சிறை மீட்ட அரக்கன்
ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?...
