினைத்து கொண்டிருக்கிறான் முட்டாள்..
கோவிலில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதனை ஆராய்ந்த படியே சுற்றி கொண்டிருந்தான் ஒரு ஆடவன்.. அனைத்தும் சரியாக இருப்பதை உறுதிபடுத்தி கொண்ட பின்னர் தனது போனை எடுத்து ருத்ரவேந்தனுக்கு அழைத்தான் ருத்ரனின் நண்பனும், பர்சனல் அசிஸ்டன்ட்டுமான சித்விக்..
ருத்ரன் அழைப்பை ஏற்றதும், “இங்க எல்லாம் சரியா இருக்கு… நம்ம ஏற்பாடு பண்ண ஆட்கள் மட்டும் தான் கோவிலை சுற்றி இருக்காங்க… கார்த்திக்கோட ஆட்களை ஏற்கனவே கடத்தி குடோன்ல கட்டி வச்சாச்சு..” என்று கூறி விட்டு ருத்ரனின் பதிலுக்காக காத்திருந்தான்..
ருத்ரன், “சரி.. நீ எல்லாத்தையும் சரியா கண்காணிச்சிட்டே இரு… நான் சீக்கிரம் கோவிலுக்கு வந்திடுறேன்.. சிவயாழினி கோவிலுக்கு வந்ததும் அவளை ஃபாலோவ் பண்ணு.. அவளோட அப்பன் நம்ம ஆளுங்க கண்காணிப்பிலேயே இருக்கட்டும்…” என்று சில விஷயங்களை கூறி கட்டளையிட்டு விட்டு அழைப்பை துண்டிக்க முயன்றான்…
அப்போது சித்விக், “நம்ம அந்த பொண்ணை காப்பாத்தி பாதுகாப்பா ஏதாவது இடத்தில தங்க வைக்கலாமே… அந்த பொண்ணை நீ உண்மையாவே கல்யாணம் பண்ண போறீயா… அவ அப்பா பண்ண தப்புக்கு எதுக்கு இந்த பொண்ணை பழி வாங்கணும்..” என்று சற்று தயக்கத்துடனே கேட்டான்.
ருத்ரவேந்தன், “அவளோட அப்பன் பண்ண தப்புக்கு அவளை தான் கல்யாணம் பண்ணி கொடுமைப்படுத்தி பழி வாங்க போறேன்.. அவளோட அப்பனுக்கு ஐடியா கொடுத்ததே இவ தான்னு நமக்கு கிடைச்ச தகவல் மட்டும் உண்மையா இருந்தா இவ உயிர் என் கையால தான் போகும்… எவ்வளவு தைரியம் இருந்தா என்னை பத்தி தெரிஞ்சும்.. நான் உருவாக்கி வச்சிருந்த டிரஸ் டிசைனை திருட முயற்சி பண்ணிருப்பாங்க… இவளை கல்யாணம் பண்ணி கொடுமை படுத்தி அப்பன், பொண்ணு இரண்டு பேரையும் துடிக்க வைக்க போறேன்…” என்று கோபமாக வன்மத்தோடு கூறியவன் அழைப்பை துண்டித்தான்..
சித்விக், “இத்தனை நாள் பொண்ணுங்களை வெறுத்து கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தவன் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண முடிவு பண்ணதை நினைச்சு சந்தோசப்படுறதா….?? இல்லை ஒரு பொண்ணை பழி வாங்க முடிவெடுத்து கல்யாணம் பண்ண போறான்னு தெரிஞ்சும் எதுவும் பண்ண முடியாம இவன்கிட்ட மாட்ட போற அந்த பொண்ணை நினைச்சு வருத்தப்படுறதா…?? எதுவுமே புரியல.. ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.. இவனால அந்த பொண்ணு தான் அதிகமா காயப்பட போறா…” என்று மனதில் நினைத்து சிவயாழினியை பற்றி கவலை கொள்ள ஆரம்பித்தான்..
அதே நேரம் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள மூன்றாம் மாடியில் தனது அப்போர்ட்மென்ட்டின் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள் ஒரு மாடர்ன் யுவதி..
அவளது முகத்தில் வெற்றி களிப்பு அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.. அதை விட வில்லத்தனம் அதிகமாகவே இருந்தது..
தனது போனில் இருந்த சிவயாழினியின் புகைப்படத்தை சில நிமிடங்கள் வன்மம் நிறைந்த கண்களோடு பார்த்து கொண்டிருந்தாள்…
“நீ யாருன்னே எனக்கு தெரியாது.. ஆனா நீ எப்போ என்னோட காதலுக்கு இடைஞ்சலா வந்தியோ அப்பவே உன்னை தீர்த்து கட்டணும்னு முடிவு பண்ணேன்.. அதனால தான் உன் அப்பாக்கு ருத்ரனோட புது டிசைனை திருட ஐடியா கொடுத்தேன்.. ஐடியா கொடுத்தது நான்.. ஆனா நீ தான்னு உன்னை மாட்டி விட்டேன்.. நான் பேசுனதை என்னோட வாய்ஸ்க்கு பதிலா உன்னோட வாய்ஸ் வச்சு எடிட் பண்ணிட்டேன்.. உன் அப்பா அனுப்புன ஆள் பத்தி ருத்ரனுக்கு தெரிய வச்சதே நான் தான்.. எல்லாம் பக்கா பிளான் பண்ணி பண்ணிருக்கேன்.. இனி யார் நினைச்சாலும் ருத்ரன் கிட்ட இருந்து உன்னை யாராலையும் காப்பாத்த முடியாது… அவன்கிட்ட மாட்டி அவன் பண்ற கொடுமை எல்லாம் அனுபவிச்சு சாவு.. நரகம்னா என்னான்னு உனக்கு நல்லா காட்டுவான்… நீ செத்தா தான்டி என்னோட காதல் எனக்கு திரும்ப கிடைக்கும்…” என்று ஆக்ரோஷமாக கத்தி கொண்டிருந்தாள்..